தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எண்ணாகமம்
1. பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2. இஸ்ராயேல் மக்கள்நிமித்தம் மதியானியரிடம் பழி வாங்குவாய். அதன் பின்னரே நீ உன் மக்களோடு சேர்க்கப்படுவாய் என்றார்.
3. மோயீசன் தாமதம் செய்யாமல் மக்களை நோக்கி: ஆண்டவர் பெயராலே மதியானியரிடம் பழிவாங்கத்தக்க போர்வீரர்களைப் பிரித்தெடுத்துப் போருக்கு ஆயத்தம் செய்யுங்கள்.
4. இஸ்ராயேலின் எல்லாப் புதல்வரிடையேயும் ஒவ்வொரு கோத்திரத்திலும் ஆயிரம்பேர் போருக்குப் போகும்பொருட்டுத் தயார் செய்யுங்கள் என்றார்.
5. அவர்கள் (அவ்வாறே செய்து) ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஆயிரம் பேராகப் பன்னீராயிரம் வீரர்களைப் போருக்கு ஆயத்தமாக்கினார்கள்.
6. மோயீசன் அவர்களைத் தலைமைக் குருவான எலெயஸாரின் புதல்வன் பினேயஸ் என்பவனோடு அனுப்புகையில், அவன் கையிலே புனித தட்டுமுட்டுகளையும் எக்காளங்களையும் கொடுத்தனுப்பிவிட்டான்.
7. அவர்கள் போய் மதியானியரோடு போராடி வெற்றிபெற்று, ஆண் மக்களனைவரையும்,
8. அவர்களுடைய அரசர்களாகிய ஏவி, ரேஸேம், சூர், ஊர், ரேபே என்னும் அந்நாட்டுத் தலைவர்கள் ஐவரையும், பேயோரின் புதல்வனான பாலாம் என்பவனையும் வாளால் வெட்டினார்கள்.
9. அன்றியும், இஸ்ராயேலர் அவர்களுடைய பெண்களையும் சிறுவர்களையும் சிறைப்பிடித்து, எல்லா மந்தைகளையும் தட்டுமுட்டுகளையும் மற்றுமுள்ள சொத்துக்கள் யாவையும் கொள்ளையிட்டு,
10. அவர்களுடைய நகரங்களையும் ஊர்களையும் அரண்மனைகளையும் நெருப்பிட்டுப் பாழாக்கினார்கள்.
11. தாங்கள் கொள்ளையிட்ட பொருட்களையும், தாங்கள் பிடித்திருந்த மனிதவுயிர், மிருகவுயிர் அனைத்தையும் சேர்த்துக்கொண்டு,
12. இவைகளை யெல்லாம் மோயீசனுக்கும், தலைமைக் குருவாகிய எலெயஸாருக்கும், இஸ்ராயேல் மக்களாகிய சபையார் அனைவருக்கும் முன்பாகக் கொண்டு வந்தார்கள். ஆனால், தங்களுக்கு உபயோகமாயிருக்கக்கூடிய மற்றப் பொருட்களையெல்லாம் எரிக்கோவுக்கு எதிரேயுள்ள யோர்தானுக்கு அண்மையிலே மோவாபிய வெளிகளில் இருந்த பாளையத்திற்குக் கொண்டு போனார்கள்.
13. மோயீசனும் தலைமைக் குருவாகிய எலெயஸாரும் சபையின் எல்லாத் தலைவர்களும் பாளையத்திற்கு வெளியே அவர்களை எதிர்கொண்டு போனார்கள்.
14. அப்பொழுது மோயீசன் போர்களத்திலிருந்து திரும்பி வந்த ஆயிரவர்க்குத் தலைவரும் நூற்றுவர்க்குத் தலைவருமாகிய படைத்தலைவர் மீது கோபம்கொண்டு,
15. அவர்களை நோக்கி: பெண்களை ஏன் காப்பாற்றினீர்கள்?
