தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. நான் ஆண்டவரிடம் அடைக்கலம் தேடுகிறேன்: "பறவை போல் மலைக்குப் பறந்து செல்.
2. இதோ பாவிகள் வில்லை வளைக்கிறார்கள்; நாணில் அம்பு தொடுக்கிறார்கள்: நேர் மனத்தோர் மீது இருளில் அம்பு எய்யப் பார்க்கிறார்கள்;
3. அடிப்படையே தகர்க்கப்படும் போது, நீதிமான் என்ன செய்யமுடியும்?" என்று நீங்கள் என்னிடம் சொல்வானேன்.
4. ஆண்டவர் தம் இருக்கை புனித ஆலயம்: ஆண்டவருடைய அரியனை வானகம்! அவருடைய கண்கள் உற்று நோக்குகின்றன: மனுமக்களை அவை பரிசோதித்துப் பார்க்கின்றன.
5. நீதிமானையும் தீயோனையும் ஆண்டவர் ஊடுருவிப்பார்க்கிறார்: தீமையை விரும்புகின்றவனை அவர் வெறுக்கிறார்.
6. பாவிகள் மீது அவர் நெருப்பு மழையும் கந்தகமும் பொழிவார்: அனல் காற்றே அவர்கள் கதி.
7. ஏனெனில் ஆண்டவர் நீதியுள்ளவர், நீதியை நேசிப்பவர்: நேர்மையுள்ளவர்கள் அவர் முகத்தைக் காண்பார்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 150
சங்கீதம் 11:169
1 நான் ஆண்டவரிடம் அடைக்கலம் தேடுகிறேன்: "பறவை போல் மலைக்குப் பறந்து செல். 2 இதோ பாவிகள் வில்லை வளைக்கிறார்கள்; நாணில் அம்பு தொடுக்கிறார்கள்: நேர் மனத்தோர் மீது இருளில் அம்பு எய்யப் பார்க்கிறார்கள்; 3 அடிப்படையே தகர்க்கப்படும் போது, நீதிமான் என்ன செய்யமுடியும்?" என்று நீங்கள் என்னிடம் சொல்வானேன். 4 ஆண்டவர் தம் இருக்கை புனித ஆலயம்: ஆண்டவருடைய அரியனை வானகம்! அவருடைய கண்கள் உற்று நோக்குகின்றன: மனுமக்களை அவை பரிசோதித்துப் பார்க்கின்றன. 5 நீதிமானையும் தீயோனையும் ஆண்டவர் ஊடுருவிப்பார்க்கிறார்: தீமையை விரும்புகின்றவனை அவர் வெறுக்கிறார். 6 பாவிகள் மீது அவர் நெருப்பு மழையும் கந்தகமும் பொழிவார்: அனல் காற்றே அவர்கள் கதி. 7 ஏனெனில் ஆண்டவர் நீதியுள்ளவர், நீதியை நேசிப்பவர்: நேர்மையுள்ளவர்கள் அவர் முகத்தைக் காண்பார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References