தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எண்ணாகமம்
1. மீண்டும் இஸ்ராயேர் எகிப்து நாட்டினின்று புறப்பட்டு வந்த இரண்டாம் ஆண்டின் முதல் மாதத்திலே, சீனாய்ப் பாலைவனத்தில் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2. இஸ்ராயேல் மக்கள் பாஸ்காத் திருவிழாவைக் குறித்த காலத்தில்,
3. அதாவது இம்மாதத்தின் பதினான்காம் நாள் மாலை வேளையிலே - அதற்கடுத்த எல்லாச் சடங்கு முறைகளின்படி கொண்டாடக்கடவார்கள் என்றார்.
4. ஆகையால், மோயீசன் இஸ்ராயேல் மக்கள் பாஸ்காவைக் கொண்டாடும்படி கட்டளையிட்டார்.
5. அவர்கள் அதைச் சீனாய் மலையில் குறித்த காலமாகிய அம்மாதம் பதினான்காம் நாள் மாலை வேளையில் கொண்டாடினார்கள். இஸ்ராயேல் மக்கள் ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே எல்லாவற்றையும் செய்தார்கள்.
6. ஆனால், ஒருவன் இறந்து போனதை முன்னிட்டுச் சிலர் தீட்டுப்பட்டாவர்களாயிருந்து, பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடக் கூடாதவர்களாய் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் முன்பாக வந்து,
7. அவர்களை நோக்கி: நாங்கள் ஒரு மனிதன் இறந்ததனாலே தீட்டுப்பட்டவர்கள். குறித்த காலத்தில் இஸ்ராயேல் மக்களோடுகூட ஆண்டவருக்குக் காணிக்கை செலுத்தாதபடிக்கு நாங்கள் விலக்கப்பட வேண்டியதென்ன? என்று முறையிட்டார்கள்.
8. மோயீசனோ, பொறுங்கள், உங்களைப் பொறுத்தமட்டில் ஆண்டவர் என்ன கட்டளை கொடுப்பாரென்று கேட்கப் போகிறேன் என்று பதில் கூறினார்.
9. அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி:
10. நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: உங்கள் சந்ததியாரிலே எவனும் சாவை முன்னிட்டுத் தீட்டுப்பட்டிருந்தாலும், அல்லது பிரயாணத்தை முன்னிட்டு உங்களை விட்டுத் தூர இருந்தாலும் அவன் ஆண்டவருடைய பாஸ்காத் திருவிழாவை
11. இரண்டாம் மாதம் பதினான்காம் நாள் மாலை நேரத்திலே கொண்டாடக்கடவான். புளியாத அப்பத்தோடும் காட்டுக் கீரைகளோடும் அதை உண்பான்.
12. விடியற்காலை வரையிலும் அதில் எதையும் மீதியாக வைக்காமலும், எலும்புகளிலொன்றையும் முறிக்காமலும், பாஸ்காவைக் குறித்துக் கட்டளையிடப்பட்ட எல்லாச் சடங்கு முறைகளின்படியும் அதை அனுசரிக்கக்கடவான்.
13. ஆனால், தூய்மையாயிருக்கிறவர்களிலும், அல்லது தூரப் பிரயாணம் போகாதவர்களிலும், எவன் பாஸ்காவை அனுசரியாதிருப்பானோ அவன் தன் மக்களிடையே இராதபடிக்குக் கொலை செய்யப்படுவான்.
14. அகதி அல்லது அந்நியன் ஒருவன் உங்களிடத்தில் தங்கியிருந்தால், அவனும் சட்ட முறைப்படி பாஸ்காவை அனுசரிப்பான். இது அகதியைக் குறித்தும் அந்நியனைக் குறித்தும் உங்களுக்கு ஒரு கட்டளை என்றருளினார்.
15. தவிர, கூடாரம் நிறுவப்பட்ட நாளில் மேகம் அதை மூடிற்று. மாலையான போது உறைவிடத்தின் மேல் நெருப்பு மயமான ஒரு தோற்றம் உண்டாகி விடியற்காலை வரையிலும் அது காணப்பட்டது.
16. இவ்வாறு நாள்தோறும் நிகழும். (எவ்வாவென்றால்:) பகலில் ஒரு மேகமும், இரவில் நெருப்புத் தோற்றமும் உறைவிடத்தை மூடிக் கொண்டிருக்கும்.
17. கூடாரத்தை மூடும் நெருப்பு எப்போது மறையுமோ அப்போது இஸ்ராயேல் மக்கள் புறப்பட்டுப் போவார்கள். மேகம் எவ்விடத்தில் தங்கக் காண்பார்களோ அவ்விடத்தில் பாளையமிறங்குவார்கள்.
18. இப்படி ஆண்டவருடைய கட்டளைப்படி பயணம் செய்வார்கள்; அவருடைய கட்டளைப்படி கூடாரத்தைத நிறுவுவார்கள். உறைவிடத்தின் மேல் மேகம் தங்கியிருக்கும் நாளெல்லாம் அவர்கள் அவ்விடத்திலேயே தங்கியிருப்பார்கள்.
19. மேகம் நெடுநாள் உறைவிடத்தின் மேல் தங்கியிருக்கும்போது இஸ்ராயேல் மக்கள் புறப்படாமல், ஆண்டவருடைய திருவுளத்துக்குக் காத்திருப்பார்கள்.
20. எத்தனை நாள் மேகம் கூடாரத்தை மூடுமோ அத்தனை நாளும்அவர்கள் அந்த இடத்திலே இருப்பார்கள். ஆண்டவருடைய கட்டளைப்படி பாளையமிறங்குவார்கள்; ஆண்டவருடைய கட்டளைப்படி பாளையம் பெயர்வார்கள்.
21. மேகம் மாலை முதல் விடியற்காலை வரையில் நின்று கொண்டு, விடியற்காலத்தில் உயர எழும்பும் போது அவர்கள் புறப்படுவார்கள். ஒரு பகலும் ஓர் இரவும் தங்கின பின்பு அது நீங்குமாயின், அவர்களை பாளையம் பெயர்வார்கள்.
22. ஆனால், மேகம் இரண்டு நாளேனும், ஒரு மாதமேனும், அதற்கு மேலேனும் கூடாரத்தின் மேலே தங்கினால், இஸ்ராயேல் மக்கள் புறப்படாமல், அங்கேயே தங்கிவிடுவார்கள். அது உயர எழும்பியவுடனே புறப்படுவார்கள்.
23. ஆதலால், ஆண்டவருடைய வாக்குப்படி கூடாரம் அடிப்பார்கள்; அவருடைய வாக்குப்படியே வழி நடப்பார்கள். ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் அவருடைய திருவுளத்திற்குக் காத்திருப்பார்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 36 Chapters, Current Chapter 9 of Total Chapters 36
எண்ணாகமம் 9:12

×

Alert

×

tamil Letters Keypad References