தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நீதிமொழிகள்
1. என் மகனே, நீ உன் நண்பனுக்குப் பிணையாளி யாகிவிட்டால் அன்னியனிடம் உன் கையைச் சிக்க வைத்து விட்டாய்.
2. உன் வாயின் வார்த்தைகளாலேயே வலையில் உட்பட்டும், உன் சொந்தச் சொற்களாலேயே பிடிபட்டும் போனாய்.
3. ஆகையால், நான் சொல்வதைக் கேட்டு, என் மகனே, உன்னை நீயே விடுவித்துக்கொள். உன் அயலானின் கையில் விழுந்து விட்டாய். ஆகையால், தப்பியோடத் துரிதப்படு.
4. உன் நண்பனைத் தூண்டி விடு. உன் கண்களுக்கு உறக்கத்தைத் தராதே. உன் கண்களும் தூங்குவன அல்ல.
5. வேடன் கையினின்று பறவையைப் போலவும், அவன் கையினின்று மான்குட்டியைப் போலவும் தப்பித்துக் கொள்ளப்பார்.
6. ஓ சோம்பேறியே, எறும்பினிடம் போய், அதன் வழிகளைக் கவனித்துப் பார்த்து ஞானத்தைக் கற்றுக்கொள்.
7. அதற்குக் தலைவனும் ஆசானும் அரசனும் இல்லாதிருந்தும்,
8. அது கோடைக்காலத்தில் தன் உணவை விரும்பி, பிற்காலத்திற்கு வேண்டியதை அறுப்புக் காலத்தில்தானே சேகரிக்கின்றது.
9. சோம்பேறியே, எதுவரை தூங்குவாய் ? உன் தூக்கதினின்று எப்போது எழுந்திருப்பாய் ? கொஞ்சம் தூங்குவேன்;
10. சற்றுநேரம் உறங்குவேன்; தூங்கும் பொருட்டுக் கொஞ்சம் கைகளை மடக்குவேன் என்கிறாய்.
11. அதற்குள்ளே எளிமை பிரயாணியைப் போலவும், வறுமை ஆயுதம் தாங்கியவனைப் போலவும் உனக்கு வந்து விடும். நீ சுறுசுறுப்புள்ளவனாய் இருந்தால் உன் விளைச்சல் நீரூற்றைப் போல் சுரக்க, வறுமை உன்னை விட்டு அகன்றோடிப் போகும்.
12. உண்மையை (மறுதலித்த) துரோகி ஒன்றுக்கும் உதவாத மனிதன். அவன் வாயினின்று பொல்லாத வாக்கு புறப்படும்.
13. அவன் கண்களால் சைகை காட்டி, காலால் தரையைத் தேய்த்து, கைச் சைக்கினையாய்ப் பேசுகிறான்.
14. அவன் தன் தீய இதயத்தில் தீமையையே சிந்தித்து, என்றும் அவன் சச்சரவுகளையே விதைக்கிறான்.
15. திடீரென அவனுக்குக் கேடே வந்து சேரும்; திடீரென நசுக்கவும் படுவான். அதற்குமேல் அவனுக்கு மருந்தும் இராது.
16. ஆண்டவருக்கு வெறுப்பைத்தரும் காரியங்கள் ஆறு. ஏழாவது காரியம்கூட அவருடைய மதிப்புக்கு வெறுப்புள்ளதாய் இருக்கும்.
17. (அவைகள் என்னவென்றால்): பெருமை கொண்ட கண்களும், பொய் பகரும் நாவும், மாசற்ற குருதியைச் சிந்தும் கைகளும்,
18. மிகக் கொடிய சிந்தனைகளைக் கருதுகின்ற இதயமும், தீமையில் ஓட விரையும் கால்களும், பொய்களைச் சொல்லுகின்ற கள்ளச் சாட்சியும்,
19. தன் சகோதரருக்குள் பிளவுகளை விதைக்கின்றவனுமேயாம்.
20. என் மகனே, உன் தந்தையின் கட்டளையை அனுசரி; உன் தாயின் சட்டத்தையும் கைநெகிழாதே.
21. இடைவிடாமல் அவற்றை உன் இதயத்தில் பதித்து உன் கழுத்தைச் சுற்றி வைத்துக் கொள்.
22. நீ உலாவும்போது அவை உன்னுடன் நடப்பனவாக; உறங்கும்போது உன்னைக் காப்பனவாக; விழித்தெழும்போது அவற்றுடன் பேசுவாயாக.
23. ஏனென்றால், கட்டளை விளக்காகவும், சட்டம் ஒளியாகவும், அறிவுரையின் கண்டனம் வாழ்க்கைக்குப் பாதையுமாம்.
