தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எண்ணாகமம்
1. மீண்டும் ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:
2. லேவியர்களுக்குள்ளே ககாத் புதல்வரைக் கணக்கெடுத்து, அவரவருடைய குடும்பங்களின் வரிசைப்படியும் வீடுகளின் வரிசைப்படியும் எண்ணக்கடவீர்கள்.
3. (அந்தக் கணக்கிலே) உடன்படிக்கைக் கூடாரத்தில் இருக்கவும் வேலை செய்யவும் புகத்தக்கவர்களாய், முப்பது முதல் ஐம்பது வயது வரையிலுமுள்ள எல்லாரையும் எண்ண வேண்டும்.
4. காத்தின் புதல்வருக்குரிய அலுவல் என்னவென்றால்: பாளையம் பெயர்தலின்போது உடன்படிக்கைக் கூடாரத்தினுள்ளேயும் பரிசுத்தத்திலும் பரிசுத்தமான இடத்தினுள்ளேயும்,
5. ஆரோனும் அவன் புதல்வர்களும் புகுந்து வாயிலின் முன் தொங்கும் திரையை இற்க்கி, அதைக்கொண்டு சாட்சியப் பெட்டகத்தை மூடி,
6. அதன்மேல் ஊதாத் தோல்களால் செய்யப்பட்ட மூடுதிரையையும் போர்த்தி, அதன்மீது முழுவதும் நீலத்துப்பட்டியை விரித்து, பின்பு தண்டுகளைப் பாய்ச்சி,
7. காணிக்கை (அப்பங்களின்) மேசையை நீலத் துப்பட்டியால் பொதிந்து, தூபக்கலசங்களையும் சிமிழ்களையும் பான போசனப் பலிகளைச் சிந்துவதற்குரிய பாத்திரங்களையும் கலசங்களையும் கிண்ணங்களையும் கூடவே வைப்பார்கள். காணிக்கை அப்பங்கள் அதன்மேல் எப்பொழுதும் இருக்கும்.
8. அதன் மீது சிவப்பு நிறத் துப்பட்டியை விரித்து, மறுபடியும் அதை ஊதா நிறத் தோல் துப்பட்டியால் மூடி, பின்பு தண்டுகளைப் பாய்ச்சி வேறொரு இளநீலத் துப்பட்டியை எடுத்துக் குத்து விளக்குத் தண்டையும்,
9. அதன் அகல்களையும், திரிகளையும், முள், துறடு, சாம்பல் தட்டுக்களையும், அகல்களுக்குரிய எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூடி,
10. இவை அனைத்தையும் ஊதா நிறத்தோல்துப்பட்டிக்குள்ளே வைத்து, பிறகு தண்டுகளைப் பாய்ச்சி,
11. பொற் பீடத்தையும் இளநீலத்துப்பட்டியால் மூடி, அதன்மேல் ஊதாநிறத்தோலைப் போர்த்தி, அதன் தண்டுகளைப் பாய்ச்சி மூலதனத்தில் நடத்தப்படும்
12. வழிபாட்டுக்கு வேண்டிய எல்லாவற்றையும் எடுத்து, இளநீலத் துப்பட்டியிலே வைத்து ஊதாநிறத் தோலால் மூடித் தண்டின் மேல் வைத்துக் கட்டி,
13. பலிபீடத்திலிருந்து சாம்பலை நீக்கி அதன்மேல் சிவப்பு நிறத்துப்பட்டியை விரித்து,
14. அதனோடு கூட வழிபாட்டுக்கு வேண்டிய தீச்சட்டிகள் முள்ளுகள், திரிசூலங்கள், கொளுவி, துடுப்பு முதலிய பாத்திரங்களை வைத்து, ஊதா நிறத் தோலால் மூடித் தண்டுகளையும் பாய்ச்சுவார்கள்.
15. பாளையம் பெயர்தலின்போது ஆரோனும் அவன் மக்களும் மூலத்தானத்தையும் அதைச் சார்ந்த யாவற்றையும் மூடி முடித்தவுடனே ககாத் புதல்வர்கள் அவைகளைத் தூக்கிக் கொண்டு போவதற்கு வரக்கடவார்கள். அவர்கள் புனித இடத்திலுள்ள பொருட்களை மூடிய வண்ணமாய் எடுப்பார்களேயல்லாது, அவற்றைத் தொடக்கூடாது. தொட்டால் சாவார்கள். உடன்படிக்கைப் பெட்டகத்தைப் பொறுத்த மட்டில் அதுவே அவர்களுடைய கடமை.
