தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. ஆண்டவரே, என்னோடு வழக்காடுபவனுடன் நீர் வழக்குத் தொடுத்தருளும்: என்னைத் தாக்குபவன் மீது நீரே போர் தொடுத்தருளும்.
2. கேடயத்தையும் பரிசையையும் உம் கையில் எடுத்துக் கொள்ளும்: எனக்குத் துணையாக எழுந்தருளும்.
3. உம் கையில் ஈட்டியை ஓங்கி என்னைத் துண்புறுத்துவோரை வழிமறித்தருளும்: 'உன் பாதுகாப்பு நாமே' என்று என்னிடம் சொல்லியருளும்.
4. என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் ஏமாற்றமடைவார்களாக, வெட்கமுறுவார்களாக: எனக்குத் தீமை செய்ய நினைப்போர் பின்னடைவார்களாக, நாணித் தலை குனிவார்களாக.
5. ஆண்டவரின் தூதர் அவர்களை விரட்டிச் செல்ல, அவர்கள் காற்றில் பறக்கும் பதர் போலாவார்களாக.
6. ஆண்டவருடைய தூதர் அவர்களைத் துரத்திச் செல்ல, அவர்கள் செல்லும் வழி இருள் மிக்கதும் வழுக்கலுமாயிருப்பதாக.
7. ஏனெனில், காரணம் எதுவுமின்றி எனக்கு அவர்கள் கண்ணி வைத்தார்கள்: காரணமின்றி அவர்கள் என் உயிரை வாங்கப் படுகுழி வெட்டினார்கள்.
8. எதிர்பாராத அழிவு அவர்களுக்கு வருவதாக, அவர்கள் விரித்த வலையில் அவர்களே பிடிபடுவார்களாக: அவர்கள் வெட்டிய குழியில் அவர்களே விழுவார்களாக.
9. என் உள்ளமோ ஆண்டவரில் அக்களிப்புக்கொள்ளும்: அவர் அருளிய மீட்பை நினைத்து மகிழ்ச்சி கொள்ளும்.
10. எனக்குள்ள வலிமையெல்லாம்: 'ஆண்டவரே உமக்கு இணை யார்? வலிமை மிக்கவனிடமிருந்து எளியவனை விடுவிக்கும் உமக்கு, கொள்ளையடிப்பவனிடமிருந்து துயருற்றவனையும் ஏழையையும் காக்கும் உமக்கு இணை யார்?' என்கிறது.
11. வன்னெஞ்சச் காட்சிகள் எழுந்தனர்: என்ன வென்றும் அறியாத காரியங்களைப் பற்றி என்னிடம் கேள்வி கேட்டனர்.
12. நான் செய்த நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமையே செய்தனர்: என் நெஞ்சம் ஆழ்துயரில் அமிழ்ந்தச் செய்தனர்.
13. நனோ அவர்கள் நோயுற்றிருக்கையில் சாக்குத்துணி அணிந்து, நோன்பிருந்து என்னை வாட்டிக் கொண்டேன்: என்னுள்ளே வெகுவாய்ச் செபம் செய்தேன்.
14. அவனை என் நண்பன், என் சகோதரன் போல் நினைத்துத் துயர் கொண்டேன்: தன் தாயை நினைத்துத் துயருறுபவன் போல் துயர் கொண்டு அலைந்தேன்.
15. ஆனால் நான் தளர்ச்சியுற்றபோது அவர்கள் ஒன்று கூடி மகிழ்ந்தனர்: எதிர்பாராத நேரத்தில் எனக்கெதிராய் ஒன்று கூடி என் மேல் பாய்ந்தார்கள்.
16. ஓயாமல் என் மேல் பழி சுமத்தினார்கள்; சோதனைக்குள்ளாக்கினார்கள்; ஏளனத்துக்கு உட்படுத்தினார்கள்: பல்லைக் கடித்து கொண்டு என் மீது விழுந்தார்கள்.
17. ஆண்டவரே எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? கர்ஜனை செய்து தாக்குவோரிடமிருந்து, சிங்கங்களிடமிருந்து என் உயிரைக் காத்தருளும்.
18. பெருங்கூட்டத்தில் நான் உமக்கு நன்றி செலுத்துவேன்: திரளான பெருமக்களிடையே உம்மைப் புகழ்வேன்.
19. வஞ்சகரான என் எதிரிகள் என் மீது வெற்றி கொண்டு மகிழ விடாதேயும்: காரணமின்றி என்னைப் பகைப்பவர் கண் சிமிட்ட விடாதேயும்.
20. அவர்கள் பேசுவது அமைதிப் பேச்சன்று: நாட்டில் அமைதியுடன் வாழ்வோருக்கு, வஞ்சகமாய்க் கெடுதி செய்வதே அவர்கள் நினைவெல்லாம்.
21. என்னை எதிர்த்து அவர்கள் தம் வாயை அகலத் திறக்கின்றனர்: 'ஆ, ஆ, எங்கள் கண்ணாலேயே பார்த்தோமே' என்கின்றனர்.
22. ஆண்டவரே, நீர் இதைப் பார்த்தீரன்றோ: பேசாமலிராதேயும் ஆண்டவரே, என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்.
23. என் இறைவா, என் ஆண்டவரே, என் வழக்கைத் தீர்க்க எழுந்து வாரும்: எனக்குப் பாதுகாப்பளிக்க விழித்தெழும்.
24. ஆண்டவரே, உம் நீதிக்கேற்ப என் வழக்கைத் தீர்த்தருளும்: என் இறைவா, அவர்கள் என் மேல் வெற்றி கொண்டு மகிழ்ச்சியுற விடாதேயும்.
25. ஆ, ஆ, நாம் விரும்பியது போலாயிற்று' என்று அவர்கள் தம் உள்ளத்தில் நினைக்கவிடாதேயும்: 'அவனை விழுங்கி விட்டோம்' என்று அவர்கள் சொல்ல விடாதேயும்.
26. எனக்கு நேர்ந்த இடர்களை நினைத்து மகிழ்ச்சியுறும் அவர்களனைவரும், ஒன்றாய்க் கலங்கி வெட்கமுறுவார்களாக.
27. எனக்கு எதிராகத் தலைதூக்குபவர்கள், வெட்கமும் மானக்கேடும் அடைவார்களாக; எனக்குச் சார்பாய்ப் பேசுபவர்கள் அக்களித்து அகமகிழ்வார்களாக: 'தம் ஊழியனின் நலத்தைக் காக்கும் ஆண்டவரது பெருமை விளங்கட்டும்' என்று எப்பொதும் சொல்வார்களாக.
28. என் நாவோ உமது நீதியை எடுத்துரைக்கும்: உமது புகழை என்றென்றும் பாடும்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 35 of Total Chapters 150
சங்கீதம் 35:124

×

Alert

×

tamil Letters Keypad References