தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நீதிமொழிகள்
1. அரசனுடன் உணவருந்த நீ அமர்ந்திருக்கும்பொழுது உனக்கு முன்னே வைக்கப்பட்ட பொருட்களை நுணுக்கமாய்க் கவனி.
2. உன் நாட்டத்தை உன்னால் கட்டுப்படுத்த முடியுமாயின் உன் நாவை அடக்கு.
3. எவன் உணவுகளில் வஞ்சகத்தின் அப்பம் இருக்கிறதோ அவனோடு நீ எதையும் உண்ண விரும்பாதே.
4. நீ செல்வந்தனாகும் நோக்கத்தோடு உழைக்காதே. ஆனால், உன் கவலைக்கு ஓர் எல்லை இடு.
5. நீ அடைய முடியாத செல்வங்களின் மீது உன் கண்களை ஏறெடுக்காதே. ஏனென்றால், அவை கழுகுகளைப்போல் தங்களுக்குச் சிறகுகளை உண்டாக்கிக்கொண்டு வானில் பறந்துவிடும்.
6. பொறாமையுள்ள மனிதனோடு உண்ணவும் வேண்டாம்; அவனுடைய உணவுகளை விரும்பவும் வேண்டாம்.
7. ஏனென்றால், அவன் குறி சொல்பவனையும் சோதிடனையும்போல் தான் அறியாததை நிதானிக்கிறான்: உண், குடி என்பான் உன்னோடு. ஆனால், அவனது மனமோ உன்னோடு இருப்பதில்லை.
8. நீ உண்ட உணவுகளையும் கக்குவாய்; அவனது உபசார வார்த்தைகளுக்கும் பயன் இராது.
9. மதியீனரின் செவிகளில் பேசாதே. ஏனென்றால், அவர்கள் உன் சொற்றிறத்தின் போதனையைப் புறக்கணிப்பார்கள்.
10. ஏழையின் வயற் கற்களைத் தொடாதே. அனாதைகளின் வயலிலும் நுழையாதே.
11. ஏனென்றால், அவர்களுடைய சுற்றத்தான் வல்லவனாய் இருக்கிறான். அவன் அவர்களுடைய வழக்கை உனக்கு விரோதமாய்த் தீர்ப்பான்.
12. உன் செவிகள் அறிவுச் சொற்களிலும், உன் இதயம் போதகத்திலும் பழகிக் கொள்ளக்கடவன.
13. சிறுவனைக் கண்டிக்க மறக்காதே. அவனை நீ பிரம்பால் அடித்தால் அவன் சாகமாட்டான்.
14. நீ அவனைப் பிரம்பால் அடிப்பாய்; அவன் ஆன்மாவை நரகத்தினின்று மீட்கவும் செய்வாய்.
15. என் மகனே, உன் மனம் ஞானமுள்ளதாயிருந்தால் என் இதயம் உன்னுடன் மகிழும்.
16. உன் உதடுகள் நேர்மையானவற்றைப் பேசினால் என் மனம் அக்களிக்கும்.
17. உன் இதயம் பாவிகளை கண்டுபாவித்தலாகாது. ஆனால், நாள் முழுவதும் பயத்தில் நிலைகொள்.
18. ஏனென்றால், கடைசி நாளில் நம்பிக்கையுடனிருப்பாய்; உன் நம்பிக்கையும் வீண்போகாது.
19. கேள், என் மகனே, ஞானமுள்ளவனாய் இரு. உன் மனத்தையும் (நல்) வழியில் நடத்து.
20. குடியருடைய விருந்துகளிலும் இறைச்சி உண்கின்றவர்களுடைய பெரும் விருந்துகளிலும் நீ இராதே.
21. ஏனென்றால், குடிவெறியில் காலம் கழிக்கிறவர்களும் உண்டிப் பிரியர்களும் சோம்பலின் மயக்கத்தால் பீடிக்கப்பட்டவர்கள். அவர்கள் கந்தைகளை உடுத்திக்கொள்வார்கள்.
22. உன்னைப் பெற்ற உன் தந்தைக்குச் செவி கொடு. உன் தாயும் முதுமை அடைந்திருக்கையில் நீ (அவளைப்) புறக்கணியாதே.
23. உண்மையை விலைக்கு வாங்கு. ஞானத்தையும் போதகத்தையும் அறிவையும் விற்க வேண்டாம்.
24. நீதிமானின் தந்தை மிகுதியாக அக மகிழ்கிறான். ஞானியைப் பெற்றவன் அவனைப் பற்றி மகிழ்கிறான்.
25. உன் தந்தையும் உன் தாயும் மகிழ்வார்களாக. உன்னைப் பெற்றவள் அக்களிப்பாளாக.
26. உன் இதயத்தை, என் மகனே, எனக்குக் கொடு. உன் கண்களும் என் வழியைக் காக்கக்கடவன.
27. ஏனென்றால், வேசி படுகுழியாம்; அன்னிய பெண் நெருக்கமான கிணறாம்.
28. அவள் திருடனைப்போல் வழியில் ஒளிந்திருந்து, யார் யார் எச்சரிக்கையற்றவர்கள் என்று கண்டாளோ அவர்களை அழித்தொழிப்பாள்.
29. எவனுக்குக் கேடு ? எவன் தந்தைக்குக் கேடு ? எவனுக்குச் சண்டை ? எவனுக்குப் படுகுழிகள் ? காரணமில்லாத காயம் எவனுக்கு ? கண் வீக்கம் எவனுக்கு ?
30. இவையனைத்தும் மதுபானத்தில் காலம் போக்கி, பாத்திரங்களை முழுதும் குடிக்கும் அலுவலாய் இருப்பவனுக்கே அல்லவா ?
31. மதுபானம் தெளிவாய் இருக்கிறதையும், பளிங்குப் பாத்திரத்தில் வார்த்து அதில் துலங்குகிறதையும் உற்று நோக்காதே.
32. ஏனென்றால், கடைசியில் அது நாகப்பாம்பைப்போல் கடித்தும், பசிலிஸ்க் பாம்பைப்போல் நஞ்சைப் பரப்பியும் விடும்.
33. உன் கண்கள் அன்னிய பெண்களை நோக்கும்; உன் இதயம் அக்கிரமானவைகளைப் பேசும்.
34. நீ நடுக்கடலில் உறங்குகிறவனைப்போலும், தூக்கத்தால் மெய்மறந்து சுக்கான் இழந்த மாலுதியைப்போலும் இருப்பாய்.
35. அன்றியும், என்னை அடித்தார்கள்; ஆயினும் எனக்கு நோகவில்லை. என்னை இழுத்தார்கள்; நான் உணரவில்லை. நான் எழுந்திருப்பதும், மதுபானங்களை மீண்டும் கண்டு குடிப்பதும் எப்போது என்பாய்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Chapters, Current Chapter 23 of Total Chapters 31
நீதிமொழிகள் 23:19

×

Alert

×

tamil Letters Keypad References