தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எண்ணாகமம்
1. மறுபடியும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ ஆரோனுக்குச் சொல்ல வேண்டியது:
2. நீ ஏழு விளக்குகளை ஏற்றும்போது, விளக்குத் தண்டைத் தென்புறத்திலே நிறுத்தக்கடவாய். ஆதலால், விளக்குகள் காணிக்கை அப்பங்களின் மேசைக்கு நேரே வடபுறத்தை நோக்கியிருக்கும்படி கட்டளையிடுவாய். அவை விளக்குத் தண்டுக்கு எதிராகவே எரிய வேண்டும் என்று கட்டளையிடுவாய். அவை விளக்குத் தண்டுக்கு எதிராகவே எரிய வேண்டும் என்று சொல்வாய் என்றருளினார்.
3. ஆரோன் இதைச் செய்து, ஆண்டவர் மோயீசனைக் கட்டளையிட்டிருந்தபடியே விளக்குகளை விளக்குத் தண்டின்மேலே ஏற்றினார்.
4. இந்த விளக்குத் தண்டு செய்யப்பட்ட விதமாவது: நடுத்தண்டு முதல் கிளைகளின் இரு பக்கத்திலுமுள்ள பூக்கள் வரையிலும் பொன்னாலான தண்டு சுத்தியால் அடித்துச் செய்யப்பட்டிருந்தது. ஆண்டவர் தமக்குக் காண்பித்திருந்த மாதிரியின்படியே மோயீசன் அதனைச் செய்தார்.
5. மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
6. நீ இஸ்ராயேல் மக்களினின்று லேவியர்களைப் பிரித்தெடுத்து, அவர்களைப் புனிதப்படுத்தக் கடவாய்.
7. எவ்விதமென்றால்: நீ அவர்கள் மேல் சுத்திகரிப்பு நீரைத் தெளித்த பின்பு, அவர்கள் உடல் முழுவதையும் சவரம் செய்து, தங்கள் உடைகளையும் தங்களையும் கழுவிக் கொண்டபின்,
8. மந்தையினின்று ஒரு காளையையும், போசனப் பலிக்கு வேண்டிய எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவையும் கொண்டுவாருங்கள். நீயோ பாவப்பரிகாரத்திற்காக மந்தையினின்று வேறோரு காளையைத் தெரிந்தெடுத்து,
9. இஸ்ராயேல் மக்களின் சபையார் எல்லாரையும் வரச் சொல்லி, லேவியர்களை உடன்படிக்கைக் கூடாரத்தின் முன் வரச் செய்வாய்.
10. லேவியர்கள் ஆண்டவர் முன்னிலையில் நிற்கும்பொழுது இஸ்ராயேல் மக்கள் அவர்கள்மீது தங்கள் கைகளை வைக்கக்கடவார்கள்.
11. அப்பொழுது ஆரோன் இஸ்ராயேல் மக்களின் காணிக்கையாக ஆண்டவருடைய பணிகளைச் செய்யும் பொருட்டு லேவியர்களை ஆண்டவருக்குச் சமர்ப்பிப்பான்.
12. அதன் பிறகு லேவியர்கள் காளைகளின் தலைமீது தங்கள் கைகளை வைப்பார்கள். நீயோ பாவ நிவாரணப் பலியாக இரண்டில் ஒரு காளையையும், அவர்களுக்காக நீ வேண்டிக்கொள்ளும்படி ஆண்டவருக்கு முழுத் தகனப் பலியாக மற்றொரு காளையையும் பலியிடுவாய்.
13. பிறகு ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் முன்பாக லேவியர்களை நிறுத்தி, அவர்களை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து அபிசேகம் செய்வாய்.
14. லேவியர்கள் நம்முடையவர்களாய் இருக்கும்படி நீ அவர்களை இஸ்ராயேல் மக்களினின்று பிரித்தெடுக்கக் கடவாய்.
