தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. ஆண்டவரே, ஏன் தொலைவிலுள்ளீர்? நெருக்கடியான வேளையில் ஏன் ஒளிந்து கொள்கிறீர்?
2. தீயோர் செருக்குற, எளியவரோ அவதிப்படுகிறார்கள்: அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளில் எளியோர் அகப்பட்டுத் தவிக்கிறார்கள்.
3. தன் தீய நாட்டத்தைப்பற்றி பாவியானவன் பெருமை கொள்கிறான்: பேராசைக்காரன் ஆண்டவரைப் பழிக்கிறான், புறக்கணிக்கிறான்.
4. கடவுளே இல்லை, எங்கே பழிவாங்கப்போகிறார்!" என்று தீயவன் செருக்குடன் சொல்கிறான்: இதுவே அவன் நினைவாயிருக்கிறது.
5. அவன் செய்யும் முயற்சிகள் எபபோதும் வெற்றிகரமாக முடிகின்றன: உம் தீர்ப்புகள் அவன் மனத்திற்குச் சிறிதும் எட்டாதவை; தன் எதிரிகளையெல்லாம் அவன் புறக்கணிக்கிறான்.
6. யாரும் என்னை அசைக்க முடியாது: தலைமுறை தலைமுறையாக நான் இன்பமாகவே வாழ்வேன்!" என்று அவன் தனக்குள் சொல்லிக்கொள்கிறான்.
7. அவன் பேசுவதெல்லாம் சாபனையும் கபடமும் வஞ்சகமுமே: அவன் நாவில் ஒலிப்பது தீமையும் இன்னலுமே.
8. சிற்றூர்களுக்கருகில் கண்ணி வைத்துப் பதுங்கியிருப்பான், மறைவான இடங்களில் குற்றமற்றவர்களைக் கொலை செய்கிறான்: எளியவர்களுக்குத் தீமை செய்வதிலேயே அவன் கண்ணாயிருக்கிறான்.
9. புதரில் பதுங்கியிருக்கும் சிங்கம்போல அவன் மறைவாகப் பதுங்கிக்கிடந்து, எளியவரைப் பிடிக்கக் கண்ணி வைக்கிறான்: எளியோரைத் தன் வலையில் விழச்செய்து பிடித்துக்கொள்கிறான்.
10. எளியவர் மீது பாய்வதற்காகத் தரை மீது படுத்துப் பதுங்கிக்கிடக்கிறான்: அவனுடைய கொடுமையால் எளியோர் வீழ்ச்சியுறுகின்றனர்.
11. கடவுள் மறந்துவிட்டார், தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்: ஒருகாலும் பார்க்கமாட்டார்" என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறான்.
12. ஆண்டவராகிய இறைவா, எழுந்தருளும், உம் கரத்தை உயர்த்தும்: எளியோரை மறவாதேயும்.
13. கெட்டவர்கள் கடவுளைப் புறக்கணிப்பதேன்? "அவர் பழிவாங்க நினைக்கமாட்டார்" என்று தமக்குள் சொல்லிக் கொள்வதேன்?
14. ஆனால் ஆண்டவரே, நீர் எல்லாம் பார்க்கிறீர்! துன்புறுவோரையும் வேதனைப்படுவோரையும் நீர் கவனித்துக் கொள்கிறீர்: அவர்களை உம்மிடம் ஏற்றுக்கொள்கிறீர்; எளியவன் தன்னை உம்மிடம் ஒப்படைக்கிறான்; அநாதைக்கு நீரே துணை.
15. பாவிகள், தீமை செய்வோர் இவர்களுடைய பலத்தை நொறுக்கிவிடும்: இவர்களுடைய அக்கிரமத்திற்கேற்பப் பழிவாங்கும், அவ்வக்கிரமம் தொலைந்தே போகட்டும்.
16. ஆண்டவர் என்றென்றும் அரசராவார்: அவருடைய நாட்டினின்று புறவினத்தார் ஒழிந்துபோயினர்.
