தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எண்ணாகமம்
1. இதன்பின், லேவியனுக்குப் பிறந்த காத்தின் புதல்வனான இஸாரின் மகன் கொறே என்பவனும், எலியாபின் புதல்வர்களான தாத்தான், அபிரோன் என்பவர்களும், ரூபனின் குலத்திலுள்ள பெலேத்தின் புதல்வனான ஓன் என்பவனும்,
2. இஸ்ராயேல் மக்களுக்குள் சபைக்குத் தலைவர்களும் சபை கூடியிருக்கும்போது பெயர் பெயராய் அழைக்கப்பட வேண்டிய பெரியவர்களுமான வேறு இருநூற்றைம்பது பேர்களைச் சேர்த்துக் கொண்டு மோயீசனுக்கு விரோதமாய்க் கலகம் செய்து,
3. மோயீசனுக்கும் ஆரோனுக்கும் எதிரே வந்து: சபையார் எல்லாரும் பரிசுத்தர்களாய் இருப்பதும் ஆண்டவர்அவர்களோடு வீற்றிருப்பதும் உங்களுக்குப் போதாதோ? நீங்கள் ஆண்டவருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்திக் கொள்கிறீர்கள்? என்றார்கள்.
4. மோயீசன் இதைக் கேட்டவுடன் முகம் குப்புற விழுந்து,
5. கொறே என்பவனையும் அவனுடைய தோழர்களையும் நோக்கி: நாளைக் காலையில் ஆண்டவர் தம்மைச் சேர்ந்தவர்கள் இன்னாரென்று காண்பித்து, புனிதமானவர்களைத் தம்மிடம் சேர்ப்பார். அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அவரை அணுகுவார்கள்.
6. ஆகையால் நீங்கள் ஒன்று செய்யுங்கள். கொறேயாகிய நீயும் உன் தோழர்கள் எல்லாரும் ஒவ்வொருவராய் உங்கள் துபக் கலசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
7. நாளை அவைகளில் நெருப்புப் போட்டு, அதன்மேல் ஆண்டவர் முன்னிலையில் தூபம் இடுங்கள். அப்போது அவர் தெரிந்து கொண்டிருப்பவன் எவனோ அவன் புனிதனாவான். லேவியின் புதல்வர்களே! உங்கள் அகந்தை அதிகமானதே என்று சொன்னார்.
8. மீண்டும் கொறே என்பவனை நோக்கி:
9. லேவியின் புதல்வனே, உற்றுக்கேள். இஸ்ராயேலின் கடவுள் உங்களை முழுச் சபையாரிலிருந்து பிரித்தெடுத்து, தம்முடைய உறைவிடத்தில் பணிவிடை செய்யவும், சபையாருக்கு முன் நிற்கவும், அவர்கள் ஆண்டவருக்குச் செய்ய வேண்டிய பணிகளை நீங்களே செய்யவும் உங்களைத் தமது அண்டையில் சேர்த்துக் கொண்டது சொற்பமாயிற்றோ?
10. அவர் உன்னையும் லேவியின் புதல்வராகிய உன் சகோதரர்களையும் தமது அண்டையில் சேர்த்துக் கொண்டது எதற்கு? நீங்கள் குருப்பட்டத்தையும் அபகரிக்கும்படிதானோ?
11. உனது குழாமெல்லாம் ஆண்டவருக்கு விரோதமாய்க் கலகஞ் செய்யும்படிதானோ? நீங்கள் ஆரோனுக்கு விரோதமாய் முறுமுறுப்பதென்ன? அவர் எம்மாத்திரம்? என்றார்.
12. பின்னும் மோயீசன் எலியாவின் புதல்வராகிய தாத்தான், அபிரோன் என்பவர்களை அழைக்க ஆளனுப்ப, அவர்கள்: நாங்கள் வர மாட்டோம்.
13. நீ எங்களைப் பாலைவனத்தில் கொல்லும்படி பாலும் தேனும் பொழியும் நாட்டினின்று எங்களைக் கொண்டு வந்ததும் போதாமல், இன்னும் எங்கள் மேல் அதிகாரம் செலுத்தப் பார்க்கிறாயோ?