15. இவையெல்லாம் நிறைவேறின பிறகு அவர்கள் நமக்குப் பணிவிடை செய்யும் பொருட்டு உடன்படிக்கைக் கூடாரத்தினுள் புகுவார்கள். இதுவே நீ அவர்களைப் புனிதப்படுத்தி, ஆண்டவராகிய நமக்கு இஸ்ராயேல் மக்களால் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டவர்களென்று அபிசேகம் செய்யவேண்டிய சடங்கு முறை.
16. இஸ்ராயேலில் தாயின் கருப்பையைத் திறந்து பிறக்கிற எல்லாத் தலைபேறுக்கும் பதிலாக நாம் அவர்களை எடுத்துக் கொண்டோம்.
17. இஸ்ராயேல் மக்களிடையே மனிதரிலும் மிருகங்களிலும் முதற் பேறானவையெல்லாம் நம்முடையனவல்லவா? நாம் எகிப்து நாட்டில் முதற் பேறானவற்றையெல்லாம் அழித்த நாள் முதற் கொண்டு அவற்றை நமக்கே புனிதப்படுத்திக் கொண்டோம்.
18. எனவே இஸ்ராயேல் மக்களின் எல்லாத் தலைச்சன் புதல்வர்களுக்கும் பதிலாக லேவியர்களை நமக்கென்று புனிதப்படுத்தி,
19. அவர்கள் இஸ்ராயேல் மக்கள் சார்பாக உடன்படிக்கைக் கூடாரத்தில் பணிவிடை செய்யும்படியாகவும், இஸ்ராயேல் மக்களில் மற்ற எவனாயினும் மூலத்தானத்தின் உள்ளே புகத் துணிந்தால் இஸ்ராயேல் மக்களுக்குத் துன்பம் உண்டாகாதபடி அவர்களுக்காக வேண்டிக் கொள்ளும்படியாகவும், நாம் லேவியரை இஸ்ராயேல் மக்களினின்று பிரித்தெடுத்து, ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் நன்கொடையாகக் கொடுத்தோம் என்றார்.
20. அப்பொழுது மோயீசனும், ஆரோனும், இஸ்ராயேல் மக்களின் சபையார் எல்லாரும், ஆண்டவர் லேவியர்களைக் குறித்து மோயீசனுக்கு கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள்.
21. லேவியர்கள் புனிதப்படுத்தப்பட்டுத் தங்கள் உடைகளைக் கழுவின பின்பு ஆரோன் அவர்களை ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து,
22. அவர்கள் புனிதர்களாய் ஆரோனுக்கும் அவர் புதல்வர்களுக்கும் முன்பாக உடன்படிக்கைக் கூடாரத்தினுள் தங்கள் பணிவிடைகளைச் செய்யப் புகும் வண்ணம் அவர்களுக்காக மன்றாடினார். ஆண்டவர் லேவியரைக் குறித்துக் கட்டளையிட்டிருந்தபடியே அவர்கள் செய்தார்கள்.
23. மறுபடியும் ஆண்டவர் மோயீசனை நோக்கி,
24. லேவியரைப் பற்றிய சட்டம் யாதென்றால்: இருபத்தைந்து முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் உடன்படிக்கைக் கூடாரத்தில் பணிவிடை செய்யப் புகுவார்கள்.
25. ஐம்பது வயது நிறைவெய்திய பின்போ அவர்கள் திருப்பணியை விட்டுவிடுவார்கள்.
26. அவர்கள் உடன்படிக்கைக் கூடாரத்தில் தங்களுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டவைகளைக் காவல் காக்கத் தங்கள் சகோகரருக்கு உதவியாக இருப்பார்கள். ஆனால், குருக்களைச் சார்ந்த திருப்பணிச் சடங்குகளை அவர்கள் கண்டிப்பாய்ச் செய்யலாகாது. இப்படி, லேவியர் செய்ய வேண்டிய வேலையைக் குறித்து நீ திட்டம் செய்யக் கடவாய் என்றார்.
