தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. அல்லேலூயா! ஆண்டவரைப் போற்றுங்கள், ஏனெனில், அவர் நன்மை மிகுந்தவர்: என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்.
2. ஆண்டவர் செய்த வல்லமை மிக்க செயல்களை யார் எடுத்துரைக்க இயலும்? அவருடைய புகழனைத்தையும் யார் விளம்ப இயலும்?
3. அவர் தந்த கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் பேறு பெற்றோர்: நீதியானதை எந்நாளும் செய்பவர் பேறு பெற்றோர்.
4. ஆண்டவரே, நீர் உம் மக்களின் மீது காட்டிய கருணைக்கேற்ப என்னை நினைவுகூரும்: உமது உதவியை எனக்குத் தாரும்.
5. அப்போது உம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்குள்ள பெரும் பேற்றைக் கண்டு நான் இன்புறுவேன்: உம் மக்களின் மகிழ்ச்சியைக் கண்டு நானும் மகிழ்ச்சியுறுவேன்; உம் உரிமைப் பேறான மக்களோடு நான் பெருமை அடைவேன்.
6. எங்கள் முன்னோர்களைப் போல நாங்களும் பாவம் செய்தோம், அக்கிரமம் செய்தோம்: தீமைகள் புரிந்தோம்.
7. எங்கள் முன்னோர்கள் எகிப்தில் நீர் செய்த அற்புதச் செயல்களை உணரவில்லை; உமது இரக்கப் பெருக்கை அவர்கள் நினைவு கூரவில்லை: மாறாக, உன்னதரை எதிர்த்துச் செங்கடலருகில் கலகம் விளைவித்தனர்.
8. ஆனால் ஆண்டவர் தம் வல்லமையை வெளிப்படுத்த, தம் பெயரின் பொருட்டு அவர்களுக்கு மீட்பளித்தார்.
9. செங்கடலை அதட்டினார், அது உலர்ந்து போயிற்று: பாலை வெளியில் நடப்பது போல் அவர்களைக் கடல் வழியே அழைத்துச் சென்றார்.
10. எதிரியின் கையினின்று அவர்களைக் காத்தார்: பகைவனின் பிடியினின்று அவர்களை விடுவித்தார்.
11. அவர்களுடைய எதிரிகளைக் கடல் வெள்ளம் மூழ்கடித்தது: அவர்களுள் ஒருவன் கூடத் தப்பவில்லை.
12. அப்போது அவர் சொன்ன வாத்தையை நம்பினர்: அவரைப் புகழ்ந்து பாடினர்.
13. ஆனால் அவர் செய்த செயல்களை விரைவிலேயே மறந்து விட்டனர் அவரது திட்டத்தின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை.
14. பாலைவெளியில் அவர்கள் தங்கள் இச்சைக்கு இடம் தரலாயினர்: கடவுளை அவர்கள் அங்கே சோதிக்கலாயினர்.
15. அவர்கள் விரும்பியதை அவர்களுக்குத் தந்தார்: ஆனால் கொடிய நோய்க்கு அவர்களை உள்ளாக்கினார்.
16. பாசாறையில் வாழ்ந்த காலத்தில் மோயீசன் மீது பொறாமை கொண்டனர்: ஆண்டவருக்கு உகந்தவரான ஆரோனின் மீதும் பொறாமை கொண்டனர்.
17. பூமி பிளந்து, தாத்தானை விழுங்கியது: அபிரோனின் கூட்டத்தை அப்படியே விழுங்கி விட்டது.
18. அவர்கள் கூட்டத்தின்மீது நெருப்பு வந்து விழுந்தது: தீயோர் அதனால் எரிக்கப்பட்டனர்.
19. ஓரேப் மலையில் கன்றுக்குட்டியை உருவாக்கினர்: பொன்னால் வார்த்த சிலையை வணங்கலாயினர்.
20. புல்மேயும் காளையின் சிலைக்குக் கடவுளின் மாட்சியை ஈடாக்கினர்.
