தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. வானங்கள் கடவுளின் மாட்சிமையைச் சாற்றும்: வான மண்டலம் அவரது கைத்திறனை எடுத்துரைக்கும்.
2. பகல்தோறும் பகல் அதைத் தெரிவிக்கிறது: இரவு தோறும் இரவு அதை அறிவிக்கிறது.
3. அவற்றிற்குச் சொல்லுமில்லை பேச்சுமில்லை: அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
4. எனினும், அவற்றின் குரல் உலகெலாம் கேட்கிறது: அவை விடுக்கும் செய்தி உலகின் எல்லை வரை எட்டுகிறது;
5. அங்கே கடவுள் கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார்; மணவறையினின்று புறப்படும் மணமகன் போல அவன் எழுகின்றான்: பந்தய வீரனைப்போல அக்களிப்போடு குறித்த வழியில் விரைகின்றான்.
6. வானத்தின் ஒரு முனையில் எழுந்து மறுமுனை மட்டும் அவன் செல்லுகிறான்: அவனது அனல் படாதது ஒன்றுமில்லை.
7. ஆண்டவரது திருச்சட்டம் சால்புடையது; ஆன்மாவுக்குப் புத்துயிர் ஊட்டுவது: ஆண்டவருடைய கட்டளை உறுதியானது, எளியோருக்கு அறிவூட்டுவது.
8. ஆண்டவருடைய கட்டளைகள் நேரியவை; உள்ளத்திற்கு மகிழ்ச்சி ஊட்டுபவை: ஆண்டவரது கற்பனை தூய்மையானது; கண்களுக்கு ஒளியூட்டுவது.
9. ஆண்டவர்மீதுள்ள அச்சம் புனிதமானது; என்றென்றும் நிலைத்திருப்பது: ஆண்டவருடைய தீர்ப்புகள் உண்மையானவை; அவை எல்லாம் நீதியானவை.
10. பொன்னினும் மணியினும் பெரிதும் விரும்பத் தக்கவை: தேனினும் தேனடையினும் இனிமையானவை.
11. உம் ஊழியனும் அவற்றால் பயிற்சி பெறுகிறான்: அவற்றைக் கடைப்பிடிப்பதில் மிக விழிப்பாயிருக்கிறான்.
12. குற்றங்குறைகளை யார் கண்டுணர்வர்? எனவே, மறைவாயுள்ள என் குற்றங்களை நீக்கி என்னைப் புனிதப்படுத்தும்.
13. தற்பெருமையினின்று உம் ஊழியனைக் காத்தருளும்; அது என்னை அடிமைப்படுத்தாதிருப்பதாக: அப்போது நான் குற்றமற்றவனாகி, பெரும் பாவங்களினின்று விடுபட்டுத் தூயவனாவேன்.
14. எனக்கு அடைக்கலமும் என் மீட்பருமான ஆண்டவரே, உம் முன்னிலையில் என் வாய் மொழியும், என் இதயச் சிந்தனையும் உமக்கு உகந்தனவாகட்டும்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 19 of Total Chapters 150
சங்கீதம் 19:104

×

Alert

×

tamil Letters Keypad References