16. பொகோர் வழிபாட்டுப் பாவச் செயலிலே பாலாமின் அறிவுரையைக் கேட்டு இஸ்ராயேல் மக்களை வஞ்சித்து, ஆண்டவருக்கு விரோதமாய் நீங்கள் துரோகம் செய்ய, ஏதுவாய் இருந்தவர்கள் அவர்கள் அல்லவா? அந்த அக்கிரமத்தைப்பற்றித்தானே சபையார் ஆண்டவரால் வதைக்கப்பட்டார்கள்?
17. ஆதலால், நீங்கள் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், பெண்களில் ஆண் தொடர்பு கண்டுள்ள எல்லாப் பெண்களையும் கொன்றுவிடுங்கள்.
18. பெண் குழந்தைகளையும் கன்னிப்பெண்களையும் மட்டும் உங்களுக்காகக் காப்பாற்றுங்கள்.
19. பின்பு நீங்கள் பாளையத்திற்கு வெளியே ஏழுநாள் தங்கவேண்டும். உங்களில் எவன் மனிதனைக் கொன்றானோ அல்லது கொல்லப்பட்டவனைத் தொட்டானோ அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் துய்மைப்படுத்தப்படுவான்.
20. அவ்வாறே கொள்ளையிடப்பட்டவைகளில் எல்லா ஆடைகளையும் தட்டுமுட்டுகளையும், வெள்ளாட்டுத் தோலாலேனும் மயிராலேனும் மரத்தாலேனும் செய்யப்பட்ட கருவி முதலிய பொருட்களையும் தூய்மைப்படுத்தக் கடவீர்கள் என்றார்.
21. தலைமைக் குருவாகிய எலெயஸாரும் போர்புரிந்த படைவீரரை நோக்கி: ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்ட சட்டத்தைக் கேளுங்கள்:
22. பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, ஈயம், தகரம் ஆகிய இவைகளையும்,
23. நெருப்பிலே அழியாத (கருவி முதலிய) எவ்விதப் பொருட்களையும் நெருப்பிலே போட்டுத் தூய்மைப்படுத்தவும், நெருப்பிலே அழியும் எல்லாவற்றையுமோ தீட்டுக்கழிக்கும் தீர்த்தத்தினாலே தூய்மைப்படுத்தவும் கடவீர்கள்.
24. நீங்கள் ஏழாம் நாளிலே உங்கள் ஆடைகளைக் கழுவித் தூய்மைப்படுத்துவீர்கள். பின்பு நீங்கள் பளையத்திற்குள் வரலாம் என்றார்.
25. பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
26. பிடித்துக்கொண்டு வரப்பட்ட மனிதர்களையும் மிருகங்களையும் நீயும் தலைமைக் குருவாகிய எலெயஸாரும் மக்கள் தலைவர்களும் கணக்கிட்டு,
27. கொள்ளையிடப்பட்டதை இரண்டு சரி பங்காகப் பங்கிட்டு, போருக்குப் போனவர்களுக்கு ஒருபங்கும், சாதாரண மக்களுக்கு ஒருபங்கும் கொடுப்பாய்.
28. அன்றியும், போருக்குச் சென்ற படைவீரர்களின் பங்கிலே ஆண்டவருடைய பங்கை எடுக்கக்கடவாய். அது மனிதரிலும் மாடுகளிலும் ஆடுகளிலும் கழுதைகளிலும் ஐநூற்றுக்கு ஒன்றாம்.
29. அதைத் தலைமைக் குருவாகிய எலெயஸாருக்குக் கொடுப்பாய். ஏனென்றால், அது ஆண்டவருக்குச் செய்யவேண்டிய காணிக்கை.
30. இஸ்ராயேல் மக்களைச் சேர்ந்த பங்கிலோ மனிதரிலும் மாடுகளிலும் ஆடுகளிலும் கழுதைகளிலும் ஐம்பதுக்கு ஒன்று வீதமாக வாங்கி, அவைகளை ஆண்டவரின் உறைவிடத்தில் காவல் காக்கும் லேவியருக்குக் கொடுப்பாய் என்றருளினார்.
31. மோயீசனும் எலெயஸாரும் ஆண்டவர் கட்டளையிட்டபடி செய்தார்கள்.