21. தங்களை மீட்டுக்கொண்ட கடவுளை அவர்கள் மறந்தனர்: எகிப்தில் புதுமை செய்தவரை மறந்தனர்.
22. காமின் நாட்டில் நிகழ்ந்த அற்புதங்கள் ஆற்றியவரை, செங்கடலருகே வியப்புக்குரியன செய்தவரை மறந்தனர்.
23. இறைவன் அவர்களை அடியோடு தொலைத்து விட எண்ணினார்: ஆனால் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோயீசன் குறுக்கிட்டார். அவரிடம் அவர்களுக்காகப் பரிந்து பேசினார்: அவர் கொண்ட சினத்தை அமர்த்தலானார்; அவர்களை அழித்து விடாதபடி செய்தார்.
24. அவர்களோ அருமையான நாட்டினுள் செல்ல மறுத்தனர்: அவரது சொல்லை நம்பவில்லை.
25. தங்கள் கூடாரங்களில் இருந்து கொண்டு முறுமுறுக்கலாயினர்: ஆண்டவருக்கு அவர்கள் கீழ்ப்படியவில்லை.
26. ஓங்கிய கையுடன் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியது; "பாலைவெளியில் உங்களை வீழ்த்துவேன்.
27. உங்கள் சந்ததியை உலகெங்கும் சிதறடிப்பேன்: நாடுகள் தோறும் நீங்கள் சிதறுண்டு போவீர்கள்!"
28. பேல்பேகோரின் வழிபாட்டில் ஈடுபட்டனர்: உயிரற்ற தேவர்களுக்குப் படைத்ததை உண்டனர்.
29. தாங்கள் செய்த அக்கிரமங்களால் ஆண்டவருக்குச் சினமூட்டினர்: கொள்ளைநோய் ஒன்று அவர்களைத் தாக்கியது.
30. பினேஸ் என்பவர் எழுந்தார், பாவத்துக்காகப் பழிவாங்கினார்: கொள்ளை நோய் நின்றது.
31. அது அவருக்குப் புண்ணியமெனக் கருதப்பட்டது: தலைமுறை தலைமுறைக்கும் அது புண்ணியமாக எண்ணப்பட்டது.
32. மெரிபா நீர் நிலையருகில் அவருக்குச் சினமூட்டினர்: அதனால் மோயீசனுக்கும் தீங்கு விளைவிந்தது.
33. அவருக்கு மனக்கசப்பு விளைவித்தனர்: அவரும் யோசனையின்றிப் பேசினார்.
34. புறவினத்தாரை அழிக்கும்படி ஆண்டவர் கட்டளையிட்டார்: ஆனால் அவர்கள் அழிக்கவில்லை.
35. அதோடு அவ்வேற்றினத்தாரோடு சேர்ந்து கொண்டனர்: அவர்கள் செய்த அக்கிரமங்களையே இவர்களும் செய்யலாயினர்.
36. அவர்கள் வழிபட்ட சிலைகளை வணங்கலாயினர்: அவையே அவர்களுக்குக் கண்ணிகள் ஆயின.
37. தம் ஆண் மக்களை அச்சிலைகளுக்குப் பலியிடலாயினர்; தம் பெண் மக்களைப் பேய்களுக்குப் பலியிட்டனர்.
38. மாசற்ற இரத்தத்தை இப்படி அவர்கள் சிந்தினர்: தங்கள் குழந்தைகளின் இரத்தத்தைச் சிந்தினர், கானான் நாட்டுச் சிலைகளுக்கு அவர்களைப் பலியிட்டனர்: நாடு முழுவதும் அந்த இரத்தத்தால் தீட்டுப்பட்டது.
39. தம் செயல்களால் அவர்கள் தீட்டு அடைந்தனர்: தங்கள் அக்கிரமங்களால் வேசித்தனம் செய்தனர்.
