தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. இறைவா, உம் இரக்கத்திற்கேற்ப என்மீது இரக்கம் வையும்: உம் இரக்கப் பெருக்கத்திற்கேற்ப என் குற்றங்குறைகளைப் போக்கிவிடும்.
2. நான் செய்த குற்றத்தை என்னிடமிருந்து முற்றிலும் கழுவிப் போக்கிவிடும்: என் பாவத்தைக் கழுவி என்னைத் தூய்மைப்படுத்தும்.
3. என் குற்றங்குறைகளை நான் ஏற்றுக் கொள்கிறேன்: நான் செய்த பாவம் எந்நேரமும் என் கண் முன்னே நிற்கின்றது.
4. உமக்கெதிராக மட்டுமே பாவம் செய்தேன்; உம் திரு முன்னிலையிலேயே செய்தேன்: உமது தீர்ப்பில் உம் நீதி விளங்குகின்றது, உமது நியாய வாக்கினில் உம் நேர்மை துலங்குகின்றது.
5. இதோ, குற்றமுள்ள நிலையில் நான் பிறந்தேன்: பாவ நிலையிலேயே என் அன்னை என்னைக் கருத்தரித்தாள்.
6. இதோ! இதயத்தின் நேர்மையைக் கண்டு நீர் பெரிதும் மகிழ்கின்றீர்: இதயத்தின் உள்ளிருந்தே எனக்கு மெய்ஞானம் புகட்டுகின்றீர்.
7. ஈஸ்ஸோப் புல்லால் என் மேல் தெளிந்தருளும், நான் தூய்மையாவேன்: நீர் என்னைக் கழுவியருளும், வெண் பனியிலும் வெண்மையாவேன்.
8. அகமகிழ்வும் அக்களிப்பும் என் செவியில் விழச்செய்யும்: நொறுங்குண்ட எலும்புகளும் அக்களிப்படையும்.
9. என் பாவங்களினின்றும் உம் திருமுகத்தைத் திருப்பிக்கொள்ளும்: என் குற்றங்களையெல்லாம் போக்கி விடும்.
10. தூயதோர் உள்ளத்தை, இறைவா, நீர் என்னகத்தே உருவாக்கும்: உறுதி தரும் ஆவியை என்னுள் மலரச் செய்யும்.
11. உம் திருமுன்னிருந்து என்னைத் தள்ளி விடாதேயும், உமது பரிசுத்த ஆவியை என்னிடமிருந்து எடுத்து விடாதேயும்.
12. உமது மீட்பால் வரும் மகிழ்ச்சியை எனக்களித்தருளும்; உமது பெருந்தன்மையான மனப்பான்மையில் என்னை உறுதிப்படுத்தும்.
13. தீயவர்களுக்கு உம் வழிகளை நான் புகட்டுவேன்: பாவிகள் உம்மிடம் திரும்பி வருவர்.
14. இறைவா, என் மீட்பரான இறைவா, இரத்தப் பழிக்குரிய தண்டனையினின்று விடுவித்தருளும்: உமது நீதியைக் கண்டு என் நாவு ஆர்ப்பரிக்கும்.
15. ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்து விடும்: என் வாய் உமது புகழ்ச்சியை எடுத்துரைக்கும்.
16. ஏனெனில்,பலிகளில் நீர் இன்பம் கொள்வதில்லை: தகனப் பலி கொடுத்தாலும் அதை நீர் ஏற்பதில்லை.
17. இறைவா, நான் உமக்குச் செலுத்த வேண்டிய பலி நொறுங்கிய உள்ளமே: தாழ்வுற்று நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் புறக்கணிப்பதில்லை.
18. உம் நன்மைத் தனத்திற்கேற்ப, ஆண்டவரே, சீயோனுக்குக் கருணை காட்டும்: யெருசலேமின் மதில்களை மீளவும் எழுப்புவீராக.
