தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
நீதிமொழிகள்
1. தன் நண்பனை விட்டுப் பிரிய விரும்புகிறவன் சமயந்தேடுவான். அவன் எக்காலத்தும் நிந்தைக்குரியனாய் இருக்கிறான்.
2. மதிகெட்டவன் மனத்தின் இச்சையின்படி நீ பேசாவிடில் அவன் விவேகத்தின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளான்.
3. அக்கிரமி பாவப் பாதாளத்தின் அடியில் வந்தபின் நிந்தனைக்கு ஆளாவான். அதனால் அவமானமும் வெட்கமும் அவனைப் பின் தொடர்கின்றன.
4. மனிதனின் வாயினின்று (புறப்படுகிற) வார்த்தைகள் ஆழமான நீரைப் (போலாம்). ஞான ஊற்று பெருகிப் பாயும் அருவியைப் (போலாம்).
5. உண்மைக்கு விரோதமான தீர்ப்புச் சொல்வதற்காக, தீயவன் காரியத்திலே ஒருதலைச் சார்பு கொள்தல் நன்றன்று.
6. மதிகெட்டவனின் உதடுகள் சச்சரவுகளில் ஈடுபடுகின்றன. அவன் வாயும் சண்டையை மூட்டுகின்றது.
7. மதி கெட்டவனின் பேச்சு அவனுக்கு நட்டம் விளைவிக்கும். அவன் உதடுகளால் அவனுடைய ஆன்மாவிற்கு அழிவு நேரிடும்.
8. இரட்டை நாக்குள்ளவனின் வார்த்தைகள் நேர்மையானவைபோல் தோன்றும். அவை மனத்துள்ளே நுழைந்து செல்கின்றன. சோம்பேறி துன்பத்திற்குப் பயப்படுவான். ஆண்மையற்றோர் பசி அடைவார்கள்.
9. தன் வேலையில் சோம்பலும் அசட்டையுமாய் இருக்கிறவன் தன் வேலையைக் கெடுக்கிறவனுடைய சகோதரனாம்.
10. ஆண்டவரின் திருப்பெயர் மிகவும் வலுவுள்ள கோபுரமாம். நீதிமான் அதனிடம் ஓடுகிறான். அதனால் அவன் உயர்த்தவும் படுவான்.
11. செல்வம் படைத்தோனின் பொருள் அவனுடைய பலத்தின் நகரமும், அவனைச்சுற்றிலுமுள்ள பலமான மதிலும் போலாம்.
12. தாழ்வு வருமுன் மனிதன் தன் மனத்தில் செருக்குக் கொள்வான். மகிமைக்கு முன்னே தாழ்மை வருகின்றது.
13. வினவுமுன் மறுமொழி சொல்லுகிறவன் தன்னை மதியீனனாகவும், அவமானத்திற்கு உகந்தவனாகவும் காட்டிக்கொள்கிறான்.
14. மனிதனுடைய துணிவு அவனுடைய பலவீனத்தைத் தாங்குகின்றது. ஆனால், கோபத்திற்குச் (சார்பான) மனத்தைச் சகிப்பவன் யார் ?
15. விவேகமான அறிவு ஞானத்தை அளிக்கும். ஞானிகளோ போதனைக்குச் செவி சாய்க்கிறார்கள்.
16. மனிதனின் கொடைகள் அவன் வழியை அகலமாக்கி, அரசனின் முன்பாக அவனுக்கு இடத்தை உண்டாக்குகின்றன.
17. நீதிமான் முதற்கண் தன்னையே குற்றம் சாட்டுகிறான். அவன் நண்பன் வந்து அவனைச் சோதித்தறிவான்.
18. திருவுளச்சீட்டு பிடிவாதங்களை அடக்குகின்றது. அது வல்லவர்கள் மத்தியிலுங்கூட நியாயந் தீர்க்கின்றது.
19. சகோதரனால் உதவி பெறுகிற சகோதரன் வலுப்பெற்ற நகரம் போலாம். (அவர்களுடைய) தீர்ப்புகளும் நகரவாயில்களின் தாழ்ப்பாள் போலாம்.
20. மனிதனுடைய வாயின் பலனால் அவன் வயிறு நிறையும். தன் உதடுகளிலிருந்து புறப்படும் வார்த்தைகளால் அவன் நிறைவு கொள்வான்.
21. சாவும் வாழ்வும் நாவிலிருந்தே (விளைகின்றன). அதை நேசிக்கிறவர்களே அதன் கனியை உண்பார்கள்.
22. நல்ல மனைவியைத் தள்ளிவிடுகிறவன் நன்மையைத் தள்ளிவிடுகிறான். விபசாரியை வைத்திருக்கிறவனோ அறிவிலியும் அக்கிரமியுமாய் இருக்கிறான்.
23. ஏழை தாழ்ச்சியுடன் பேசுவான். செல்வமுடையோன் கடுமையாய்க் கத்துவான்.
24. பலருக்குப் பிரியமுள்ள மனிதன் தன் சகோதரனைக்காட்டிலும் அதிகமாய் அவர்களால் நேசிக்கப்படுவான்.