40. தம் மக்கள் மீது ஆண்டவர் சினம் மூண்டெழுந்தார்: தம் உரிமைப் பொருளான அவர்களை வெறுத்துத் தள்ளினார்.
41. புறவினத்தார் கையில் அவர்களை விட்டுவிட்டார்: அவர்களைப் பகைத்தவர்களே அவர்கள் மீது அதிகாரம் செலுத்தலாயினர்.
42. அவர்களுடைய எதிரிகள் அவர்களை வாட்டி வதைத்தனர்: அவர்கள் அதிகாரத்தில் அவர்கள் நொறுங்குண்டனர்.
43. எத்தனையோ முறை அவர்களை விடுவித்தார்: அவர்கள் அவருக்கு மனக்கசப்பு உண்டாக்கினர்; அவர்கள் செய்த அக்கிரமங்களின் பொருட்டு வதைக்கப்பட்டனர்.
44. எனினும் அவர் அவர்களின் துன்பங்களைப் பார்த்தார்: அவர்கள் கூக்குரலைக் கேட்டு ஏற்கலானார்.
45. அவர்களுக்கு அருள் கூரும் பொருட்டுத் தம் உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்; தம் அருள் அன்பை நினைத்து இரக்கம் காட்டினார்.
46. அவர்களைச் சிறைப்படுத்தியவர்கள் கூட, அவர்களுக்கு இரக்கம் காட்டும்படி செய்தார்.
47. ஆண்டவரே, எம் இறைவா எங்களை மீட்டருளும்: எல்லா நாடுகளினின்றும் எங்களைக் கூட்டிச் சேர்த்தருளும். அப்போது நாங்கள் உமது பெயரைக் கொண்டாடுவோம்: உமக்குள்ள புகழை நினைத்துப் பெருமைப் படுவோம்.
48. இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் என்றென்றும் போற்றி! அல்லேலூயா மக்கள் எல்லாரும் அதற்கு 'ஆமென்' என்பார்களாக.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 106 / 150
1 அல்லேலூயா! ஆண்டவரைப் போற்றுங்கள், ஏனெனில், அவர் நன்மை மிகுந்தவர்: என்றென்றும் உள்ளது அவரது இரக்கம். 2 ஆண்டவர் செய்த வல்லமை மிக்க செயல்களை யார் எடுத்துரைக்க இயலும்? அவருடைய புகழனைத்தையும் யார் விளம்ப இயலும்? 3 அவர் தந்த கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் பேறு பெற்றோர்: நீதியானதை எந்நாளும் செய்பவர் பேறு பெற்றோர். 4 ஆண்டவரே, நீர் உம் மக்களின் மீது காட்டிய கருணைக்கேற்ப என்னை நினைவுகூரும்: உமது உதவியை எனக்குத் தாரும். 5 அப்போது உம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்குள்ள பெரும் பேற்றைக் கண்டு நான் இன்புறுவேன்: உம் மக்களின் மகிழ்ச்சியைக் கண்டு நானும் மகிழ்ச்சியுறுவேன்; உம் உரிமைப் பேறான மக்களோடு நான் பெருமை அடைவேன். 6 எங்கள் முன்னோர்களைப் போல நாங்களும் பாவம் செய்தோம், அக்கிரமம் செய்தோம்: தீமைகள் புரிந்தோம். 7 எங்கள் முன்னோர்கள் எகிப்தில் நீர் செய்த அற்புதச் செயல்களை உணரவில்லை; உமது இரக்கப் பெருக்கை அவர்கள் நினைவு கூரவில்லை: மாறாக, உன்னதரை எதிர்த்துச் செங்கடலருகில் கலகம் விளைவித்தனர். 8 ஆனால் ஆண்டவர் தம் வல்லமையை வெளிப்படுத்த, தம் பெயரின் பொருட்டு அவர்களுக்கு மீட்பளித்தார். 