32. படைவீரர் கொள்ளையிட்ட பொருட்களில் ஆறுலட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகளும்,
33. எழுபத்தீராயிரம்மாடுகளும்,
34. அறுபத்தோராயிரம் கழுதைகளும்,
35. முப்பத்தீராயிரம் ஆண் தொடர்பு அறியாத பெண்களும் இருந்தார்கள்.
36. போருக்குப் போன வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட பாதிப் பங்கின் தொகை: மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு ஆடுகள்.
37. இவைகளில் ஆண்டவருக்குப் பகுதியாக வந்தவை அறுநூற்றெழுபத்தைந்து.
38. முப்பத்தாறாயிரம் மாடுகளில் ஆண்டவருக்குப் பகுதியாக வந்தவை எழுபத்திரண்டு.
39. முப்பதினாயிரத்து ஐந்நூறு கழுதைகளில் ஆண்டவருக்குப் பகுதியாக வந்தவை அறுபத்தொன்று.
40. பதினாறாயிரம் பெண்களில் ஆண்டவருக்குப் பகுதியாக வந்தவர்கள் முப்பத்திரண்டு பேர்.
41. பின்பு மோயீசன் தமக்குக் கட்டளையிடப்பட்டிருந்தபடி, ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட பகுதியைக் குருவாகிய எலெயஸாரிடம் கொடுத்தார்.
42. இஸ்ராயேல் மக்கள் கொள்ளையிட்ட எல்லாப் பொருட்களையும் மோயீசன் இரண்டு பங்காகப் பங்கிட்டார். எலெயஸாருக்கு அவர் கொடுத்த பகுதி போர் வீரர்களைச் சேர்ந்த சரிபாதியில்தான் எடுக்கப்பட்டது.
43. சாதாரண மக்களுக்குக் கிடைத்த பாதிப் பங்கின் தொகையாவது: மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு ஆடுகளும்,
44. முப்பத்தாறாயிரம் மாடுகளும்,
45. முப்பதினாயிரத்து ஐந்நூறு கழுதைகளும்,
46. பதினாறாயிரம் பெண்களுமாவர்.
47. மோயீசன் அவற்றில் ஐம்பதுக்கு ஒன்று வீதம் எடுத்து, ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி, ஆண்டவருடைய உறைவிடத்தில் காவல் காத்துக் கொண்டிருந்த லேவியர்களுக்குக் கொடுத்தான்.
48. அப்பொழுது ஆயிரவர்க்குத் தலைவரும் நூற்றுவர்க்குத் தலைவருமாகிய படைத்
49. தலைவர்கள் மோயீசனிடம் வந்து: அடியார்கள் எங்கள் அதிகாரத்திற்குட்பட்ட படைவீரரின் தொகையை எண்ணிப் பார்த்தோம்.
50. அவர்களில் ஒருவனும் குறைவில்லை. எனவே, நீர் எங்களுக்காக ஆண்டவரை வேண்டி கொள்ளும் பொருட்டு, எங்களில் அவரவருக்குக் கொள்ளையில் அகப்பட்ட காலணிகளும் கையணிகளும் கணையாழிகளும் காதணிகளும் முத்துமாலைகளும் போன்ற பொன்னணிகளையெல்லாம் ஆண்டவருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தோம் என்றார்கள்.
51. மோயீசனும் குருவாகிய எலெயஸாரும் இந்தப் பலவிதப் பொன்னணிகளையும் அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டார்கள்.
52. இவ்வாறு ஆயிரவர்க்கும் நூற்றுவர்க்கும் தலைவர்களாய் இருந்தவர்களால் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட பொன் பதினாறாயிரத்து எழுநூற்றைம்பது சீக்கல் நிறை இருந்தது.
53. போருக்குப் போன வீரர்களில் அவனவன் கைப்பற்றியது எதுவோ அது அவனவனுக்குச் சொந்தமாய் இருந்தது.
54. மோயீசனும் குருவாகிய எலெயஸாரும் அந்தப் பொன்னைச் சாட்சியக் கூடாரத்திலே ஆண்டவருடைய முன்னிலையில் இஸ்ராயேல் மக்களின் நினைவுச் சின்னமாகக் கொண்டு வந்து வைத்தார்கள்.
