தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. எவன் பாவம் போக்கப்பட்டதோ அவன் பேறு பெற்றவன்: எவன் பாவம் மறைக்கப்பட்டதோ அவனும் பேறு பெற்றவன்.
2. ஆண்டவர் எவன் மேல் பாவத்தைச் சுமத்தவில்லையோ அவன் பேறு பெற்றவன்: யாருள்ளத்தில் வஞ்சகம் இல்லையோ அவனும் பேறுபெற்றவன்.
3. என் பாவத்தை வெளியிடாது இருந்த வரையில் என் உடல் தளர்வுற்றது: ஓயாத என் பெருமூச்சுகளிடையே அது மெலிவுற்றது.
4. இரவும் பகலும் என்மேலே உம் கரம் ஓங்கி நின்றது: கோடை வறட்சி போல என் வலிமை வறண்டு போயிற்று.
5. என் பாவத்தை நான் உமக்கு வெளியிட்டேன்; என் குற்றத்தை நான் உம் திருமுன் மறைத்தேனில்லை: "ஆண்டவரிடம் என் பாவத்தை ஒப்புக்கொள்கிறேன்" என்றேன்; நீரும் என் குற்றத்தை மன்னித்தீர்.
6. இதனால் நல்லவர் யாவரும் உம்மை நோக்கி வேண்டுவர்: நெருக்கடியான வேளையில் அவர்கள் உம்மை மன்றாடுவார்கள். வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்தாலும் அவர்களை நெருங்காது.
7. ஆண்டவரே, நீர் எனக்கு அடைக்கலமாய் உள்ளீர், இன்னல்கள் அனைத்தினின்றும் என்னைக் காத்தருள்வீர்: உம் மீட்பால் வரும் மகிழ்வாலே என்னை அணைக்கின்றீர்."
8. நான் உனக்கு அறிவு புகட்டுவேன், நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்: உனக்கறிவு தருவேன், உன்மேல் என் பார்வையைத் திருப்புவேன்" என்றீர்.
9. அறிவில்லாக் குதிரை போலும் கழுதை போலும் இருக்காதீர்: கடிவாளத்தால் அவற்றை அடக்க வேண்டும் அன்றோ! இல்லையெனில் நீங்கள் அவற்றை நெருங்க முடியாது.
10. பாவியின் துன்பங்கள் பல: ஆண்டவரை நம்புவோரை அவர்தம் இரக்கம் என்றென்றும் சூழ்ந்திடும்.
11. ஆண்டவரில் மகிழ்ந்திடுவீர், நீதிமான்களே களிகூர்ந்திடுவீர்: நேர்மையுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவரில் அக்களித்திடுவீர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 32 of Total Chapters 150
சங்கீதம் 32:53

×

Alert

×

tamil Letters Keypad References