தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. ஆண்டவர் சீயோனின் அடிமைகளை மீட்டு வந்த போது, நாங்கள் கனவு கண்டவர்கள் போல் இருந்தோம்.
2. அப்போது நம் உதடுகளில் சிரிப்பு ஒலித்தது, நாவில் மகிழ்ச்சிக் கீதமும் எழும்பியது: 'ஆண்டவர் அவர்களுக்கு மகத்தான காரியங்களைச் செய்தார்!' என்று அப்போது மக்களினத்தார் பேசிக் கொண்டனர்.
3. ஆம், ஆண்டவர் நமக்கு மகத்தான காரியங்களைச் செய்தார்: அதனால் பெரு மகிழ்ச்சி கொண்டோம்.
4. ஆண்டவரே, பாலைநிலத்தில் வெள்ளத்தைத் திருப்பிவிடுவது போல, எங்கள் நிலைமையை மாற்றிவிடும்.
5. கண்ணீரோடு விதை விதைப்பவர்கள், பெருமகிழ்ச்சியோடு அறுவடை செய்வார்கள்.
6. விதை தெளிக்கச் செல்லும் போது, அழுகையோடு செல்கிறார்கள்: அறுத்த அரிகளைச் சுமந்து வரும் போது பெருமகிழ்ச்சியோடு வருவார்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 126 / 150
சங்கீதம் 126:56
1 ஆண்டவர் சீயோனின் அடிமைகளை மீட்டு வந்த போது, நாங்கள் கனவு கண்டவர்கள் போல் இருந்தோம். 2 அப்போது நம் உதடுகளில் சிரிப்பு ஒலித்தது, நாவில் மகிழ்ச்சிக் கீதமும் எழும்பியது: 'ஆண்டவர் அவர்களுக்கு மகத்தான காரியங்களைச் செய்தார்!' என்று அப்போது மக்களினத்தார் பேசிக் கொண்டனர். 3 ஆம், ஆண்டவர் நமக்கு மகத்தான காரியங்களைச் செய்தார்: அதனால் பெரு மகிழ்ச்சி கொண்டோம். 4 ஆண்டவரே, பாலைநிலத்தில் வெள்ளத்தைத் திருப்பிவிடுவது போல, எங்கள் நிலைமையை மாற்றிவிடும். 5 கண்ணீரோடு விதை விதைப்பவர்கள், பெருமகிழ்ச்சியோடு அறுவடை செய்வார்கள். 6 விதை தெளிக்கச் செல்லும் போது, அழுகையோடு செல்கிறார்கள்: அறுத்த அரிகளைச் சுமந்து வரும் போது பெருமகிழ்ச்சியோடு வருவார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 126 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References