1. தீயோரின் அறிவுரைப்படி நடவாதவன், பாவிகளின் வழியில் செல்லாதவன், பழிகாரர் கூட்டத்தில் அமராதவன் பேறு பெற்றோன்.
2. கடவுளுடைய திருச்சட்டத்தில் இன்பம் காண்பவனாய், அதை அல்லும் பகலும் தியானிப்பவனே பேறு பெற்றோன்.
3. வாய்க்கால்களின் ஓரத்தில் நடப்பட்டு, இலைகள் என்றும் உதிர்க்காமல் தக்க பருவத்தில் கனி தரும் மரத்துக்கு அவன் ஒப்பாவான்: அவன் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவான்.
4. தீயவருக்கு அங்ஙனமிராது, ஒரு நாளுமிராது: காற்றோடு காற்றாய்ப் பறக்கும் பதர் போன்றவர்கள் அவர்கள்.
5. நீதித்தீர்ப்பு வரும் போது தீயோர் நிலை குலைந்துபோவர்: நல்லவர்கள் சபையில் பாவிகள் நிலைத்திரார்.
6. நல்லோரின் வழியைக் கடவுள் பாதுகாப்பார்: தீயோரின் வழியோ அழிவுக்கே செல்லும்.