தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எண்ணாகமம்
1. (2) அங்கே ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2. (3) நாம் இஸ்ராயேல் மக்களுக்கு கொடுக்கவிருக்கும்படி நீ ஆட்களை அனுப்பு. ஒவ்வொரு கோத்திரத்தினின்றும் ஒரு தலைவரை அனுப்பக்கடவாய் என்றார்.
3. (4) மோயீசன் ஆண்டவர் கட்டளையிட்ட படியே செய்து, பாரான் பாலைவனத்தினின்று பெரிய மனிதர்களை அனுப்பினார். அவர்களுடைய பெயர்களாவன:
4. (5) ரூபன் கோத்திரத்தில் ஸெச்கூரின் புதல்வனான சம்மூவா;
5. (6) சிமியோன் கோத்திரத்தில் ஊரியின் புதல்வனான சப்பத்;
6. (7) யூதா கோத்திரத்தில் ஜெப்போனேயின் புதல்வனான காலேப்;
7. (8) இசாக்கார் கோத்திரத்தில் சூசையின் புதல்வனான இகால்;
8. (9) எபிராயீம் கோத்திரத்தில் நூனின் புதல்வனான ஓசி;
9. (10) பெஞ்சமின் கோத்திரத்தில் ரப்புவின் புதல்வனான பால்தி;
10. (11) சபுலோன் கோத்திரத்தில் சோதியின் புதல்வனான கெதியேல்;
11. (12) சூசையின் கோத்திரத்தில் மனாஸே வம்சத்தானாகிய சுசியின் புதல்வன் கக்தி;
12. (13) தான் கோத்திரத்தில் ஜெமல்லியின் புதல்வனான அமியேல்;
13. (14) ஆஸேர் கோத்திரத்தில் மிக்கேலின் புதல்வனான ஸ்தூர்;
14. (15) நெப்தலி கோத்திரத்தில் வாப்ஸியின் புதல்வனான நாகாபி;
15. (16) காத் கோத்திரத்தில் மாக்கியின் புதல்வனான குயேல்.
16. (17) இவர்களையே மோயீசன் நாட்டைச் சுற்றிப் பார்க்க அனுப்பினார்; அப்போது நூனின் புதல்வனான ஓசி என்பவனை ஜோசுவா என்று அழைத்தார்.
17. (18) மோயீசன் அவர்களைக் கானான் நாட்டைப் பார்த்து வருமாறு அனுப்புகையில் அவர்களை நோக்கி: நீங்கள் தெற்கே போய் மலைகளை அடைந்ததும்,
18. (19) அந்த நாடு எப்படிப்படட் தென்று நன்றாய்ப் பாருங்கள். அதில் குடியிருக்கிறவர்கள் எவ்வித மக்கள், வலிமைமிக்கவரோ, வலிமை குன்றியவரோ குடிகள் சிலரோ பலரோ என்றும்
19. (20) நல்லதோ கெட்டதோ என்றும், நகரங்கள் எவை, கோட்டை மதில் சுற்றியவைகளோ அல்லவோ என்றும்,
20. (21) நிலத்தின் தன்மை வளப்பமோ இளப்பமோ, மரங்கள் பல உண்டோ இல்லையோ என்றும் நுணுக்கமாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள். துணிவு கொள்ளுங்கள். நாட்டின் காய்கனிகளிலும் சிலவற்றைக் கொண்டு வாருங்கள் என்றார். அக்காலமோ கொடி முந்திரி முதற்பழங்கள் பழுக்கும்காலமாய் இருந்தது.
21. (22) அவர்கள் புறப்பட்டுப் பாலைவனத்திலிருந்து ஏமாத்துக்குப் போகும் வழியாகிய ரொகோப் வரையிலும் நாட்டைச் சுற்றிக்கொண்டு, பிற்பாடு
22. (23) தெற்கே திரும்பிச் சென்று எபிரோன் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே எனாத்தின் புதல்வராகிய அக்கிமான், சீஸா, தால்மயி என்பவர்கள் இருந்தார்கள். ஏனென்றால், எபிரோன் எகிப்திலுள்ள தனிம் என்னும் நகருக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டிருந்தது.
23. (24) பின்பு அவர்கள் கொடிமுந்திரிக்குலை என்னும் ஆறு வரையிலும் போய், ஒரு கொடிமுந்திரிச் செடியில் ஒரு கிளையும் அக்கிளையோடு ஒரு குலையையும் அறுத்து, அதை இருவர் ஒரு தண்டில் கட்டி எடுத்து வந்தார்கள். அவ்விடத்திலுள்ள மாதுளம்பழங்களிலும் சீமை அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டு வந்தார்கள்.
24. (25) அவ்விடத்திலிருந்து இஸ்ராயேல் மக்கள் கொடிமுந்திரிக் குலை கொண்டு வந்தமையால், அந்த இடம் நேகலஸ்கோல் - அதாவது கொடிமுந்திரிக்குலையாறு எனப்பட்டது.