14. ஆ! எங்களை நல்ல நாட்டிற்குக் கொண்டு வந்தாய்! பாலும் தேனும் பொழிகிற நாடாம், நல்ல வயல்களையும் கொடிமுந்திரித் தோட்டங்களையும் எங்களுக்கு உரிமையாகத் தந்தது உண்மையாம். இன்னும் எங்கள் கண்களைப் பிடுங்கப் பார்க்கிறாயோ? நாங்கள் வரமாட்டோம் என்றார்கள்.
15. அப்போது மோயீசனுக்குக் கடுங் கோபம் மூன்டது. அவர் ஆண்டவரை நோக்கி: இவர்களுடைய காணிக்கைகளை ஏற்றுக் கொள்ளாதீர். அடியேன் அவர்களிடம் ஒரு கழுதைக் குட்டியையும் ஒரு போதும் வாங்கினதில்லை என்றும்: அவர்களில் ஒருவனையும் நான் துன்புறுத்தினதில்லை என்றும் நீர் அறிவீரே என்று சொன்னார்.
16. பிறகு மோயீசன் கொறேயை நோக்கி: நீயும் உன் தோழர்களும் நாளைக்கு ஆண்டவர் முன்னிலையிலே ஒரு பக்கமாகவும், ஆரோன் மற்றொரு பக்கமாகவும் நின்று கொள்ள வாருங்கள்.
17. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் துபக் கலசங்களைக் கையில் பிடித்துக் கொண்டு, அவற்றில் தூபத்தைப் போட்டு, தத்தம் தூபக் கலசங்கள் இருநூற்றைம்பதையும் ஆண்டவருக்கு ஒப்புக் கொடுப்பீர்கள். ஆரோனும் தன் துபக் கலசத்தைப் பிடித்துக் கொள்வான் என்றார்.
18. அவர்கள் அப்படியே செய்து, மோயீசனும் ஆரோனும் நின்று கொண்டிருக்கையில்,
19. சாட்சியக் கூடார வாயிலுக்கு முன்பாக மக்கட்திரளையெல்லாம் அவர்களுக்கு விரோதமாகக் கூட்டினார்கள். அப்பொழுது ஆண்டவருடைய மாட்சி சபைக்கெல்லாம் காணப்பட்டது.
20. ஆண்டவர் மோயீசனோடும் ஆரோனோடும் பேசின பிறகு மறுபடியும் அவர்களை நோக்கி:
21. நாம் இவர்களை இப்பொழுதே அழிக்கும் பொருட்டு நீங்கள் (இருவரும்) இந்தச் சபையை விட்டுப்பிரியுங்கள் என்று கட்டளையிட,
22. அவர்கள் முகம் குப்புற விழுந்து: உடலுள்ள எல்லா ஆவிகள் மீதும் முழு வல்லமையும் கொண்டுள்ள கடவுளே, ஒருவன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லாரும் உம்முடைய கோபத்துக்கு ஆளாவார்களோ? என்று வேண்ட,
23. ஆண்டவர் மோயீசனை நோக்கி:
24. மக்களெல்லாரும் கொறே, தாத்தான், அபிரோன் என்பவர்களுடைய கூடாரத்தை விட்டு அகன்று போகச் சொல் என்றார்.
25. அப்போது மோயீசன் எழுந்து, தாத்தான், அபிரோன் என்பவர்களிடம் போனார். இஸ்ராயேலின் முதியேர் அவரைப் பின்தொடர்ந்தனர்.
26. மோயீசன் மக்களை நோக்கி: மிகவும் கொடியவர்களான இந்த மனிதர்களுடைய பாவப் பழியில் நீங்கள் அகப்பட்டுக் கொள்ளாதபடி அவர்களை கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உரியவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள் என்றார்.
27. அப்படியே மக்கள் அவர்களுடைய கூடாரங்களின் சுற்றுப்புறத்தைத விட்டு நீங்கின பின்னர், தாத்தானும் அபிரோனும் வெளியே வந்து, தங்கள் கூடாரங்களின் நுழைவாயிலில் தங்கள் மனைவிகளோடும் மக்களோடும் தங்களைச் சேர்ந்தவர்களோடும் நின்று கொண்டிருந்தார்கள்.
28. அப்பொழுது மோயீசன்: நான் செய்து வருகிற செயல்களெல்லாம் செய்தவற்கு ஆண்டவர் என்னை அனுப்பினாரேயன்றி, நான் என் மனத்தின்படியே செய்யவில்லை என்று நீங்கள் அறிவீர்கள்.
