தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. மாநிலத்தாரே, நீங்களனைவரும் ஆண்டவர்முன் ஆர்ப்பரியுங்கள்.
2. அவருடைய பெயரின் மாட்சிமையைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழ் எங்கும் விளங்கச் செய்யுங்கள்.
3. இறைவனை நோக்கி, "உம் செயல்கள் எத்துணை மலைப்புக்குரியவை உமது மேலான வல்லமையின் பொருட்டு உம் எதிரிகள் உம்மிடம் இச்சகம் பேசிப் பணிகிறார்கள்.
4. மாநிலமனைத்தும் உம்மை வணங்கி உமக்குப் புகழ் பாடுவதாக: உமது பெயரின் புகழைப் பாடுவதாக" என்று சொல்லுங்கள்.
5. வாருங்கள், கடவுளுடைய செயல்களைப் பாருங்கள்: மனிதர்களிடையே அவர் செய்தவை மலைப்புக்குரியவையே!
6. கடலை அவர் கட்டாந் தரையாக்கினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தனர்: ஆகவே, அவரை நினைத்து மகிழ்வோம்.
7. தம் வல்லமையால் அவர் என்றென்றும் ஆட்சி செலுத்துகின்றார்: அவர் கண்கள் மக்கள் இனத்தாரைக் கவனித்து வருகின்றன; கலக்காரர்கள் தலை தூக்காதிருக்கட்டும்.
8. மக்களினத்தாரே, நம் இறைவனுக்கு வாழ்த்துக் கூறுங்கள்: அவரது புகழின் பெருமையைப் பறைசாற்றுங்கள்.
9. நம்மை வாழ வைத்தவர் அவரே: நம்முடைய காலடி தடுமாற அவர் விடவில்லை.
10. இறைவா, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்: வெள்ளியைப் புடமிடுவது போல நீர் எங்களை நெருப்பால் பரிசோதித்தீர்.
11. வலையில் நாங்கள் அகப்படச் செய்தீர்: பெரும் சுமையை எங்கள் முதுகினில் சுமத்தினீர்.
12. அந்நியனுக்கு நாங்கள் பணியச்செய்தீர். நெருப்பிலும் நீரிலும் நாங்கள் நடந்து சென்றோம்: ஆனால், பரந்த நாட்டுக்கு எங்களைக் கொண்டு வந்தீர்.
13. தகனப் பலிகளைச் செலுத்த உம் இல்லத்தில் நுழைவேன்: என் பொருந்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.
14. துன்ப வேளையில் வாய் திறந்து நான் சொன்னது போல், நான் செய்த பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.
15. கொழுத்த ஆடுகளையும், ஆட்டுக் கிடாய்களையும் தகனப் பலியாய்த் தருவேன்: காளை மாடுகளோடு செம்மறிக் கிடாக்களையும் பலியிடுவேன்.
16. கடவுளுக்கு அஞ்சுவோரே வாருங்கள், வந்து கேளுங்கள்: எனக்கு எத்துணை நன்மை அவர் செய்துள்ளார் எனக் கூறுவேன்.
17. வாய் திறந்து அவரையே நான் கூவியழைத்தேன், என் நாவோல அவரது புகழைச் சொன்னேன்.
18. தீமை செய்ய என்னுள்ளத்தில் சிந்தித்திருந்தால், என் கூக்குரலை அவர் கேட்டிருக்க மாட்டார் அன்றோ!
19. ஆனால், இறைவன் என் மன்றாட்டைக் கேட்டருளினார்: என் வேண்டுதலின் குரலுக்குச் செவிசாய்த்தார்.
20. என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் இரக்கத்தை என்னிடமிருந்து எடுத்து விடாத இறைவன் போற்றி!

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 66 of Total Chapters 150
சங்கீதம் 66:26

×

Alert

×

tamil Letters Keypad References