தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. இறைவா, என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்: என் விண்ணப்பத்தின் மட்டில் பாராமுகமாயிராதேயும்.
2. என் செபத்தை ஏற்றுக்கொண்டு, நான் கேட்பதைத் தந்தருளும்.
3. எனக்குற்ற துயரத்தால் நான் கலங்குகிறேன்: எதிரியின் குரலும், பாவியின் இரைச்சலும் கேட்டு நான் பெரிதும் அவதியுறுகிறேன். அவர்கள் எனக்குத் துன்பம் விளைவிக்கின்றனர்: வெகுண்டெழுந்து என்னைத் தாக்குகின்றனர்.
4. என் இதயமோ எனக்குள் கலக்கம் அடைந்துள்ளது. சாவானோ என்ற அச்சம் என்னை மேற்கொண்டுள்ளது.
5. அச்சமும் திகிலும் என்னை மேற்கொண்டன: நடுக்கம் என்னை முற்றிலும் ஆட்கொண்டது.
6. புறாவைப்போல் எனக்குச் சிறகுகள் இல்லையே! இருந்தால் பறந்து போய் அமைதியடைந்திருப்பேனே!" என்று சொல்லிக் கொண்டேன்.
7. வெகு தொலைவு போயிருப்பேன்: பாலை வெளியில் தங்கியிருப்பேன்.
8. புயலினின்றும் பெருங் காற்றினின்றும் வெகு விரைவில் புகலிடம் தேடியிருப்பேன்.
9. ஆண்டவரே, அவர்களுடைய மொழிகளைக் கலங்கடித்து, குழப்பம் உண்டாகச் செய்யும்: ஏனெனில், நகரத்தில் வன்முறையும் கலகமும் காண்கிறேன்.
10. இரவும் பகலும் அவைகள் அதன் மதில்களைச் சுற்றி வருகின்றன. அதன் நடுவே தீச் செயல்களும் அடக்கு முறையும் தான் உள்ளன.
11. அதன் நடுவே சதிச் செயல்களும் உள்ளன. தீமையும் வஞ்சகமும் அதன் தெருக்களை விட்டுப் போகவேயில்லை.
12. என் எதிரி என்னை நிந்தித்திருந்தால் அதைப் பொறுத்துக் கொண்டிருப்பேன்: என்னைப் பகைத்தவன் எனக்கு எதிராய்க் கிளர்ந்து எழுந்தால், அவனிடமிருந்து தப்பியோடி ஒளிந்திருப்பேன்.
13. ஆனால் என் தோழன் நீயே! என் நண்பனும் என் உயிர்த்தோழனுமான நீயே என்னை எதிர்த்தாய்!
14. உன்னோடு இனிய நட்புறவு கொண்டிருந்தேனே! விழாக் கூட்டத்தில் இறைவனின் இல்லத்தில் நாம் ஒன்றாய் இருந்தோமே!
15. மரணம் அவர்கள் மேல் வந்து விழுவதாக; உயிரோடு அவர்கள் கீழுலகுக்குச் செல்வார்களாக: ஏனெனில், அக்கிரமம் அவர்கள் இல்லங்களில் அவர்களிடையே இருக்கின்றது.
16. நானோவெனில் கடவுளை நோக்கிக் கூவுவேன்; ஆண்டவர் என்னை மீட்டுக் கொள்வார்.
17. காலையிலும் மாலையிலும் நண்பகலிலும் புலம்புகிறேன்; பெருமூச்சு விடுகிறேன்: அவர் என் குரலுக்குச் செவிசாய்ப்பார்.
18. எனக்கெதிராய் உள்ளவர் பலராயினர்: என்னைத் துன்புறுத்தும் இவர்கள் கையினின்று அவர் என் ஆன்மாவை மீட்டு, அமைதி நிலவும் இடத்துக்கு அழைத்துச் செல்வார்.
19. என்றென்றும் ஆட்சி செய்பவரான கடவுள் எனக்குச் செவிசாய்த்து அவர்களை ஒடுக்கி விடுவார்: ஏனெனில், அவர்கள் மனமாற்றம் அடையார், கடவுளுக்கு அஞ்சார்.
20. ஒவ்வொருவனும் தனக்கு அறிமுகமானவர்களுக்கெதிராகக் கை நீட்டுகின்றான்: தான் செய்த உடன்படிக்கையை மீறுகின்றான்.
21. அவன் பேச்சு வெண்ணெயை விட மிருதுவாயுள்ளது: அவன் நெஞ்சமோ போர் மனம் படைத்தது. அவன் சொற்கள் எண்ணெயை விட இனிமையாயுள்ளது: ஆனால் ஓங்கிய வாள் போன்றவை.
22. ஆண்டவர் மீது உன் கவலையைப் போட்டு விடு, அவர் உன்னை ஆதரிப்பார்: நீதிமான் என்றும் நிலைகலங்க விடமாட்டார்.
23. இறைவா, நீர் அவர்களை அழிவுப் பாதாளத்தில் விழச்செய்வீர்; இரத்த வெறியர்களும் வஞ்சகர்களும் தம் வாழ்நாளில் பாதியும் காணமாட்டார்கள்: நானோவெனில், ஆண்டவரே, உம்மையே நம்புகிறேன்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 55 of Total Chapters 150
சங்கீதம் 55:25

×

Alert

×

tamil Letters Keypad References