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 8 / 36
1 மறுபடியும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ ஆரோனுக்குச் சொல்ல வேண்டியது: 2 நீ ஏழு விளக்குகளை ஏற்றும்போது, விளக்குத் தண்டைத் தென்புறத்திலே நிறுத்தக்கடவாய். ஆதலால், விளக்குகள் காணிக்கை அப்பங்களின் மேசைக்கு நேரே வடபுறத்தை நோக்கியிருக்கும்படி கட்டளையிடுவாய். அவை விளக்குத் தண்டுக்கு எதிராகவே எரிய வேண்டும் என்று கட்டளையிடுவாய். அவை விளக்குத் தண்டுக்கு எதிராகவே எரிய வேண்டும் என்று சொல்வாய் என்றருளினார். 3 ஆரோன் இதைச் செய்து, ஆண்டவர் மோயீசனைக் கட்டளையிட்டிருந்தபடியே விளக்குகளை விளக்குத் தண்டின்மேலே ஏற்றினார். 4 இந்த விளக்குத் தண்டு செய்யப்பட்ட விதமாவது: நடுத்தண்டு முதல் கிளைகளின் இரு பக்கத்திலுமுள்ள பூக்கள் வரையிலும் பொன்னாலான தண்டு சுத்தியால் அடித்துச் செய்யப்பட்டிருந்தது. ஆண்டவர் தமக்குக் காண்பித்திருந்த மாதிரியின்படியே மோயீசன் அதனைச் செய்தார். 5 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: 6 நீ இஸ்ராயேல் மக்களினின்று லேவியர்களைப் பிரித்தெடுத்து, அவர்களைப் புனிதப்படுத்தக் கடவாய். 7 எவ்விதமென்றால்: நீ அவர்கள் மேல் சுத்திகரிப்பு நீரைத் தெளித்த பின்பு, அவர்கள் உடல் முழுவதையும் சவரம் செய்து, தங்கள் உடைகளையும் தங்களையும் கழுவிக் கொண்டபின், 8 மந்தையினின்று ஒரு காளையையும், போசனப் பலிக்கு வேண்டிய எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவையும் கொண்டுவாருங்கள். நீயோ பாவப்பரிகாரத்திற்காக மந்தையினின்று வேறோரு காளையைத் தெரிந்தெடுத்து, 9 இஸ்ராயேல் மக்களின் சபையார் எல்லாரையும் வரச் சொல்லி, லேவியர்களை உடன்படிக்கைக் கூடாரத்தின் முன் வரச் செய்வாய். 10 லேவியர்கள் ஆண்டவர் முன்னிலையில் நிற்கும்பொழுது இஸ்ராயேல் மக்கள் அவர்கள்மீது தங்கள் கைகளை வைக்கக்கடவார்கள். 11 அப்பொழுது ஆரோன் இஸ்ராயேல் மக்களின் காணிக்கையாக ஆண்டவருடைய பணிகளைச் செய்யும் பொருட்டு லேவியர்களை ஆண்டவருக்குச் சமர்ப்பிப்பான். 12 அதன் பிறகு லேவியர்கள் காளைகளின் தலைமீது தங்கள் கைகளை வைப்பார்கள். நீயோ பாவ நிவாரணப் பலியாக இரண்டில் ஒரு காளையையும், அவர்களுக்காக நீ வேண்டிக்கொள்ளும்படி ஆண்டவருக்கு முழுத் தகனப் பலியாக மற்றொரு காளையையும் பலியிடுவாய். 13 பிறகு ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் முன்பாக லேவியர்களை நிறுத்தி, அவர்களை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து அபிசேகம் செய்வாய். 14 லேவியர்கள் நம்முடையவர்களாய் இருக்கும்படி நீ அவர்களை இஸ்ராயேல் மக்களினின்று பிரித்தெடுக்கக் கடவாய். 