தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. (114:9) எங்களுக்கன்று ஆண்டவரே, மகிமை எங்களுக்கன்று; அது உம் பெயருக்கே உரியது: உம் இரக்கத்தையும் பிரமாணிக்கத்தையும் முன்னிட்டு மகிமை உமக்கே உரியது.
2. (114:10) அவர்களுடைய கடவுள் எங்கே?" எனப் புறவினத்தார் சொல்வது ஏன்?
3. (114:11) நம் இறைவனோ வானுலகில் உள்ளார்: தாம் விரும்பிய யாவும் செய்துள்ளார்.
4. (114:12) அவர்களுடைய சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே: வெறும் மனிதக் கைவேலையே.
5. (114:13) அவைகளுக்கு வாய் உண்டு, பேசுவதில்லை: கண்கள் உண்டு, பார்ப்பதில்லை.
6. (114:14) செவிகள் உண்டு, கேட்பதில்லை; நாசி உண்டு, முகர்வதில்லை.
7. (114:15) கைகள் உண்டு, தொடுவதில்லை: கால்கள் உண்டு, நடப்பதில்லை; தொண்டையிலிருந்து ஒலி எழும்புவதில்லை.
8. (114:16) அவற்றைச் செய்கிறவர்களும் அவைகளுக்கு ஒப்பானவர்களே: அவற்றை நம்புகிறவர்களும் அவற்றைப் போன்றவர்களே.
9. (114:17) இஸ்ராயேல் மக்களுக்கு ஆண்டவர் மீது நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார்.
10. (114:18) ஆரோனின் குலத்தார்க்கு ஆண்டவர் மீது நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார்.
11. (114:19) ஆண்டவரை அஞ்சுவோர்க்கு அவர் மேல் நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார்.
12. (114:20) ஆண்டவர் நம்மை நினைவு கூர்கிறார்: நமக்குத் தம் ஆசியை அளிப்பார். இஸ்ராயேல் மக்களுக்கு ஆசியை அளிப்பார். ஆரோனின் இனத்தார்க்கு ஆசியை அளிப்பார்.
13. (114:21) தமக்கு அஞ்சி நடப்போர்க்கு ஆசி அளிப்பார்: சிறியோர்க்கும் பெரியோர்க்கும் ஆசி அளிப்பார்.
14. (114:22) ஆண்டவர் உங்கள் இனத்தைப் பெருகச் செய்வார்; நீங்களும் உங்கள் மக்களும் வளரச் செய்வார்.
15. (114:23) ஆண்டவரின் ஆசி பெற்றவர்கள் நீங்கள்: வானமும் வையமும் படைத்தவரே உங்களுக்கு ஆசி அளித்துள்ளார்.
16. (114:24) விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது; மண்ணகத்தையோ அவர் மனுமக்களுக்கு அளித்துள்ளார்.
17. (114:25) இறந்தோர் ஆண்டவரைப் புகழ்வதில்லை: கீழுலகம் செல்வோரும் அவரைப் புகழ்வதில்லை.
18. (114:26) உயிர் வாழும் நாமே ஆண்டவரை வாழ்த்துகின்றோம்: இன்றும் என்றும் வாழ்த்துகிறோம்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 115 / 150
சங்கீதம் 115:54
1 (114:9) எங்களுக்கன்று ஆண்டவரே, மகிமை எங்களுக்கன்று; அது உம் பெயருக்கே உரியது: உம் இரக்கத்தையும் பிரமாணிக்கத்தையும் முன்னிட்டு மகிமை உமக்கே உரியது. 2 (114:10) அவர்களுடைய கடவுள் எங்கே?" எனப் புறவினத்தார் சொல்வது ஏன்? 3 (114:11) நம் இறைவனோ வானுலகில் உள்ளார்: தாம் விரும்பிய யாவும் செய்துள்ளார். 4 (114:12) அவர்களுடைய சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே: வெறும் மனிதக் கைவேலையே. 5 (114:13) அவைகளுக்கு வாய் உண்டு, பேசுவதில்லை: கண்கள் உண்டு, பார்ப்பதில்லை. 6 (114:14) செவிகள் உண்டு, கேட்பதில்லை; நாசி உண்டு, முகர்வதில்லை. 7 (114:15) கைகள் உண்டு, தொடுவதில்லை: கால்கள் உண்டு, நடப்பதில்லை; தொண்டையிலிருந்து ஒலி எழும்புவதில்லை. 8 (114:16) அவற்றைச் செய்கிறவர்களும் அவைகளுக்கு ஒப்பானவர்களே: அவற்றை நம்புகிறவர்களும் அவற்றைப் போன்றவர்களே. 9 (114:17) இஸ்ராயேல் மக்களுக்கு ஆண்டவர் மீது நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார். 10 (114:18) ஆரோனின் குலத்தார்க்கு ஆண்டவர் மீது நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார். 11 (114:19) ஆண்டவரை அஞ்சுவோர்க்கு அவர் மேல் நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார். 12 (114:20) ஆண்டவர் நம்மை நினைவு கூர்கிறார்: நமக்குத் தம் ஆசியை அளிப்பார். இஸ்ராயேல் மக்களுக்கு ஆசியை அளிப்பார். ஆரோனின் இனத்தார்க்கு ஆசியை அளிப்பார். 13 (114:21) தமக்கு அஞ்சி நடப்போர்க்கு ஆசி அளிப்பார்: சிறியோர்க்கும் பெரியோர்க்கும் ஆசி அளிப்பார். 14 (114:22) ஆண்டவர் உங்கள் இனத்தைப் பெருகச் செய்வார்; நீங்களும் உங்கள் மக்களும் வளரச் செய்வார். 15 (114:23) ஆண்டவரின் ஆசி பெற்றவர்கள் நீங்கள்: வானமும் வையமும் படைத்தவரே உங்களுக்கு ஆசி அளித்துள்ளார். 16 (114:24) விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது; மண்ணகத்தையோ அவர் மனுமக்களுக்கு அளித்துள்ளார். 17 (114:25) இறந்தோர் ஆண்டவரைப் புகழ்வதில்லை: கீழுலகம் செல்வோரும் அவரைப் புகழ்வதில்லை. 18 (114:26) உயிர் வாழும் நாமே ஆண்டவரை வாழ்த்துகின்றோம்: இன்றும் என்றும் வாழ்த்துகிறோம்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 115 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References