தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எண்ணாகமம்
1. ஒரு நாள் சல்பாத் என்பவனுடைய புதல்விகளாகிய மாலா, நோவா, ஏகிலா, மேற்கா, தேற்சா என்று அழைக்கப்பட்ட பெண்கள் வந்தார்கள், (அவர்களுடைய தந்தை) ஏப்பேருடைய புதல்வன். ஏப்பேரோ கலாதின் மகன். கலாது மக்கீருக்குப் பிறந்தவன். மக்கீரோ மனாசே புதல்வன். மனாசேயோ சூசையின் புதல்வன்.
2. மேற்சொல்லப்பட்ட பெண்கள் கூடார வாயிலிலே வந்து, மோயீசனுக்கும், குருவான எலெயஸாருக்கும், சபைத் தலைவர்களுக்கும் முன்பாக நின்று:
3. எங்கள் தந்தையார் பாலைவனத்தில் இறந்து போனார். கொறே என்பவனால் ஆண்டவருக்கு விரோதமாய்ச் செய்யப்பட்ட கலகத்தில் அவர் சேர்ந்தவரல்லர். ஆனால் தமது சொந்தப் பாவத்தோடு இறந்தார். அவருக்குப் புதல்வர் இல்லை. அவருக்கு ஆண்மக்கள் இல்லாததினாலே அவருடைய பெயர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப் போகலாமா? எங்கள் குடும்பத்தாருக்குள்ளே எங்களுக்கு மரபுரிமை கொடுக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்தார்கள்.
4. மோயீசன் அவர்களுடைய வழக்கை ஆண்டவரிடம் கொண்டு போனார்.
5. ஆண்டவர் மோயீசனை நோககி:
6. சல்பாதுடைய புதல்விகள் கேட்கிறது நியாயமானதே. அவர்களுக்கு அவர்கள் தந்தையின் குடும்பத்தாருக்குள்ளே உரிமை கொடுக்க வேண்டியதுமன்றி, அவன் இறந்து, விட்டுச்சென்ற சொத்துக்கு அவர்களே உரிமையாளராகும்படி செய்வாயாக.
7. அன்றியும், நீ இஸ்ராயேல் மக்களை நோக்கிச் சொல்ல வேண்டியது என்னவென்றால்:
8. ஒரு மனிதன் மகனில்லாமல் இறந்தால், அவனுக்குரிய உரிமை அவன் புதல்விக்குக் கிடைக்கும்.
9. அவனுக்குப் புதல்வியும் இல்லையாயின், அவனுக்குரிய உரிமை அவனுடைய சகோதரர்களுக்குக் கிடைக்கும்.
10. அவனுக்குச் சகோதரர்களும் இல்லையாயின், அவனுக்குரிய உரிமை அவன் தந்தையினுடைய சகோதரருக்குக் கிடைக்கும்.
11. அவன் தந்தைக்குச் சகோதரர் இல்லையாயின், அவன் சுற்றத்தாரில் அவனுக்கு எவன் மிக நெருங்கிய உறவுமுறையானாய் இருப்பானோ அவனுக்கே கிடைக்கும். இது ஆண்டவர் மோயீசனுக்குக் கொடுத்தபடி இஸ்ராயேல் மக்களுக்குப் புனிதமும் நித்தியமுமான நீதிச் சட்டமாய் இருக்கும் என்றார்.
12. மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ இந்த அபரீம் என்னும் மலையில் ஏறி, நாம் இஸ்ராயேல் மக்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை உற்றுப்பார்.
13. அதைப்பார்த்த பின்பு உன் சகோதரன் ஆரோனைப் போல நீயும் உன் முன்னோரோடு சேர்க்கப்படுவாய்.
14. ஏனென்றால், சீன் பாலைவனத்திலே சபையார் வாக்குவாதம் செய்தபோது, தண்ணீருக்கடுத்த காரியத்திலே நீங்கள் இருவரும் அவர்கள் முன்பாக நம் புனிதத்தைப் பேணாமல் இருந்தீர்கள். இது சீன் பாலைவனத்திலே காதேஸ் ஊருக்கு அருகிலுள்ள வாக்குவாதத் தண்ணீர் என்றார்.
