தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. அல்லேலூயா! ஆண்டவருக்குப் புதியதொரு படலைப் பாடுங்கள்: புனிதர்கள் சபையில் அவரது புகழ் ஒலிப்பதாக!
2. இஸ்ராயேல் இனத்தார் தம்மைப் படைத்தவரை நினைத்து அகமகிழ்வார்களாக: சீயோன் மக்கள் தம் அரசரை நினைத்துக் களிகூர்வார்களாக.
3. நடனம் செய்து அவரது பெயரைப் புகழ்வார்களாக: தம்புராவும் யாழும் கொண்டு அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக.
4. ஏனெனில் ஆண்டவர் தம் மக்கள் மீது அன்பு கூர்கிறார்: தாழ்ந்தவர்களுக்கு மீட்பளித்து அணி செய்கிறார்.
5. மகிமை பொங்கப் புனிதர்கள் களிகூர்வார்களாக: தம் படுக்கைகளில் மகிழ்ந்து பாடுவார்களாக!
6. அவர்களது நாவில் இறைவனது பெரும் புகழ் ஒலிப்பதாக: இருபுறமும் கருக்குள்ள பட்டயங்களைத் தம் கரங்களில் தாங்குவார்களாக!
7. அவ்வாறு புற இனத்தாரைப் பழிவாங்குவார்களாக: மக்களினத்தாரைக் கண்டிப்பார்களாக!
8. அவர்களுடைய மன்னர்களைச் சிறைப்படுத்துவார்களாக: அவர்களுடைய தலைவர்களுக்கு இருப்பு விலங்கிடுவார்களாக!
9. குறிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்களுக்கு வழங்குவார்களாக: இத்தகைய மகிமை அவர் தம் புனிதர்கள் அனைவர்க்கும் உண்டாகும்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 149 / 150
சங்கீதம் 149:134
1 அல்லேலூயா! ஆண்டவருக்குப் புதியதொரு படலைப் பாடுங்கள்: புனிதர்கள் சபையில் அவரது புகழ் ஒலிப்பதாக! 2 இஸ்ராயேல் இனத்தார் தம்மைப் படைத்தவரை நினைத்து அகமகிழ்வார்களாக: சீயோன் மக்கள் தம் அரசரை நினைத்துக் களிகூர்வார்களாக. 3 நடனம் செய்து அவரது பெயரைப் புகழ்வார்களாக: தம்புராவும் யாழும் கொண்டு அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக. 4 ஏனெனில் ஆண்டவர் தம் மக்கள் மீது அன்பு கூர்கிறார்: தாழ்ந்தவர்களுக்கு மீட்பளித்து அணி செய்கிறார். 5 மகிமை பொங்கப் புனிதர்கள் களிகூர்வார்களாக: தம் படுக்கைகளில் மகிழ்ந்து பாடுவார்களாக! 6 அவர்களது நாவில் இறைவனது பெரும் புகழ் ஒலிப்பதாக: இருபுறமும் கருக்குள்ள பட்டயங்களைத் தம் கரங்களில் தாங்குவார்களாக! 7 அவ்வாறு புற இனத்தாரைப் பழிவாங்குவார்களாக: மக்களினத்தாரைக் கண்டிப்பார்களாக! 8 அவர்களுடைய மன்னர்களைச் சிறைப்படுத்துவார்களாக: அவர்களுடைய தலைவர்களுக்கு இருப்பு விலங்கிடுவார்களாக! 9 குறிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்களுக்கு வழங்குவார்களாக: இத்தகைய மகிமை அவர் தம் புனிதர்கள் அனைவர்க்கும் உண்டாகும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 149 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References