தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. இறைவா, நாங்கள் எம் செவியாலே கேள்வியுற்றோம்; எங்கள் முன்னோர் எங்களுக்கு எடுத்துரைத்தனர்: முற்காலத்தில் அவர்கள் வாழ்ந்த நாளில் நீர் செய்த செயலை எங்களுக்கு எடுத்துரைத்தனர்.
2. நீர் உம் வல்லமையால் புற இனத்தாரை விரட்டி எங்கள் முன்னோரை நிலைபெறச் செய்தீர்: பல நாடுகளை ஒடுக்கி அவர்கள் ஓங்கச் செய்தீர்.
3. எங்கள் முன்னோர் நாட்டைக் கைப்பற்றியது தங்கள் வாளின் வலிமையால் அன்று, அவர்களுக்கு மீட்பு கிடைத்தது தங்கள் கைவன்மையால் அன்று: உமது வலக்கரமும் உமது புயப்பலமும், உம் முகத்தினின்று எழுந்த பேரொளியுமே அவர்களுக்குத் துணை நின்றது; ஏனெனின், நீர் அவர்கள் மீது அன்பு கூர்ந்தீர்.
4. நீரே என் அரசர், நீரே என் இறைவன்: யாக்கோபின் இனத்தாருக்கு வெற்றி அளித்தவர் நீரே.
5. எங்கள் எதிரிகளை உம் துணையால் விரட்டியடித்தோம்: எங்களை எதிர்த்து நின்றவர்களை உமது பெயரால் நசுக்கி விட்டோம்.
6. என் வில்லின் மீது நான் நம்பிக்கை வைக்கவில்லை: எனக்கு மீட்பளித்தது என் வாள் அன்று.
7. எதிரிகளினின்று எமக்கு மீட்பளித்தவர் நீரே: எங்கள் பகைவர்களைச் சிதறடித்தவர் நீரே.
8. எந்நாளும் கடவுளை நினைத்துப் பெருமை கொண்டோம்: உமது பெயரை எந்நேரமும் போற்றிப் புகழ்ந்தோம்.
9. இப்போதோ நீர் எங்களைப் புறக்கணித்து விட்டீர்; எங்களைக் கலங்கடித்தீர்: கடவுளே, நீர் எங்கள் சேனையோடு புறப்பட்டு வரவில்லை.
10. எங்கள் எதிரிகள் முன் நாங்கள் பின்னடையச் செய்தீர்: எங்கள் பகைவர்கள் எங்களைக் கொள்ளையிட்டுச் சென்றனர்.
11. கொல்லப்படும் ஆடுகள் போல எங்களைக் கையளித்தீர்: புற இனத்தாரிடையே எங்களைச் சிதறடித்தீர்.
12. விலை எதுவுமின்றி உம் மக்களை விற்று விட்டீர்: அவர்களை விற்றதால் உமக்குக் கிடைத்த பயனோ ஒன்றுமில்லை.
13. எங்கள் அயலாருடைய நிந்தனைக்கு நீர் எங்களை ஆளாக்கினீர்: எங்களைச் சூழ்ந்துள்ள மக்களின் ஏளனத்துக்கும் பழிப்புக்கும் எங்களை உட்படுத்தினீர்.
14. புற இனத்தாரிடையே எங்களை ஒரு பழிச் சொல்லாக்கினீர்: மக்கள் எங்களைப் பார்த்துத் தலையசைக்கின்றனர்.
15. எனக்குற்ற மானக்கேடு எந்நேரமும் என் கண் முன்னே நிற்கின்றது: வெட்கம் என்னை முகங்கவிழச் செய்கின்றது.
16. என்னை நிந்தித்துத் தூற்றுபவன் பேசுவதைக் கேட்கும் போது, என் எதிரியையும் பகைவனையும் நான் பார்க்கும் போது வெட்கிப் போகிறேன்.
17. நாங்களும்மை மறக்காவிடினும் உமது உடன்படிக்கையை மீறாவிடினும், இவையெல்லாம் எங்கள் மீது வந்து விழுந்தன.
18. எங்கள் உள்ளம் பின்வாங்கவில்லை: நீர் காட்டிய வழியினின்று விலகி நாங்கள் அடியெடுத்து வைக்கவில்லை.
19. எனினும் துயர் மிக்க இடத்தில் எங்களை நொறுக்கி விட்டீர்: எங்கள் மீது இருள் கவியச் செய்தீர்.
20. இறைவன் பெயரை நாங்கள் மறந்திருந்தால், வேறு தெய்வங்களை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டிருந்தால்,
21. இது கடவுளுக்குத் தெரியாமலா போகும்? உள்ளத்தின் ஆழத்தை அவர் அறிந்தவரன்றோ!
22. எனினும் நாளெல்லாம் உமக்காக நாங்கள் கொல்லப்படுகிறோம்; கசாப்புக்குச் செல்லும் ஆடுகளெனக் கருதப்படுகிறோம்.
23. ஆண்டவரே, துயிலெழும், ஏன் உறங்குகிறீர்? விழித்தெழும், எங்களை ஒருபோதும் தள்ளி விடாதேயும்.
24. ஏன் உமது முகத்தை மறைத்துக் கொள்கிறீர்? நாங்கள் உறும் சிறுமையையும் துன்ப நிலையையும் ஏன் மறந்துவிட்டீர்?
25. நாங்கள் முகங்குப்புற விழுந்து விட்டோம்: தரையோடு தரையாய்க் கிடக்கிறோம்.
