தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. ஆண்டவரை நான் எந்நேரமும் போற்றுவேன்: அவரது புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்.
2. என் ஆன்மா ஆண்டவரில் பெருமைகொள்ளும்: சிறுமையுற்றோர் இதைக் கேட்டு அக்களிப்பார்களாக.
3. என்னோடு ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்: எல்லோரும் சேர்ந்து அவரது பெயரைப் புகழ்ந்தேத்துவோம்.
4. நான் ஆண்டவரைத் தேடினேன்; அவர் என் மன்றாட்டைக் கேட்டருளினார்: எல்லாவித அச்சத்தினின்றும் என்னை விடுவித்தார்.
5. அவரை நோக்குங்கள், மகிழ்ச்சி அடைவீர்கள்: வெட்கத்தால் தலைகுனிய மாட்டீர்கள்.
6. இதோ! திக்கற்றவன் கூவியழைக்க, ஆண்டவர் அவன் குரலைக் கேட்டார்: எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்தார்.
7. ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரைச் சுற்றி, அவருடைய தூதர் பாளையம் இறங்கிக் காத்திடுவார்.
8. ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் தஞ்சம் புகுவோன் பேறு பெற்றவன்.
9. ஆண்டவருடைய புனிதர்களே, அவருக்கு அஞ்சுங்கள்: ஏனெனில், அவருக்கு அஞ்சுவோருக்கு எதுவும் குறைவுபடாது.
10. வலிமையுற்றோர் வறிஞராய்ப் பசியுற்றார்; ஆண்டவரைத் தேடுவோர்க்கோ எந்த நன்மையும் குறைவுபடாது.
11. வாரீர் மக்களே, நான் சொல்வதைக் கேளீர்: உங்களுக்குத் தேவ பயத்தைக் கற்பிப்பேன்.
12. வாழ்க்கை மீது பற்றுதல் கொண்டுள்ளவன் யார்? நலன்களைத் துய்க்க நீடிய வாழ்வை விரும்பும் மனிதன் யார்?
13. உன் நாவை நீ தீமையினின்றி காத்திடு: வஞ்சக மொழி பேச வாயெடுக்காதிரு.
14. தீமையைத் தவிர்த்து நன்மை செய்: சமாதானத்தை விரும்பித் தேடு.
15. ஆண்டவருடைய கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவருடைய செவிகள் அவர்களது குரலைக் கேட்கின்றன.
16. ஆண்டவருடைய முகம் தீயோரை எதிர்த்து நிற்கின்றது: ஆண்டவர் பூமியிலிருந்து அவர்களுடைய நினைவையே எடுத்து விடுவார்.
17. நீதிமான்கள் கூக்குரலிட்டனர்; ஆண்டவர் அவர்களுக்குச் செவி சாய்த்தார்: எல்லாத் துன்பங்களினின்றும் விடுவித்தார்.
18. உள்ளம் நொறுங்குண்டவர்களுக்கு அருகிலேயே உள்ளார் ஆண்டவர்: மனம் நைந்தவர்களைக் காத்தருள்வார்.
19. நீதிமானின் துயரங்கள் பல: ஆனால் அவயைனைத்தினின்றும் ஆண்டவர் அவனைக் கடைத்தேற்றுவார்.
20. அவர்களுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுவார்: அவற்றில் ஒன்று முதலாய் நொறுங்காது.
21. தீயோரைத் தீவினையே சாகடிக்கும்: நீதிமான்களைப் பகைப்பவர்களோ தண்டனைக்குள்ளாவர்கள்.
22. தம் ஊழியரின் ஆத்துமங்களை ஆண்டவர் மீட்கிறார்: அவரிடம் அடைக்கலம் புகுபவன் எவனும் தண்டனையடையான்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 34 / 150
சங்கீதம் 34:61
1 ஆண்டவரை நான் எந்நேரமும் போற்றுவேன்: அவரது புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும். 2 என் ஆன்மா ஆண்டவரில் பெருமைகொள்ளும்: சிறுமையுற்றோர் இதைக் கேட்டு அக்களிப்பார்களாக. 3 என்னோடு ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்: எல்லோரும் சேர்ந்து அவரது பெயரைப் புகழ்ந்தேத்துவோம். 4 நான் ஆண்டவரைத் தேடினேன்; அவர் என் மன்றாட்டைக் கேட்டருளினார்: எல்லாவித அச்சத்தினின்றும் என்னை விடுவித்தார். 5 அவரை நோக்குங்கள், மகிழ்ச்சி அடைவீர்கள்: வெட்கத்தால் தலைகுனிய மாட்டீர்கள். 6 இதோ! திக்கற்றவன் கூவியழைக்க, ஆண்டவர் அவன் குரலைக் கேட்டார்: எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்தார். 7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரைச் சுற்றி, அவருடைய தூதர் பாளையம் இறங்கிக் காத்திடுவார். 8 ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் தஞ்சம் புகுவோன் பேறு பெற்றவன். 9 ஆண்டவருடைய புனிதர்களே, அவருக்கு அஞ்சுங்கள்: ஏனெனில், அவருக்கு அஞ்சுவோருக்கு எதுவும் குறைவுபடாது. 10 வலிமையுற்றோர் வறிஞராய்ப் பசியுற்றார்; ஆண்டவரைத் தேடுவோர்க்கோ எந்த நன்மையும் குறைவுபடாது. 11 வாரீர் மக்களே, நான் சொல்வதைக் கேளீர்: உங்களுக்குத் தேவ பயத்தைக் கற்பிப்பேன். 12 வாழ்க்கை மீது பற்றுதல் கொண்டுள்ளவன் யார்? நலன்களைத் துய்க்க நீடிய வாழ்வை விரும்பும் மனிதன் யார்? 13 உன் நாவை நீ தீமையினின்றி காத்திடு: வஞ்சக மொழி பேச வாயெடுக்காதிரு. 14 தீமையைத் தவிர்த்து நன்மை செய்: சமாதானத்தை விரும்பித் தேடு. 15 ஆண்டவருடைய கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவருடைய செவிகள் அவர்களது குரலைக் கேட்கின்றன. 16 ஆண்டவருடைய முகம் தீயோரை எதிர்த்து நிற்கின்றது: ஆண்டவர் பூமியிலிருந்து அவர்களுடைய நினைவையே எடுத்து விடுவார். 17 நீதிமான்கள் கூக்குரலிட்டனர்; ஆண்டவர் அவர்களுக்குச் செவி சாய்த்தார்: எல்லாத் துன்பங்களினின்றும் விடுவித்தார். 18 உள்ளம் நொறுங்குண்டவர்களுக்கு அருகிலேயே உள்ளார் ஆண்டவர்: மனம் நைந்தவர்களைக் காத்தருள்வார். 19 நீதிமானின் துயரங்கள் பல: ஆனால் அவயைனைத்தினின்றும் ஆண்டவர் அவனைக் கடைத்தேற்றுவார். 20 அவர்களுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுவார்: அவற்றில் ஒன்று முதலாய் நொறுங்காது. 21 தீயோரைத் தீவினையே சாகடிக்கும்: நீதிமான்களைப் பகைப்பவர்களோ தண்டனைக்குள்ளாவர்கள். 22 தம் ஊழியரின் ஆத்துமங்களை ஆண்டவர் மீட்கிறார்: அவரிடம் அடைக்கலம் புகுபவன் எவனும் தண்டனையடையான்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 34 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References