29. மனிதர்கள் சரதாரணமாய்ச் சாகிற விதத்தில் இவர்களும் செத்தால், அல்லது மற்றவர்களுக்கு நேரிடுகிற நோய் முதலியவை இவர்களுக்கு நேரிட்டால் நான் ஆண்டவரால் அனுப்பப்படவில்லை.
30. ஆனால் ஆண்டவர் நூதனம் செய்து நிலம் தன்வாயைத் திறந்து, இவர்கள் பாதாளத்தில் இறங்கும்படி இவர்களையும் இவர்களுக்குரியயாவையும் விழுங்கி விடுகிறதாயிருந்தால், அவ்வடையாளத்தினாலே இவர்கள் ஆண்டவரை நிந்தித்தார்களென்று உறுதி கொள்வீர்கள் என்றார்.
31. அவர் பேசி முடித்தவுடனே அவர்கள் நின்றுகொண்டிருந்த நிலம் பிளந்தது.
32. நிலம்தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்களுடைய கூடாரங்களையும் அவர்களுக்குரிய யாவைற்றையும் விழுங்கிவிட்டது.
33. அவர்கள் உயிரோடு பாதாளத்தில் விழுந்தார்கள். நிலம் அவர்களை மூடிக்கொண்டது. இவ்வாறு அவர்கள் சபையின் நடுவிலிருந்து அழிந்து போனார்கள்.
34. அவர்களைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்த இஸ்ராயேலர் யாவரும், அழிந்து போனவர்களுடைய கூக்குரலைக் கேட்டு: நிலம் ஒருவேளை எங்களையும் விழுங்கிவிடுமோ? என்று ஓடிப்போனார்கள்.
35. அன்றியும், ஆண்டவருடைய முன்னிலையிலிருந்து புறப்பட்ட ஒரு நெருப்பு, தூபம் காட்டின இருநூற்றைம்பது பேர்களையும் விழுங்கிவிட்டது.
36. இதன்பின் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
37. நெருப்புக்குள் அகப்பட்டிருக்கும் தூபக் கலசங்களை எடுத்து, அவற்றிலுள்ள நெருப்பை அங்கங்கே கொட்டிவிடும்படி குருவாகிய ஆரோனின் புதல்வன் எலெயஸாருக்குக் கட்டளை கொடு. ஏனென்றால், அந்தத் தூபக் கலசங்கள்,
38. பாவிகளின் மரணத்தால் புனிதமாயின. பிறகு, அவைகளில் ஆண்டவருக்குத் தூபம் சமர்ப்பிக்கப்பட்டதனாலும், அவை புனிதமானவை என்பதனாலும் அவன் அவற்றை தட்டையான தகடுகளாக்கிப் பலிப்பீடத்தில் பதிக்கக்கடவான். அவை இஸ்ராயேல் மக்களுக்கு அடையாளமும் நினைவுச் சின்னமுமாய்க் காணப்படும் என்றார்.
39. அவ்விதமே குருவாகிய எலெயஸார் நெருப்புக்கு இரையானவர்கள் கொண்டு வந்திருந்த வெண்கலத் தூபக் கலசங்களை எடுத்துத் தகடாக்கிப் பீடத்தில் பதிய வைத்தான்.
40. அதனாலே, அந்நியனும் ஆரோனின் வம்சத்தானல்லாதவனும் ஆண்டவருக்குத் தூபம் காட்டலாகாதென்றும், காட்டத் துணிந்தால் ஆண்டவர் மோயீசனோடு பேசின நாளில் கொறே என்பவனுக்கும் அவன் தோழர்களுக்கும் நேர்ந்தபடியே அவனுக்கும் நேர்ந்தாலும் நேருமென்றும்மேலும் இஸ்ராயேல் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
41. மறுநாள் இஸ்ராயேல் மக்களாகிய சபையார் எல்லாரும் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் முறுமுறுத்துப் பேசி: நீங்கள் ஆண்டவருடைய மக்களை அழித்துவிட்டீர்கள் என்றார்கள்.