19. அப்போது முறையான பலிகளையும் காணிக்கைகளையும் தகனப் பலிகளையும் ஏற்றுக்கொள்வீர்: அப்போது உமது பீடத்தில் இளங் காளைகளைப் பலியாய் ஒப்புக்கொடுப்பர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 51 / 150
1 இறைவா, உம் இரக்கத்திற்கேற்ப என்மீது இரக்கம் வையும்: உம் இரக்கப் பெருக்கத்திற்கேற்ப என் குற்றங்குறைகளைப் போக்கிவிடும். 2 நான் செய்த குற்றத்தை என்னிடமிருந்து முற்றிலும் கழுவிப் போக்கிவிடும்: என் பாவத்தைக் கழுவி என்னைத் தூய்மைப்படுத்தும். 3 என் குற்றங்குறைகளை நான் ஏற்றுக் கொள்கிறேன்: நான் செய்த பாவம் எந்நேரமும் என் கண் முன்னே நிற்கின்றது. 4 உமக்கெதிராக மட்டுமே பாவம் செய்தேன்; உம் திரு முன்னிலையிலேயே செய்தேன்: உமது தீர்ப்பில் உம் நீதி விளங்குகின்றது, உமது நியாய வாக்கினில் உம் நேர்மை துலங்குகின்றது. 5 இதோ, குற்றமுள்ள நிலையில் நான் பிறந்தேன்: பாவ நிலையிலேயே என் அன்னை என்னைக் கருத்தரித்தாள். 6 இதோ! இதயத்தின் நேர்மையைக் கண்டு நீர் பெரிதும் மகிழ்கின்றீர்: இதயத்தின் உள்ளிருந்தே எனக்கு மெய்ஞானம் புகட்டுகின்றீர். 7 ஈஸ்ஸோப் புல்லால் என் மேல் தெளிந்தருளும், நான் தூய்மையாவேன்: நீர் என்னைக் கழுவியருளும், வெண் பனியிலும் வெண்மையாவேன். 8 அகமகிழ்வும் அக்களிப்பும் என் செவியில் விழச்செய்யும்: நொறுங்குண்ட எலும்புகளும் அக்களிப்படையும். 9 என் பாவங்களினின்றும் உம் திருமுகத்தைத் திருப்பிக்கொள்ளும்: என் குற்றங்களையெல்லாம் போக்கி விடும். 10 தூயதோர் உள்ளத்தை, இறைவா, நீர் என்னகத்தே உருவாக்கும்: உறுதி தரும் ஆவியை என்னுள் மலரச் செய்யும். 11 உம் திருமுன்னிருந்து என்னைத் தள்ளி விடாதேயும், உமது பரிசுத்த ஆவியை என்னிடமிருந்து எடுத்து விடாதேயும். 12 உமது மீட்பால் வரும் மகிழ்ச்சியை எனக்களித்தருளும்; உமது பெருந்தன்மையான மனப்பான்மையில் என்னை உறுதிப்படுத்தும். 13 தீயவர்களுக்கு உம் வழிகளை நான் புகட்டுவேன்: பாவிகள் உம்மிடம் திரும்பி வருவர். 14 இறைவா, என் மீட்பரான இறைவா, இரத்தப் பழிக்குரிய தண்டனையினின்று விடுவித்தருளும்: உமது நீதியைக் கண்டு என் நாவு ஆர்ப்பரிக்கும். 15 ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்து விடும்: என் வாய் உமது புகழ்ச்சியை எடுத்துரைக்கும். 16 ஏனெனில்,பலிகளில் நீர் இன்பம் கொள்வதில்லை: தகனப் பலி கொடுத்தாலும் அதை நீர் ஏற்பதில்லை. 17 இறைவா, நான் உமக்குச் செலுத்த வேண்டிய பலி நொறுங்கிய உள்ளமே: தாழ்வுற்று நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் புறக்கணிப்பதில்லை. 18 உம் நன்மைத் தனத்திற்கேற்ப, ஆண்டவரே, சீயோனுக்குக் கருணை காட்டும்: யெருசலேமின் மதில்களை மீளவும் எழுப்புவீராக. 19 அப்போது முறையான பலிகளையும் காணிக்கைகளையும் தகனப் பலிகளையும் ஏற்றுக்கொள்வீர்: அப்போது உமது பீடத்தில் இளங் காளைகளைப் பலியாய் ஒப்புக்கொடுப்பர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 51 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References