15 இவையெல்லாம் நிறைவேறின பிறகு அவர்கள் நமக்குப் பணிவிடை செய்யும் பொருட்டு உடன்படிக்கைக் கூடாரத்தினுள் புகுவார்கள். இதுவே நீ அவர்களைப் புனிதப்படுத்தி, ஆண்டவராகிய நமக்கு இஸ்ராயேல் மக்களால் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டவர்களென்று அபிசேகம் செய்யவேண்டிய சடங்கு முறை. 16 இஸ்ராயேலில் தாயின் கருப்பையைத் திறந்து பிறக்கிற எல்லாத் தலைபேறுக்கும் பதிலாக நாம் அவர்களை எடுத்துக் கொண்டோம். 17 இஸ்ராயேல் மக்களிடையே மனிதரிலும் மிருகங்களிலும் முதற் பேறானவையெல்லாம் நம்முடையனவல்லவா? நாம் எகிப்து நாட்டில் முதற் பேறானவற்றையெல்லாம் அழித்த நாள் முதற் கொண்டு அவற்றை நமக்கே புனிதப்படுத்திக் கொண்டோம். 18 எனவே இஸ்ராயேல் மக்களின் எல்லாத் தலைச்சன் புதல்வர்களுக்கும் பதிலாக லேவியர்களை நமக்கென்று புனிதப்படுத்தி, 19 அவர்கள் இஸ்ராயேல் மக்கள் சார்பாக உடன்படிக்கைக் கூடாரத்தில் பணிவிடை செய்யும்படியாகவும், இஸ்ராயேல் மக்களில் மற்ற எவனாயினும் மூலத்தானத்தின் உள்ளே புகத் துணிந்தால் இஸ்ராயேல் மக்களுக்குத் துன்பம் உண்டாகாதபடி அவர்களுக்காக வேண்டிக் கொள்ளும்படியாகவும், நாம் லேவியரை இஸ்ராயேல் மக்களினின்று பிரித்தெடுத்து, ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் நன்கொடையாகக் கொடுத்தோம் என்றார். 20 அப்பொழுது மோயீசனும், ஆரோனும், இஸ்ராயேல் மக்களின் சபையார் எல்லாரும், ஆண்டவர் லேவியர்களைக் குறித்து மோயீசனுக்கு கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள். 21 லேவியர்கள் புனிதப்படுத்தப்பட்டுத் தங்கள் உடைகளைக் கழுவின பின்பு ஆரோன் அவர்களை ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து, 22 அவர்கள் புனிதர்களாய் ஆரோனுக்கும் அவர் புதல்வர்களுக்கும் முன்பாக உடன்படிக்கைக் கூடாரத்தினுள் தங்கள் பணிவிடைகளைச் செய்யப் புகும் வண்ணம் அவர்களுக்காக மன்றாடினார். ஆண்டவர் லேவியரைக் குறித்துக் கட்டளையிட்டிருந்தபடியே அவர்கள் செய்தார்கள். 23 மறுபடியும் ஆண்டவர் மோயீசனை நோக்கி, 24 லேவியரைப் பற்றிய சட்டம் யாதென்றால்: இருபத்தைந்து முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் உடன்படிக்கைக் கூடாரத்தில் பணிவிடை செய்யப் புகுவார்கள். 25 ஐம்பது வயது நிறைவெய்திய பின்போ அவர்கள் திருப்பணியை விட்டுவிடுவார்கள். 26 அவர்கள் உடன்படிக்கைக் கூடாரத்தில் தங்களுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டவைகளைக் காவல் காக்கத் தங்கள் சகோகரருக்கு உதவியாக இருப்பார்கள். ஆனால், குருக்களைச் சார்ந்த திருப்பணிச் சடங்குகளை அவர்கள் கண்டிப்பாய்ச் செய்யலாகாது. இப்படி, லேவியர் செய்ய வேண்டிய வேலையைக் குறித்து நீ திட்டம் செய்யக் கடவாய் என்றார்.
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 8 / 36
×

Alert

×

Tamil Letters Keypad References