தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நீதிமொழிகள்
1. ஞானமுள்ள மகன் தன் தந்தையின் போதகத்தைக் (கைக்கொண்டு நடக்கிறான்). கேலி செய்பவனோ கண்டிக்கப்படுகையில் செவிகொடான்.
2. தன் வாயின் கனியால் மனிதன் திருப்தி அடைவான். துரோகிகளுடைய ஆன்மாவோ தீயதாம்.
3. தன் நாவைக் காக்கிறவன் தன் ஆன்மாவையே காப்பாற்றுகிறான். ஆனால், பேச்சில் கவனமில்லாதிருப்பவன் தீமையைச் சுமக்கிறான்.
4. வேண்டும், வேண்டாம் என்கிறவன் சோம்பேறி. உழைப்போரின் ஆன்மாவோ நிறைவுபெறும்.
5. நீதிமான் பொய் வார்த்தையை வெறுக்கிறான். அக்கிரமியோ அதை ஆதரிக்கிறான்; தானும் அவமானப்படுவான்.
6. நீதி மாசற்றவனின் வழியைக் காக்கும். அக்கிரமமோ பாவியை விழத்தாட்டுகின்றது.
7. இல்லாதவன் ஒருவன் (ஒரு சமயம்) செல்வன்போல் இருக்கிறான். செல்வன் ஒரு சமயம் வறியவன்போல் இருக்கிறான்.
8. மனிதனின் செல்வம் அவனுடைய உயிரின் மீட்பாம். ஏழையாயிருக்கிறவனோ துன்பத்தைச் சகிப்பதில்லை.
9. நீதிமான்களின் ஒளி மகிழ்ச்சிக்குரியது. தீயோரின் விளக்கோ அவிந்துபோகும்.
10. அகங்காரிகளுக்குள் எப்போதும் சச்சரவுகள் இருக்கின்றன. ஆனால், ஆலோசனையோடு எல்லாவற்றையும் செய்கிறவர்கள் ஞானத்தால் நடத்தப்படுகிறார்கள்.
11. திடீரென்று சேர்த்த செல்வம் குறைந்துபோகும். மெதுவாய்க் கையில் சேர்ந்ததோ மிகுந்து வரும்.
12. தாமதிக்கப்படுகிற நம்பிக்கை ஆன்மாவை வருத்துகிறது. நிறைவேறுகிற ஆசை வாழ்வு தரும் மரமாம்.
13. ஒரு காரியத்தைப் புறக்கணிக்கிறவன் எதிர் காலத்திற்குத் தன்னைக் கடமைக்கு உட்படுத்துகிறவன். கட்டளைக்குப் பயப்படுகிறவனோ சமாதானத்தில் நிலைத்திருப்பான். வஞ்சனையுள்ள ஆன்மாக்கள் பாவங்களில் உழல்கின்றன. நீதிமான்களோ இரக்கமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்; இரக்கமும் புரிகிறார்கள்.
14. மரண நாசத்தினின்று விலகுவதற்குரிய வாழ்வுச் சுனையாக ஞானியின் கட்டளை அமைகின்றது.
15. நற்போதகம் நற்புகழைத் தரும். அதனைப் புறக்கணிக்கிறவர்களின் பாதையிலோ கேடு விளையும்.
16. விவேகமுடையோன் ஆலோசனையோடு அனைத்தையும் செய்கிறான். பேதையோ தன் பேதமையைத் திறந்து காட்டுகிறான்.
17. தீய தூதன் தீமையில் விழுவான். பிரமாணிக்கமுள்ள பிரதிநிதிக்கோ நலம் கிட்டும்.
18. படிப்பினையைக் கைநெகிழ்பவனுக்கு வறுமையும் சிறுமையும் நேரிடும். தன்னைக் கண்டிக்கிறவனுக்கு இணங்குகிறவனோ மகிமை அடைவான்.
19. ஆசை நிறைவேறும் பொழுது ஆன்மா அக்களிக்கின்றது. ஆதலால், தீமையை விட்டொழிக்கின்றவர்களைப் பேதைகள் வெறுக்கிறார்கள்.
20. ஞானிகளுடன் நடக்கிறவன் ஞானியாவான். மதியீனரின் நண்பன் (அவர்களைப் போலாவான்).
21. பொல்லாப்பு பாவிகளைப் பின்தொடர்கிறது. நீதிமான்களுக்கு நன்மையே நித்திய வாழ்வு.
22. நல்லவன் தன் மக்களையும் பேரப்பிள்ளைகளையும் உரிமைக்காரராக விடுகிறான். பாவியின் செல்வமும் நீதிமானுக்காகக் காப்பாற்றி வைக்கப்படுகிறது.
23. தந்தையரின் நிலங்களில் ஏராளமான உணவு (உண்டு). அவையும் தீர்வையின்றியே மற்றவர்களுக்காகச் சேகரிக்கப்படுகின்றன.
24. பிரம்பால் அடிக்கத் தயங்குகிறவன் தன் பிள்ளையைப் பகைக்கிறான். அவனை நேசிக்கிறவனோ கட்டாயமாய்க் கற்பிக்கிறான்.
25. நீதிமான் தன் ஆன்மாவை நிறைவு கொள்ளச் செய்கிறான். அக்கிரமிகளின் வயிறோ நிறையாதாம்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Chapters, Current Chapter 13 of Total Chapters 31
நீதிமொழிகள் 13:19

×

Alert

×

tamil Letters Keypad References