16. தலைமைக் குருவாகிய ஆரோனின் மகன் எலெயஸார் ககாத் புதல்வர்களுக்குத் தலைவன். அவன் அகல்களுக்கு வேண்டிய எண்ணெயையும், நறுமணத் தூப வகைகளையும், நாள்தோறும் இடவேண்டிய பலியையும், அபிசேகத் தைலத்தையும், உறைவிடத்து வழிபாட்டுக்கு வேண்டிய யாவையும், மூலத்தானத்திலுள்ள எல்லாப் பொருட்களையும் கவனிக்கக் கடவான் என்றருளினார்.
17. பின்னும் ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:
18. நீங்கள் லேவியருக்குள்ளே ககாத் வம்சத்தார் அழிந்துபோக விடாதீர்கள்.
19. அவர்கள் பரிசுத்தத்திலும் பரிசுத்த மானத்தைத் தொட்டால் சாவார்கள். அவர்கள் சாகாமல் பிழைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டியதாவது: ஆரோனும் அவன் புதல்வரும் உள்ளே போய், அவனவன் செய்ய வேண்டிய வேலைகளையும் சுமக்க வேண்டிய சுமையையும் தனித்தனியாய் நியமித்துப் பங்கிடக் கடவார்கள்.
20. மற்றவர்களோ புனித இடத்தில் உள்ளவைகள் மூடப்படுவதற்கு முன்பே எட்டிப்பார்க்கவும் வேண்டாம். பார்த்தால் சாவார்கள் என்றார்.
21. மறுபடியும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
22. ஜேற்சோனின் புதல்வர்களையும் எண்ணக்கடவாய். அவரவரைத் தத்தம் வீடு, குடும்பம், இனம் ஆகிய இவற்றின் ஒழுங்குத் திட்டப்படி எண்ணிக்கை செய்யக்கடவாய்.
23. முப்பது முதல் ஐம்பது வயது வரையிலுமுள்ள எல்லாரையும் எண்ணி, உடன்படிக்கைக் கூடாரத்திற் புகுந்து ஊழியம் செய்யக் கூடியவர்கள் இத்தனை பேரென்று கணக்கெடுப்பாய்.
24. ஜேற்சோன் வம்சத்தாருடைய அலுவல் ஏதென்றால்;
25. அவர்கள் கூடாரத்திற்குரிய தொங்கு திரையையும், உடன்படிக்கையை மூடும் துப்பட்டியையும், இன்னொரு துப்பட்டியையும், இவற்றின் மூதுள்ள ஊதாநிறத்தோல் போர்வையையும், உடன்படிக்கைக் கூடார வாயிலிலே தொங்கும் மற்றவைகளையும், மண்டபத்திலுள்ள திரைகளையும்,
26. நுழைவாயிலிலுள்ள திரையையும் பலிபீடத்தைச் சேர்ந்த எல்லாவற்றையும், (கடவுள்) ஊழியத்திற்கு உதவியாயிருக்கிற கயிறுகளையும், பணிமுட்டுகளையும் சுமந்து செல்வார்களாக.
27. உடன்படிக்கைக் கூடாரத்தில் இவற்றையெல்லாம் ஜேற்சோன் புதல்வர் அவனவன் தான் எந்தச் சுமையை எடுக்க வேண்டும் என்பதை ஆரோன், அவன் புதல்வர்களின் கட்டளையால் அறியக்கடவார்கள்.
28. ஜேற்சோன் வம்சத்தார் செய்ய வேண்டிய வேலை இதுவே. அவர்கள் தலைமைக் குருவாகிய ஆரோனின் புதல்வன் ஈட்டமாரின் அதிகாரத்திற்குப் பணிவார்கள்.
29. மேறாரியின் புதல்வரையும் அவரவர்களுடைய முன்னோர்களின் வீட்டு வம்சங்களின் படி எண்ணக்கடவாய்.
30. முப்பது முதற்கொண்டு ஐம்பது வயது வரையிலும் உடன்படிக்கைக் (கூடாரத்துக்கடுத்த) ஊழியத்திற்காகவும் வழிபாட்டுக்காகவும் செல்வோர் அனைவரையும் எண்ணிப் பார்க்கக்கடவாய்.