15. அதற்கு மோயீசன்:
16. ஆண்டவருடைய சபை மேய்ப்பனில்லாத மந்தைபோல் இராதபடிக்குச் சபைக்கு முன்பாகப் போக இருக்கவும், அவர்களை:
17. புறப்படுங்கள். திரும்பி வாருங்கள் என்று கட்டளையிடவும், உடலுள்ள யாவருடைய ஆவிகளுக்கும் கடவுளாகிய ஆண்டவர் ஓர் ஆடவனைத் தெரிந்தெடுத்து, அவர்களுக்குத் தலைவனாக நியமிக்கக்கடவீர் என்று மறுமொழி சொன்னார்.
18. ஆண்டவர் அவனை நோக்கி: நூனின் புதல்வனாகிய யோசுவாவிடம் பரிசுத்த ஆவி வீற்றிருக்கின்றார். நீ அவனை அழைத்து, அவன்மேல் உன் கையை வைப்பாய்.
19. அந்நேரத்தில் அவன் குருவாகிய எலெயஸாருக்கும் சபை அனைத்திற்கும் முன்பாக நின்று கொண்டிருப்பான்.
20. இஸ்ராயேல் மக்களாகிய சபையார் எல்லாரும் அவன் சொற்படி கேட்டு நடக்கும் பொருட்டு நீ எல்லாருடைய கண்களுக்கும் முன்பாக அவனுக்கு (வேண்டிய) கட்டளைகளைக் கொடுத்து, உன் மகிமையின் ஒரு பாகத்தையும் அவனுக்குத் தருவாய்.
21. அவன் எதையேனும் செய்யவேண்டி இருக்கும்போது, குருவாகிய எலேயஸார் அக்காரியத்தைக் குறித்து ஆண்டவரிடம் ஆலோசனை கேட்டுக் கொள்ளக்கடவான். அவனுடைய கட்டளையின்படியே யோசுவாவும், அவனோடு இஸ்ராயேல் மக்களும், சபையார் அனைவரும் போகவும் வரவும்கடவார்கள் என்றார்.
22. ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடியே மோயீசன் செய்து, யோசுவாவை அழைத்து, அவனைத் தலைமைக் குருவாகிய எலெயஸாருக்கும் சபை அனைத்திற்கும் முன்பாக நிறுத்தி,
23. அவன் தலையின்மேல் கைகளை வைத்து, ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும்அவனுக்கு உரைத்தார்.
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 27 / 36
1 ஒரு நாள் சல்பாத் என்பவனுடைய புதல்விகளாகிய மாலா, நோவா, ஏகிலா, மேற்கா, தேற்சா என்று அழைக்கப்பட்ட பெண்கள் வந்தார்கள், (அவர்களுடைய தந்தை) ஏப்பேருடைய புதல்வன். ஏப்பேரோ கலாதின் மகன். கலாது மக்கீருக்குப் பிறந்தவன். மக்கீரோ மனாசே புதல்வன். மனாசேயோ சூசையின் புதல்வன். 2 மேற்சொல்லப்பட்ட பெண்கள் கூடார வாயிலிலே வந்து, மோயீசனுக்கும், குருவான எலெயஸாருக்கும், சபைத் தலைவர்களுக்கும் முன்பாக நின்று: 3 எங்கள் தந்தையார் பாலைவனத்தில் இறந்து போனார். கொறே என்பவனால் ஆண்டவருக்கு விரோதமாய்ச் செய்யப்பட்ட கலகத்தில் அவர் சேர்ந்தவரல்லர். ஆனால் தமது சொந்தப் பாவத்தோடு இறந்தார். அவருக்குப் புதல்வர் இல்லை. அவருக்கு ஆண்மக்கள் இல்லாததினாலே அவருடைய பெயர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப் போகலாமா? எங்கள் குடும்பத்தாருக்குள்ளே எங்களுக்கு மரபுரிமை கொடுக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்தார்கள். 4 மோயீசன் அவர்களுடைய வழக்கை ஆண்டவரிடம் கொண்டு போனார். 5 ஆண்டவர் மோயீசனை நோககி: 6 சல்பாதுடைய புதல்விகள் கேட்கிறது நியாயமானதே. அவர்களுக்கு அவர்கள் தந்தையின் குடும்பத்தாருக்குள்ளே உரிமை கொடுக்க வேண்டியதுமன்றி, அவன் இறந்து, விட்டுச்சென்ற சொத்துக்கு அவர்களே உரிமையாளராகும்படி செய்வாயாக. 7 அன்றியும், நீ இஸ்ராயேல் மக்களை நோக்கிச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: 8 ஒரு மனிதன் மகனில்லாமல் இறந்தால், அவனுக்குரிய உரிமை அவன் புதல்விக்குக் கிடைக்கும். 