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 31 / 36
1 பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: 2 இஸ்ராயேல் மக்கள்நிமித்தம் மதியானியரிடம் பழி வாங்குவாய். அதன் பின்னரே நீ உன் மக்களோடு சேர்க்கப்படுவாய் என்றார். 3 மோயீசன் தாமதம் செய்யாமல் மக்களை நோக்கி: ஆண்டவர் பெயராலே மதியானியரிடம் பழிவாங்கத்தக்க போர்வீரர்களைப் பிரித்தெடுத்துப் போருக்கு ஆயத்தம் செய்யுங்கள். 4 இஸ்ராயேலின் எல்லாப் புதல்வரிடையேயும் ஒவ்வொரு கோத்திரத்திலும் ஆயிரம்பேர் போருக்குப் போகும்பொருட்டுத் தயார் செய்யுங்கள் என்றார். 5 அவர்கள் (அவ்வாறே செய்து) ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஆயிரம் பேராகப் பன்னீராயிரம் வீரர்களைப் போருக்கு ஆயத்தமாக்கினார்கள். 6 மோயீசன் அவர்களைத் தலைமைக் குருவான எலெயஸாரின் புதல்வன் பினேயஸ் என்பவனோடு அனுப்புகையில், அவன் கையிலே புனித தட்டுமுட்டுகளையும் எக்காளங்களையும் கொடுத்தனுப்பிவிட்டான். 7 அவர்கள் போய் மதியானியரோடு போராடி வெற்றிபெற்று, ஆண் மக்களனைவரையும், 8 அவர்களுடைய அரசர்களாகிய ஏவி, ரேஸேம், சூர், ஊர், ரேபே என்னும் அந்நாட்டுத் தலைவர்கள் ஐவரையும், பேயோரின் புதல்வனான பாலாம் என்பவனையும் வாளால் வெட்டினார்கள். 9 அன்றியும், இஸ்ராயேலர் அவர்களுடைய பெண்களையும் சிறுவர்களையும் சிறைப்பிடித்து, எல்லா மந்தைகளையும் தட்டுமுட்டுகளையும் மற்றுமுள்ள சொத்துக்கள் யாவையும் கொள்ளையிட்டு, 10 அவர்களுடைய நகரங்களையும் ஊர்களையும் அரண்மனைகளையும் நெருப்பிட்டுப் பாழாக்கினார்கள். 11 தாங்கள் கொள்ளையிட்ட பொருட்களையும், தாங்கள் பிடித்திருந்த மனிதவுயிர், மிருகவுயிர் அனைத்தையும் சேர்த்துக்கொண்டு, 12 இவைகளை யெல்லாம் மோயீசனுக்கும், தலைமைக் குருவாகிய எலெயஸாருக்கும், இஸ்ராயேல் மக்களாகிய சபையார் அனைவருக்கும் முன்பாகக் கொண்டு வந்தார்கள். ஆனால், தங்களுக்கு உபயோகமாயிருக்கக்கூடிய மற்றப் பொருட்களையெல்லாம் எரிக்கோவுக்கு எதிரேயுள்ள யோர்தானுக்கு அண்மையிலே மோவாபிய வெளிகளில் இருந்த பாளையத்திற்குக் கொண்டு போனார்கள். 13 மோயீசனும் தலைமைக் குருவாகிய எலெயஸாரும் சபையின் எல்லாத் தலைவர்களும் பாளையத்திற்கு வெளியே அவர்களை எதிர்கொண்டு போனார்கள். 14 அப்பொழுது மோயீசன் போர்களத்திலிருந்து திரும்பி வந்த ஆயிரவர்க்குத் தலைவரும் நூற்றுவர்க்குத் தலைவருமாகிய படைத்தலைவர் மீது கோபம்கொண்டு, 15 அவர்களை நோக்கி: பெண்களை ஏன் காப்பாற்றினீர்கள்? 16 பொகோர் வழிபாட்டுப் பாவச் செயலிலே பாலாமின் அறிவுரையைக் கேட்டு இஸ்ராயேல் மக்களை வஞ்சித்து, ஆண்டவருக்கு விரோதமாய் நீங்கள் துரோகம் செய்ய, ஏதுவாய் இருந்தவர்கள் அவர்கள் அல்லவா? அந்த அக்கிரமத்தைப்பற்றித்தானே சபையார் ஆண்டவரால் வதைக்கப்பட்டார்கள்? 