31. இவர்கள் சுமக்க வேண்டிய சுமை என்னவென்றால்: கூடாரத்தினுடைய பலகைகள், தண்டுகள், தூண்கள், அவற்றின் பாதங்கள்,
32. மண்டபத்தைச் சுற்றிலுமுள்ள தூண்கள், அவற்றின் பாதங்கள், முளைகள், அவற்றின் கயிறுகள். இவற்றோடு தத்தம் முறைப்படி எல்லாத் தட்டுமுட்டுக்களையும் சுமந்து கொண்டு போவார்கள்.
33. மேறாரி வம்சத்தாரைச் சார்ந்த பணியும், அவர்கள் உடன்படிக்கைக் கூடாரத்தில் செய்யவேண்டிய வேலையும் அதுவே. அவர்கள் தலைமைக் குருவாகிய ஆரோனுடைய புதல்வன் ஈட்டமாரின் அதிகாரத்திற்குப் பணிவார்க்ள் என்றருளினார்.
34. அப்படியே மோயீசனும், ஆரோனும் அவன் புதல்வர்களும், சபைத் தலைவர்களும் ககாத்தின் புதல்வர்களை அவரவர்களுடைய முன்னோரின் வீட்டு வம்சங்களின்படி எண்ணி,
35. முப்பது முதல் ஐம்பது வயது வரையிலும் உடன்படிக்கைக் கூடாரத்தில் ஊழியஞ் செய்யச் செல்வோர் அனைவரையும் கணக்கெடுத்தபோது,
36. ஈராயிரத்து எழுநூற்றைம்பது பேர் இருந்தார்கள்.
37. உடன்படிக்கைக் கூடாரத்தில் புகக்கூடிய ககாத் வம்சத்தாருடைய எண்ணிக்கை அதுவே. ஆண்டவர் மோயீசன் வழியாகக் கட்டளையிட்டிருந்தபடி மோயீசனும் ஆரோனும் எண்ணிக்கை செய்தார்கள்.
38. ஜேற்சோனின் புதல்வர்களும் தத்தம் முன்னோர்களுடைய வீட்டு வம்சங்களின்படி எண்ணிக்கையிடப்பட்டு,
39. முப்பது முதல் ஐம்பது வயது வரையிலும் உடன்படிக்கைக் கூடாரத்தில் ஊழியம் செய்யச் செல்வோர் எல்லாரையும் கூட்டியபோது,
40. ஈராயிரத்து அறுநூற்று முப்பது பேர் இருந்தார்கள்.
41. மோயீசனும் ஆரோனும் ஆண்டவருடைய கட்டளைப்படி எண்ணிய ஜேற்சோனின் வம்சத்தாருடைய தொகை இதுவே.
42. மேறாரியின் புதல்வர்களும் தத்தம் முன்னோர்களின் வீட்ட வம்சங்களின்படி எண்ணப்பட்டார்கள்.
43. முப்பது முதற்கொண்டு ஐம்பது வயது வரையிலும் உடன்படிக்கைக் கூடாரத்தில் சமயச் சடங்குகளை நிறைவேற்றும்படி செல்வோர் அனைவரையும் கணக்கிட்டுப் பார்த்தபோது,
44. மூவாயிரத்து இருநூறு பேர் இருந்தார்கள்.
45. மேறாரியின் புதல்வருடைய தொகை இதுவே. ஆண்டவர் மோயீசன் மூலமாய்க் கட்டளையிட்டபடி மோயீசனும் ஆரோனும் அவர்களை எண்ணினார்கள்.
46. லேவியர்களிலே அவரவர் தத்தம் முன்னோர்களின் வீட்டு வம்சங்களின்படி மோயீசனாலும் ஆரோனாலும் இஸ்ராயேலின் பிரபுக்களாலும் எண்ணப்பட்டு, மோயீசனாலே பெயர் பெயராக எழுதப்பட்டார்கள்.
47. முப்பது முதல் ஐம்பது வயது வரையிலும், கூடாரத்து ஊழியம் செய்யவும், சுமைகளைச் சுமக்கவும் கூடியவர்களின் எண்ணிக்கை:
48. எண்ணாயிரத்து ஐந்நூற்று எண்பது.
49. ஆண்டவருடைய கட்டளையின்படியே அவர்கள் தத்தம் பணிகளுக்கென்றும், சமைகளுக்கென்றும் எண்ணப்பட்டார்கள். அவ்வாறு செய்ய ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தார்.
