தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. அதிகாரம் படைத்தவர்களே, நீங்கள் மெய்யாகவா நீதித் தீர்ப்புகளை வழங்குகிறீர்கள்? மனுமக்களே, நீங்கள் நியாயமாகவா தீர்ப்புக் கூறுகிறீர்கள்?
2. மாறாக நீங்கள் மனமாரக் கேடு செய்கிறீர்கள்: பூவுலகில் அநீதி புரிவதே உங்கள் வேலையாயுள்ளது.
3. தீயவர்கள் தாயின் வயிற்றிலிருந்தே நெறி தவறிச் செல்கின்றனர்: பொய்யர்கள் பிறப்பிலிருந்தே வழிதவறிச் செல்கின்றனர்.
4. பாம்பின் நஞ்சு போன்றது அவர்களிடத்திலுள்ள நஞ்சு: தன் காதை அடைத்துக் கொள்ளும் செவிட்டு விரியன் பாம்பின் நஞ்சை போன்றது அவர்கள் உள்ளத்திலுள்ள நஞ்சு.
5. பாம்பாட்டியின் குரலை அது கேட்க விரும்புவதில்லை: திறமையுடன் அவன் மகுடி ஊதினாலும் அதன் செவியில் விழுவதில்லை.
6. கடவுளே, அவர்கள் வாயிலுள்ள பற்களை உடைத்தெறியும்: ஆண்டவரே, அந்தச் சிங்கங்களின் கடைவாய்ப் பற்களை நொறுக்கி விடும்.
7. ஓடி மறைந்து விடும் தண்ணீர் போல அவர்கள் சிதறிப் போவார்களாக: தங்கள் அம்புகளை அவர்கள் தொடுக்கும் போது அவை கூர்மையற்றுப் போகட்டும்.
8. கரைந்து ஓடுகிற நத்தையைப் போல் அவர்கள் உருகிப் போவார்களாக: தாயின் வயிற்றிலேயே பிறக்காமல் சிதைந்தழியும் கருவைப் போல ஒழிவார்களாக.
9. அடுப்பில் போட்டு எரிவதற்கு முன்பே, பச்சையாயிருக்கும் போதே, சுழற்காற்றினால், அடிபட்டுப் போகும் முட்புதர் போல் ஆவார்களாக.
10. இப்படி நீர் பழிவாங்குவதைக் காணும் போது, நீதிமான் அகமகிழ்வான் தீயவரின் இரத்தத்தில் தன் பாதங்களைக் கழுவுவான்.
11. அப்போது மனிதர்கள்: "உண்மையிலேயே நீதிமானுக்குக் கைம்மாறு உண்டு. மெய்யாகவே பூவுலகில் நீதி வழங்கும் கடவுள் இருக்கிறார்" என்று சொல்வார்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 58 of Total Chapters 150
சங்கீதம் 58:21

×

Alert

×

tamil Letters Keypad References