தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நீதிமொழிகள்
1. என் மகனே, என் வார்த்தைகளைக் கைக்கொண்டு ஒழுகு.
2. என் கட்டளைகளையும் உன் மனத்திலே (செல்வம்போல்) கட்டிக் காத்துவை. உன் கட்டளைகளை உன் கண் விழியைப் போல் காத்துக்கொள். என் சட்டத்தை அனுசரித்து வந்தால் வாழ்வு பெறுவாய்.
3. அதை உன் விரல்களிலும் கட்டு; பலகைகளில் (எழுதி வைத்தாற்போல்) அதை உன் இதயத்திலும் எழுதி வை.
4. ஞானத்தை நோக்கி: நீ என் சகோதரி என்று சொல்.
5. விவேகத்தை உன் தோழியென்று அழை. அவை நயமாயும் இனிமையாயும் பேசுகிற அன்னிய பெண்ணினின்று உன்னைக் காக்கும்.
6. ஏனென்றால், என் வீட்டுப் பலகணி வழியாய் நான் வெளியே பார்த்தேன்.
7. சில வாலிபர்களையும் அவர்களிடையே ஒரு மதிகெட்ட இளைஞனையும் கண்டேன்.
8. அவன் மூலையோரமாய்த் தெருவில் சென்று ஒருத்தியுடைய வீட்டு வழியாய் நடக்கிறான்.
9. பொழது சாய்ந்து, மாலை மயங்கி, இரவு வந்து காரிருள் கவிகிற நேரமாயிற்று.
10. இதோ, தாசியின் கோலம் பூண்டு ஆன்மாக்களைக் கவர ஆயத்தமான ஒரு பெண் அவனுக்கு எதிர்ப்படுகிறாள். (அவள்) வாயாடியும், எங்கும் போகிறவளும், அடக்கமும் பொறுமையும் அற்றவளும்,
11. கால் வைத்துத் தன் வீட்டில் தங்கமாட்டாதவளுமாம்.
12. அவள் மாறி மாறி வீட்டுக்கு வெளியேயும் தெருவிலும் மூலையோரங்களிலும் பதிவிருப்பவள்.
13. அவள் அவ்விளஞனைக் கட்டிப் பிடித்து, முத்தமிட்டு, நாணமற்ற முகத்தோடு கொஞ்சிச் சொல்வதாவது:
14. என் எண்ணம் நிறைவேறும்படி நான் பலியை நேர்ந்து, இன்றுதானே என் நேர்ச்சைகளைச் செலுத்தினேன்.
15. ஆகையால் உன்னைக் காண ஆசைப்பட்டே நான் புறப்பட்டு உனக்கு எதிர் கொண்டு வந்தபோது, இதோ உன்னைக் கண்டு பிடித்தேன்.
16. என் கட்டிலைக் கயிறு கொண்டு பின்னியுள்ளேன். எகிப்தினின்று கொண்டு வரப்பட்ட சித்திர இரத்தினக் கம்பளத்தால் அதை மூடியுள்ளேன்.
17. என் படுக்கையை வெள்ளைப்போளம், கரியபோளம், இலவங்கம் முதலியவற்றின் தைலத்தாலும் தெளித்துள்ளேன்.
18. வா, பொழுது புலருமட்டும் கொங்கைகளின் இன்பம் நுகர்ந்து, ஆசைதீர அள்ளி அணைத்துக் களித்திருப்போம்.
19. ஏனென்றால், என் கணவன் வீட்டில் இல்லை; நெடு நாளையப் பயணம் சென்றுள்ளான்.
20. அவன் பணப்பையைத் தன்னுடன் கொண்டுபோயிருக்கிறான். அவன் பௌர்ணமியன்றுதான் வீட்டுக்குத் திரும்பி வருவான்.
21. (இவ்வாறு) அவள் மாயப் பேச்சுகளால் அவனைச் சிக்கவைத்து, தன் உதடுகளின் கொஞ்சல்களால் அவனை இழுத்துக்கொண்டாள்.
22. பலிக்காகக் கூட்டிக்கொண்டு போகப்படும் எருதுபோலும், மோக வெறியால் குதித்து நிற்கும் செம்மறிக்கிடாயைப் போலும், மதியீனனான அவன், தான் சங்கிலி இடப்பட இழுத்துக்கொண்டு போகப்படுகிறான் என்று அறியாமல், உடனே அவளைப் பின்செல்கிறான்.
23. தன் உயிர் சேதமாகப் போகிறதென்று அறியாத பறவை வலைக்குள் வேகமாகப் பறந்தோடுவதுபோல் அவனும் போகிறான். ஈட்டி அவனுடைய ஈரலைக் குத்தி ஊடுருவுமட்டும் (காரியத்தைக் கண்டுபிடித்து அறியமாட்டான்).
24. ஆகையினால், என் மகனே, என்னைக் கேள்.
25. என் வாயின் வார்த்தைகளைக் கவனி. உன் மனம் அவளுடைய வழிகளில் இழுக்கப்படாதிருப்பதாக; அவளுடைய அடிச்சுவடுகளால் வஞ்சிக்கப்படாதிருப்பதாக.
26. ஏனென்றால், அவள் பலரைக் காயப்படுத்தி விழத்தாட்டியுள்ளாள். மிக வல்லர்களுங்கூட அவளால் கொல்லப்பட்டார்கள்.
27. அவளுடைய வீடு சாவின் அந்தரங்கம்வரைக்கும் ஊடுருவிச் செல்கின்ற நரக வாயிலேயாம்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Chapters, Current Chapter 7 of Total Chapters 31
நீதிமொழிகள் 7:19

×

Alert

×

tamil Letters Keypad References