தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. மக்கள் இனங்களே, நீங்களனைவரும் நான் சொல்வதற்குச் செவிசாயுங்கள்: புவி மீது வாழ்வோரே, நீங்களனைவரும் இதற்குச் செவி கொடுங்கள்.
2. தாழ்ந்தோர் உயர்ந்தோர் பணக்காரர் ஏழைகள், நீங்கள் அனைவரும் இதற்குச் செவி கொடுங்கள்.
3. என் வாய் ஞானத்தை உரைக்கும்: என் உள்ளத்தின் தியானத்தால் அறிவு எழும்.
4. உவமை மொழிக்கு நான் செவிசாய்ப்பேன்: சுரமண்டலத்தின் இன்னிசைக்குப் பொருந்த என் மறைபொருளைக் கூறுவேன்.
5. துன்ப மிகு நாளில் நான் அஞ்ச வேண்டுவதேன்? என்னைத் துன்புறுத்துவோர் செய்யும் அக்கிரமம் என்னைச் சூழும் போது, நான் ஏன் அஞ்ச வேண்டும்?
6. தங்கள் செல்வத்தில் நம்பிக்கை வைப்போருக்கும், தம் செல்வப் பெருக்கை நினைத்துப் பெருமைப் படுவோருக்கும், நான் அஞ்ச வேண்டுவதேன்?
7. தன்னைத்தானே விடுவித்துக் கொள்பவன் ஒருவனுமில்லை; தன் மீட்புக்குரிய விலையைக் கடவுளுக்குத் தர யாராலும் இயலாது.
8. அந்த மீட்புக்குரிய விலை மிக உயர்ந்தது.
9. சாவைக் காணாததும் என்றென்றும் நீடிப்பதுமான வாழ்வை வாங்கிக்கொள்ள, எத்தொகையும் போதவே போதாது.
10. ஞானிகள் கூட இறப்பதைக் காணலாம்; அப்படியே ஞானமற்றவர்களும் அறிவீனர்களும் இறந்தொழிவதைக் காணலாம்: தம் செல்வத்தை அந்நியருக்கு விட்டுச் செல்வதைக் காணலாம்.
11. கல்லறைகளே அவர்களுக்கு நிலையான இல்லங்கள்; தலைமுறையாக அவர்களுக்கு உள்ள குடியிருப்புகள் அவையே: தங்கள் பெயரில் எவ்வளவு நில புலம் கொண்டிருந்தாலும் இதுவே அவர்கள் கதி.
12. ஏனெனில், தன் செல்வ நிலையில் மனிதன் நிலைத்திருப்பதில்லை; செத்தொழியும் விலங்குகளுக்கு அவன் ஒப்பாவான்.
13. மூடத்தனமான நம்பிக்கையுள்ளவர்கள் கதி இதுவே: தங்களுக்குக் கிடைத்த செல்வத்தில் மகிழ்ச்சி கொள்பவர்கள் கதி இதுவே.
14. கீழுலகில் அவர்கள் ஆடுகளைப் போல அடைபடுவர்: சாவே அவர்களுக்கு மேய்ப்பன். நீதிமான்கள் அவர்கள் மேல் தோற்றம் மறைந்தொழியும், கீழுலகே அவர்கள் இருப்பிடமாகும்.
15. எனினும், கடவுள் என்னைக் கீழுலகினின்று விடுவிப்பார்: என்னை அவர் ஏற்றுக் கொள்வார்.
16. ஒருவன் பணக்காரனானால் அவனைக் கண்டு அஞ்சவேண்டாம்: அவன் குடும்பச் செல்வம் பெருகினால் அஞ்சவேண்டாம்.
17. அவன் சாகும் பொழுது தன்னோடு எடுத்துச் செல்வது ஒன்றுமில்லை: அவளுடைய சொத்து அவனோடு போவதில்லை.
18. நிம்மதியான வாழ்வு உனக்குக் கிடைத்ததென பிறர் புகழ்வர்" என்று வாழ்நாளில் அவன் தன்னைப் பாராட்டிக் கொண்டாலும்,
19. தன் முன்னோர்கள் போன இடத்திற்கே அவனும் போவான்: அவர்கள் எந்நாளும் ஒளியைக் காணப்போவதில்லை.