25. (26) அவர்கள் நாட்டை முற்றிலும் சுற்றிப்பார்த்து நாற்பது நாளுக்குப் பின்பு திரும்பி,
26. (27) காரேஸில் இருக்கும் பாரான் பாலைவனத்திற்கு வந்து மோயீசன், ஆரோன் மற்றுமுள்ள இஸ்ராயேல் மக்கள் எல்லாரையும் பார்த்து, அவர்களோடும் மக்களோடும் பேசிக்கொண்டே நாட்டின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.
27. (28) அவர்கள் மோயீசனை நோக்கி: நீர் எங்களை அனுப்பிய நாட்டிற்கு நாங்கள் போய் வந்தோம். அது பாலும் தேனும் பொழியும் நாடு. இதற்குச் சான்று இந்தக் கனிகளே.
28. (29) ஆயினும், அந்த நாட்டிலே குடியிருக்கிற மக்கள் மிக வலியவர். அரண்கள் உள்ள பெரிய நகர்கள் பல இருக்கின்றன. அவ்விடத்தில் எனாக்கின் குலத்தாரையும் கண்டோம்.
29. (30) அமலேக்கியர் தென்புறத்திலும், எட்டையர், ஜெபுசேயர், அமோறையர் மலைநாட்டிலும் குடியிருக்கிறார்கள். கானானையரோ கடல் அருகிலும் யோர்தான் நதி பாயும்நாடுகளிலும் குடியிருக்கிறார்கள் என்றார்கள்.
30. (31) அப்பொழுது மோயீசனுக்கு எதிராக மக்கள் முறுமுறுத்துப் பேசுவதைக் காலேப் கேட்டு, அவர்களை அமைதிப்படுத்தத் தக்கதாக: நாம் உடனே போய் அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்வோம். எளிதாக அதைப் பிடித்துக் கொள்ளலாம் என்றான்.
31. (32) ஆனால், அவனோடு போய் வந்த மற்ற மனிதரோ ஏது! நாம் போய் அம்மக்களோடு போராட முடியாது. நம்மைக் காட்டிலும் அவர்கள் வலியவர்கள் என்றார்கள்.
32. (33) மேலும், நாங்கள் சுற்றிப் பார்த்து வந்தோமே அந்த நாடுதன் குடிகளை விழுங்குகிற நாடாம். நாங்கள் அதிலே கண்ட மக்கள் மிகவும் நெட்டையானவர்கள்.
33. (34) அங்கே நாங்கள் கண்ட எனாக்கின் குலத்தாரில் சிலர் எங்குமில்லாத அரக்கராய் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பாக நாங்கள் வெட்டுக் கிளிகளைப்போல் இருந்தோம் என்றார்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 13 / 36
எண்ணாகமம் 13:61
1 (2) அங்கே ஆண்டவர் மோயீசனை நோக்கி: 2 (3) நாம் இஸ்ராயேல் மக்களுக்கு கொடுக்கவிருக்கும்படி நீ ஆட்களை அனுப்பு. ஒவ்வொரு கோத்திரத்தினின்றும் ஒரு தலைவரை அனுப்பக்கடவாய் என்றார். 3 (4) மோயீசன் ஆண்டவர் கட்டளையிட்ட படியே செய்து, பாரான் பாலைவனத்தினின்று பெரிய மனிதர்களை அனுப்பினார். அவர்களுடைய பெயர்களாவன: 4 (5) ரூபன் கோத்திரத்தில் ஸெச்கூரின் புதல்வனான சம்மூவா; 5 (6) சிமியோன் கோத்திரத்தில் ஊரியின் புதல்வனான சப்பத்; 6 (7) யூதா கோத்திரத்தில் ஜெப்போனேயின் புதல்வனான காலேப்; 7 (8) இசாக்கார் கோத்திரத்தில் சூசையின் புதல்வனான இகால்; 8 (9) எபிராயீம் கோத்திரத்தில் நூனின் புதல்வனான ஓசி; 9 (10) பெஞ்சமின் கோத்திரத்தில் ரப்புவின் புதல்வனான பால்தி; 10 (11) சபுலோன் கோத்திரத்தில் சோதியின் புதல்வனான கெதியேல்; 11 (12) சூசையின் கோத்திரத்தில் மனாஸே வம்சத்தானாகிய சுசியின் புதல்வன் கக்தி; 12 (13) தான் கோத்திரத்தில் ஜெமல்லியின் புதல்வனான அமியேல்; 13 (14) ஆஸேர் கோத்திரத்தில் மிக்கேலின் புதல்வனான ஸ்தூர்; 14 (15) நெப்தலி கோத்திரத்தில் வாப்ஸியின் புதல்வனான நாகாபி; 15 (16) காத் கோத்திரத்தில் மாக்கியின் புதல்வனான குயேல். 16 (17) இவர்களையே மோயீசன் நாட்டைச் சுற்றிப் பார்க்க அனுப்பினார்; அப்போது நூனின் புதல்வனான ஓசி என்பவனை ஜோசுவா என்று அழைத்தார். 