தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. கடவுள் இல்லை' என்று அறிவிலி தனக்குள் சொல்லிக் கொள்கிறான்; மனிதர் முற்றிலும் கெட்டுப் போயினர்: அக்கிரமத்தையே செய்கின்றனர்; நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை.
2. வானினின்று ஆண்டவர் மனுமக்களைப் பார்க்கின்றார்: அறிவுள்ளவன், கடவுளைத் தேடுபவன் எவனாது உண்டா எனப் பார்க்கின்றார்.
3. எல்லாரும் நெறி தவறிப் போயினர், ஒருங்கே கெட்டழிந்தனர்: நன்மை செய்பவனே இல்லை, இல்லவே இல்லை; ஒருவன்கூட இல்லை.
4. தீமை செய்கிறவர்கள் எல்லாரும் உணவை விழுங்குவது போல் என் மக்களை விழுங்கப் பார்க்கிறார்கள்: இவர்கள் ஆண்டவரது உதவியை நாடுவதில்லை; இவர்கள் நல்லறிவு பெறமட்டார்களா?
5. ஆகவே, அச்சத்தால் நடுங்குவர்: ஏனெனில், கடவுள் நீதிமான்களின் தலைமுறையோடு இருக்கிறார்.
6. எளியவன் திட்டத்தைக் கவிழ்த்து விடப் பார்க்கிறார்கள்: ஆனால் ஆண்டவர் அவனுக்கு ஆதரவளிக்கிறார்.
7. சீயோனிலிருந்து இஸ்ராயேல் மக்களுக்கு மீட்பு வராதோ! ஆண்டவர் தம் மக்களுக்கு நல்ல வாழ்வு அளிக்கும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வர், இஸ்ராயேல் மக்கள் அகமகிழ்வர்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 14 / 150
சங்கீதம் 14:83
1 கடவுள் இல்லை' என்று அறிவிலி தனக்குள் சொல்லிக் கொள்கிறான்; மனிதர் முற்றிலும் கெட்டுப் போயினர்: அக்கிரமத்தையே செய்கின்றனர்; நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை. 2 வானினின்று ஆண்டவர் மனுமக்களைப் பார்க்கின்றார்: அறிவுள்ளவன், கடவுளைத் தேடுபவன் எவனாது உண்டா எனப் பார்க்கின்றார். 3 எல்லாரும் நெறி தவறிப் போயினர், ஒருங்கே கெட்டழிந்தனர்: நன்மை செய்பவனே இல்லை, இல்லவே இல்லை; ஒருவன்கூட இல்லை. 4 தீமை செய்கிறவர்கள் எல்லாரும் உணவை விழுங்குவது போல் என் மக்களை விழுங்கப் பார்க்கிறார்கள்: இவர்கள் ஆண்டவரது உதவியை நாடுவதில்லை; இவர்கள் நல்லறிவு பெறமட்டார்களா? 5 ஆகவே, அச்சத்தால் நடுங்குவர்: ஏனெனில், கடவுள் நீதிமான்களின் தலைமுறையோடு இருக்கிறார். 6 எளியவன் திட்டத்தைக் கவிழ்த்து விடப் பார்க்கிறார்கள்: ஆனால் ஆண்டவர் அவனுக்கு ஆதரவளிக்கிறார். 7 சீயோனிலிருந்து இஸ்ராயேல் மக்களுக்கு மீட்பு வராதோ! ஆண்டவர் தம் மக்களுக்கு நல்ல வாழ்வு அளிக்கும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வர், இஸ்ராயேல் மக்கள் அகமகிழ்வர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 14 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References