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 36
1 மீண்டும் ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி: 2 லேவியர்களுக்குள்ளே ககாத் புதல்வரைக் கணக்கெடுத்து, அவரவருடைய குடும்பங்களின் வரிசைப்படியும் வீடுகளின் வரிசைப்படியும் எண்ணக்கடவீர்கள். 3 (அந்தக் கணக்கிலே) உடன்படிக்கைக் கூடாரத்தில் இருக்கவும் வேலை செய்யவும் புகத்தக்கவர்களாய், முப்பது முதல் ஐம்பது வயது வரையிலுமுள்ள எல்லாரையும் எண்ண வேண்டும். 4 காத்தின் புதல்வருக்குரிய அலுவல் என்னவென்றால்: பாளையம் பெயர்தலின்போது உடன்படிக்கைக் கூடாரத்தினுள்ளேயும் பரிசுத்தத்திலும் பரிசுத்தமான இடத்தினுள்ளேயும், 5 ஆரோனும் அவன் புதல்வர்களும் புகுந்து வாயிலின் முன் தொங்கும் திரையை இற்க்கி, அதைக்கொண்டு சாட்சியப் பெட்டகத்தை மூடி, 6 அதன்மேல் ஊதாத் தோல்களால் செய்யப்பட்ட மூடுதிரையையும் போர்த்தி, அதன்மீது முழுவதும் நீலத்துப்பட்டியை விரித்து, பின்பு தண்டுகளைப் பாய்ச்சி, 7 காணிக்கை (அப்பங்களின்) மேசையை நீலத் துப்பட்டியால் பொதிந்து, தூபக்கலசங்களையும் சிமிழ்களையும் பான போசனப் பலிகளைச் சிந்துவதற்குரிய பாத்திரங்களையும் கலசங்களையும் கிண்ணங்களையும் கூடவே வைப்பார்கள். காணிக்கை அப்பங்கள் அதன்மேல் எப்பொழுதும் இருக்கும். 8 அதன் மீது சிவப்பு நிறத் துப்பட்டியை விரித்து, மறுபடியும் அதை ஊதா நிறத் தோல் துப்பட்டியால் மூடி, பின்பு தண்டுகளைப் பாய்ச்சி வேறொரு இளநீலத் துப்பட்டியை எடுத்துக் குத்து விளக்குத் தண்டையும், 9 அதன் அகல்களையும், திரிகளையும், முள், துறடு, சாம்பல் தட்டுக்களையும், அகல்களுக்குரிய எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூடி, 10 இவை அனைத்தையும் ஊதா நிறத்தோல்துப்பட்டிக்குள்ளே வைத்து, பிறகு தண்டுகளைப் பாய்ச்சி, 11 பொற் பீடத்தையும் இளநீலத்துப்பட்டியால் மூடி, அதன்மேல் ஊதாநிறத்தோலைப் போர்த்தி, அதன் தண்டுகளைப் பாய்ச்சி மூலதனத்தில் நடத்தப்படும் 12 வழிபாட்டுக்கு வேண்டிய எல்லாவற்றையும் எடுத்து, இளநீலத் துப்பட்டியிலே வைத்து ஊதாநிறத் தோலால் மூடித் தண்டின் மேல் வைத்துக் கட்டி, 13 பலிபீடத்திலிருந்து சாம்பலை நீக்கி அதன்மேல் சிவப்பு நிறத்துப்பட்டியை விரித்து, 14 அதனோடு கூட வழிபாட்டுக்கு வேண்டிய தீச்சட்டிகள் முள்ளுகள், திரிசூலங்கள், கொளுவி, துடுப்பு முதலிய பாத்திரங்களை வைத்து, ஊதா நிறத் தோலால் மூடித் தண்டுகளையும் பாய்ச்சுவார்கள். 15 பாளையம் பெயர்தலின்போது ஆரோனும் அவன் மக்களும் மூலத்தானத்தையும் அதைச் சார்ந்த யாவற்றையும் மூடி முடித்தவுடனே ககாத் புதல்வர்கள் அவைகளைத் தூக்கிக் கொண்டு போவதற்கு வரக்கடவார்கள். அவர்கள் புனித இடத்திலுள்ள பொருட்களை மூடிய வண்ணமாய் எடுப்பார்களேயல்லாது, அவற்றைத் தொடக்கூடாது. தொட்டால் சாவார்கள். உடன்படிக்கைப் பெட்டகத்தைப் பொறுத்த மட்டில் அதுவே அவர்களுடைய கடமை. 