தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. ஆண்டவரே, நான் உம்மை நோக்கிக் கூவுகிறேன்: விரைவாய் எனக்குத் துணை செய்யும்.
2. உம்மை நோக்கி நான் கூப்பிடும் போது என் குரலுக்குச் செவிசாய்த்தருளும்: தூபம் போல் என் மன்றாட்டு உம்மிடம் எழுக; மாலைப் பலி போல் என் கைகள் உம்மை நோக்கி உயர்க.
3. ஆண்டவரே, என் நாவுக்குக் காவல் வைத்தருளும்: என் நாவாகிய வாயிலை காத்துக் கொள்ளும்.
4. என்னிதயம் தீமையை நாட விடாதேயும்; பக்கியற்றவனாய் நான் தீவினைகளைச் செய்ய விடாதேயும்: தீவினை செய்யும் மனிதர்களோடு சேர்ந்து இனிய விருந்துண்ண விடாதேயும்.
5. நீதிமான் என்னை வதைக்கட்டும், அது எனக்கு நல்லது; அவன் என்னைத் தண்டிக்கட்டும், அது என் தலைக்கு எண்ணெய் போல: அந்த எண்ணெயை நான் விரும்பாமலிரேன்; அவர்கள் செய்யும் தீமைகளுக்கு எதிராய் நான் என்றும் வேண்டுகிறேன்.
6. அவர்களுடைய தலைவர்கள் கல்மலையிலிருந்து கீழே தள்ளுண்டு போகிற போது, என் வார்த்தைகள் எவ்வளவு இனிமையானவையென்று கேட்டறிவார்கள்.
7. விழும் போது மண் பிளந்து சிதறி விடுகிறது போல், அவர்களுடைய எலும்புகள் பாதாளத்தின் வாயிலில் சிதறும்.
8. ஏனெனில், ஆண்டவராகிய இறைவா, என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன: உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்; நான் அழிய விடாதேயும்.
9. அவர்கள் எனக்கு வைத்த கண்ணிகளிலிருந்து என்னைக் காத்தருளும்: தீமை செய்வோரின் சுருக்குகளிலிருந்து எனக்குப் பாதுகாப்பளித்தருளும்.
10. தீயோர் தாங்கள் வைத்த கண்ணிகளிலேயே ஒருங்கே வந்து விழுவார்களாக: நானோ பாதுகாப்புடன் செல்வேனாக.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 141 / 150
1 ஆண்டவரே, நான் உம்மை நோக்கிக் கூவுகிறேன்: விரைவாய் எனக்குத் துணை செய்யும். 2 உம்மை நோக்கி நான் கூப்பிடும் போது என் குரலுக்குச் செவிசாய்த்தருளும்: தூபம் போல் என் மன்றாட்டு உம்மிடம் எழுக; மாலைப் பலி போல் என் கைகள் உம்மை நோக்கி உயர்க. 3 ஆண்டவரே, என் நாவுக்குக் காவல் வைத்தருளும்: என் நாவாகிய வாயிலை காத்துக் கொள்ளும். 4 என்னிதயம் தீமையை நாட விடாதேயும்; பக்கியற்றவனாய் நான் தீவினைகளைச் செய்ய விடாதேயும்: தீவினை செய்யும் மனிதர்களோடு சேர்ந்து இனிய விருந்துண்ண விடாதேயும். 5 நீதிமான் என்னை வதைக்கட்டும், அது எனக்கு நல்லது; அவன் என்னைத் தண்டிக்கட்டும், அது என் தலைக்கு எண்ணெய் போல: அந்த எண்ணெயை நான் விரும்பாமலிரேன்; அவர்கள் செய்யும் தீமைகளுக்கு எதிராய் நான் என்றும் வேண்டுகிறேன். 6 அவர்களுடைய தலைவர்கள் கல்மலையிலிருந்து கீழே தள்ளுண்டு போகிற போது, என் வார்த்தைகள் எவ்வளவு இனிமையானவையென்று கேட்டறிவார்கள். 7 விழும் போது மண் பிளந்து சிதறி விடுகிறது போல், அவர்களுடைய எலும்புகள் பாதாளத்தின் வாயிலில் சிதறும். 8 ஏனெனில், ஆண்டவராகிய இறைவா, என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன: உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்; நான் அழிய விடாதேயும். 9 அவர்கள் எனக்கு வைத்த கண்ணிகளிலிருந்து என்னைக் காத்தருளும்: தீமை செய்வோரின் சுருக்குகளிலிருந்து எனக்குப் பாதுகாப்பளித்தருளும். 10 தீயோர் தாங்கள் வைத்த கண்ணிகளிலேயே ஒருங்கே வந்து விழுவார்களாக: நானோ பாதுகாப்புடன் செல்வேனாக.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 141 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References