42. கலகம் பரவி எழும்ப, ஆரவாரமும் மும்முரமாவதைக் கண்டு,
43. மோயீசனும் ஆரோனும் உடன்படிக்கைக் கூடாரத்திற்குள் ஓடிஒதுங்கினர். அவர்கள் அதற்குள் புகுந்தவுடனே மேகம் அதை மூடிக்கொள்ள, ஆண்டவருடைய மாட்சி காணப்பட்டது.
44. ஆண்டவர் மோயீசனை நோக்கி
45. நீங்கள் இந்தச் சபையாரை விட்டு விலகிப் போங்கள். ஒரு நிமிடத்தில் நாம் இவர்களை அழித்தொழிப்போம் என்றார். அவர்கள் தரையில் விழுந்துகிடக்கையில், மோயீசன் ஆரோனை நோக்கி:
46. நீ தூபக் கலசத்தை எடுத்து, பலிப்பீடத்தில் இருக்கிற நெருப்பைப் போட்டு அதன் மேல் தூபம் இட்டு, விரைவாய்ச் சபையினிடம் போய் அவர்களுக்காக வேண்டிக்கொள். ஏனென்றால், ஆண்டவருடைய முன்னிலையிலிருந்து கோபத் தீ இதோ புறப்பட்டுவிட்டது; வதைக்கத் தொடங்கிவிட்டது என்றார்.
47. ஆரோன் அவ்வாறு செய்து, சபையின் நடுவில் ஓடி, மக்கள் தீப்பிரளயத்தில் அழிந்திருக்கக் கண்டு தூபம் காட்டினார்.
48. இறந்தோருக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவேநின்று கொண்டு மக்களுக்காக மன்றாடத் தொடங்கனார். இவ்வாறு வேண்டிக்கொள்ளவே வாதை நின்று போயிற்று.
49. கொறேவின் கலகத்தில் இறந்தவர்கள் தவிர, இதில் மாண்டவர்கள் மட்டும் பதினாலாயிரத்து எழுநூறு பேர்.
50. வாதை நிறுத்தப்பட்ட பிறகு ஆரோன் உடன்படிக்கைக் கூடார வாயிலில் இருந்த மோயீசனிடம் திரும்பி வந்தார்.
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 16 / 36
1 இதன்பின், லேவியனுக்குப் பிறந்த காத்தின் புதல்வனான இஸாரின் மகன் கொறே என்பவனும், எலியாபின் புதல்வர்களான தாத்தான், அபிரோன் என்பவர்களும், ரூபனின் குலத்திலுள்ள பெலேத்தின் புதல்வனான ஓன் என்பவனும், 2 இஸ்ராயேல் மக்களுக்குள் சபைக்குத் தலைவர்களும் சபை கூடியிருக்கும்போது பெயர் பெயராய் அழைக்கப்பட வேண்டிய பெரியவர்களுமான வேறு இருநூற்றைம்பது பேர்களைச் சேர்த்துக் கொண்டு மோயீசனுக்கு விரோதமாய்க் கலகம் செய்து, 3 மோயீசனுக்கும் ஆரோனுக்கும் எதிரே வந்து: சபையார் எல்லாரும் பரிசுத்தர்களாய் இருப்பதும் ஆண்டவர்அவர்களோடு வீற்றிருப்பதும் உங்களுக்குப் போதாதோ? நீங்கள் ஆண்டவருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்திக் கொள்கிறீர்கள்? என்றார்கள். 4 மோயீசன் இதைக் கேட்டவுடன் முகம் குப்புற விழுந்து, 5 கொறே என்பவனையும் அவனுடைய தோழர்களையும் நோக்கி: நாளைக் காலையில் ஆண்டவர் தம்மைச் சேர்ந்தவர்கள் இன்னாரென்று காண்பித்து, புனிதமானவர்களைத் தம்மிடம் சேர்ப்பார். அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அவரை அணுகுவார்கள். 6 ஆகையால் நீங்கள் ஒன்று செய்யுங்கள். கொறேயாகிய நீயும் உன் தோழர்கள் எல்லாரும் ஒவ்வொருவராய் உங்கள் துபக் கலசங்களை எடுத்துக் கொள்ளுங்கள். 