தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நீதிமொழிகள்
1. கள்ளத்தராசு ஆண்டவருக்கு அருவருப்பானது. சரி நிறையே அவருடைய திருவுளமாம்.
2. அகந்தை எங்கே இருக்கின்றதோ அங்கே அவமானமும், தாழ்ச்சி எங்கேயோ அங்கே ஞானமும் (உண்டு).
3. நீதிமான்களின் நேர்மை அவர்களை நடத்தும். தீயோரின் சதியோ அவர்களையே நாசமாக்கும்.
4. (கடவுள்) பழிவாங்கும் நாளில் செல்வம் பயன்படாது. நீதியோ சாவினின்று விடுவிக்கும்.
5. நேர்மையாளனின் நீதி அவன் நெறியைக் காக்கும். அக்கிரமி தன் அக்கிரமத்தில் வீழ்ந்து மடிவான்.
6. செவ்வையானோரின் நீதி அவர்களை விடுவிக்கும். தீயோர் தங்கள் சதிகளிலே சிக்கிக் கொள்வார்கள்.
7. தீய மனிதன் சாக, பின் யாதொரு நம்பிக்கையும் இராது. பெருமையை நாடுவோரின் எண்ணமும் அழிந்துபோகும்.
8. நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான். அக்கிரமியோ அவனுக்குப் பதிலாகக் கையளிக்கப்படுவான்.
9. கபடன் தன் நண்பனை வாயால் ஏய்க்கிறான். நீதிமான்களோ நன்மையான போதகத்தால் காப்பாற்றப்படுவார்கள்.
10. நீதிமான்களின் பேற்றைக் கண்டு நரகம் களிகூரும். அக்கிரமிகளின் அழிவைப் பார்த்து (மக்கள்) மங்களம் கூறுவார்கள்.
11. நீதிமான்களின் ஆசியாலே நகரம் செழித்தோங்கும். தீயோரின் வாக்கால் அழியும்.
12. தன் நண்பனை இகழ்பவன் எவனோ அவன் மதியீனன். ஆனால், விவேகமுள்ள மனிதன் (இகழ்ந்து) பேசான்.
13. வஞ்சனையாய் நடக்கிறவன் இரகசியங்களை வெளியாக்குகிறான். பிரமாணிக்கமுள்ளவனோ தன் நண்பனின் இரகசியத்தை மறைக்கிறான்.
14. ஆள்பவன் இல்லாத நாட்டில் குடி மக்கள் அழிந்து கெடுவர். ஆனால், மிக்க ஆலோசனைக்காரர் எவ்விடமோ அவ்விடம் குடி மக்கள் வாழ்வார்கள்.
15. அன்னியனுடன் பிணையாகிறவன் துன்பத்தால் வருந்துவான். வஞ்சனைகளுக்குத் தப்பித்துக் கொள்பவனோ நலமுடன் இருப்பான்.
16. நாணமுள்ள பெண் மகிமை பெறுவாள். வலியாரோ செல்வங்களை அடைவார்கள்.
17. இரக்கமுள்ள மனிதன் தன் ஆன்மாவுக்கு நன்மை செய்கிறான். கொடியவனோ தன் சுற்றத்தாரைப் புறக்கணிக்கிறான்.
18. அக்கிரமி செய்த வேலை நிலைகொள்ளாது. நீதியை விதைப்பவனோ உண்மையான ஊதியம் பெறுவான்.
19. சாந்தம் வாழ்வையும், தீமை செய்தல் மரணத்தையும் விளைவிக்கின்றன.
20. தீய இதயத்தோரை ஆண்டவர் வெறுக்கிறார். நேர்மையாய் நடக்கிறவர்களை அவர் விரும்புகிறார்.
21. கைக்குள் கை வைத்தாலும் தீயோன் குற்றமற்றவனாய் இரான். நீதிமான்களின் சந்ததியோ காப்பாற்றப்படும்.
22. மதியில்லாப் பெண்ணின் அழகு பன்றியின் மூக்கிலுள்ள பொன் வளையம் போலிருக்கும்.
23. நீதிமான்களின் ஆசை எல்லா நன்மையையும் பற்றியது. அக்கிரமிகளின் நம்பிக்கையோ கோபவெறியாம்.
24. சிலர் தங்கள் சொத்துகளைப் பகிர்ந்தும் பெரும் செல்வராகிறார்கள். சிலர் தங்களுக்குச் சொந்தமல்லாதவைகளைக் கவர்ந்தும் எப்போதுமே வறுமையில் உழல்கிறார்கள்.
25. நன்மையை நாடுகிற ஆன்மா நிறைவுபெறும். (மற்றவர்களைப்) பூரிக்கச் செய்கிறவன் தானும் பூரிப்படைவான்.
26. தானியத்தை மறைத்து வைக்கிறவன் குடிகளால் சபிக்கப்படுவான். ஆனால் விற்கிறவர்களுடைய தலைமேலோ கடவுளின் ஆசி இருக்கும்.
27. நன்மையைச் செய்யத் தேடுகிறவன் அதிகாலையில் எழுந்திருக்கிறான். ஆனால் தீமையைத் தேடித் திரிகிறவன் அவைகளாலேயே நசுக்கப் படுவான்.
28. தன் சொத்தில் நம்பிக்கை வைக்கிறவன் வீழ்ந்தழிவான். நீதிமான்களோ பசுந்தளிரைப்போலத் தழைப்பார்கள்.
29. தன் இல்லத்தைக் குழப்புகிறவன் காற்றை உரிமையாகக் கொண்டிருப்பான். மதியீனனோ ஞானிக்குப் பணிவிடை புரிவான்.
30. நீதிமானுடைய கனி வாழ்வு தரும் மரமாம். ஆன்மாக்களைத் தனதாக்கிக் கொள்கிறவன் ஞானியாய் இருக்கிறான்.
31. நீதிமானே இவ்வுலகில் தண்டனை பெறுவானாயின், அக்கிரமியும் பாவியும் எவ்வளவு அதிகமாய்ப் (பெறுவார்கள்)!

குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Chapters, Current Chapter 11 of Total Chapters 31
நீதிமொழிகள் 11

×

Alert

×

tamil Letters Keypad References