9 அவனுக்குப் புதல்வியும் இல்லையாயின், அவனுக்குரிய உரிமை அவனுடைய சகோதரர்களுக்குக் கிடைக்கும். 10 அவனுக்குச் சகோதரர்களும் இல்லையாயின், அவனுக்குரிய உரிமை அவன் தந்தையினுடைய சகோதரருக்குக் கிடைக்கும். 11 அவன் தந்தைக்குச் சகோதரர் இல்லையாயின், அவன் சுற்றத்தாரில் அவனுக்கு எவன் மிக நெருங்கிய உறவுமுறையானாய் இருப்பானோ அவனுக்கே கிடைக்கும். இது ஆண்டவர் மோயீசனுக்குக் கொடுத்தபடி இஸ்ராயேல் மக்களுக்குப் புனிதமும் நித்தியமுமான நீதிச் சட்டமாய் இருக்கும் என்றார். 12 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ இந்த அபரீம் என்னும் மலையில் ஏறி, நாம் இஸ்ராயேல் மக்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை உற்றுப்பார். 13 அதைப்பார்த்த பின்பு உன் சகோதரன் ஆரோனைப் போல நீயும் உன் முன்னோரோடு சேர்க்கப்படுவாய். 14 ஏனென்றால், சீன் பாலைவனத்திலே சபையார் வாக்குவாதம் செய்தபோது, தண்ணீருக்கடுத்த காரியத்திலே நீங்கள் இருவரும் அவர்கள் முன்பாக நம் புனிதத்தைப் பேணாமல் இருந்தீர்கள். இது சீன் பாலைவனத்திலே காதேஸ் ஊருக்கு அருகிலுள்ள வாக்குவாதத் தண்ணீர் என்றார். 15 அதற்கு மோயீசன்: 16 ஆண்டவருடைய சபை மேய்ப்பனில்லாத மந்தைபோல் இராதபடிக்குச் சபைக்கு முன்பாகப் போக இருக்கவும், அவர்களை: 17 புறப்படுங்கள். திரும்பி வாருங்கள் என்று கட்டளையிடவும், உடலுள்ள யாவருடைய ஆவிகளுக்கும் கடவுளாகிய ஆண்டவர் ஓர் ஆடவனைத் தெரிந்தெடுத்து, அவர்களுக்குத் தலைவனாக நியமிக்கக்கடவீர் என்று மறுமொழி சொன்னார். 18 ஆண்டவர் அவனை நோக்கி: நூனின் புதல்வனாகிய யோசுவாவிடம் பரிசுத்த ஆவி வீற்றிருக்கின்றார். நீ அவனை அழைத்து, அவன்மேல் உன் கையை வைப்பாய். 19 அந்நேரத்தில் அவன் குருவாகிய எலெயஸாருக்கும் சபை அனைத்திற்கும் முன்பாக நின்று கொண்டிருப்பான். 20 இஸ்ராயேல் மக்களாகிய சபையார் எல்லாரும் அவன் சொற்படி கேட்டு நடக்கும் பொருட்டு நீ எல்லாருடைய கண்களுக்கும் முன்பாக அவனுக்கு (வேண்டிய) கட்டளைகளைக் கொடுத்து, உன் மகிமையின் ஒரு பாகத்தையும் அவனுக்குத் தருவாய். 21 அவன் எதையேனும் செய்யவேண்டி இருக்கும்போது, குருவாகிய எலேயஸார் அக்காரியத்தைக் குறித்து ஆண்டவரிடம் ஆலோசனை கேட்டுக் கொள்ளக்கடவான். அவனுடைய கட்டளையின்படியே யோசுவாவும், அவனோடு இஸ்ராயேல் மக்களும், சபையார் அனைவரும் போகவும் வரவும்கடவார்கள் என்றார். 22 ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடியே மோயீசன் செய்து, யோசுவாவை அழைத்து, அவனைத் தலைமைக் குருவாகிய எலெயஸாருக்கும் சபை அனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, 23 அவன் தலையின்மேல் கைகளை வைத்து, ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும்அவனுக்கு உரைத்தார்.
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 27 / 36
×

Alert

×

Tamil Letters Keypad References