7 நாளை அவைகளில் நெருப்புப் போட்டு, அதன்மேல் ஆண்டவர் முன்னிலையில் தூபம் இடுங்கள். அப்போது அவர் தெரிந்து கொண்டிருப்பவன் எவனோ அவன் புனிதனாவான். லேவியின் புதல்வர்களே! உங்கள் அகந்தை அதிகமானதே என்று சொன்னார். 8 மீண்டும் கொறே என்பவனை நோக்கி: 9 லேவியின் புதல்வனே, உற்றுக்கேள். இஸ்ராயேலின் கடவுள் உங்களை முழுச் சபையாரிலிருந்து பிரித்தெடுத்து, தம்முடைய உறைவிடத்தில் பணிவிடை செய்யவும், சபையாருக்கு முன் நிற்கவும், அவர்கள் ஆண்டவருக்குச் செய்ய வேண்டிய பணிகளை நீங்களே செய்யவும் உங்களைத் தமது அண்டையில் சேர்த்துக் கொண்டது சொற்பமாயிற்றோ? 10 அவர் உன்னையும் லேவியின் புதல்வராகிய உன் சகோதரர்களையும் தமது அண்டையில் சேர்த்துக் கொண்டது எதற்கு? நீங்கள் குருப்பட்டத்தையும் அபகரிக்கும்படிதானோ? 11 உனது குழாமெல்லாம் ஆண்டவருக்கு விரோதமாய்க் கலகஞ் செய்யும்படிதானோ? நீங்கள் ஆரோனுக்கு விரோதமாய் முறுமுறுப்பதென்ன? அவர் எம்மாத்திரம்? என்றார். 12 பின்னும் மோயீசன் எலியாவின் புதல்வராகிய தாத்தான், அபிரோன் என்பவர்களை அழைக்க ஆளனுப்ப, அவர்கள்: நாங்கள் வர மாட்டோம். 13 நீ எங்களைப் பாலைவனத்தில் கொல்லும்படி பாலும் தேனும் பொழியும் நாட்டினின்று எங்களைக் கொண்டு வந்ததும் போதாமல், இன்னும் எங்கள் மேல் அதிகாரம் செலுத்தப் பார்க்கிறாயோ? 14 ஆ! எங்களை நல்ல நாட்டிற்குக் கொண்டு வந்தாய்! பாலும் தேனும் பொழிகிற நாடாம், நல்ல வயல்களையும் கொடிமுந்திரித் தோட்டங்களையும் எங்களுக்கு உரிமையாகத் தந்தது உண்மையாம். இன்னும் எங்கள் கண்களைப் பிடுங்கப் பார்க்கிறாயோ? நாங்கள் வரமாட்டோம் என்றார்கள். 15 அப்போது மோயீசனுக்குக் கடுங் கோபம் மூன்டது. அவர் ஆண்டவரை நோக்கி: இவர்களுடைய காணிக்கைகளை ஏற்றுக் கொள்ளாதீர். அடியேன் அவர்களிடம் ஒரு கழுதைக் குட்டியையும் ஒரு போதும் வாங்கினதில்லை என்றும்: அவர்களில் ஒருவனையும் நான் துன்புறுத்தினதில்லை என்றும் நீர் அறிவீரே என்று சொன்னார். 16 பிறகு மோயீசன் கொறேயை நோக்கி: நீயும் உன் தோழர்களும் நாளைக்கு ஆண்டவர் முன்னிலையிலே ஒரு பக்கமாகவும், ஆரோன் மற்றொரு பக்கமாகவும் நின்று கொள்ள வாருங்கள். 17 உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் துபக் கலசங்களைக் கையில் பிடித்துக் கொண்டு, அவற்றில் தூபத்தைப் போட்டு, தத்தம் தூபக் கலசங்கள் இருநூற்றைம்பதையும் ஆண்டவருக்கு ஒப்புக் கொடுப்பீர்கள். ஆரோனும் தன் துபக் கலசத்தைப் பிடித்துக் கொள்வான் என்றார். 18 அவர்கள் அப்படியே செய்து, மோயீசனும் ஆரோனும் நின்று கொண்டிருக்கையில், 19 சாட்சியக் கூடார வாயிலுக்கு முன்பாக மக்கட்திரளையெல்லாம் அவர்களுக்கு விரோதமாகக் கூட்டினார்கள். அப்பொழுது ஆண்டவருடைய மாட்சி சபைக்கெல்லாம் காணப்பட்டது. 