தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
நீதிமொழிகள்
1. யூதாவின் அரசனான எசெக்கியாசின் மன்னன் சேகரித்து வைத்த இவைகளுங்கூடச் சாலமோனின் பழமொழிகளேயாம்:
2. வார்த்தையை மறைப்பது கடவுளின் மகிமையாம். வார்த்தையைக் கண்டறிதல் அரசனின் மகிமையாம்.
3. மேலே வானமும் கீழே பூமியும், அரசனின் இதயமும் ஆராய்ந்து அறியக்கூடாதனவாம்.
4. வெள்ளியினின்று மாசை நீக்கி விடு; அதிலிருந்து தூய்மையான பாத்திரம் வெளிப்படும்.
5. அரசனுடைய முகத்தினின்று அநீதத்தை அகற்றினால் நீதியால் அவன் அரியனை நிலைப்படும்.
6. அரசன் முன்பாகப் பெருமை பாராட்டாதே. பெரியோர்களுக்கு உரிய இடத்திலும் நில்லாதே.
7. ஏனென்றால், அரசன் முன்பாகத் தாழ்த்தப்படுவதைவிட, இங்கு ஏறிவா என்று உனக்குச் சொல்லப்படுவது அதிக நலமாம்.
8. உன் கண்கள் கண்டதை வழக்கில் உடனே வெளியாக்காதே. வெளிப்படுத்தி, நீ உன் நண்பனைப் அவமானப்படுத்தியிருந்தால் பின் அதனைப் பரிகரிக்க உன்னாலே கூடாதுபோகும்.
9. உன் காரியத்தை உன் நண்பனோடு சேர்ந்து செய். பிறருடைய இரகசியத்தை வெளிபடுத்தாதே.
10. ஏனென்றால், அவன் அதனைக் கேட்டுக் கொண்ட பிறகு ஒருவேளை உன்னை அவமானப்படுத்திக் கடிந்துகொள்வதை விடமாட்டான். இரக்கமும் அன்பும் மீட்கின்றன; நீ அவமதிக்கப்படாதபடி அவற்றை உனக்குக் காப்பாற்றிவை.
11. வார்த்தையைத் தக்க காலத்தில் பேசுகிறவன் வெள்ளிக் கட்டில்களில் (உள்ள) தங்க மாதுளம் பழங்கள் (போலாம்).
12. கீழ்ப்படியும் செவியுள்ளவனைக் கடிந்து கொள்கிற ஞானி பொற்குண்டலமும், இலங்குகின்ற முத்தும் போலாவான்.
13. அறுவடை நாளில் பனிக்கட்டியின் குளிர்ச்சி எப்படியோ அப்படியாம். பிரமாணிக்கமுள்ள பிரதிநிதி தன்னை அனுப்பினவனுக்கு. அவன் தன் தலைவனின் மனத்தை மகிழ்விக்கிறான்; அவனை இளைப்பாறச் செய்கிறான்.
14. தன் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பெருமிதமுள்ள மனிதனின் மழையைப் பின்தொடரச் செய்யாத மேகமும் காற்றும் போலாவான்.
15. பொறுமையால் நடுவன் சாந்தமாவான். நயமுள்ள நாவே கடுமையைத் தகர்க்கும்.
16. தேனைக் கண்டால் உனக்குப் போதுமானதை மட்டுமே சாப்பிடு. ஏனென்றால், அதிகமாய்ச் சாப்பிட்டால் ஒருவேளை தெவிட்டுதல் அடைந்து அதைக் கக்குவாய்.
17. ஒருவேளை அயலான் சலிப்புற்று உன்னைப் பகைக்காதபடி நீ அவனுடைய வீட்டினின்று உன் காலை விலக்கு.
18. தன் அயலானுக்கு விரோதமாய்ப் பொய்ச் சாட்சி சொல்பவன் எத்தன்மையனென்றால், எறிபடையும் வாளும் கூர்மையான அம்பும் போலாம்.
19. துயர நாளில் அயோக்கியனை நம்புவது புழுத்த பல்லையும் களைத்த காலையும் நம்புவது போலும், குளிர் காலத்தில் மேற்போர்வை இல்லாமலிருப்பது போலுமாம்.
