1. மாநிலத்தோரே, நீங்கள் அனைவரும் அக்களிப்போடு ஆண்டவரைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
2. மகிழ்ச்சியுடன் அவருக்கு ஊழியஞ்செய்யுங்கள்: பெரு மகிழ்ச்சியுடன் அவர் திருமுன் செல்லுங்கள்.
3. ஆண்டவரே கடவுள் என்று அறியுங்கள்: அவரே நம்மை உண்டாக்கினவர். அவருக்கே நாம் சொந்தம்: அவருடைய மக்கள் நாம், அவருடைய மந்தையின் ஆடுகள் நாம்.
4. புகழ்ப்பா இசைத்து அவருடைய வாயிலில் நுழையுங்கள்; இன்னிசையுடன் அவருடைய முற்றங்களில் நில்லுங்கள்: அவரைப் போற்றிப் புகழுங்கள், அவருடைய பெயரை வாழ்த்துங்கள்.
5. ஏனெனில் ஆண்டவர் நல்லர், அவர் இரக்கம் என்றென்றுமுள்ளது: அவருடைய வார்த்தை தலைமுறை தலைமுறைக்கும் நிலைத்திருக்கும்.