தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எண்ணாகமம்
1. தெற்குப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த கானானைய அரசனாகிய ஆரோத் என்பவன் இஸ்ராயேலிய ஒற்றர்கள் வழியில் வந்திருப்பதைக் கேள்விப்பட்டபோது, அவன் அவர்களோடு போராடிச் சூறையாடி வெற்றி பெற்றான்.
2. இஸ்ராயேலரோ ஆண்டவரை நோக்கி: ஆண்டவரே இந்த மக்களை எங்கள் கையில் ஒப்புவித்தால், அவர்களுடைய நகரங்களைப் பாழாக்கி விடுவோம் என்று நேர்ந்துகொள்ள,ள
3. ஆண்டவர் இஸ்ராயேலரின் மன்றாட்டைக் கேட்டருளி, கானானையரை அவர்களுடைய கையிலே ஒப்புவித்தார். அப்பொழுது இஸ்ராயேலர் அவர்களையும் அவர்களுடைய நகரங்களையும் அழித்து, அவ்விடத்திற்கு ஓர்மா, அதாவது: சபிக்கப்பட்ட ஊர் என்று பெயரிட்டார்கள்.
4. பின்னர் இஸ்ராயேலர் ஓர் என்ற மலையிலிருந்து புறப்பட்டு, ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகத்தக்கதாகச் செங்கடல் வழியாகப் பயணம் செய்தார்கள். வழியின் வருத்தத்தினாலே மக்கள் மனம் சலிக்கத் தொடங்கி,
5. அவர்கள் கடவுளுக்கும் மோயீசனுக்கும் விரோதமாய்ப் பேசி: நீ எங்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்ததென்ன? நாங்கள் பாலைவனத்தில் சாகும்படிதானோ? இவ்விடத்தில் அப்பமுமில்லை, தண்ணீருமில்லை. இந்த அற்ப உணவு எங்கள் மனத்துக்கு வெறுப்பைத் தருகிறது என்றார்கள்.
6. அப்பொழுது ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை அவர்களிடையே அனுப்பினார்.
7. பலர் கடியுண்டு சாவதைக்கண்டு, மக்கள் மோயீசனிடம் போய்: நாங்கள் கடவுளுக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதனால் பாவிகளானோம். பாம்புகள் எங்களை விட்டு நீங்கும்படி மன்றாட வேண்டும் என்றார்கள். மோயீசன் அவர்களுக்காக வேண்டிக்கொள்ள,
8. ஆண்டவர் அவரை நோக்கி: வெண்கலத்தால் ஒரு பாம்பின் உருவம் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கி வை. கடியுண்டவன் அதை உற்று நோக்கினால் உயிர் பிழைப்பான் என்று திருவுளம்பற்றினார்.
9. அவ்வாறே மோயீசன் வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் கட்டித் தூக்க, கடியுண்டவர்கள் அதைப் பார்த்து நலமடைந்தார்கள்.
10. பின்பு இஸ்ராயேல் மக்கள் புறப்பட்டுப் போய் ஒபோத்தில் பாளையம் இறங்கினார்கள்.
11. அங்கிருந்து பயணம் செய்து, கீழ்த்திசைக்கு நேராய் மோவாபுக்கு எதிரிலுள்ள பாலைவனத்தில் இருக்கும் ஜெயபாரிம் என்னும் இடத்திலே பாளையம் இறங்கினார்கள்.
12. அங்கிருந்து போய் ஜாரத் என்னும் ஓடையை அடைந்தார்கள்.
13. ஜாரத்தை விட்டு, அர்னோன் என்னும் ஆற்றுக்கு இப்புறம் பாளையம் இறங்கினார்கள். அது பாலைவனத்திலே அமோறையர் எல்லையை நெருங்கியதாய், மோவாப் நாட்டுக்கு எல்லையாகவும் இருக்கிறது. அது மோவாபியருக்கும் அமோறையருக்கும் மத்தியில் இருக்கிற மோவாபின் எல்லை.
14. ஆதலால், 'ஆண்டவருடைய போர்கள்' என்னும் நூலில் எழுதியிருக்கிறதாவது: ஆண்டவர் செங்கடலில் செய்தபடியே அர்னோன் ஆற்றிலும் செய்வார்.
