தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. ஆண்டவரே, எதுவரை என்னை மறந்திருப்பீர்? இறுதி வரை மறந்திடுவீரோ? எது வரை உமது திருமுகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொண்டிருப்பீர்?
2. என் வருத்தங்களை எவ்வளவு காலம் எனக்குள்ளேயே தாங்கிக்கொண்டிருப்பேன்? நாள் தோறும் எழுகின்ற மனக்கவலையே எத்தனை நாள் பொறுத்துக்கொண்டிருப்பேன்? எவ்வளவு காலம் என் எதிரி என் மீது வெற்றிகொள்வான்?
3. என் ஆண்டவராகிய இறைவா, என்னைக் கண்ணோக்கி என் மன்றாட்டைக் கேட்டருளும்.
4. மரண உறக்கத்தில் நான் ஆழ்ந்துவிடாமல் என் கண்களுக்கு உமது ஒளியை வீசும்: 'அவனை மேற்கொண்டேன்' என்று என் எதிரி சொல்ல விடாதேயும்; நான் வீழ்ச்சியுற்றதைக் கண்டு என் எதிரிகளை அக்களிக்க விடாதீர்.
5. உமது இரக்கத்தையே நான் நம்பியிருக்கிறேன் அன்றோ! உம்மிடமிருந்து வரும் உதவியை நினைத்து என் நெஞ்சம் அக்களிப்பதாக:
6. எனக்கு நன்மையே செய்யும் ஆண்டவருக்கு நான் இன்னிசை பாடுவேனாக.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 13 / 150
சங்கீதம் 13:136
1 ஆண்டவரே, எதுவரை என்னை மறந்திருப்பீர்? இறுதி வரை மறந்திடுவீரோ? எது வரை உமது திருமுகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொண்டிருப்பீர்? 2 என் வருத்தங்களை எவ்வளவு காலம் எனக்குள்ளேயே தாங்கிக்கொண்டிருப்பேன்? நாள் தோறும் எழுகின்ற மனக்கவலையே எத்தனை நாள் பொறுத்துக்கொண்டிருப்பேன்? எவ்வளவு காலம் என் எதிரி என் மீது வெற்றிகொள்வான்? 3 என் ஆண்டவராகிய இறைவா, என்னைக் கண்ணோக்கி என் மன்றாட்டைக் கேட்டருளும். 4 மரண உறக்கத்தில் நான் ஆழ்ந்துவிடாமல் என் கண்களுக்கு உமது ஒளியை வீசும்: 'அவனை மேற்கொண்டேன்' என்று என் எதிரி சொல்ல விடாதேயும்; நான் வீழ்ச்சியுற்றதைக் கண்டு என் எதிரிகளை அக்களிக்க விடாதீர். 5 உமது இரக்கத்தையே நான் நம்பியிருக்கிறேன் அன்றோ! உம்மிடமிருந்து வரும் உதவியை நினைத்து என் நெஞ்சம் அக்களிப்பதாக: 6 எனக்கு நன்மையே செய்யும் ஆண்டவருக்கு நான் இன்னிசை பாடுவேனாக.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 13 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References