தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. ஆண்டவரே, என்னைத் துன்புறுத்துவோர் பலராயுளர்: எனக்கெதிராய்க் கலகம் விளைப்போர் பலராயுளர்.
2. அவனுக்கெங்கே கடவுள் துணை புரியப்போகிறார்?" என்று என்னை இழித்துரைப்போர் பலராயுளர்.
3. ஆனால், ஆண்டவரே, என்னைக் காப்பவர் நீரே: எனக்குப் பெருமை தருபவர் நீரே; நான் தலை நிமிரத் துணை செய்பவர் நீரே.
4. கடவுளை நோக்கிக் கூக்குரலிட்டேன்: தமது புனித மலையிலிருந்து என் குரலுக்குச் செவி சாய்த்தார்.
5. இனி நான் படுத்து உறங்குவேன், விழித்தெழுவேன்: ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவாயிருக்கிறார்.
6. என்னை எதிர்க்கச் சூழ்ந்திருக்கும் ஆயிரமாயிரம் பகைவர்க்கு நான் அஞ்சேன்.
7. ஆண்டவரே எழுந்தருளும்; என் இறைவா, என்னைக் காத்தருளும்: என் எதிரிகள் அனைவரையும் கன்னத்தில் அறைகின்றீர்; தீயோரின் பல்லை உடைக்கின்றீர்.
8. விடுதலை அளிப்பவர் ஆண்டவர்: உம் மக்கள் மீது ஆசி தங்குக.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 150
1 ஆண்டவரே, என்னைத் துன்புறுத்துவோர் பலராயுளர்: எனக்கெதிராய்க் கலகம் விளைப்போர் பலராயுளர். 2 அவனுக்கெங்கே கடவுள் துணை புரியப்போகிறார்?" என்று என்னை இழித்துரைப்போர் பலராயுளர். 3 ஆனால், ஆண்டவரே, என்னைக் காப்பவர் நீரே: எனக்குப் பெருமை தருபவர் நீரே; நான் தலை நிமிரத் துணை செய்பவர் நீரே. 4 கடவுளை நோக்கிக் கூக்குரலிட்டேன்: தமது புனித மலையிலிருந்து என் குரலுக்குச் செவி சாய்த்தார். 5 இனி நான் படுத்து உறங்குவேன், விழித்தெழுவேன்: ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவாயிருக்கிறார். 6 என்னை எதிர்க்கச் சூழ்ந்திருக்கும் ஆயிரமாயிரம் பகைவர்க்கு நான் அஞ்சேன். 7 ஆண்டவரே எழுந்தருளும்; என் இறைவா, என்னைக் காத்தருளும்: என் எதிரிகள் அனைவரையும் கன்னத்தில் அறைகின்றீர்; தீயோரின் பல்லை உடைக்கின்றீர். 8 விடுதலை அளிப்பவர் ஆண்டவர்: உம் மக்கள் மீது ஆசி தங்குக.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References