15. ஆர் என்னும் இடத்திலே இளைப்பாறத் தக்கனவாகவும், மோவாபியருடைய எல்லைகளில் விழுத்தக்கனவாகவும் வெள்ளங்களில் கற்பாறைகள் சாய்ந்து போயினவாம்.
16. இஸ்ராயேலர் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போகையில், ஒரு கிணற்றைக் கண்டார்கள். அதைக் குறித்து ஆண்டவர் மோயீசனை நோக்கி: மக்களைக் கூடிவரச் செய். நாம் அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்போம் என்று சொல்லியிருந்தார்.
17. அப்பொழுது இஸ்ராயேலர் எல்லாரும் கூடி ஒரே குரலாய்ப் பாடல் இசைத்து:
18. கிணற்று நீரே, பொங்கிவா. ஓ கிணறே, சட்டம் வகுப்பவரான (ஆண்டவர்) ஏவலால் தலைவர்களை உன்னைத் தோண்டினர். மேன் மக்கள் தண்டாயுதங்களைக் கொண்டு உன்னைத் தோண்டினர் என்று பாடினார்கள். இஸ்ராயேலர் பாலைவனத்தை விட்டு மத்தனா என்ற இடத்திற்கும்,
19. மத்தனாவிலிருந்து நகலியேலுக்கும், நகலியேலிலிருந்து பாமோட்டுக்கும் (வந்தார்கள்).
20. பாமோட்டுக்கு அப்பக்கம் மோவாப் நாட்டினுள்ளே ஒரு பள்ளத்தாக்கும், அதன் அருகே பாலைவனத்திற்கு எதிரே பஸ்கா என்ற ஒரு மலையும் உள்ளன.
21. அங்கிருந்து இஸ்ராயேலர் அமோறையரின் அரசனாகிய செனோனிடம் தூதரை அனுப்பி:
22. உமது நாட்டின் வழியாயக் கடந்துபோக எங்களுக்கு உத்தரவு கொடுக்க வேண்டும். நாங்கள் வயல் வெளிகளிலும்கொடிமுந்திரித் தோட்டங்களிலும் போகாமல், கிணற்றுத் தண்ணீரைக் குடியாமல் உமது எல்லையைக் கடந்து போகுமட்டும் நெடுஞ்சாலை வழி செல்வோம் என்று சொல்லச் சொன்னார்கள்.
23. செகோன் தன் எல்லை வழியாகக் கடந்து போக இஸ்ராயேலருக்கு உத்தரவு கொடாமல், படையெடுத்துப் பாலைவனத்தில் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டு யாசாவுக்கு வந்து போர் தொடுத்தான்.
24. ஆனால், இஸ்ராயேலர் அவனைக் கருக்கு வாளால் வெட்டி, அர்னோன் தொடங்கி அம்மோன் புதல்வரின் நாட்டுக்கடுத்த செபோக் நாடு வரையிலும் அவன் நாட்டைப் பிடித்துக்கொண்டார்கள். அம்மோனியரின் எல்லைகள் அரண்களைக் கொண்டிருந்தமையால் (அவர்கள் செபோக் என்னும் ஊருக்கு அப்பால் போகவில்லை).
25. இவ்வாறு இஸ்ராயேலர் செகோனின் நகர்களையெல்லாம் பிடித்துக்கொண்டு, அமோறையருடைய நகர்களாகிய எசெபோனிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குடியேறினர். எசேபோன் செகோனின் நகர்.
26. இவன் மோவாபின் அரசனோடு போர்புரிந்து, அர்னோன் வரையிலுமிருந்த அவன் நாட்டையெல்லாம் பிடித்து ஆண்டுகொண்டிருந்தான்.
27. எனவேதான், எசெபோனுக்கு வாருங்கள். செகோனின் நகர் கட்டி நிறுவப்படுவதாக.
28. எசெபோனிலிருந்து நெருப்பும், செகோனிலிருந்து சுவாலையும் புறப்பட்டு மோவாபியருடைய அர்னோன் என்னும் நகரத்தையும் அர்னோனின் மலைகளில் வாழ்ந்தோரையும் எரித்தது.