20 ஆண்டவர் மோயீசனோடும் ஆரோனோடும் பேசின பிறகு மறுபடியும் அவர்களை நோக்கி: 21 நாம் இவர்களை இப்பொழுதே அழிக்கும் பொருட்டு நீங்கள் (இருவரும்) இந்தச் சபையை விட்டுப்பிரியுங்கள் என்று கட்டளையிட, 22 அவர்கள் முகம் குப்புற விழுந்து: உடலுள்ள எல்லா ஆவிகள் மீதும் முழு வல்லமையும் கொண்டுள்ள கடவுளே, ஒருவன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லாரும் உம்முடைய கோபத்துக்கு ஆளாவார்களோ? என்று வேண்ட, 23 ஆண்டவர் மோயீசனை நோக்கி: 24 மக்களெல்லாரும் கொறே, தாத்தான், அபிரோன் என்பவர்களுடைய கூடாரத்தை விட்டு அகன்று போகச் சொல் என்றார். 25 அப்போது மோயீசன் எழுந்து, தாத்தான், அபிரோன் என்பவர்களிடம் போனார். இஸ்ராயேலின் முதியேர் அவரைப் பின்தொடர்ந்தனர். 26 மோயீசன் மக்களை நோக்கி: மிகவும் கொடியவர்களான இந்த மனிதர்களுடைய பாவப் பழியில் நீங்கள் அகப்பட்டுக் கொள்ளாதபடி அவர்களை கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உரியவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள் என்றார். 27 அப்படியே மக்கள் அவர்களுடைய கூடாரங்களின் சுற்றுப்புறத்தைத விட்டு நீங்கின பின்னர், தாத்தானும் அபிரோனும் வெளியே வந்து, தங்கள் கூடாரங்களின் நுழைவாயிலில் தங்கள் மனைவிகளோடும் மக்களோடும் தங்களைச் சேர்ந்தவர்களோடும் நின்று கொண்டிருந்தார்கள். 28 அப்பொழுது மோயீசன்: நான் செய்து வருகிற செயல்களெல்லாம் செய்தவற்கு ஆண்டவர் என்னை அனுப்பினாரேயன்றி, நான் என் மனத்தின்படியே செய்யவில்லை என்று நீங்கள் அறிவீர்கள். 29 மனிதர்கள் சரதாரணமாய்ச் சாகிற விதத்தில் இவர்களும் செத்தால், அல்லது மற்றவர்களுக்கு நேரிடுகிற நோய் முதலியவை இவர்களுக்கு நேரிட்டால் நான் ஆண்டவரால் அனுப்பப்படவில்லை. 30 ஆனால் ஆண்டவர் நூதனம் செய்து நிலம் தன்வாயைத் திறந்து, இவர்கள் பாதாளத்தில் இறங்கும்படி இவர்களையும் இவர்களுக்குரியயாவையும் விழுங்கி விடுகிறதாயிருந்தால், அவ்வடையாளத்தினாலே இவர்கள் ஆண்டவரை நிந்தித்தார்களென்று உறுதி கொள்வீர்கள் என்றார். 31 அவர் பேசி முடித்தவுடனே அவர்கள் நின்றுகொண்டிருந்த நிலம் பிளந்தது. 32 நிலம்தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்களுடைய கூடாரங்களையும் அவர்களுக்குரிய யாவைற்றையும் விழுங்கிவிட்டது. 33 அவர்கள் உயிரோடு பாதாளத்தில் விழுந்தார்கள். நிலம் அவர்களை மூடிக்கொண்டது. இவ்வாறு அவர்கள் சபையின் நடுவிலிருந்து அழிந்து போனார்கள். 34 அவர்களைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்த இஸ்ராயேலர் யாவரும், அழிந்து போனவர்களுடைய கூக்குரலைக் கேட்டு: நிலம் ஒருவேளை எங்களையும் விழுங்கிவிடுமோ? என்று ஓடிப்போனார்கள். 35 அன்றியும், ஆண்டவருடைய முன்னிலையிலிருந்து புறப்பட்ட ஒரு நெருப்பு, தூபம் காட்டின இருநூற்றைம்பது பேர்களையும் விழுங்கிவிட்டது. 