தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்தினேன்: "உதவி எனக்கு எங்கிருந்து வரும்?"
2. உதவி எனக்கு ஆண்டவரிடமிருந்தே வரும்: அவரே வானமும் வையமும் படைத்தவர்.
3. உன் கால் இடற விடமாட்டார்: உன்னைக் காக்கும் அவர் உறங்கி விட மாட்டார்.
4. இதோ, இஸ்ராயேலைக் காப்பவர் அயர்வதுமில்லை: உறங்குவதுமில்லை.
5. ஆண்டவர் உன்னைக் காக்கிறார்: ஆண்டவர் உன் வலப்புறத்தில் உன் பாதுகாப்பாயிருக்கிறார்.
6. பகலில் வெயில் உனக்குத் தீங்கு இழைக்காது: இரவில் நிலாவும் தீமை ஒன்றும் செய்யாது.
7. ஆண்டவர் எல்லாத் தீமையினின்றும் உன்னைக் காப்பார்: அவரே உன் ஆன்மாவையும் காப்பவர்.
8. ஆண்டவர் நீ போகும் போதும் காப்பார், வரும் போதும் காப்பார்: இப்போதும் எப்போதும் உன்னைக் காப்பார்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 121 / 150
சங்கீதம் 121:35
1 மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்தினேன்: "உதவி எனக்கு எங்கிருந்து வரும்?" 2 உதவி எனக்கு ஆண்டவரிடமிருந்தே வரும்: அவரே வானமும் வையமும் படைத்தவர். 3 உன் கால் இடற விடமாட்டார்: உன்னைக் காக்கும் அவர் உறங்கி விட மாட்டார். 4 இதோ, இஸ்ராயேலைக் காப்பவர் அயர்வதுமில்லை: உறங்குவதுமில்லை. 5 ஆண்டவர் உன்னைக் காக்கிறார்: ஆண்டவர் உன் வலப்புறத்தில் உன் பாதுகாப்பாயிருக்கிறார். 6 பகலில் வெயில் உனக்குத் தீங்கு இழைக்காது: இரவில் நிலாவும் தீமை ஒன்றும் செய்யாது. 7 ஆண்டவர் எல்லாத் தீமையினின்றும் உன்னைக் காப்பார்: அவரே உன் ஆன்மாவையும் காப்பவர். 8 ஆண்டவர் நீ போகும் போதும் காப்பார், வரும் போதும் காப்பார்: இப்போதும் எப்போதும் உன்னைக் காப்பார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 121 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References