29. மோவாபே, உனக்குக் கேடாம்! காமோஸ் மக்களே, நீவிர் மடிந்தீர். காமோஸ் தன் புதல்வரைப் புறமுதுகு காட்டி ஓடச்சொல்லி, தன் புதல்வியரைப் அமாறையரின் அரசனான செகோனுக்கு ஒப்புக்கொடுத்தான்.
30. எசெபோன் தொடங்கித் திபோன் வரையிலும் அவர்களுடைய கொடுங்கோன்மை அழிந்தொழிந்தது. அவர்கள் ஓட்டம் பிடித்துக்களைத்ததனாலே, நொப்பே நகரத்திலும் மெதபா நகரத்திலும் போய்ச் சேர்ந்தார்கள் என்று பழமொழியாகச் சொல்லப்படும்.
31. நிற்க, இஸ்ராயேல் அமோறையரின் நாட்டில் குடியிருந்தார்கள்.
32. மோயீசன் யாசேரைப் பார்த்துவர ஒற்றரை அனுப்பினார். பிறகு அவர்கள் அதன் ஊர்களையும் பிடித்து, அங்கு வாழ்ந்தோரையும் முறியடித்தார்கள்.
33. அதற்குப் பிறகு அவர்கள் பாசானுக்குப் போகும் வழியாய்த் திரும்புகையில், பாசான் அரசனான ஓக் என்பவன் அவர்களை எதிர்த்துப் போர் செய்ய எத்ராய்க்குப் புறப்பட்டு வந்தான்.
34. அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி: நாம் அவனையும், அவன் குடிகள் எல்லாரையும், அவன் நாட்டையும் உன் கையில் ஒப்புவித்தோம். நீ அவனுக்கு அஞ்சாதே; உசெபோனில் குடியிருந்த அமோறையரின் அரசனான செகோனுக்கு நீ செய்ததுபோல இவனுக்கும் செய்வாய் என்றருளினார்.
35. அவ்வாறே அவர்கள் அவனையும், அதன் புதல்வரையும், அவனுடைய மக்களனைவரையும், ஒருவரும் உயிருடன் இராதபடிக்கு வெட்டிப் போட்டு, அவனுடைய நாட்டைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 36 Chapters, Current Chapter 21 of Total Chapters 36
எண்ணாகமம் 21:23
1. தெற்குப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த கானானைய அரசனாகிய ஆரோத் என்பவன் இஸ்ராயேலிய ஒற்றர்கள் வழியில் வந்திருப்பதைக் கேள்விப்பட்டபோது, அவன் அவர்களோடு போராடிச் சூறையாடி வெற்றி பெற்றான்.
2. இஸ்ராயேலரோ ஆண்டவரை நோக்கி: ஆண்டவரே இந்த மக்களை எங்கள் கையில் ஒப்புவித்தால், அவர்களுடைய நகரங்களைப் பாழாக்கி விடுவோம் என்று நேர்ந்துகொள்ள,ள
3. ஆண்டவர் இஸ்ராயேலரின் மன்றாட்டைக் கேட்டருளி, கானானையரை அவர்களுடைய கையிலே ஒப்புவித்தார். அப்பொழுது இஸ்ராயேலர் அவர்களையும் அவர்களுடைய நகரங்களையும் அழித்து, அவ்விடத்திற்கு ஓர்மா, அதாவது: சபிக்கப்பட்ட ஊர் என்று பெயரிட்டார்கள்.
4. பின்னர் இஸ்ராயேலர் ஓர் என்ற மலையிலிருந்து புறப்பட்டு, ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகத்தக்கதாகச் செங்கடல் வழியாகப் பயணம் செய்தார்கள். வழியின் வருத்தத்தினாலே மக்கள் மனம் சலிக்கத் தொடங்கி,
5. அவர்கள் கடவுளுக்கும் மோயீசனுக்கும் விரோதமாய்ப் பேசி: நீ எங்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்ததென்ன? நாங்கள் பாலைவனத்தில் சாகும்படிதானோ? இவ்விடத்தில் அப்பமுமில்லை, தண்ணீருமில்லை. இந்த அற்ப உணவு எங்கள் மனத்துக்கு வெறுப்பைத் தருகிறது என்றார்கள்.
6. அப்பொழுது ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை அவர்களிடையே அனுப்பினார்.
