1. (114:9) எங்களுக்கன்று ஆண்டவரே, மகிமை எங்களுக்கன்று; அது உம் பெயருக்கே உரியது: உம் இரக்கத்தையும் பிரமாணிக்கத்தையும் முன்னிட்டு மகிமை உமக்கே உரியது.
|
7. (114:15) கைகள் உண்டு, தொடுவதில்லை: கால்கள் உண்டு, நடப்பதில்லை; தொண்டையிலிருந்து ஒலி எழும்புவதில்லை.
|
8. (114:16) அவற்றைச் செய்கிறவர்களும் அவைகளுக்கு ஒப்பானவர்களே: அவற்றை நம்புகிறவர்களும் அவற்றைப் போன்றவர்களே.
|
9. (114:17) இஸ்ராயேல் மக்களுக்கு ஆண்டவர் மீது நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார்.
|
10. (114:18) ஆரோனின் குலத்தார்க்கு ஆண்டவர் மீது நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார்.
|
11. (114:19) ஆண்டவரை அஞ்சுவோர்க்கு அவர் மேல் நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார்.
|
12. (114:20) ஆண்டவர் நம்மை நினைவு கூர்கிறார்: நமக்குத் தம் ஆசியை அளிப்பார். இஸ்ராயேல் மக்களுக்கு ஆசியை அளிப்பார். ஆரோனின் இனத்தார்க்கு ஆசியை அளிப்பார்.
|
15. (114:23) ஆண்டவரின் ஆசி பெற்றவர்கள் நீங்கள்: வானமும் வையமும் படைத்தவரே உங்களுக்கு ஆசி அளித்துள்ளார்.
|