17 (18) மோயீசன் அவர்களைக் கானான் நாட்டைப் பார்த்து வருமாறு அனுப்புகையில் அவர்களை நோக்கி: நீங்கள் தெற்கே போய் மலைகளை அடைந்ததும், 18 (19) அந்த நாடு எப்படிப்படட் தென்று நன்றாய்ப் பாருங்கள். அதில் குடியிருக்கிறவர்கள் எவ்வித மக்கள், வலிமைமிக்கவரோ, வலிமை குன்றியவரோ குடிகள் சிலரோ பலரோ என்றும் 19 (20) நல்லதோ கெட்டதோ என்றும், நகரங்கள் எவை, கோட்டை மதில் சுற்றியவைகளோ அல்லவோ என்றும், 20 (21) நிலத்தின் தன்மை வளப்பமோ இளப்பமோ, மரங்கள் பல உண்டோ இல்லையோ என்றும் நுணுக்கமாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள். துணிவு கொள்ளுங்கள். நாட்டின் காய்கனிகளிலும் சிலவற்றைக் கொண்டு வாருங்கள் என்றார். அக்காலமோ கொடி முந்திரி முதற்பழங்கள் பழுக்கும்காலமாய் இருந்தது. 21 (22) அவர்கள் புறப்பட்டுப் பாலைவனத்திலிருந்து ஏமாத்துக்குப் போகும் வழியாகிய ரொகோப் வரையிலும் நாட்டைச் சுற்றிக்கொண்டு, பிற்பாடு 22 (23) தெற்கே திரும்பிச் சென்று எபிரோன் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே எனாத்தின் புதல்வராகிய அக்கிமான், சீஸா, தால்மயி என்பவர்கள் இருந்தார்கள். ஏனென்றால், எபிரோன் எகிப்திலுள்ள தனிம் என்னும் நகருக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டிருந்தது. 23 (24) பின்பு அவர்கள் கொடிமுந்திரிக்குலை என்னும் ஆறு வரையிலும் போய், ஒரு கொடிமுந்திரிச் செடியில் ஒரு கிளையும் அக்கிளையோடு ஒரு குலையையும் அறுத்து, அதை இருவர் ஒரு தண்டில் கட்டி எடுத்து வந்தார்கள். அவ்விடத்திலுள்ள மாதுளம்பழங்களிலும் சீமை அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டு வந்தார்கள். 24 (25) அவ்விடத்திலிருந்து இஸ்ராயேல் மக்கள் கொடிமுந்திரிக் குலை கொண்டு வந்தமையால், அந்த இடம் நேகலஸ்கோல் - அதாவது கொடிமுந்திரிக்குலையாறு எனப்பட்டது. 25 (26) அவர்கள் நாட்டை முற்றிலும் சுற்றிப்பார்த்து நாற்பது நாளுக்குப் பின்பு திரும்பி, 26 (27) காரேஸில் இருக்கும் பாரான் பாலைவனத்திற்கு வந்து மோயீசன், ஆரோன் மற்றுமுள்ள இஸ்ராயேல் மக்கள் எல்லாரையும் பார்த்து, அவர்களோடும் மக்களோடும் பேசிக்கொண்டே நாட்டின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள். 27 (28) அவர்கள் மோயீசனை நோக்கி: நீர் எங்களை அனுப்பிய நாட்டிற்கு நாங்கள் போய் வந்தோம். அது பாலும் தேனும் பொழியும் நாடு. இதற்குச் சான்று இந்தக் கனிகளே. 28 (29) ஆயினும், அந்த நாட்டிலே குடியிருக்கிற மக்கள் மிக வலியவர். அரண்கள் உள்ள பெரிய நகர்கள் பல இருக்கின்றன. அவ்விடத்தில் எனாக்கின் குலத்தாரையும் கண்டோம். 29 (30) அமலேக்கியர் தென்புறத்திலும், எட்டையர், ஜெபுசேயர், அமோறையர் மலைநாட்டிலும் குடியிருக்கிறார்கள். கானானையரோ கடல் அருகிலும் யோர்தான் நதி பாயும்நாடுகளிலும் குடியிருக்கிறார்கள் என்றார்கள். 30 (31) அப்பொழுது மோயீசனுக்கு எதிராக மக்கள் முறுமுறுத்துப் பேசுவதைக் காலேப் கேட்டு, அவர்களை அமைதிப்படுத்தத் தக்கதாக: நாம் உடனே போய் அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்வோம். எளிதாக அதைப் பிடித்துக் கொள்ளலாம் என்றான். 31 (32) ஆனால், அவனோடு போய் வந்த மற்ற மனிதரோ ஏது! நாம் போய் அம்மக்களோடு போராட முடியாது. நம்மைக் காட்டிலும் அவர்கள் வலியவர்கள் என்றார்கள். 32 (33) மேலும், நாங்கள் சுற்றிப் பார்த்து வந்தோமே அந்த நாடுதன் குடிகளை விழுங்குகிற நாடாம். நாங்கள் அதிலே கண்ட மக்கள் மிகவும் நெட்டையானவர்கள். 33 (34) அங்கே நாங்கள் கண்ட எனாக்கின் குலத்தாரில் சிலர் எங்குமில்லாத அரக்கராய் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பாக நாங்கள் வெட்டுக் கிளிகளைப்போல் இருந்தோம் என்றார்கள்.
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 13 / 36
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References