தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. அல்லேலூயா! ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர் நல்லவர். நம் இறைவனுக்குப் புகழ் பாடுங்கள்: ஏனெனில் அவர் இனிமையுள்ளவர்; அவரைப் புகழ்வது தகுமே.
2. ஆண்டவர் யெருசலேமை அமைக்கிறார்: சிதறுண்ட இஸ்ராயேலை ஒன்று சேர்க்கிறார்.
3. உள்ளம் உடைந்தவர்களைக் குணமாக்குகிறார்: அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
4. விண்மீன்களின் எண்ணிக்கையை வரையறுக்கிறார்: ஒவ்வொன்றையும் பெயரிட்டு அழைக்கிறார்.
5. நம் ஆண்டவர் மிக உயர்ந்தவர், வல்லமை மிக்கவர்: அவருடைய ஞானத்துக்கு அளவேயில்லை.
6. தாழ்ந்தவர்களை ஆண்டவர் தூக்கிவிடுகிறார்: கெட்டவர்களைத் தரைமட்டும் தாழ்த்தி விடுகிறார்.
7. நன்றியுணர்வோடு ஆண்டவருக்குப் பாடுங்கள்: யாழ்கொண்டு நம் இறைவனுக்கு இசை எழுப்புங்கள்.
8. வானத்தில் மேகங்கள் கவியச் செய்பவர் அவரே: பூமி மீது மழையைப் பொழிபவர் அவரே. மலைகளில் புல் பூண்டுகள் முளைக்கச் செய்பவர் அவரே: மனிதனுக்குப் பயன்படச் செடி கொடி வளரச் செய்பவர் அவரே.
9. கால்நடைகளுக்கு உணவு அளிப்பவர் அவரே: தம்மை நோக்கிக் கூவும் காக்கை குஞ்சுகளுக்குத் தீனி தருபவர் அவரே.
10. குதிரைகளின் பலத்தைப் பொருட்படுத்துபவர் அல்லர் அவர்: மனிதனின் கால் பலத்தைத் தேடுபவர் அல்லர்.
11. அவருக்கு அஞ்சுவோரே அவருக்கு உகந்தவர்: அவரது நன்மைத் தனத்தை நம்புவோரே அவருக்கு உகந்தவர்.
12. யெருசலேமே, உன் ஆண்டவரைப் போற்றுவாய்: சீயோனே, உன் இறைவனைப் புகழ்வாய்.
13. ஏனெனில், அவர் உன் கதவுகளின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தினார்: உன்னகத்துள்ள உன் மக்களுக்கு ஆசியளித்தார்.
14. அமைதி நிலவ உன் எல்லைகளைக் காத்தார்: கோதுமை வளத்தால் உனக்கு நிறைவு அளிக்கிறார்.
15. உலகுக்குத் தம் ஆணையை விடுக்கிறார்: விரைந்து செல்கிறது அவருடைய வார்த்தை.
16. வெண் கம்பளி போல் பனி பொழியச் செய்கிறார்: உறை பனியைச் சாம்பல் போல் இறைக்கிறார்.
17. அப்பத்துண்டெனக் கல்மழை பொழிகிறார்: அவர் உண்டாக்கும் குளிரால் தண்ணீர் உறைந்து போகும்.
18. அவர் ஒரு வார்த்தை சொல்ல, உறைந்தது உருகிவிடும்: தம் காற்றை ஏவி விட, உருகிய நீர் ஓடத் தொடங்கும்.
19. யாக்கோபின் இனத்தார்க்குத் தம் வார்த்தையை வெளிப்படுத்தினார்: இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளைகளையும் நியமங்களையும் அறிவித்தார்.
20. வேறெந்த இனத்தார்க்கும் இங்ஙனம் செய்ததில்லை: தம் கட்டளைகளை அவர்களுக்கு வெளியிட்டதில்லை. அல்லேலூயா!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 147 / 150
1 அல்லேலூயா! ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர் நல்லவர். நம் இறைவனுக்குப் புகழ் பாடுங்கள்: ஏனெனில் அவர் இனிமையுள்ளவர்; அவரைப் புகழ்வது தகுமே. 2 ஆண்டவர் யெருசலேமை அமைக்கிறார்: சிதறுண்ட இஸ்ராயேலை ஒன்று சேர்க்கிறார். 3 உள்ளம் உடைந்தவர்களைக் குணமாக்குகிறார்: அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். 4 விண்மீன்களின் எண்ணிக்கையை வரையறுக்கிறார்: ஒவ்வொன்றையும் பெயரிட்டு அழைக்கிறார். 5 நம் ஆண்டவர் மிக உயர்ந்தவர், வல்லமை மிக்கவர்: அவருடைய ஞானத்துக்கு அளவேயில்லை. 6 தாழ்ந்தவர்களை ஆண்டவர் தூக்கிவிடுகிறார்: கெட்டவர்களைத் தரைமட்டும் தாழ்த்தி விடுகிறார். 7 நன்றியுணர்வோடு ஆண்டவருக்குப் பாடுங்கள்: யாழ்கொண்டு நம் இறைவனுக்கு இசை எழுப்புங்கள். 8 வானத்தில் மேகங்கள் கவியச் செய்பவர் அவரே: பூமி மீது மழையைப் பொழிபவர் அவரே. மலைகளில் புல் பூண்டுகள் முளைக்கச் செய்பவர் அவரே: மனிதனுக்குப் பயன்படச் செடி கொடி வளரச் செய்பவர் அவரே. 9 கால்நடைகளுக்கு உணவு அளிப்பவர் அவரே: தம்மை நோக்கிக் கூவும் காக்கை குஞ்சுகளுக்குத் தீனி தருபவர் அவரே. 10 குதிரைகளின் பலத்தைப் பொருட்படுத்துபவர் அல்லர் அவர்: மனிதனின் கால் பலத்தைத் தேடுபவர் அல்லர். 11 அவருக்கு அஞ்சுவோரே அவருக்கு உகந்தவர்: அவரது நன்மைத் தனத்தை நம்புவோரே அவருக்கு உகந்தவர். 12 யெருசலேமே, உன் ஆண்டவரைப் போற்றுவாய்: சீயோனே, உன் இறைவனைப் புகழ்வாய். 13 ஏனெனில், அவர் உன் கதவுகளின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தினார்: உன்னகத்துள்ள உன் மக்களுக்கு ஆசியளித்தார். 14 அமைதி நிலவ உன் எல்லைகளைக் காத்தார்: கோதுமை வளத்தால் உனக்கு நிறைவு அளிக்கிறார். 15 உலகுக்குத் தம் ஆணையை விடுக்கிறார்: விரைந்து செல்கிறது அவருடைய வார்த்தை. 16 வெண் கம்பளி போல் பனி பொழியச் செய்கிறார்: உறை பனியைச் சாம்பல் போல் இறைக்கிறார். 17 அப்பத்துண்டெனக் கல்மழை பொழிகிறார்: அவர் உண்டாக்கும் குளிரால் தண்ணீர் உறைந்து போகும். 18 அவர் ஒரு வார்த்தை சொல்ல, உறைந்தது உருகிவிடும்: தம் காற்றை ஏவி விட, உருகிய நீர் ஓடத் தொடங்கும். 19 யாக்கோபின் இனத்தார்க்குத் தம் வார்த்தையை வெளிப்படுத்தினார்: இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளைகளையும் நியமங்களையும் அறிவித்தார். 20 வேறெந்த இனத்தார்க்கும் இங்ஙனம் செய்ததில்லை: தம் கட்டளைகளை அவர்களுக்கு வெளியிட்டதில்லை. அல்லேலூயா!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 147 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References