16 தலைமைக் குருவாகிய ஆரோனின் மகன் எலெயஸார் ககாத் புதல்வர்களுக்குத் தலைவன். அவன் அகல்களுக்கு வேண்டிய எண்ணெயையும், நறுமணத் தூப வகைகளையும், நாள்தோறும் இடவேண்டிய பலியையும், அபிசேகத் தைலத்தையும், உறைவிடத்து வழிபாட்டுக்கு வேண்டிய யாவையும், மூலத்தானத்திலுள்ள எல்லாப் பொருட்களையும் கவனிக்கக் கடவான் என்றருளினார். 17 பின்னும் ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி: 18 நீங்கள் லேவியருக்குள்ளே ககாத் வம்சத்தார் அழிந்துபோக விடாதீர்கள். 19 அவர்கள் பரிசுத்தத்திலும் பரிசுத்த மானத்தைத் தொட்டால் சாவார்கள். அவர்கள் சாகாமல் பிழைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டியதாவது: ஆரோனும் அவன் புதல்வரும் உள்ளே போய், அவனவன் செய்ய வேண்டிய வேலைகளையும் சுமக்க வேண்டிய சுமையையும் தனித்தனியாய் நியமித்துப் பங்கிடக் கடவார்கள். 20 மற்றவர்களோ புனித இடத்தில் உள்ளவைகள் மூடப்படுவதற்கு முன்பே எட்டிப்பார்க்கவும் வேண்டாம். பார்த்தால் சாவார்கள் என்றார். 21 மறுபடியும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: 22 ஜேற்சோனின் புதல்வர்களையும் எண்ணக்கடவாய். அவரவரைத் தத்தம் வீடு, குடும்பம், இனம் ஆகிய இவற்றின் ஒழுங்குத் திட்டப்படி எண்ணிக்கை செய்யக்கடவாய். 23 முப்பது முதல் ஐம்பது வயது வரையிலுமுள்ள எல்லாரையும் எண்ணி, உடன்படிக்கைக் கூடாரத்திற் புகுந்து ஊழியம் செய்யக் கூடியவர்கள் இத்தனை பேரென்று கணக்கெடுப்பாய். 24 ஜேற்சோன் வம்சத்தாருடைய அலுவல் ஏதென்றால்; 25 அவர்கள் கூடாரத்திற்குரிய தொங்கு திரையையும், உடன்படிக்கையை மூடும் துப்பட்டியையும், இன்னொரு துப்பட்டியையும், இவற்றின் மூதுள்ள ஊதாநிறத்தோல் போர்வையையும், உடன்படிக்கைக் கூடார வாயிலிலே தொங்கும் மற்றவைகளையும், மண்டபத்திலுள்ள திரைகளையும், 26 நுழைவாயிலிலுள்ள திரையையும் பலிபீடத்தைச் சேர்ந்த எல்லாவற்றையும், (கடவுள்) ஊழியத்திற்கு உதவியாயிருக்கிற கயிறுகளையும், பணிமுட்டுகளையும் சுமந்து செல்வார்களாக. 27 உடன்படிக்கைக் கூடாரத்தில் இவற்றையெல்லாம் ஜேற்சோன் புதல்வர் அவனவன் தான் எந்தச் சுமையை எடுக்க வேண்டும் என்பதை ஆரோன், அவன் புதல்வர்களின் கட்டளையால் அறியக்கடவார்கள். 28 ஜேற்சோன் வம்சத்தார் செய்ய வேண்டிய வேலை இதுவே. அவர்கள் தலைமைக் குருவாகிய ஆரோனின் புதல்வன் ஈட்டமாரின் அதிகாரத்திற்குப் பணிவார்கள். 29 மேறாரியின் புதல்வரையும் அவரவர்களுடைய முன்னோர்களின் வீட்டு வம்சங்களின் படி எண்ணக்கடவாய். 30 முப்பது முதற்கொண்டு ஐம்பது வயது வரையிலும் உடன்படிக்கைக் (கூடாரத்துக்கடுத்த) ஊழியத்திற்காகவும் வழிபாட்டுக்காகவும் செல்வோர் அனைவரையும் எண்ணிப் பார்க்கக்கடவாய். 