17 ஆதலால், நீங்கள் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், பெண்களில் ஆண் தொடர்பு கண்டுள்ள எல்லாப் பெண்களையும் கொன்றுவிடுங்கள். 18 பெண் குழந்தைகளையும் கன்னிப்பெண்களையும் மட்டும் உங்களுக்காகக் காப்பாற்றுங்கள். 19 பின்பு நீங்கள் பாளையத்திற்கு வெளியே ஏழுநாள் தங்கவேண்டும். உங்களில் எவன் மனிதனைக் கொன்றானோ அல்லது கொல்லப்பட்டவனைத் தொட்டானோ அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் துய்மைப்படுத்தப்படுவான். 20 அவ்வாறே கொள்ளையிடப்பட்டவைகளில் எல்லா ஆடைகளையும் தட்டுமுட்டுகளையும், வெள்ளாட்டுத் தோலாலேனும் மயிராலேனும் மரத்தாலேனும் செய்யப்பட்ட கருவி முதலிய பொருட்களையும் தூய்மைப்படுத்தக் கடவீர்கள் என்றார். 21 தலைமைக் குருவாகிய எலெயஸாரும் போர்புரிந்த படைவீரரை நோக்கி: ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்ட சட்டத்தைக் கேளுங்கள்: 22 பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, ஈயம், தகரம் ஆகிய இவைகளையும், 23 நெருப்பிலே அழியாத (கருவி முதலிய) எவ்விதப் பொருட்களையும் நெருப்பிலே போட்டுத் தூய்மைப்படுத்தவும், நெருப்பிலே அழியும் எல்லாவற்றையுமோ தீட்டுக்கழிக்கும் தீர்த்தத்தினாலே தூய்மைப்படுத்தவும் கடவீர்கள். 24 நீங்கள் ஏழாம் நாளிலே உங்கள் ஆடைகளைக் கழுவித் தூய்மைப்படுத்துவீர்கள். பின்பு நீங்கள் பளையத்திற்குள் வரலாம் என்றார். 25 பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: 26 பிடித்துக்கொண்டு வரப்பட்ட மனிதர்களையும் மிருகங்களையும் நீயும் தலைமைக் குருவாகிய எலெயஸாரும் மக்கள் தலைவர்களும் கணக்கிட்டு, 27 கொள்ளையிடப்பட்டதை இரண்டு சரி பங்காகப் பங்கிட்டு, போருக்குப் போனவர்களுக்கு ஒருபங்கும், சாதாரண மக்களுக்கு ஒருபங்கும் கொடுப்பாய். 28 அன்றியும், போருக்குச் சென்ற படைவீரர்களின் பங்கிலே ஆண்டவருடைய பங்கை எடுக்கக்கடவாய். அது மனிதரிலும் மாடுகளிலும் ஆடுகளிலும் கழுதைகளிலும் ஐநூற்றுக்கு ஒன்றாம். 29 அதைத் தலைமைக் குருவாகிய எலெயஸாருக்குக் கொடுப்பாய். ஏனென்றால், அது ஆண்டவருக்குச் செய்யவேண்டிய காணிக்கை. 30 இஸ்ராயேல் மக்களைச் சேர்ந்த பங்கிலோ மனிதரிலும் மாடுகளிலும் ஆடுகளிலும் கழுதைகளிலும் ஐம்பதுக்கு ஒன்று வீதமாக வாங்கி, அவைகளை ஆண்டவரின் உறைவிடத்தில் காவல் காக்கும் லேவியருக்குக் கொடுப்பாய் என்றருளினார். 31 மோயீசனும் எலெயஸாரும் ஆண்டவர் கட்டளையிட்டபடி செய்தார்கள். 32 படைவீரர் கொள்ளையிட்ட பொருட்களில் ஆறுலட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகளும், 33 எழுபத்தீராயிரம்மாடுகளும், 34 அறுபத்தோராயிரம் கழுதைகளும், 35 முப்பத்தீராயிரம் ஆண் தொடர்பு அறியாத பெண்களும் இருந்தார்கள். 