7. பலர் கடியுண்டு சாவதைக்கண்டு, மக்கள் மோயீசனிடம் போய்: நாங்கள் கடவுளுக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதனால் பாவிகளானோம். பாம்புகள் எங்களை விட்டு நீங்கும்படி மன்றாட வேண்டும் என்றார்கள். மோயீசன் அவர்களுக்காக வேண்டிக்கொள்ள,
8. ஆண்டவர் அவரை நோக்கி: வெண்கலத்தால் ஒரு பாம்பின் உருவம் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கி வை. கடியுண்டவன் அதை உற்று நோக்கினால் உயிர் பிழைப்பான் என்று திருவுளம்பற்றினார்.
9. அவ்வாறே மோயீசன் வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் கட்டித் தூக்க, கடியுண்டவர்கள் அதைப் பார்த்து நலமடைந்தார்கள்.
10. பின்பு இஸ்ராயேல் மக்கள் புறப்பட்டுப் போய் ஒபோத்தில் பாளையம் இறங்கினார்கள்.
11. அங்கிருந்து பயணம் செய்து, கீழ்த்திசைக்கு நேராய் மோவாபுக்கு எதிரிலுள்ள பாலைவனத்தில் இருக்கும் ஜெயபாரிம் என்னும் இடத்திலே பாளையம் இறங்கினார்கள்.
12. அங்கிருந்து போய் ஜாரத் என்னும் ஓடையை அடைந்தார்கள்.
13. ஜாரத்தை விட்டு, அர்னோன் என்னும் ஆற்றுக்கு இப்புறம் பாளையம் இறங்கினார்கள். அது பாலைவனத்திலே அமோறையர் எல்லையை நெருங்கியதாய், மோவாப் நாட்டுக்கு எல்லையாகவும் இருக்கிறது. அது மோவாபியருக்கும் அமோறையருக்கும் மத்தியில் இருக்கிற மோவாபின் எல்லை.
14. ஆதலால், 'ஆண்டவருடைய போர்கள்' என்னும் நூலில் எழுதியிருக்கிறதாவது: ஆண்டவர் செங்கடலில் செய்தபடியே அர்னோன் ஆற்றிலும் செய்வார்.
15. ஆர் என்னும் இடத்திலே இளைப்பாறத் தக்கனவாகவும், மோவாபியருடைய எல்லைகளில் விழுத்தக்கனவாகவும் வெள்ளங்களில் கற்பாறைகள் சாய்ந்து போயினவாம்.
16. இஸ்ராயேலர் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போகையில், ஒரு கிணற்றைக் கண்டார்கள். அதைக் குறித்து ஆண்டவர் மோயீசனை நோக்கி: மக்களைக் கூடிவரச் செய். நாம் அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்போம் என்று சொல்லியிருந்தார்.
17. அப்பொழுது இஸ்ராயேலர் எல்லாரும் கூடி ஒரே குரலாய்ப் பாடல் இசைத்து:
18. கிணற்று நீரே, பொங்கிவா. கிணறே, சட்டம் வகுப்பவரான (ஆண்டவர்) ஏவலால் தலைவர்களை உன்னைத் தோண்டினர். மேன் மக்கள் தண்டாயுதங்களைக் கொண்டு உன்னைத் தோண்டினர் என்று பாடினார்கள். இஸ்ராயேலர் பாலைவனத்தை விட்டு மத்தனா என்ற இடத்திற்கும்,
19. மத்தனாவிலிருந்து நகலியேலுக்கும், நகலியேலிலிருந்து பாமோட்டுக்கும் (வந்தார்கள்).
20. பாமோட்டுக்கு அப்பக்கம் மோவாப் நாட்டினுள்ளே ஒரு பள்ளத்தாக்கும், அதன் அருகே பாலைவனத்திற்கு எதிரே பஸ்கா என்ற ஒரு மலையும் உள்ளன.
21. அங்கிருந்து இஸ்ராயேலர் அமோறையரின் அரசனாகிய செனோனிடம் தூதரை அனுப்பி:
22. உமது நாட்டின் வழியாயக் கடந்துபோக எங்களுக்கு உத்தரவு கொடுக்க வேண்டும். நாங்கள் வயல் வெளிகளிலும்கொடிமுந்திரித் தோட்டங்களிலும் போகாமல், கிணற்றுத் தண்ணீரைக் குடியாமல் உமது எல்லையைக் கடந்து போகுமட்டும் நெடுஞ்சாலை வழி செல்வோம் என்று சொல்லச் சொன்னார்கள்.