9 செங்கடலை அதட்டினார், அது உலர்ந்து போயிற்று: பாலை வெளியில் நடப்பது போல் அவர்களைக் கடல் வழியே அழைத்துச் சென்றார். 10 எதிரியின் கையினின்று அவர்களைக் காத்தார்: பகைவனின் பிடியினின்று அவர்களை விடுவித்தார். 11 அவர்களுடைய எதிரிகளைக் கடல் வெள்ளம் மூழ்கடித்தது: அவர்களுள் ஒருவன் கூடத் தப்பவில்லை. 12 அப்போது அவர் சொன்ன வாத்தையை நம்பினர்: அவரைப் புகழ்ந்து பாடினர். 13 ஆனால் அவர் செய்த செயல்களை விரைவிலேயே மறந்து விட்டனர் அவரது திட்டத்தின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. 14 பாலைவெளியில் அவர்கள் தங்கள் இச்சைக்கு இடம் தரலாயினர்: கடவுளை அவர்கள் அங்கே சோதிக்கலாயினர். 15 அவர்கள் விரும்பியதை அவர்களுக்குத் தந்தார்: ஆனால் கொடிய நோய்க்கு அவர்களை உள்ளாக்கினார். 16 பாசாறையில் வாழ்ந்த காலத்தில் மோயீசன் மீது பொறாமை கொண்டனர்: ஆண்டவருக்கு உகந்தவரான ஆரோனின் மீதும் பொறாமை கொண்டனர். 17 பூமி பிளந்து, தாத்தானை விழுங்கியது: அபிரோனின் கூட்டத்தை அப்படியே விழுங்கி விட்டது. 18 அவர்கள் கூட்டத்தின்மீது நெருப்பு வந்து விழுந்தது: தீயோர் அதனால் எரிக்கப்பட்டனர். 19 ஓரேப் மலையில் கன்றுக்குட்டியை உருவாக்கினர்: பொன்னால் வார்த்த சிலையை வணங்கலாயினர். 20 புல்மேயும் காளையின் சிலைக்குக் கடவுளின் மாட்சியை ஈடாக்கினர். 21 தங்களை மீட்டுக்கொண்ட கடவுளை அவர்கள் மறந்தனர்: எகிப்தில் புதுமை செய்தவரை மறந்தனர். 22 காமின் நாட்டில் நிகழ்ந்த அற்புதங்கள் ஆற்றியவரை, செங்கடலருகே வியப்புக்குரியன செய்தவரை மறந்தனர். 23 இறைவன் அவர்களை அடியோடு தொலைத்து விட எண்ணினார்: ஆனால் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோயீசன் குறுக்கிட்டார். அவரிடம் அவர்களுக்காகப் பரிந்து பேசினார்: அவர் கொண்ட சினத்தை அமர்த்தலானார்; அவர்களை அழித்து விடாதபடி செய்தார். 24 அவர்களோ அருமையான நாட்டினுள் செல்ல மறுத்தனர்: அவரது சொல்லை நம்பவில்லை. 25 தங்கள் கூடாரங்களில் இருந்து கொண்டு முறுமுறுக்கலாயினர்: ஆண்டவருக்கு அவர்கள் கீழ்ப்படியவில்லை. 26 ஓங்கிய கையுடன் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியது; "பாலைவெளியில் உங்களை வீழ்த்துவேன். 27 உங்கள் சந்ததியை உலகெங்கும் சிதறடிப்பேன்: நாடுகள் தோறும் நீங்கள் சிதறுண்டு போவீர்கள்!" 28 பேல்பேகோரின் வழிபாட்டில் ஈடுபட்டனர்: உயிரற்ற தேவர்களுக்குப் படைத்ததை உண்டனர். 29 தாங்கள் செய்த அக்கிரமங்களால் ஆண்டவருக்குச் சினமூட்டினர்: கொள்ளைநோய் ஒன்று அவர்களைத் தாக்கியது. 