26. எங்களுக்குத் துணை செய்ய எழுந்தருளும்: உமது இரக்கத்தை முன்னிட்டு விடுதலையளித்தருளும்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 44 / 150
சங்கீதம் 44:73
1 இறைவா, நாங்கள் எம் செவியாலே கேள்வியுற்றோம்; எங்கள் முன்னோர் எங்களுக்கு எடுத்துரைத்தனர்: முற்காலத்தில் அவர்கள் வாழ்ந்த நாளில் நீர் செய்த செயலை எங்களுக்கு எடுத்துரைத்தனர். 2 நீர் உம் வல்லமையால் புற இனத்தாரை விரட்டி எங்கள் முன்னோரை நிலைபெறச் செய்தீர்: பல நாடுகளை ஒடுக்கி அவர்கள் ஓங்கச் செய்தீர். 3 எங்கள் முன்னோர் நாட்டைக் கைப்பற்றியது தங்கள் வாளின் வலிமையால் அன்று, அவர்களுக்கு மீட்பு கிடைத்தது தங்கள் கைவன்மையால் அன்று: உமது வலக்கரமும் உமது புயப்பலமும், உம் முகத்தினின்று எழுந்த பேரொளியுமே அவர்களுக்குத் துணை நின்றது; ஏனெனின், நீர் அவர்கள் மீது அன்பு கூர்ந்தீர். 4 நீரே என் அரசர், நீரே என் இறைவன்: யாக்கோபின் இனத்தாருக்கு வெற்றி அளித்தவர் நீரே. 5 எங்கள் எதிரிகளை உம் துணையால் விரட்டியடித்தோம்: எங்களை எதிர்த்து நின்றவர்களை உமது பெயரால் நசுக்கி விட்டோம். 6 என் வில்லின் மீது நான் நம்பிக்கை வைக்கவில்லை: எனக்கு மீட்பளித்தது என் வாள் அன்று. 7 எதிரிகளினின்று எமக்கு மீட்பளித்தவர் நீரே: எங்கள் பகைவர்களைச் சிதறடித்தவர் நீரே. 8 எந்நாளும் கடவுளை நினைத்துப் பெருமை கொண்டோம்: உமது பெயரை எந்நேரமும் போற்றிப் புகழ்ந்தோம். 9 இப்போதோ நீர் எங்களைப் புறக்கணித்து விட்டீர்; எங்களைக் கலங்கடித்தீர்: கடவுளே, நீர் எங்கள் சேனையோடு புறப்பட்டு வரவில்லை. 10 எங்கள் எதிரிகள் முன் நாங்கள் பின்னடையச் செய்தீர்: எங்கள் பகைவர்கள் எங்களைக் கொள்ளையிட்டுச் சென்றனர். 11 கொல்லப்படும் ஆடுகள் போல எங்களைக் கையளித்தீர்: புற இனத்தாரிடையே எங்களைச் சிதறடித்தீர். 12 விலை எதுவுமின்றி உம் மக்களை விற்று விட்டீர்: அவர்களை விற்றதால் உமக்குக் கிடைத்த பயனோ ஒன்றுமில்லை. 13 எங்கள் அயலாருடைய நிந்தனைக்கு நீர் எங்களை ஆளாக்கினீர்: எங்களைச் சூழ்ந்துள்ள மக்களின் ஏளனத்துக்கும் பழிப்புக்கும் எங்களை உட்படுத்தினீர். 14 புற இனத்தாரிடையே எங்களை ஒரு பழிச் சொல்லாக்கினீர்: மக்கள் எங்களைப் பார்த்துத் தலையசைக்கின்றனர். 15 எனக்குற்ற மானக்கேடு எந்நேரமும் என் கண் முன்னே நிற்கின்றது: வெட்கம் என்னை முகங்கவிழச் செய்கின்றது. 16 என்னை நிந்தித்துத் தூற்றுபவன் பேசுவதைக் கேட்கும் போது, என் எதிரியையும் பகைவனையும் நான் பார்க்கும் போது வெட்கிப் போகிறேன். 17 நாங்களும்மை மறக்காவிடினும் உமது உடன்படிக்கையை மீறாவிடினும், இவையெல்லாம் எங்கள் மீது வந்து விழுந்தன. 18 எங்கள் உள்ளம் பின்வாங்கவில்லை: நீர் காட்டிய வழியினின்று விலகி நாங்கள் அடியெடுத்து வைக்கவில்லை. 19 எனினும் துயர் மிக்க இடத்தில் எங்களை நொறுக்கி விட்டீர்: எங்கள் மீது இருள் கவியச் செய்தீர். 20 இறைவன் பெயரை நாங்கள் மறந்திருந்தால், வேறு தெய்வங்களை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டிருந்தால், 21 இது கடவுளுக்குத் தெரியாமலா போகும்? உள்ளத்தின் ஆழத்தை அவர் அறிந்தவரன்றோ! 22 எனினும் நாளெல்லாம் உமக்காக நாங்கள் கொல்லப்படுகிறோம்; கசாப்புக்குச் செல்லும் ஆடுகளெனக் கருதப்படுகிறோம். 23 ஆண்டவரே, துயிலெழும், ஏன் உறங்குகிறீர்? விழித்தெழும், எங்களை ஒருபோதும் தள்ளி விடாதேயும். 24 ஏன் உமது முகத்தை மறைத்துக் கொள்கிறீர்? நாங்கள் உறும் சிறுமையையும் துன்ப நிலையையும் ஏன் மறந்துவிட்டீர்? 25 நாங்கள் முகங்குப்புற விழுந்து விட்டோம்: தரையோடு தரையாய்க் கிடக்கிறோம். 26 எங்களுக்குத் துணை செய்ய எழுந்தருளும்: உமது இரக்கத்தை முன்னிட்டு விடுதலையளித்தருளும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 44 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References