தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எண்ணாகமம்
1. எத்தியோப்பியப் பெண்ணை மோயீசன் மணந்தபடியால் மரியாளும் ஆரோனும் அவனுக்கு விரோதமாய்ப் பேசி:
2. ஆண்டவர் மோயீசனைக் கொண்டு மட்டுமா பேசினார்? எங்களைக் கொண்டும் அவர் பேசவில்லையா? என்றார்கள். ஆண்டவர் அதைக் கேட்டார்.
3. மோயீசனோ பூமியிலுள்ள எல்லா மனிதர்களைக் காட்டிலும் மிக்க சாந்தமுள்ளவராய் இருந்தார்.
4. திடீரென (ஆண்டவர்) அவரையும், ஆரோன், மரியாள் என்பவர்களையும் நோக்கி: நீங்கள் மூவருமே உடன்படிக்கைக் கூடாரத்திற்குப் புறப்பட்டு வாருங்கள் என்றார். அவர்கள் புறப்பட்டு வந்த பிறகு
5. ஆண்டவர் மேகத்தூணில் இறங்கி ஆலயப் புகுமுகத்தில் நின்றவராய், ஆரோனையும் மரியாளையும் அழைத்தார். இவர்கள் இருவரும் போனார்கள்.
6. அப்பொழுது அவர்: நம்முடைய வார்த்தைகளை உற்றுக் கேளுங்கள். உங்களுக்குள்ளே ஒருவன் ஆண்டவருடைய இறைவாக்கினனாய் இருந்தால், அவனுக்குத் தரிசனத்தில் நம்மைக் காண்பிப்போம்: அல்லது கனவிலே அவனோடு பேசுவோம்.
7. நம்முடைய ஊழியனாகிய மோயீசனோ அப்படிப்பட்டவனல்லவே. அவன் நம்முடைய வீட்டிலெங்கும் மிக்க விசுவாச முள்ளவனாய் இருக்கிறான்.
8. நாம் அவனோடு நேரிலே பேசுகிறோம். நம்மை அவன் மறைவிலேனும் போலியாயேனும் காணாமல், கண்கூடாகவே நம்மைக் காண்கிறான். ஆதலால், நீங்கள் நம் ஊழியனாகிய மோயீசனை விரோதித்துப் பேச அஞ்சாதிருப்பதேன்? என்று சொல்லி,
9. கோபத்துடன் அவர்களை விட்டு மறைந்தார்.
10. அவர் மறைந்தபோது கூடாரத்தின் மீதிருந்த மேகம் நீங்கிப் போயிற்று. நீங்கவே, மரியாள் உறைந்த பனிபோல் வெண் தொழுநோள் பிடித்த உடலுள்ளவளாய்க் காணப்பட்டாள். ஆரோன் அவளைப் பார்த்து, தொழுநோய் அவளை மூடினதென்று கண்டவுடனே,
11. மோயீசனை நோக்கி: தலைவா, நாங்கள் அறிவில்லாமல் செய்த இந்தப் பாவத்தை எங்கள் மேல் சுமத்த வேண்டாமென்று வேண்டுகிறேன்.
12. இவள் செத்தவளைப் போலவும், தாயின் கருவிலிருந்து செத்து விழுந்த பிள்ளைப் போலவும் ஆகாதிருப்பாளாக. இதோ ஏற்ககெனவே அவள் உடலில் பாதித்தசை தொழுநோயால் தின்னப்பட்டிருக்கிறதே! என்றான்.
13. அப்பொழுது மோயீசன் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டு: என் கடவுளே, உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். அவளைக் குணப்படுத்தியருளும் என்றார்.
14. அதற்கு ஆண்டவர்: அவள் தந்தை அவள் முகத்திலே காறி உமிழ்ந்திருந்தால், அவள் வெட்கப்பட்டு ஏழு நாளேனும் வெளிவராமல் இருக்க வேண்டுமன்றோ? அதுபோல், அவள் ஏழுநாள் பாளையத்திற்குப்புறம்பே விலக்கப்பட்டிருக்கட்டும். பிறகு திரும்ப அவளைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றார்.
15. அப்படியே மரியாள் ஏழு நாளும் பாளையத்திற்குப் புறம்பே விலக்கமாயினாள். அவள் சேர்த்துக் கொள்ளப்படும் வரையிலும் மக்கள் பயணப்படாமல் அங்கேயே இருந்தார்கள்.
