தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நீதிமொழிகள்
1. என் மகனே, நான் உனக்குக் கற்றுக் கொடுக்கிற ஞானத்தைக் கவனி. என் ஞானம் நிறை வார்த்தைகளுக்கும் செவி கொடு.
2. அவ்வாறு செய்தால்தான் நீ உன் நினைவுகளைக் காக்கவும், உன் உதடுகள் என் போதனையை மதிக்கவுங் கூடும். பெண்ணின் பசப்புக்கு இணங்காதே.
3. வேசியின் உதடுகள் தேனைவிடத் துளிக்கின்றதாயும், அவள் தொண்டை தைலத்தைவிட மிக மென்மையானதுமாயும் இருக்கின்றன.
4. ஆனால், அவளுடைய முடிவுகள் மருக்கொழுந்துபோல் கசப்பானவையும், இருபுறமும் துவைந்த வாள்போல் கூரானவையுமாம்.
5. அவள் கால்கள் மரணத்துக்கு இறங்குகின்றன. அவளுடைய காலடிகளும் பாதாளமட்டும் ஊடுருவிச் செல்கின்றன.
6. வாழ்வு நெறியில் அவை நடப்பதில்லை. அவள் அடிகள் நிலையற்றனவும் ஆராய்ச்சிக்கு எட்டாதனவுமாய் இருக்கின்றன.
7. இப்படியிருக்க, என் மகனே, இப்போது எனக்குச் செவி கொடு. உன் வாயின் வார்த்தைகளைப் புறக்கணிக்காதே.
8. உன் வழியை அவளை விட்டுத் தூரமாக்கு, அவளுடைய வீட்டு வாயிலுக்கும் அண்மையில் போகாதே.
9. உன் மானத்தை அன்னியருக்கும், உன் வாழ்நாட்களைக் கொடியவருக்கும் கொடாதே.
10. கொடுத்தால், அன்னியர் உன்னாலே ஆற்றலுள்ளவராகக்கூடும். மேலும், உன் உழைப்பின் பலன் அவர்கள் வீட்டில் போய்ச் சேரும்.
11. அப்பொழுது உன் மாமிசத்தையும் உன் உடம்பையும் அழித்துக் கெடுத்த பின்பு, கடைசியில், நீ பெருமூச்செறிந்து புலம்பி:
12. ஐயோ! நான் அறிவுரையைப் பழித்ததும், என் இதயம் கண்டனங்களுக்கு அமையாததும் ஏன் ?
13. நான் எனக்கு அறிவுறுத்தியவர்களுடைய வாக்கைக் கேட்கவுமில்லை; என் ஆசிரியர்களுக்குச் செவி சாய்க்கவுமில்லை.
14. (ஆதலால்), ஏறக்குறைய எல்லாத் தீமைகளும் சபையிலும் சங்கத்தின் மத்தியிலும் என்மேல் விழுந்தன என்பாய்.
15. நீ உன் சொந்தக் கேணியின் நீரையும், உன் சொந்த ஊற்றின் தண்ணீரையும் குடி.
16. உன் தெருக்களில் உன் தண்ணீரைப் பாய்ச்சிப் பகிர்ந்து கொள்.
17. நீ (மட்டும்) தனியனாய் அவற்றைக் கொண்டிரு; அன்னியர் அக்காரியத்திலே உன் பங்காளிகளாய் இருத்தல் தகாது.
18. உன் ஊற்று ஆசி பெறுவதாக. உன் இளமையின் மனைவியோடு மகிழ்ந்திரு.
19. அவள் உனக்கு மிகவும் அன்பிக்குரிய பெண்மானும், மிகப்பிரியமுள்ள மான் குட்டியும்போல் இருக்கக்கடவாள். அவள் கொங்கைகள் உன்னை எப்போதும் இன்பத்தால் நிறைப்பன. இடைவிடாமல் அவளுடைய அன்பில் இன்பம் துய்ப்பாயாக.
20. என் மகனே, அன்னிய பெண்ணால் நீ மயங்கப் படுவது ஏன் ?
21. ஆண்டவர் மனிதனுடைய வழிகளை உற்றுப் பார்த்து, அவனுடைய காலடிகள் எல்லாவற்றையும் கவனிக்கிறார்.
22. அக்கிரமிகள் தங்கள் சொந்த அநீதங்களாகிய கண்ணிக்குள்ளே சிக்கிப்போய், பாவக் கயிறுகளாலேயே கட்டவும் படுகிறார்கள்.
23. அக்கிரமி கண்டனத்தை ஏற்றுக் கொள்ளாததனால் (தன் அக்கிரமத்தில்) மடிவான். அவன் தன் மிகுதியான அறிவீனத்தால் ஏமாற்றப்படுவான்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Chapters, Current Chapter 5 of Total Chapters 31
நீதிமொழிகள் 5:29

×

Alert

×

tamil Letters Keypad References