தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நீதிமொழிகள்
1. சாந்தமான பதில் கோபத்தை அடக்கும். கடுஞ் சொல் கோபத்தை மூட்டும்.
2. ஞானிகளுடைய நாவு அறிவுக்கலையை அலங்கரிக்கும். அறிவிலியின் வாய் அறிவீனத்தைக் கக்கும்.
3. ஆண்டவருடைய கண்கள் நல்லோரையும் தீயோரையும் எவ்விடத்திலும் நோக்குகின்றன.
4. சமாதான வாக்கு வாழ்வு தரும் மரமாம். அடக்கப்படாத வாய் உயிரை நசுக்கும்.
5. அறிவிலி தன் தந்தையின் கண்டனத்தை நகைக்கிறான். ஆனால், கண்டனங்களை ஏற்றுக் கொள்கிறவன் மிக விவேகியாவான். நீதி எவ்வளவு மிகுமோ அவ்வளவாக அதிக மனத்திடன் உண்டாகும். அக்கிரமிகளின் சிந்தனைகளோ வேருடன் கலைக்கப்படும்.
6. நீதிமான்களின் வீட்டில் ஏராளமான துணிவு உண்டு. அக்கிரமியின் செயல்களின் கலக்கமேயாம்.
7. ஞானிகளின் வாய்கள் அறிவை விதைக்கின்றன. மதிக்கெட்டோரின் இதயம் மாறுபாடுடைத்து.
8. அக்கிரமிகளின் பலிகளை ஆண்டவர் வெறுத்துத் தள்ளுகிறார். நீதிமான்களின் நேர்ச்சைகளையோ ஏற்றுக்கொள்கிறார்.
9. அக்கிரமியின் வழியை ஆண்டவர் வெறுக்கிறார். நீதியைப் பின்பற்றி நடக்கிறவனுக்கு அவர் அன்பு செய்கிறார்.
10. வாழ்வு தரும் வழியை விட்டு விலகினவனுக்குப் போதனை கடுமையானதாய் இருக்கும். கண்டனங்களைப் பகைக்கிறவன் சாவான்.
11. நரகமும் நாசமும் (எப்பொழுதும்) ஆண்டவர் முன்னிலையில் (இருப்பது போல்), மனு மக்களின் இதயங்களும் அப்படியே அவற்றையும்விட (அவர் முன்னிலையில்) இருக்கின்றன.
12. தீயவன் தன்னைக் கண்டிக்கிறவனுக்கு அன்பு செய்கிறதுமில்லை; ஞானிகளிடம் போகிறதுமில்லை.
13. இதயத்திலுள்ள மகிழ்ச்சி முகத்தில் தெரியும். மனச் சஞ்சலம் ஆன்மாவை வதைக்கும். மனச் சஞ்சலத்தில் ஆன்மா குன்றிப்போகிறது.
14. ஞானியின் இதயம் போதகத்தைக் தேடுகின்றது. மதிகெட்டோரின் வாய் அறிவீனத்தால் ஊட்டப்படுகின்றது.
15. வறியவனின் நாட்கள் எல்லாம் தீயன. கவலையற்ற மனமோ இடைவிடாத விருந்து போலாம்.
16. தெய்வ பயத்துடன் கூடிய சொற்பப் பொருள் நிறைவு தராத மிகுந்த செல்வங்களை விட அதிக நலம் பயக்கும்.
17. கொழுத்த கன்றுக்குட்டி (விருந்துக்குப்) பகையுடன் அழைக்கப் படுவதைவிட, வெறுங்கீரை (விருந்துக்கு) நட்புடன் அழைக்கப்பட்டிருத்தல் நன்று.
18. கோபமுள்ள மனிதன் சண்டையை மூட்டுகிறான். பொறுமையுள்ளவன் மூண்டதையும் தணிக்கிறான்.
19. சோம்பேறிகளுடைய வழி முள்வேலி போலாம். நீதிமான்களுடைய பாதை இடறல் இல்லாததாம்.
20. ஞானமுள்ள மகன் தன் தந்தையை மகிழ்விக்கிறான். மதிகெட்ட மனிதன் தன் தாயை இகழ்கிறான்.
21. மதிகெட்டவனுக்குத் (தன்) மதிகேடே மகிழ்ச்சி. விவேகமுள்ள மனிதன் தன் அடிகளைச் செவ்வையாக்குகிறான்.
22. ஆலோசனை எங்கே இல்லையோ அங்கே சிந்தனைகள் சிதைந்துபோகின்றன. சிந்திப்போர் எங்கே அதிகமோ அங்கே (சிந்தனைகள்) வலுப்படுகின்றன.
23. மனிதன் தன் வாயின் வாக்கில் மகிழ்கிறான். காலத்துக்கேற்ற உரையே சிறந்ததாம்.
24. அடி நரகத்தினின்று விலகும்படி வாழ்வு தரும் பாதை கற்றவன்முன் உள்ளது.
25. அகங்காரிகளின் வீட்டை ஆண்டவர் இடித்தழிப்பார்; விதவையின் காணி எல்லைகளையும் உறுதிப்படுத்துவார்.
26. தீய சிந்தனைகளை ஆண்டவர் வெறுக்கிறார். தூய்மையும் மிக்க அழகும் உள்ள பேச்சு அவரால் உறுதிப்படுத்தப்படும்.
27. கஞ்சத்தனத்தைப் பின்பற்றுகிறவன் தன் வீட்டைக் குழப்புகிறான். செல்வங்களைப் புறக்கணிக்கிறவனோ வாழ்வான். இரக்கத்தாலும் விசுவாசத்தாலும் பாவங்கள் நிவாரணமாகின்றன. தெய்வ பயத்தாலோ எவனும் தீமையினின்று விலகுவான்.
28. நீதிமானின் மனம் (கீழ்ப்படிதலைத்) தியானிக்கின்றது. அக்கிரமிகளின் வாய் தீமைகளால் நிறைந்து வழிகின்றது.
29. ஆண்டவர் அக்கிரமிகளுக்குத் தூர விலகி இருக்கின்றார். நீதிமான்களுடைய வேண்டுதல்களைக் கேட்டருள்கிறார்.
30. கண்ணொளி ஆன்மாவை மகிழ்விக்கின்றது. நற்புகழ் எலும்புகளைக் கொழுப்பிக்கின்றது.
31. வாழ்க்கையின் கண்டனங்களைக் கேட்கச் செவியுள்ளவன் ஞானிகள் நடுவே குடியிருப்பான்.
32. போதனையை இகழ்பவன் தன் ஆன்மாவைப் புறக்கணிக்கிறான். கண்டனங்களுக்கு இணங்குகிறவனோ தன் இதயத்தை ஆண்டுகொள்வான்.
33. தெய்வ பயமே ஞான போதினி. தாழ்மை மகிமைக்குமுன் செல்லுகிறது.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Chapters, Current Chapter 15 of Total Chapters 31
நீதிமொழிகள் 15:26

×

Alert

×

tamil Letters Keypad References