31 இவர்கள் சுமக்க வேண்டிய சுமை என்னவென்றால்: கூடாரத்தினுடைய பலகைகள், தண்டுகள், தூண்கள், அவற்றின் பாதங்கள், 32 மண்டபத்தைச் சுற்றிலுமுள்ள தூண்கள், அவற்றின் பாதங்கள், முளைகள், அவற்றின் கயிறுகள். இவற்றோடு தத்தம் முறைப்படி எல்லாத் தட்டுமுட்டுக்களையும் சுமந்து கொண்டு போவார்கள். 33 மேறாரி வம்சத்தாரைச் சார்ந்த பணியும், அவர்கள் உடன்படிக்கைக் கூடாரத்தில் செய்யவேண்டிய வேலையும் அதுவே. அவர்கள் தலைமைக் குருவாகிய ஆரோனுடைய புதல்வன் ஈட்டமாரின் அதிகாரத்திற்குப் பணிவார்க்ள் என்றருளினார். 34 அப்படியே மோயீசனும், ஆரோனும் அவன் புதல்வர்களும், சபைத் தலைவர்களும் ககாத்தின் புதல்வர்களை அவரவர்களுடைய முன்னோரின் வீட்டு வம்சங்களின்படி எண்ணி, 35 முப்பது முதல் ஐம்பது வயது வரையிலும் உடன்படிக்கைக் கூடாரத்தில் ஊழியஞ் செய்யச் செல்வோர் அனைவரையும் கணக்கெடுத்தபோது, 36 ஈராயிரத்து எழுநூற்றைம்பது பேர் இருந்தார்கள். 37 உடன்படிக்கைக் கூடாரத்தில் புகக்கூடிய ககாத் வம்சத்தாருடைய எண்ணிக்கை அதுவே. ஆண்டவர் மோயீசன் வழியாகக் கட்டளையிட்டிருந்தபடி மோயீசனும் ஆரோனும் எண்ணிக்கை செய்தார்கள். 38 ஜேற்சோனின் புதல்வர்களும் தத்தம் முன்னோர்களுடைய வீட்டு வம்சங்களின்படி எண்ணிக்கையிடப்பட்டு, 39 முப்பது முதல் ஐம்பது வயது வரையிலும் உடன்படிக்கைக் கூடாரத்தில் ஊழியம் செய்யச் செல்வோர் எல்லாரையும் கூட்டியபோது, 40 ஈராயிரத்து அறுநூற்று முப்பது பேர் இருந்தார்கள். 41 மோயீசனும் ஆரோனும் ஆண்டவருடைய கட்டளைப்படி எண்ணிய ஜேற்சோனின் வம்சத்தாருடைய தொகை இதுவே. 42 மேறாரியின் புதல்வர்களும் தத்தம் முன்னோர்களின் வீட்ட வம்சங்களின்படி எண்ணப்பட்டார்கள். 43 முப்பது முதற்கொண்டு ஐம்பது வயது வரையிலும் உடன்படிக்கைக் கூடாரத்தில் சமயச் சடங்குகளை நிறைவேற்றும்படி செல்வோர் அனைவரையும் கணக்கிட்டுப் பார்த்தபோது, 44 மூவாயிரத்து இருநூறு பேர் இருந்தார்கள். 45 மேறாரியின் புதல்வருடைய தொகை இதுவே. ஆண்டவர் மோயீசன் மூலமாய்க் கட்டளையிட்டபடி மோயீசனும் ஆரோனும் அவர்களை எண்ணினார்கள். 46 லேவியர்களிலே அவரவர் தத்தம் முன்னோர்களின் வீட்டு வம்சங்களின்படி மோயீசனாலும் ஆரோனாலும் இஸ்ராயேலின் பிரபுக்களாலும் எண்ணப்பட்டு, மோயீசனாலே பெயர் பெயராக எழுதப்பட்டார்கள். 47 முப்பது முதல் ஐம்பது வயது வரையிலும், கூடாரத்து ஊழியம் செய்யவும், சுமைகளைச் சுமக்கவும் கூடியவர்களின் எண்ணிக்கை: 48 எண்ணாயிரத்து ஐந்நூற்று எண்பது. 49 ஆண்டவருடைய கட்டளையின்படியே அவர்கள் தத்தம் பணிகளுக்கென்றும், சமைகளுக்கென்றும் எண்ணப்பட்டார்கள். அவ்வாறு செய்ய ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தார்.
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 36
×

Alert

×

Tamil Letters Keypad References