36 போருக்குப் போன வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட பாதிப் பங்கின் தொகை: மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு ஆடுகள். 37 இவைகளில் ஆண்டவருக்குப் பகுதியாக வந்தவை அறுநூற்றெழுபத்தைந்து. 38 முப்பத்தாறாயிரம் மாடுகளில் ஆண்டவருக்குப் பகுதியாக வந்தவை எழுபத்திரண்டு. 39 முப்பதினாயிரத்து ஐந்நூறு கழுதைகளில் ஆண்டவருக்குப் பகுதியாக வந்தவை அறுபத்தொன்று. 40 பதினாறாயிரம் பெண்களில் ஆண்டவருக்குப் பகுதியாக வந்தவர்கள் முப்பத்திரண்டு பேர். 41 பின்பு மோயீசன் தமக்குக் கட்டளையிடப்பட்டிருந்தபடி, ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட பகுதியைக் குருவாகிய எலெயஸாரிடம் கொடுத்தார். 42 இஸ்ராயேல் மக்கள் கொள்ளையிட்ட எல்லாப் பொருட்களையும் மோயீசன் இரண்டு பங்காகப் பங்கிட்டார். எலெயஸாருக்கு அவர் கொடுத்த பகுதி போர் வீரர்களைச் சேர்ந்த சரிபாதியில்தான் எடுக்கப்பட்டது. 43 சாதாரண மக்களுக்குக் கிடைத்த பாதிப் பங்கின் தொகையாவது: மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு ஆடுகளும், 44 முப்பத்தாறாயிரம் மாடுகளும், 45 முப்பதினாயிரத்து ஐந்நூறு கழுதைகளும், 46 பதினாறாயிரம் பெண்களுமாவர். 47 மோயீசன் அவற்றில் ஐம்பதுக்கு ஒன்று வீதம் எடுத்து, ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி, ஆண்டவருடைய உறைவிடத்தில் காவல் காத்துக் கொண்டிருந்த லேவியர்களுக்குக் கொடுத்தான். 48 அப்பொழுது ஆயிரவர்க்குத் தலைவரும் நூற்றுவர்க்குத் தலைவருமாகிய படைத் 49 தலைவர்கள் மோயீசனிடம் வந்து: அடியார்கள் எங்கள் அதிகாரத்திற்குட்பட்ட படைவீரரின் தொகையை எண்ணிப் பார்த்தோம். 50 அவர்களில் ஒருவனும் குறைவில்லை. எனவே, நீர் எங்களுக்காக ஆண்டவரை வேண்டி கொள்ளும் பொருட்டு, எங்களில் அவரவருக்குக் கொள்ளையில் அகப்பட்ட காலணிகளும் கையணிகளும் கணையாழிகளும் காதணிகளும் முத்துமாலைகளும் போன்ற பொன்னணிகளையெல்லாம் ஆண்டவருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தோம் என்றார்கள். 51 மோயீசனும் குருவாகிய எலெயஸாரும் இந்தப் பலவிதப் பொன்னணிகளையும் அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டார்கள். 52 இவ்வாறு ஆயிரவர்க்கும் நூற்றுவர்க்கும் தலைவர்களாய் இருந்தவர்களால் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட பொன் பதினாறாயிரத்து எழுநூற்றைம்பது சீக்கல் நிறை இருந்தது. 53 போருக்குப் போன வீரர்களில் அவனவன் கைப்பற்றியது எதுவோ அது அவனவனுக்குச் சொந்தமாய் இருந்தது. 54 மோயீசனும் குருவாகிய எலெயஸாரும் அந்தப் பொன்னைச் சாட்சியக் கூடாரத்திலே ஆண்டவருடைய முன்னிலையில் இஸ்ராயேல் மக்களின் நினைவுச் சின்னமாகக் கொண்டு வந்து வைத்தார்கள்.
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 31 / 36
×

Alert

×

Tamil Letters Keypad References