36 இதன்பின் ஆண்டவர் மோயீசனை நோக்கி: 37 நெருப்புக்குள் அகப்பட்டிருக்கும் தூபக் கலசங்களை எடுத்து, அவற்றிலுள்ள நெருப்பை அங்கங்கே கொட்டிவிடும்படி குருவாகிய ஆரோனின் புதல்வன் எலெயஸாருக்குக் கட்டளை கொடு. ஏனென்றால், அந்தத் தூபக் கலசங்கள், 38 பாவிகளின் மரணத்தால் புனிதமாயின. பிறகு, அவைகளில் ஆண்டவருக்குத் தூபம் சமர்ப்பிக்கப்பட்டதனாலும், அவை புனிதமானவை என்பதனாலும் அவன் அவற்றை தட்டையான தகடுகளாக்கிப் பலிப்பீடத்தில் பதிக்கக்கடவான். அவை இஸ்ராயேல் மக்களுக்கு அடையாளமும் நினைவுச் சின்னமுமாய்க் காணப்படும் என்றார். 39 அவ்விதமே குருவாகிய எலெயஸார் நெருப்புக்கு இரையானவர்கள் கொண்டு வந்திருந்த வெண்கலத் தூபக் கலசங்களை எடுத்துத் தகடாக்கிப் பீடத்தில் பதிய வைத்தான். 40 அதனாலே, அந்நியனும் ஆரோனின் வம்சத்தானல்லாதவனும் ஆண்டவருக்குத் தூபம் காட்டலாகாதென்றும், காட்டத் துணிந்தால் ஆண்டவர் மோயீசனோடு பேசின நாளில் கொறே என்பவனுக்கும் அவன் தோழர்களுக்கும் நேர்ந்தபடியே அவனுக்கும் நேர்ந்தாலும் நேருமென்றும்மேலும் இஸ்ராயேல் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. 41 மறுநாள் இஸ்ராயேல் மக்களாகிய சபையார் எல்லாரும் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் முறுமுறுத்துப் பேசி: நீங்கள் ஆண்டவருடைய மக்களை அழித்துவிட்டீர்கள் என்றார்கள். 42 கலகம் பரவி எழும்ப, ஆரவாரமும் மும்முரமாவதைக் கண்டு, 43 மோயீசனும் ஆரோனும் உடன்படிக்கைக் கூடாரத்திற்குள் ஓடிஒதுங்கினர். அவர்கள் அதற்குள் புகுந்தவுடனே மேகம் அதை மூடிக்கொள்ள, ஆண்டவருடைய மாட்சி காணப்பட்டது. 44 ஆண்டவர் மோயீசனை நோக்கி 45 நீங்கள் இந்தச் சபையாரை விட்டு விலகிப் போங்கள். ஒரு நிமிடத்தில் நாம் இவர்களை அழித்தொழிப்போம் என்றார். அவர்கள் தரையில் விழுந்துகிடக்கையில், மோயீசன் ஆரோனை நோக்கி: 46 நீ தூபக் கலசத்தை எடுத்து, பலிப்பீடத்தில் இருக்கிற நெருப்பைப் போட்டு அதன் மேல் தூபம் இட்டு, விரைவாய்ச் சபையினிடம் போய் அவர்களுக்காக வேண்டிக்கொள். ஏனென்றால், ஆண்டவருடைய முன்னிலையிலிருந்து கோபத் தீ இதோ புறப்பட்டுவிட்டது; வதைக்கத் தொடங்கிவிட்டது என்றார். 47 ஆரோன் அவ்வாறு செய்து, சபையின் நடுவில் ஓடி, மக்கள் தீப்பிரளயத்தில் அழிந்திருக்கக் கண்டு தூபம் காட்டினார். 48 இறந்தோருக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவேநின்று கொண்டு மக்களுக்காக மன்றாடத் தொடங்கனார். இவ்வாறு வேண்டிக்கொள்ளவே வாதை நின்று போயிற்று. 49 கொறேவின் கலகத்தில் இறந்தவர்கள் தவிர, இதில் மாண்டவர்கள் மட்டும் பதினாலாயிரத்து எழுநூறு பேர். 50 வாதை நிறுத்தப்பட்ட பிறகு ஆரோன் உடன்படிக்கைக் கூடார வாயிலில் இருந்த மோயீசனிடம் திரும்பி வந்தார்.
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 16 / 36
×

Alert

×

Tamil Letters Keypad References