24. அவற்றைக் கைக்கொண்டால், தீய பெண்ணினின்றும் அன்னிய பெண்ணின் இச்சக நாவினின்றும் காப்பாற்றப்படுவாய்.
25. உன் இதயம் அவளுடைய அழகை இச்சியாமல் இருக்கும். அவளுடைய சைக்கினைகளிலும் நீ சிக்கிக்கொள்ள மாட்டாய்.
26. ஏனென்றால், வேசியின் விலை அற்பமேயெனினும், அப்படிப்பட்ட பெண் ஆடவரின் அருமையான ஆன்மாவையே கவர்கின்றாள்.
27. தன் ஆடைகள் வேகாமல் மனிதன் தன் நெஞ்சத்து நெருப்பை ஒழிக்கக் கூடுமோ ?
28. அல்லது தன் உள்ளங்கால் வேகாமல் அனலை மிதிக்கக் கூடுமோ ?
29. அப்படியே தன் அயலானின் பெண்ணிடம் போய் அவளைத் தீண்டி விட்டவன் எவனோ, அவன் சுத்தமாய் இரான்.
30. ஒருவன் திருடி விட்டாலும் குற்றம் பெரிதன்று. ஏனென்றால், பசியால் வருந்தியதால் உயிரைக் காப்பாற்ற அவன் (திருடுகிறான்).
31. அவன் பிடிப்பட்டாலோ ஏழு மடங்கு கொடுத்து உத்தரிப்பான்; மேலும் தன் வீட்டின் பொருள் முழுவதுங்கூடக் கையளிப்பான்.
32. விபச்சாரக்காரனோ மதியீனத்தால் தன் ஆன்மாவையே இழக்கிறான்.
33. அவனே தனக்கு வெட்கத்தையும் ஈனத்தையும் தேடிக்கொள்கிறான். அவனுடைய அவமானம் ஒருபோதும் அழியாது.
34. ஏனென்றால், அந்த (விபச்சாரியினுடைய) கணவனின் பொறாமையும் எரிச்சலும் பழி நாளில் விபசாரனை மன்னிக்கமாட்டா.
35. அவன் எவனுடைய வேண்டுகோளுக்கும் இணங்கான்; பரிகாரமாக ஏராளமான கொடைகளையும் ஏற்றுக் கொள்ளான்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Chapters, Current Chapter 6 of Total Chapters 31
நீதிமொழிகள் 6:5
1. என் மகனே, நீ உன் நண்பனுக்குப் பிணையாளி யாகிவிட்டால் அன்னியனிடம் உன் கையைச் சிக்க வைத்து விட்டாய்.
2. உன் வாயின் வார்த்தைகளாலேயே வலையில் உட்பட்டும், உன் சொந்தச் சொற்களாலேயே பிடிபட்டும் போனாய்.
3. ஆகையால், நான் சொல்வதைக் கேட்டு, என் மகனே, உன்னை நீயே விடுவித்துக்கொள். உன் அயலானின் கையில் விழுந்து விட்டாய். ஆகையால், தப்பியோடத் துரிதப்படு.
4. உன் நண்பனைத் தூண்டி விடு. உன் கண்களுக்கு உறக்கத்தைத் தராதே. உன் கண்களும் தூங்குவன அல்ல.
5. வேடன் கையினின்று பறவையைப் போலவும், அவன் கையினின்று மான்குட்டியைப் போலவும் தப்பித்துக் கொள்ளப்பார்.
6. சோம்பேறியே, எறும்பினிடம் போய், அதன் வழிகளைக் கவனித்துப் பார்த்து ஞானத்தைக் கற்றுக்கொள்.
7. அதற்குக் தலைவனும் ஆசானும் அரசனும் இல்லாதிருந்தும்,
8. அது கோடைக்காலத்தில் தன் உணவை விரும்பி, பிற்காலத்திற்கு வேண்டியதை அறுப்புக் காலத்தில்தானே சேகரிக்கின்றது.
9. சோம்பேறியே, எதுவரை தூங்குவாய் ? உன் தூக்கதினின்று எப்போது எழுந்திருப்பாய் ? கொஞ்சம் தூங்குவேன்;
10. சற்றுநேரம் உறங்குவேன்; தூங்கும் பொருட்டுக் கொஞ்சம் கைகளை மடக்குவேன் என்கிறாய்.
11. அதற்குள்ளே எளிமை பிரயாணியைப் போலவும், வறுமை ஆயுதம் தாங்கியவனைப் போலவும் உனக்கு வந்து விடும். நீ சுறுசுறுப்புள்ளவனாய் இருந்தால் உன் விளைச்சல் நீரூற்றைப் போல் சுரக்க, வறுமை உன்னை விட்டு அகன்றோடிப் போகும்.