20. ஏனெனில், செல்வம் கொண்டு வாழ்பவன் தன் நிலையை அறியாவிடில், செத்தொழியும் விலங்குகளுக்கு ஒப்பாவான்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 49 / 150
சங்கீதம் 49:136
1 மக்கள் இனங்களே, நீங்களனைவரும் நான் சொல்வதற்குச் செவிசாயுங்கள்: புவி மீது வாழ்வோரே, நீங்களனைவரும் இதற்குச் செவி கொடுங்கள். 2 தாழ்ந்தோர் உயர்ந்தோர் பணக்காரர் ஏழைகள், நீங்கள் அனைவரும் இதற்குச் செவி கொடுங்கள். 3 என் வாய் ஞானத்தை உரைக்கும்: என் உள்ளத்தின் தியானத்தால் அறிவு எழும். 4 உவமை மொழிக்கு நான் செவிசாய்ப்பேன்: சுரமண்டலத்தின் இன்னிசைக்குப் பொருந்த என் மறைபொருளைக் கூறுவேன். 5 துன்ப மிகு நாளில் நான் அஞ்ச வேண்டுவதேன்? என்னைத் துன்புறுத்துவோர் செய்யும் அக்கிரமம் என்னைச் சூழும் போது, நான் ஏன் அஞ்ச வேண்டும்? 6 தங்கள் செல்வத்தில் நம்பிக்கை வைப்போருக்கும், தம் செல்வப் பெருக்கை நினைத்துப் பெருமைப் படுவோருக்கும், நான் அஞ்ச வேண்டுவதேன்? 7 தன்னைத்தானே விடுவித்துக் கொள்பவன் ஒருவனுமில்லை; தன் மீட்புக்குரிய விலையைக் கடவுளுக்குத் தர யாராலும் இயலாது. 8 அந்த மீட்புக்குரிய விலை மிக உயர்ந்தது. 9 சாவைக் காணாததும் என்றென்றும் நீடிப்பதுமான வாழ்வை வாங்கிக்கொள்ள, எத்தொகையும் போதவே போதாது. 10 ஞானிகள் கூட இறப்பதைக் காணலாம்; அப்படியே ஞானமற்றவர்களும் அறிவீனர்களும் இறந்தொழிவதைக் காணலாம்: தம் செல்வத்தை அந்நியருக்கு விட்டுச் செல்வதைக் காணலாம். 11 கல்லறைகளே அவர்களுக்கு நிலையான இல்லங்கள்; தலைமுறையாக அவர்களுக்கு உள்ள குடியிருப்புகள் அவையே: தங்கள் பெயரில் எவ்வளவு நில புலம் கொண்டிருந்தாலும் இதுவே அவர்கள் கதி. 12 ஏனெனில், தன் செல்வ நிலையில் மனிதன் நிலைத்திருப்பதில்லை; செத்தொழியும் விலங்குகளுக்கு அவன் ஒப்பாவான். 13 மூடத்தனமான நம்பிக்கையுள்ளவர்கள் கதி இதுவே: தங்களுக்குக் கிடைத்த செல்வத்தில் மகிழ்ச்சி கொள்பவர்கள் கதி இதுவே. 14 கீழுலகில் அவர்கள் ஆடுகளைப் போல அடைபடுவர்: சாவே அவர்களுக்கு மேய்ப்பன். நீதிமான்கள் அவர்கள் மேல் தோற்றம் மறைந்தொழியும், கீழுலகே அவர்கள் இருப்பிடமாகும். 15 எனினும், கடவுள் என்னைக் கீழுலகினின்று விடுவிப்பார்: என்னை அவர் ஏற்றுக் கொள்வார். 16 ஒருவன் பணக்காரனானால் அவனைக் கண்டு அஞ்சவேண்டாம்: அவன் குடும்பச் செல்வம் பெருகினால் அஞ்சவேண்டாம். 17 அவன் சாகும் பொழுது தன்னோடு எடுத்துச் செல்வது ஒன்றுமில்லை: அவளுடைய சொத்து அவனோடு போவதில்லை. 18 நிம்மதியான வாழ்வு உனக்குக் கிடைத்ததென பிறர் புகழ்வர்" என்று வாழ்நாளில் அவன் தன்னைப் பாராட்டிக் கொண்டாலும், 19 தன் முன்னோர்கள் போன இடத்திற்கே அவனும் போவான்: அவர்கள் எந்நாளும் ஒளியைக் காணப்போவதில்லை. 20 ஏனெனில், செல்வம் கொண்டு வாழ்பவன் தன் நிலையை அறியாவிடில், செத்தொழியும் விலங்குகளுக்கு ஒப்பாவான்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 49 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References