30 பினேஸ் என்பவர் எழுந்தார், பாவத்துக்காகப் பழிவாங்கினார்: கொள்ளை நோய் நின்றது. 31 அது அவருக்குப் புண்ணியமெனக் கருதப்பட்டது: தலைமுறை தலைமுறைக்கும் அது புண்ணியமாக எண்ணப்பட்டது. 32 மெரிபா நீர் நிலையருகில் அவருக்குச் சினமூட்டினர்: அதனால் மோயீசனுக்கும் தீங்கு விளைவிந்தது. 33 அவருக்கு மனக்கசப்பு விளைவித்தனர்: அவரும் யோசனையின்றிப் பேசினார். 34 புறவினத்தாரை அழிக்கும்படி ஆண்டவர் கட்டளையிட்டார்: ஆனால் அவர்கள் அழிக்கவில்லை. 35 அதோடு அவ்வேற்றினத்தாரோடு சேர்ந்து கொண்டனர்: அவர்கள் செய்த அக்கிரமங்களையே இவர்களும் செய்யலாயினர். 36 அவர்கள் வழிபட்ட சிலைகளை வணங்கலாயினர்: அவையே அவர்களுக்குக் கண்ணிகள் ஆயின. 37 தம் ஆண் மக்களை அச்சிலைகளுக்குப் பலியிடலாயினர்; தம் பெண் மக்களைப் பேய்களுக்குப் பலியிட்டனர். 38 மாசற்ற இரத்தத்தை இப்படி அவர்கள் சிந்தினர்: தங்கள் குழந்தைகளின் இரத்தத்தைச் சிந்தினர், கானான் நாட்டுச் சிலைகளுக்கு அவர்களைப் பலியிட்டனர்: நாடு முழுவதும் அந்த இரத்தத்தால் தீட்டுப்பட்டது. 39 தம் செயல்களால் அவர்கள் தீட்டு அடைந்தனர்: தங்கள் அக்கிரமங்களால் வேசித்தனம் செய்தனர். 40 தம் மக்கள் மீது ஆண்டவர் சினம் மூண்டெழுந்தார்: தம் உரிமைப் பொருளான அவர்களை வெறுத்துத் தள்ளினார். 41 புறவினத்தார் கையில் அவர்களை விட்டுவிட்டார்: அவர்களைப் பகைத்தவர்களே அவர்கள் மீது அதிகாரம் செலுத்தலாயினர். 42 அவர்களுடைய எதிரிகள் அவர்களை வாட்டி வதைத்தனர்: அவர்கள் அதிகாரத்தில் அவர்கள் நொறுங்குண்டனர். 43 எத்தனையோ முறை அவர்களை விடுவித்தார்: அவர்கள் அவருக்கு மனக்கசப்பு உண்டாக்கினர்; அவர்கள் செய்த அக்கிரமங்களின் பொருட்டு வதைக்கப்பட்டனர். 44 எனினும் அவர் அவர்களின் துன்பங்களைப் பார்த்தார்: அவர்கள் கூக்குரலைக் கேட்டு ஏற்கலானார். 45 அவர்களுக்கு அருள் கூரும் பொருட்டுத் தம் உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்; தம் அருள் அன்பை நினைத்து இரக்கம் காட்டினார். 46 அவர்களைச் சிறைப்படுத்தியவர்கள் கூட, அவர்களுக்கு இரக்கம் காட்டும்படி செய்தார். 47 ஆண்டவரே, எம் இறைவா எங்களை மீட்டருளும்: எல்லா நாடுகளினின்றும் எங்களைக் கூட்டிச் சேர்த்தருளும். அப்போது நாங்கள் உமது பெயரைக் கொண்டாடுவோம்: உமக்குள்ள புகழை நினைத்துப் பெருமைப் படுவோம். 48 இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் என்றென்றும் போற்றி! அல்லேலூயா மக்கள் எல்லாரும் அதற்கு 'ஆமென்' என்பார்களாக.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 106 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References