12. உண்மையை (மறுதலித்த) துரோகி ஒன்றுக்கும் உதவாத மனிதன். அவன் வாயினின்று பொல்லாத வாக்கு புறப்படும்.
13. அவன் கண்களால் சைகை காட்டி, காலால் தரையைத் தேய்த்து, கைச் சைக்கினையாய்ப் பேசுகிறான்.
14. அவன் தன் தீய இதயத்தில் தீமையையே சிந்தித்து, என்றும் அவன் சச்சரவுகளையே விதைக்கிறான்.
15. திடீரென அவனுக்குக் கேடே வந்து சேரும்; திடீரென நசுக்கவும் படுவான். அதற்குமேல் அவனுக்கு மருந்தும் இராது.
16. ஆண்டவருக்கு வெறுப்பைத்தரும் காரியங்கள் ஆறு. ஏழாவது காரியம்கூட அவருடைய மதிப்புக்கு வெறுப்புள்ளதாய் இருக்கும்.
17. (அவைகள் என்னவென்றால்): பெருமை கொண்ட கண்களும், பொய் பகரும் நாவும், மாசற்ற குருதியைச் சிந்தும் கைகளும்,
18. மிகக் கொடிய சிந்தனைகளைக் கருதுகின்ற இதயமும், தீமையில் ஓட விரையும் கால்களும், பொய்களைச் சொல்லுகின்ற கள்ளச் சாட்சியும்,
19. தன் சகோதரருக்குள் பிளவுகளை விதைக்கின்றவனுமேயாம்.
20. என் மகனே, உன் தந்தையின் கட்டளையை அனுசரி; உன் தாயின் சட்டத்தையும் கைநெகிழாதே.
21. இடைவிடாமல் அவற்றை உன் இதயத்தில் பதித்து உன் கழுத்தைச் சுற்றி வைத்துக் கொள்.
22. நீ உலாவும்போது அவை உன்னுடன் நடப்பனவாக; உறங்கும்போது உன்னைக் காப்பனவாக; விழித்தெழும்போது அவற்றுடன் பேசுவாயாக.
23. ஏனென்றால், கட்டளை விளக்காகவும், சட்டம் ஒளியாகவும், அறிவுரையின் கண்டனம் வாழ்க்கைக்குப் பாதையுமாம்.
24. அவற்றைக் கைக்கொண்டால், தீய பெண்ணினின்றும் அன்னிய பெண்ணின் இச்சக நாவினின்றும் காப்பாற்றப்படுவாய்.
25. உன் இதயம் அவளுடைய அழகை இச்சியாமல் இருக்கும். அவளுடைய சைக்கினைகளிலும் நீ சிக்கிக்கொள்ள மாட்டாய்.
26. ஏனென்றால், வேசியின் விலை அற்பமேயெனினும், அப்படிப்பட்ட பெண் ஆடவரின் அருமையான ஆன்மாவையே கவர்கின்றாள்.
27. தன் ஆடைகள் வேகாமல் மனிதன் தன் நெஞ்சத்து நெருப்பை ஒழிக்கக் கூடுமோ ?
28. அல்லது தன் உள்ளங்கால் வேகாமல் அனலை மிதிக்கக் கூடுமோ ?
29. அப்படியே தன் அயலானின் பெண்ணிடம் போய் அவளைத் தீண்டி விட்டவன் எவனோ, அவன் சுத்தமாய் இரான்.
30. ஒருவன் திருடி விட்டாலும் குற்றம் பெரிதன்று. ஏனென்றால், பசியால் வருந்தியதால் உயிரைக் காப்பாற்ற அவன் (திருடுகிறான்).
31. அவன் பிடிப்பட்டாலோ ஏழு மடங்கு கொடுத்து உத்தரிப்பான்; மேலும் தன் வீட்டின் பொருள் முழுவதுங்கூடக் கையளிப்பான்.
32. விபச்சாரக்காரனோ மதியீனத்தால் தன் ஆன்மாவையே இழக்கிறான்.
33. அவனே தனக்கு வெட்கத்தையும் ஈனத்தையும் தேடிக்கொள்கிறான். அவனுடைய அவமானம் ஒருபோதும் அழியாது.
34. ஏனென்றால், அந்த (விபச்சாரியினுடைய) கணவனின் பொறாமையும் எரிச்சலும் பழி நாளில் விபசாரனை மன்னிக்கமாட்டா.
35. அவன் எவனுடைய வேண்டுகோளுக்கும் இணங்கான்; பரிகாரமாக ஏராளமான கொடைகளையும் ஏற்றுக் கொள்ளான்.
Total 31 Chapters, Current Chapter 6 of Total Chapters 31
×

Alert

×

tamil Letters Keypad References