தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்: என் கூக்குரல் உம்மிடம் வருவதாக.
2. இடுக்கண் உற்ற நாளில் உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக்கொள்ளாதேயும்: என் வேண்டுதலுக்கு செவிசாய்த்தருளும்; உம்மைக் கூவியழைக்கும் போது விரைவாக என் வேண்டுதலைக் கேட்டருளும்.
3. ஏனெனில், என் வாழ்நாள் புகை போல் மறைகின்றது: என் எலும்புகள் நெருப்புப் போல் எரிகின்றன.
4. என் இதயம் புல்லைப் போல் வெட்டுண்டு உலருகின்றது: உணவு உண்ணவும் நான் மறந்து போகிறேன்.
5. நான் வெகுவாய்ப் புலம்புகிறேன்: அதனால் என் எலும்புகள் தோலோடு ஒட்டிக் கொள்கின்றன.
6. பலைவனத்தில் இருக்கும் பெலிக்கானுக்கு நான் ஒப்பானேன்: பாழடைந்த இடத்தில் உலவும் ஆந்தை போலானேன்.
7. கூரைமீது, தனித்தமர்ந்த பறவைப் போல், தூக்கமின்றிப் புலம்புகின்றேன்.
8. என் எதிரிகள் என்னை எந்நேரமும் பழிக்கின்றனர்: என்மேல் மூர்க்க வெறிகொண்டவர்கள் என் பெயரைச் சொல்லிச் சபிக்கின்றனர்.
9. சாம்பலை நான் உணவாகக் கொள்கின்றேன்: நான் குடிக்கும் பானம் என் கண்ணீரோடு கலந்துள்ளது.
10. உமது வெகுளிக்கும் வெஞ்சினத்துக்குமுன் நடுங்குகின்றேன்: ஏனெனில் என்னை வெகுவாய் உயர்த்தினீர், பின்னர் தூக்கி எறிந்து விட்டீர்.
11. என்னுடைய வாழ்நாள் மாலை நிழலுக்கு ஒப்பாயிற்று: நானும் புல்லைப்போல் உலருகின்றேன்.
12. நீரோ ஆண்டவரே, என்றென்றும் நிலைத்துள்ளீர்: உமது பெயரின் புகழ் தலைமுறை தலைமுறையாய் நிலைத்திருக்கும்.
13. நீர் எழுந்து சீயோனுக்கு இரக்கம் காட்டும்: அதன் மீது இரக்கம் காட்ட காலம் வந்தது; இதோ ஏற்ற வேளை வந்துள்ளது.
14. அதன் கற்கள் மீது உம் ஊழியர் பற்றுக் கொண்டுள்ளனர்: அதன் அழிவை நினைத்துத் துயருகின்றனர்.
15. ஆண்டவரே, புற இனத்தார் உமது பெயரைக் கேட்டு அச்சம் கொள்வர்; மாநிலத்து அரசர்கள் அனைவரும் உமது மாட்சிமை கண்டு மருள்வர்.
16. ஆண்டவர் சீயோனை மீளவும் எழுப்பும் போது, நம் மாட்சிமையில் அவர் விளங்கும் போது,
17. எளியோர் செய்யும் செபத்தைத் தள்ளாமல் செவியேற்பார்: அவர்களுடைய வேண்டுதலைப் புறக்கணியார்.
18. பின் வரும் சந்ததிக்கென இதெல்லாம் எழுதப்படட்டும்: உருவாகி வரும் மக்கள் ஆண்டவரைப் புகழ்வார்களாக.
19. சிறைப்பட்டவர்களின் புலம்புதல்களைக் கேட்கவும், சாவுக்கனெ குறிக்கப்பட்டவர்களை விடுவிக்கவும்,
20. உன்னதங்களிலுள்ள தம் திருத்தலத்தினின்று ஆண்டவர் தம் பார்வையைத் திருப்பினார்: வானினின்று வையகத்தை நோக்கினார்.
21. இவ்வாறு ஆண்டவருக்கு ஊழியம் செய்யும் படி மக்களினங்கள். அரசுகள் அனைத்தும் ஒன்றாய்க் கூடும் போது,
22. ஆண்டவருடைய திருப்பெயர் சீயோனில் போற்றப்படும்: அவருடைய புகழ் யெருசலேமிலும் சாற்றப்படும்.
23. பாதி வழியில் என் பலத்தை எடுத்துவிட்டார்: என் வாழ்நாளைக் குறுக்கி விட்டார்.
24. நானோ வேண்டுதல் செய்தது: "என் இறைவா, என் வாழ்நாளின் பாதியில் என்னை எடுத்து விடாதீர்: உம் காலம் தலைமுறை தலைமுறையாய் உள்ளதன்றோ!"
25. ஆதியிலே நீர் பூவுலகுக்கு அடித்தளமிட்டீர்: வானங்கள் உம் கைவேலை.
26. (25b) இவையெல்லாம் அழிந்துவிடும், நீரோ நிலைநிற்பீர்: அனைத்துமே ஆடையைப் போல் பழமையடையும், துணிமணி போல் நீர் அவற்றை மாற்றுகிறீர்; அவையும் மாறிப்போம்.
27. (26) நீரோவெனில் ஒரே நிலையாய் உள்ளீர்: உம் காலத்துக்கு முடிவே இல்லை.
28. (27) உம் ஊழியரின் மக்கள் அச்சமின்றி வாழ்வார்கள்: அவர்கள் மக்கள் உம் முன்னே நிலைத்திடுவர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 102 of Total Chapters 150
சங்கீதம் 102:8

×

Alert

×

tamil Letters Keypad References