20. தீய மனத்தோர்க்குப் பாட்டுப் பாடுகிறவன் வெடியுப்பில் (வார்த்த) காடியாம். ஆடையை அந்தும், மரத்தைப் புழுவும் அரிப்பதுபோல மனிதனின் துயரம் இதயத்தை நோகச் செய்யும்.
21. உன் பகைவன் பசியாயிருந்தால் அவனுக்கு உணவு கொடு. அவன் தாகமுற்றிருந்தால் அவனுக்குத் தண்ணீரும் கொடு.
22. அவ்வாறே செய்வதானால் நீ அவன் தலைமேல் நெருப்புத் தணலைக் குவிப்பாய். ஆண்டவரும் உனக்குக் கைம்மாறளிப்பார்.
23. வாடைக் காற்று மழையையும், துக்கமுகம் புறணி பேசும் நாவையும் சிதறடித்துவிடும்.
24. நடுவீட்டில் வாயாடிப் பெண்ணுடன் இருப்பதைக்காட்டிலும் மொட்டை மாடியின் ஒரு மூலையிலிருப்பது மிகவும் நல்லது.
25. தூர நாட்டினின்று (வருகிற) நல்ல செய்தி தாகங்கொண்ட ஆன்மாவுக்குத் தண்ணீர் போலாகும்.
26. அக்கிரமியின்முன் விழும் நீதிமான், காலாலே கலக்கப்பட்ட சுணையும் கெட்டுப் போன நீரூற்றும் (போலாவான்).
27. தேனை மிகுதியாய்ச் சாப்பிடுகிறவனுக்கு எப்படி அது நல்லதன்றோ, அப்படியே (தெய்வ) மகத்துவத்தை ஆராய்பவன் அவருடைய மகிமையால் நசுக்கப்படுவான்.
28. சுற்று மதிலின்றித் திறந்து கிடக்கும் நரகம் எவ்வாறோ, அவ்வாறாம் பேசுகையில் தன்னை அடக்க மாட்டாத மனிதன்.
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 25 / 31
1 யூதாவின் அரசனான எசெக்கியாசின் மன்னன் சேகரித்து வைத்த இவைகளுங்கூடச் சாலமோனின் பழமொழிகளேயாம்: 2 வார்த்தையை மறைப்பது கடவுளின் மகிமையாம். வார்த்தையைக் கண்டறிதல் அரசனின் மகிமையாம். 3 மேலே வானமும் கீழே பூமியும், அரசனின் இதயமும் ஆராய்ந்து அறியக்கூடாதனவாம். 4 வெள்ளியினின்று மாசை நீக்கி விடு; அதிலிருந்து தூய்மையான பாத்திரம் வெளிப்படும். 5 அரசனுடைய முகத்தினின்று அநீதத்தை அகற்றினால் நீதியால் அவன் அரியனை நிலைப்படும். 6 அரசன் முன்பாகப் பெருமை பாராட்டாதே. பெரியோர்களுக்கு உரிய இடத்திலும் நில்லாதே. 7 ஏனென்றால், அரசன் முன்பாகத் தாழ்த்தப்படுவதைவிட, இங்கு ஏறிவா என்று உனக்குச் சொல்லப்படுவது அதிக நலமாம். 8 உன் கண்கள் கண்டதை வழக்கில் உடனே வெளியாக்காதே. வெளிப்படுத்தி, நீ உன் நண்பனைப் அவமானப்படுத்தியிருந்தால் பின் அதனைப் பரிகரிக்க உன்னாலே கூடாதுபோகும். 9 உன் காரியத்தை உன் நண்பனோடு சேர்ந்து செய். பிறருடைய இரகசியத்தை வெளிபடுத்தாதே. 10 ஏனென்றால், அவன் அதனைக் கேட்டுக் கொண்ட பிறகு ஒருவேளை உன்னை அவமானப்படுத்திக் கடிந்துகொள்வதை விடமாட்டான். இரக்கமும் அன்பும் மீட்கின்றன; நீ அவமதிக்கப்படாதபடி அவற்றை உனக்குக் காப்பாற்றிவை. 11 வார்த்தையைத் தக்க காலத்தில் பேசுகிறவன் வெள்ளிக் கட்டில்களில் (உள்ள) தங்க மாதுளம் பழங்கள் (போலாம்). 