தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எண்ணாகமம்
1. மீண்டும் ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கிச் சொன்னதாவது:
2. இஸ்ராயேல் மக்கள் அவரவருடைய அணி வகுப்பு, விருது, கொடி, இனத்தாருடைய வீடு (முதலிய) ஒழுங்குப்படி தங்கள் தங்கள் கூடாரங்களை அடித்து சாட்சியக் கூடாரத்துக்குச் சுற்றிலும் பாளைய மிறங்குவார்கள்.
3. (எப்படியென்றால்) யூதா தன் படையின் அணிவகுப்புக் கீழ்ப்புறத்திலே கூடாரம் அடிக்கக் கடவான். அமினதாபுடைய புதல்வன் நகஸோன் யூதா கோத்திரத்தாருக்குத் தலைவனாய் இருப்பான்.
4. அவனுடைய கோத்திரத்திலுள்ள வீரர்களின் மொத்த எண்ணிக்கை, எழுபத்து நாலாயிரத்து அறுநூறு.
5. இவனருகில் சூவார் புதல்வனான நத்தானியேலைத் தலைவனாகக் கொண்டிருக்கும் இசாக்கார் கோத்திரத்தார் பாளையம் இறங்குவார்கள்.
6. இவனுடைய வீரர்களின் மொத்த எண்ணிக்கை, ஐம்பத்து நாலாயிரத்து நானூறு.
7. சாபுலோன் கோத்திரத்தின் தலைவன் எலோன் புதல்வன் எலியாப்.
8. இக்கோத்திரத்தைச் சேர்ந்த படைவீரர்கள் ஐம்பத்தேழாயிரத்து நானூறு பேர்.
9. யூதாவின் பாளையத்தில் எண்ணப்பட்டவர்கள் ஒரிலட்சத்து எண்பத்தாறாயிரத்து நானூறு பேர். புறப்படும்போது இவர்களே தங்கள் அணிகளின் ஒழுங்குப்படி முதலில் போகக்கடவார்கள்.
10. ரூபன் கோத்திரத்தார் தென்புறத்திலே பாளையமிறங்குவார்கள். செதெயூர் புதல்வனாகிய எலிசூர் அவர்களுக்குத் தலைவனாய் இருப்பான்.
11. அவனுடைய படையில் எண்ணப்பட்ட வீரர்கள் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறு பேர்.
12. இவனருகில் சுரிஸதையின் புதல்வன் சலமியேலைத் தலைவனாய்க் கொண்டிருக்கும் சிமையோனின் கோத்திரத்தார் பாளையம் இறங்குவார்கள்.
13. அவனுடைய படையில் எண்ணப்பட்ட வீரர்கள் ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறு பேர்.
14. காத் என்பவனின் கோத்திரத்தின் தலைவன், துயேலினுடைய புதல்வன் எலியஸாப்.
15. அவனுடைய படையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது பேர்.
16. ரூபனின் பளையத்தில் எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் ஒரிலட்சத்து ஐம்பத்தோராயிரத்து நானூற்றைம்பது பேர். பயணத்தின் போது இவர்களே தங்கள் தங்கள் அணிவகுப்பின் ஒழுங்குப்படி இரண்டாவதாய்ச் செல்லக்கடவார்கள்.
17. பின்பு சாட்சியக் கூடாரம் லேவியராலும் அவர்களைச் சேர்ந்தவர்களாலும் எடுத்துச் செல்லப்படும். அது எப்படிக் கட்டி நிறுவப்பட்டதோ அப்படியே பிரிக்கப்படும். அவர்கள் தத்தம் இடத்தில் வரிசைப்படி நடந்து செல்லக்கடவார்கள்.
18. எபிராயீம் புதல்வருடைய பாளையம் மேற்புறத்தில் இருக்கும். அமியூதின் புதல்வன் எலிஸமா அவர்களுக்குத் தலைவன்.
19. அவனுடைய படையில் எண்ணப்பட்ட வீரர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறு பேர்.
20. அவனருகே பதசூரின் புதல்வனாகிய கமலியேலைத் தலைவனாகக் கொண்ட மனாசேயின் புதல்வராகிய கோத்திரத்தார் (பாளையம் இறங்குவார்கள்).
21. அவனுடைய படையில் எண்ணப்பட்ட வீரர்கள் முப்பத்திரண்டாயிரத்து இருநூறு பேர்.
22. பெஞ்சமின் கோத்திரத்திற்குச் செதேயோனின் புதல்வனாகிய அபிதான் தலைவன்.
23. இவனுடைய படையில் எண்ணப்பட்ட வீரர்கள் முப்பத்தையாயிரத்து நானூறு பேர்.
24. எபிராயீம் பாளையத்திலே தங்கள் அணிவகுப்புப்படி எண்ணப்பட்ட வீரர்கள் ஒரிலட்சத்து எண்ணாயிரத்து நூறுபேர். இவர்கள் மூன்றாவதாய்ச் செல்வார்கள்.
25. தானின் புதல்வர்கள் வடக்கே பாளையம் இறங்குவார்கள். அவர்களுக்கு அமிசதாயின் புதல்வனான ஐயேசர் தலைவன்.
26. இவனுடைய படையில் எண்ணப்பட்டவர்கள் தொகை அறுபத்திரண்டாயிரத்து எழுநூறு.
27. அவனருகே ஆசேருடைய கோத்திரத்தார் பாளையம் இறங்குவார்கள். அவர்களுக்கு ஒக்கிரான் புதல்வன் பெகியேல் தலைவன்.
28. இவனுடைய சேனையில் எண்ணப்பட்ட வீரர்கள் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு பேர்.
29. நெப்தலி கோத்திரத்தாருக்கு ஏனானின் புதல்வனான ஐரா தலைவன்.
30. இவனுடைய படையில் உட்பட்ட வீரர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர்.
31. தானின் பாளையத்திலே எண்ணப்பட்ட வீரர்களின் மொத்த எண்ணிக்கை, ஒரிலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறு. இவர்கள் கடைசியாய்ச் செல்வார்கள் என்றார்.
32. தங்கள் தங்கள் இனத்தாரின் வீடுகளின் படியும், படைப்பிரிவுகளின் அணிவகுப்பின் படியும் எண்ணப்பட்ட இஸ்ராயேல் மக்களின் தொகை ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது.
33. லேவியரோ ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே, இஸ்ராயேல் மக்களுக்குள் எண்ணப்படவில்லை.
34. ஆண்டவர் கட்டளையிட்டபடி இஸ்ராயேல் மக்கள் எல்லாவற்றையும் செய்து வந்தார்கள். அவர்கள் தங்கள் தங்கள் அணிவகுப்பின்படி பாளையம் இறங்கி, தங்கள் வம்ச, குடும்பங்களின் ஒழுங்குப்படி புறப்பட்டனர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 36 Chapters, Current Chapter 2 of Total Chapters 36
எண்ணாகமம் 2:31

×

Alert

×

tamil Letters Keypad References