தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. கடவுள் இல்லை" என்று அறிவிலி தனக்குள் சொல்லிக் கொள்கிறான்; மனிதர்கள் முற்றிலும் கெட்டுப்போயினர்: அக்கிரமத்தையே செய்கின்றனர், நன்மை செய்பவன் எவனுமில்லை.
2. வானினின்று கடவுள் மனுமக்களைப் பார்க்கின்றார்: அறிவுள்ளவன், கடவுளைத் தேடுபவன் எவனாவது உண்டா எனப் பார்க்கின்றார்.
3. எல்லாரும் நெறி தவறிப் போயினர்; ஒருங்கே கெட்டழிந்தனர்: நன்மை செய்பவனே இல்லை, இல்லவே இல்லை, ஒருவன் கூட இல்லை.
4. தீமை செய்கிறவர்கள் உணவை விழுங்குவது போல் என் மக்களை விழுங்கப் பார்க்கிறார்கள்: இவர்கள் கடவுளின் பெயரைக் கூவி அழைப்பதில்லை; இவர்கள் நல்லறிவு பெறமாட்டார்களா?
5. அச்சம் கொள்ளத் தேவையில்லாத இடத்தில் இவர்கள் அச்சத்தால் நடுநடுங்கினார்கள்; ஏனெனில், என்னைத் தாக்கினவர்களின் எலும்புகளை இறைவன் நொறுக்கிவிட்டார்: அவர்கள் சிதறுண்டு போயினர்; ஏனெனில் கடவுள் அவர்களை விரட்டிவிட்டார்.
6. சீயோனிலிருந்து இஸ்ராயேல் மக்களுக்கு மீட்பு வராதே! கடவுள் தம் மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் போது யாக்கோபின் இனத்தார் களிகூர்வர், இஸ்ராயேல் மக்கள் அகமகிழ்வர்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 53 / 150
சங்கீதம் 53:56
1 கடவுள் இல்லை" என்று அறிவிலி தனக்குள் சொல்லிக் கொள்கிறான்; மனிதர்கள் முற்றிலும் கெட்டுப்போயினர்: அக்கிரமத்தையே செய்கின்றனர், நன்மை செய்பவன் எவனுமில்லை. 2 வானினின்று கடவுள் மனுமக்களைப் பார்க்கின்றார்: அறிவுள்ளவன், கடவுளைத் தேடுபவன் எவனாவது உண்டா எனப் பார்க்கின்றார். 3 எல்லாரும் நெறி தவறிப் போயினர்; ஒருங்கே கெட்டழிந்தனர்: நன்மை செய்பவனே இல்லை, இல்லவே இல்லை, ஒருவன் கூட இல்லை. 4 தீமை செய்கிறவர்கள் உணவை விழுங்குவது போல் என் மக்களை விழுங்கப் பார்க்கிறார்கள்: இவர்கள் கடவுளின் பெயரைக் கூவி அழைப்பதில்லை; இவர்கள் நல்லறிவு பெறமாட்டார்களா? 5 அச்சம் கொள்ளத் தேவையில்லாத இடத்தில் இவர்கள் அச்சத்தால் நடுநடுங்கினார்கள்; ஏனெனில், என்னைத் தாக்கினவர்களின் எலும்புகளை இறைவன் நொறுக்கிவிட்டார்: அவர்கள் சிதறுண்டு போயினர்; ஏனெனில் கடவுள் அவர்களை விரட்டிவிட்டார். 6 சீயோனிலிருந்து இஸ்ராயேல் மக்களுக்கு மீட்பு வராதே! கடவுள் தம் மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் போது யாக்கோபின் இனத்தார் களிகூர்வர், இஸ்ராயேல் மக்கள் அகமகிழ்வர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 53 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References