12 கீழ்ப்படியும் செவியுள்ளவனைக் கடிந்து கொள்கிற ஞானி பொற்குண்டலமும், இலங்குகின்ற முத்தும் போலாவான். 13 அறுவடை நாளில் பனிக்கட்டியின் குளிர்ச்சி எப்படியோ அப்படியாம். பிரமாணிக்கமுள்ள பிரதிநிதி தன்னை அனுப்பினவனுக்கு. அவன் தன் தலைவனின் மனத்தை மகிழ்விக்கிறான்; அவனை இளைப்பாறச் செய்கிறான். 14 தன் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பெருமிதமுள்ள மனிதனின் மழையைப் பின்தொடரச் செய்யாத மேகமும் காற்றும் போலாவான். 15 பொறுமையால் நடுவன் சாந்தமாவான். நயமுள்ள நாவே கடுமையைத் தகர்க்கும். 16 தேனைக் கண்டால் உனக்குப் போதுமானதை மட்டுமே சாப்பிடு. ஏனென்றால், அதிகமாய்ச் சாப்பிட்டால் ஒருவேளை தெவிட்டுதல் அடைந்து அதைக் கக்குவாய். 17 ஒருவேளை அயலான் சலிப்புற்று உன்னைப் பகைக்காதபடி நீ அவனுடைய வீட்டினின்று உன் காலை விலக்கு. 18 தன் அயலானுக்கு விரோதமாய்ப் பொய்ச் சாட்சி சொல்பவன் எத்தன்மையனென்றால், எறிபடையும் வாளும் கூர்மையான அம்பும் போலாம். 19 துயர நாளில் அயோக்கியனை நம்புவது புழுத்த பல்லையும் களைத்த காலையும் நம்புவது போலும், குளிர் காலத்தில் மேற்போர்வை இல்லாமலிருப்பது போலுமாம். 20 தீய மனத்தோர்க்குப் பாட்டுப் பாடுகிறவன் வெடியுப்பில் (வார்த்த) காடியாம். ஆடையை அந்தும், மரத்தைப் புழுவும் அரிப்பதுபோல மனிதனின் துயரம் இதயத்தை நோகச் செய்யும். 21 உன் பகைவன் பசியாயிருந்தால் அவனுக்கு உணவு கொடு. அவன் தாகமுற்றிருந்தால் அவனுக்குத் தண்ணீரும் கொடு. 22 அவ்வாறே செய்வதானால் நீ அவன் தலைமேல் நெருப்புத் தணலைக் குவிப்பாய். ஆண்டவரும் உனக்குக் கைம்மாறளிப்பார். 23 வாடைக் காற்று மழையையும், துக்கமுகம் புறணி பேசும் நாவையும் சிதறடித்துவிடும். 24 நடுவீட்டில் வாயாடிப் பெண்ணுடன் இருப்பதைக்காட்டிலும் மொட்டை மாடியின் ஒரு மூலையிலிருப்பது மிகவும் நல்லது. 25 தூர நாட்டினின்று (வருகிற) நல்ல செய்தி தாகங்கொண்ட ஆன்மாவுக்குத் தண்ணீர் போலாகும். 26 அக்கிரமியின்முன் விழும் நீதிமான், காலாலே கலக்கப்பட்ட சுணையும் கெட்டுப் போன நீரூற்றும் (போலாவான்). 27 தேனை மிகுதியாய்ச் சாப்பிடுகிறவனுக்கு எப்படி அது நல்லதன்றோ, அப்படியே (தெய்வ) மகத்துவத்தை ஆராய்பவன் அவருடைய மகிமையால் நசுக்கப்படுவான். 28 சுற்று மதிலின்றித் திறந்து கிடக்கும் நரகம் எவ்வாறோ, அவ்வாறாம் பேசுகையில் தன்னை அடக்க மாட்டாத மனிதன்.
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 25 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References