23. செகோன் தன் எல்லை வழியாகக் கடந்து போக இஸ்ராயேலருக்கு உத்தரவு கொடாமல், படையெடுத்துப் பாலைவனத்தில் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டு யாசாவுக்கு வந்து போர் தொடுத்தான்.
24. ஆனால், இஸ்ராயேலர் அவனைக் கருக்கு வாளால் வெட்டி, அர்னோன் தொடங்கி அம்மோன் புதல்வரின் நாட்டுக்கடுத்த செபோக் நாடு வரையிலும் அவன் நாட்டைப் பிடித்துக்கொண்டார்கள். அம்மோனியரின் எல்லைகள் அரண்களைக் கொண்டிருந்தமையால் (அவர்கள் செபோக் என்னும் ஊருக்கு அப்பால் போகவில்லை).
25. இவ்வாறு இஸ்ராயேலர் செகோனின் நகர்களையெல்லாம் பிடித்துக்கொண்டு, அமோறையருடைய நகர்களாகிய எசெபோனிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குடியேறினர். எசேபோன் செகோனின் நகர்.
26. இவன் மோவாபின் அரசனோடு போர்புரிந்து, அர்னோன் வரையிலுமிருந்த அவன் நாட்டையெல்லாம் பிடித்து ஆண்டுகொண்டிருந்தான்.
27. எனவேதான், எசெபோனுக்கு வாருங்கள். செகோனின் நகர் கட்டி நிறுவப்படுவதாக.
28. எசெபோனிலிருந்து நெருப்பும், செகோனிலிருந்து சுவாலையும் புறப்பட்டு மோவாபியருடைய அர்னோன் என்னும் நகரத்தையும் அர்னோனின் மலைகளில் வாழ்ந்தோரையும் எரித்தது.
29. மோவாபே, உனக்குக் கேடாம்! காமோஸ் மக்களே, நீவிர் மடிந்தீர். காமோஸ் தன் புதல்வரைப் புறமுதுகு காட்டி ஓடச்சொல்லி, தன் புதல்வியரைப் அமாறையரின் அரசனான செகோனுக்கு ஒப்புக்கொடுத்தான்.
30. எசெபோன் தொடங்கித் திபோன் வரையிலும் அவர்களுடைய கொடுங்கோன்மை அழிந்தொழிந்தது. அவர்கள் ஓட்டம் பிடித்துக்களைத்ததனாலே, நொப்பே நகரத்திலும் மெதபா நகரத்திலும் போய்ச் சேர்ந்தார்கள் என்று பழமொழியாகச் சொல்லப்படும்.
31. நிற்க, இஸ்ராயேல் அமோறையரின் நாட்டில் குடியிருந்தார்கள்.
32. மோயீசன் யாசேரைப் பார்த்துவர ஒற்றரை அனுப்பினார். பிறகு அவர்கள் அதன் ஊர்களையும் பிடித்து, அங்கு வாழ்ந்தோரையும் முறியடித்தார்கள்.
33. அதற்குப் பிறகு அவர்கள் பாசானுக்குப் போகும் வழியாய்த் திரும்புகையில், பாசான் அரசனான ஓக் என்பவன் அவர்களை எதிர்த்துப் போர் செய்ய எத்ராய்க்குப் புறப்பட்டு வந்தான்.
34. அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி: நாம் அவனையும், அவன் குடிகள் எல்லாரையும், அவன் நாட்டையும் உன் கையில் ஒப்புவித்தோம். நீ அவனுக்கு அஞ்சாதே; உசெபோனில் குடியிருந்த அமோறையரின் அரசனான செகோனுக்கு நீ செய்ததுபோல இவனுக்கும் செய்வாய் என்றருளினார்.
35. அவ்வாறே அவர்கள் அவனையும், அதன் புதல்வரையும், அவனுடைய மக்களனைவரையும், ஒருவரும் உயிருடன் இராதபடிக்கு வெட்டிப் போட்டு, அவனுடைய நாட்டைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.
Total 36 Chapters, Current Chapter 21 of Total Chapters 36
×

Alert

×

tamil Letters Keypad References