17. அநாதைகளுக்கும் அவதியுறுவோர்க்கும் நீதி வழங்கவும், உலகைச் சார்ந்த மனிதர் இனி அச்சம் விளைவிக்காதிருக்கவும்,
18. தாழ்வுற்றோருடைய மன்றாட்டை ஆண்டவரே, நீர் கேட்டருளினீர்: அவர்களுடைய உள்ளத்திற்கு ஊக்கமளித்து அவர்களுக்குச் செவிசாய்த்தீர்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 10 / 150
சங்கீதம் 10:54
1 ஆண்டவரே, ஏன் தொலைவிலுள்ளீர்? நெருக்கடியான வேளையில் ஏன் ஒளிந்து கொள்கிறீர்? 2 தீயோர் செருக்குற, எளியவரோ அவதிப்படுகிறார்கள்: அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளில் எளியோர் அகப்பட்டுத் தவிக்கிறார்கள். 3 தன் தீய நாட்டத்தைப்பற்றி பாவியானவன் பெருமை கொள்கிறான்: பேராசைக்காரன் ஆண்டவரைப் பழிக்கிறான், புறக்கணிக்கிறான். 4 கடவுளே இல்லை, எங்கே பழிவாங்கப்போகிறார்!" என்று தீயவன் செருக்குடன் சொல்கிறான்: இதுவே அவன் நினைவாயிருக்கிறது. 5 அவன் செய்யும் முயற்சிகள் எபபோதும் வெற்றிகரமாக முடிகின்றன: உம் தீர்ப்புகள் அவன் மனத்திற்குச் சிறிதும் எட்டாதவை; தன் எதிரிகளையெல்லாம் அவன் புறக்கணிக்கிறான். 6 யாரும் என்னை அசைக்க முடியாது: தலைமுறை தலைமுறையாக நான் இன்பமாகவே வாழ்வேன்!" என்று அவன் தனக்குள் சொல்லிக்கொள்கிறான். 7 அவன் பேசுவதெல்லாம் சாபனையும் கபடமும் வஞ்சகமுமே: அவன் நாவில் ஒலிப்பது தீமையும் இன்னலுமே. 8 சிற்றூர்களுக்கருகில் கண்ணி வைத்துப் பதுங்கியிருப்பான், மறைவான இடங்களில் குற்றமற்றவர்களைக் கொலை செய்கிறான்: எளியவர்களுக்குத் தீமை செய்வதிலேயே அவன் கண்ணாயிருக்கிறான். 9 புதரில் பதுங்கியிருக்கும் சிங்கம்போல அவன் மறைவாகப் பதுங்கிக்கிடந்து, எளியவரைப் பிடிக்கக் கண்ணி வைக்கிறான்: எளியோரைத் தன் வலையில் விழச்செய்து பிடித்துக்கொள்கிறான். 10 எளியவர் மீது பாய்வதற்காகத் தரை மீது படுத்துப் பதுங்கிக்கிடக்கிறான்: அவனுடைய கொடுமையால் எளியோர் வீழ்ச்சியுறுகின்றனர். 11 கடவுள் மறந்துவிட்டார், தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்: ஒருகாலும் பார்க்கமாட்டார்" என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறான். 12 ஆண்டவராகிய இறைவா, எழுந்தருளும், உம் கரத்தை உயர்த்தும்: எளியோரை மறவாதேயும். 13 கெட்டவர்கள் கடவுளைப் புறக்கணிப்பதேன்? "அவர் பழிவாங்க நினைக்கமாட்டார்" என்று தமக்குள் சொல்லிக் கொள்வதேன்? 14 ஆனால் ஆண்டவரே, நீர் எல்லாம் பார்க்கிறீர்! துன்புறுவோரையும் வேதனைப்படுவோரையும் நீர் கவனித்துக் கொள்கிறீர்: அவர்களை உம்மிடம் ஏற்றுக்கொள்கிறீர்; எளியவன் தன்னை உம்மிடம் ஒப்படைக்கிறான்; அநாதைக்கு நீரே துணை. 15 பாவிகள், தீமை செய்வோர் இவர்களுடைய பலத்தை நொறுக்கிவிடும்: இவர்களுடைய அக்கிரமத்திற்கேற்பப் பழிவாங்கும், அவ்வக்கிரமம் தொலைந்தே போகட்டும். 16 ஆண்டவர் என்றென்றும் அரசராவார்: அவருடைய நாட்டினின்று புறவினத்தார் ஒழிந்துபோயினர். 17 அநாதைகளுக்கும் அவதியுறுவோர்க்கும் நீதி வழங்கவும், உலகைச் சார்ந்த மனிதர் இனி அச்சம் விளைவிக்காதிருக்கவும், 18 தாழ்வுற்றோருடைய மன்றாட்டை ஆண்டவரே, நீர் கேட்டருளினீர்: அவர்களுடைய உள்ளத்திற்கு ஊக்கமளித்து அவர்களுக்குச் செவிசாய்த்தீர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 10 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References