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 18 / 31
1 தன் நண்பனை விட்டுப் பிரிய விரும்புகிறவன் சமயந்தேடுவான். அவன் எக்காலத்தும் நிந்தைக்குரியனாய் இருக்கிறான். 2 மதிகெட்டவன் மனத்தின் இச்சையின்படி நீ பேசாவிடில் அவன் விவேகத்தின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளான். 3 அக்கிரமி பாவப் பாதாளத்தின் அடியில் வந்தபின் நிந்தனைக்கு ஆளாவான். அதனால் அவமானமும் வெட்கமும் அவனைப் பின் தொடர்கின்றன. 4 மனிதனின் வாயினின்று (புறப்படுகிற) வார்த்தைகள் ஆழமான நீரைப் (போலாம்). ஞான ஊற்று பெருகிப் பாயும் அருவியைப் (போலாம்). 5 உண்மைக்கு விரோதமான தீர்ப்புச் சொல்வதற்காக, தீயவன் காரியத்திலே ஒருதலைச் சார்பு கொள்தல் நன்றன்று. 6 மதிகெட்டவனின் உதடுகள் சச்சரவுகளில் ஈடுபடுகின்றன. அவன் வாயும் சண்டையை மூட்டுகின்றது. 7 மதி கெட்டவனின் பேச்சு அவனுக்கு நட்டம் விளைவிக்கும். அவன் உதடுகளால் அவனுடைய ஆன்மாவிற்கு அழிவு நேரிடும். 8 இரட்டை நாக்குள்ளவனின் வார்த்தைகள் நேர்மையானவைபோல் தோன்றும். அவை மனத்துள்ளே நுழைந்து செல்கின்றன. சோம்பேறி துன்பத்திற்குப் பயப்படுவான். ஆண்மையற்றோர் பசி அடைவார்கள். 9 தன் வேலையில் சோம்பலும் அசட்டையுமாய் இருக்கிறவன் தன் வேலையைக் கெடுக்கிறவனுடைய சகோதரனாம். 10 ஆண்டவரின் திருப்பெயர் மிகவும் வலுவுள்ள கோபுரமாம். நீதிமான் அதனிடம் ஓடுகிறான். அதனால் அவன் உயர்த்தவும் படுவான். 11 செல்வம் படைத்தோனின் பொருள் அவனுடைய பலத்தின் நகரமும், அவனைச்சுற்றிலுமுள்ள பலமான மதிலும் போலாம். 12 தாழ்வு வருமுன் மனிதன் தன் மனத்தில் செருக்குக் கொள்வான். மகிமைக்கு முன்னே தாழ்மை வருகின்றது. 13 வினவுமுன் மறுமொழி சொல்லுகிறவன் தன்னை மதியீனனாகவும், அவமானத்திற்கு உகந்தவனாகவும் காட்டிக்கொள்கிறான். 14 மனிதனுடைய துணிவு அவனுடைய பலவீனத்தைத் தாங்குகின்றது. ஆனால், கோபத்திற்குச் (சார்பான) மனத்தைச் சகிப்பவன் யார் ? 15 விவேகமான அறிவு ஞானத்தை அளிக்கும். ஞானிகளோ போதனைக்குச் செவி சாய்க்கிறார்கள். 16 மனிதனின் கொடைகள் அவன் வழியை அகலமாக்கி, அரசனின் முன்பாக அவனுக்கு இடத்தை உண்டாக்குகின்றன. 17 நீதிமான் முதற்கண் தன்னையே குற்றம் சாட்டுகிறான். அவன் நண்பன் வந்து அவனைச் சோதித்தறிவான். 18 திருவுளச்சீட்டு பிடிவாதங்களை அடக்குகின்றது. அது வல்லவர்கள் மத்தியிலுங்கூட நியாயந் தீர்க்கின்றது. 19 சகோதரனால் உதவி பெறுகிற சகோதரன் வலுப்பெற்ற நகரம் போலாம். (அவர்களுடைய) தீர்ப்புகளும் நகரவாயில்களின் தாழ்ப்பாள் போலாம். 20 மனிதனுடைய வாயின் பலனால் அவன் வயிறு நிறையும். தன் உதடுகளிலிருந்து புறப்படும் வார்த்தைகளால் அவன் நிறைவு கொள்வான். 21 சாவும் வாழ்வும் நாவிலிருந்தே (விளைகின்றன). அதை நேசிக்கிறவர்களே அதன் கனியை உண்பார்கள். 22 நல்ல மனைவியைத் தள்ளிவிடுகிறவன் நன்மையைத் தள்ளிவிடுகிறான். விபசாரியை வைத்திருக்கிறவனோ அறிவிலியும் அக்கிரமியுமாய் இருக்கிறான். 23 ஏழை தாழ்ச்சியுடன் பேசுவான். செல்வமுடையோன் கடுமையாய்க் கத்துவான். 24 பலருக்குப் பிரியமுள்ள மனிதன் தன் சகோதரனைக்காட்டிலும் அதிகமாய் அவர்களால் நேசிக்கப்படுவான்.
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 18 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References