16. (13:1) அப்பால் மக்கள் ஆசெரோத்தினின்று புறப்பட்டுப் போய், பாரான் என்னும் பாலைவனத்திலே கூடாரங்களை அடித்தார்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 36
எண்ணாகமம் 12:49
1 எத்தியோப்பியப் பெண்ணை மோயீசன் மணந்தபடியால் மரியாளும் ஆரோனும் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: 2 ஆண்டவர் மோயீசனைக் கொண்டு மட்டுமா பேசினார்? எங்களைக் கொண்டும் அவர் பேசவில்லையா? என்றார்கள். ஆண்டவர் அதைக் கேட்டார். 3 மோயீசனோ பூமியிலுள்ள எல்லா மனிதர்களைக் காட்டிலும் மிக்க சாந்தமுள்ளவராய் இருந்தார். 4 திடீரென (ஆண்டவர்) அவரையும், ஆரோன், மரியாள் என்பவர்களையும் நோக்கி: நீங்கள் மூவருமே உடன்படிக்கைக் கூடாரத்திற்குப் புறப்பட்டு வாருங்கள் என்றார். அவர்கள் புறப்பட்டு வந்த பிறகு 5 ஆண்டவர் மேகத்தூணில் இறங்கி ஆலயப் புகுமுகத்தில் நின்றவராய், ஆரோனையும் மரியாளையும் அழைத்தார். இவர்கள் இருவரும் போனார்கள். 6 அப்பொழுது அவர்: நம்முடைய வார்த்தைகளை உற்றுக் கேளுங்கள். உங்களுக்குள்ளே ஒருவன் ஆண்டவருடைய இறைவாக்கினனாய் இருந்தால், அவனுக்குத் தரிசனத்தில் நம்மைக் காண்பிப்போம்: அல்லது கனவிலே அவனோடு பேசுவோம். 7 நம்முடைய ஊழியனாகிய மோயீசனோ அப்படிப்பட்டவனல்லவே. அவன் நம்முடைய வீட்டிலெங்கும் மிக்க விசுவாச முள்ளவனாய் இருக்கிறான். 8 நாம் அவனோடு நேரிலே பேசுகிறோம். நம்மை அவன் மறைவிலேனும் போலியாயேனும் காணாமல், கண்கூடாகவே நம்மைக் காண்கிறான். ஆதலால், நீங்கள் நம் ஊழியனாகிய மோயீசனை விரோதித்துப் பேச அஞ்சாதிருப்பதேன்? என்று சொல்லி, 9 கோபத்துடன் அவர்களை விட்டு மறைந்தார். 10 அவர் மறைந்தபோது கூடாரத்தின் மீதிருந்த மேகம் நீங்கிப் போயிற்று. நீங்கவே, மரியாள் உறைந்த பனிபோல் வெண் தொழுநோள் பிடித்த உடலுள்ளவளாய்க் காணப்பட்டாள். ஆரோன் அவளைப் பார்த்து, தொழுநோய் அவளை மூடினதென்று கண்டவுடனே, 11 மோயீசனை நோக்கி: தலைவா, நாங்கள் அறிவில்லாமல் செய்த இந்தப் பாவத்தை எங்கள் மேல் சுமத்த வேண்டாமென்று வேண்டுகிறேன். 12 இவள் செத்தவளைப் போலவும், தாயின் கருவிலிருந்து செத்து விழுந்த பிள்ளைப் போலவும் ஆகாதிருப்பாளாக. இதோ ஏற்ககெனவே அவள் உடலில் பாதித்தசை தொழுநோயால் தின்னப்பட்டிருக்கிறதே! என்றான். 13 அப்பொழுது மோயீசன் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டு: என் கடவுளே, உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். அவளைக் குணப்படுத்தியருளும் என்றார். 14 அதற்கு ஆண்டவர்: அவள் தந்தை அவள் முகத்திலே காறி உமிழ்ந்திருந்தால், அவள் வெட்கப்பட்டு ஏழு நாளேனும் வெளிவராமல் இருக்க வேண்டுமன்றோ? அதுபோல், அவள் ஏழுநாள் பாளையத்திற்குப்புறம்பே விலக்கப்பட்டிருக்கட்டும். பிறகு திரும்ப அவளைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றார். 15 அப்படியே மரியாள் ஏழு நாளும் பாளையத்திற்குப் புறம்பே விலக்கமாயினாள். அவள் சேர்த்துக் கொள்ளப்படும் வரையிலும் மக்கள் பயணப்படாமல் அங்கேயே இருந்தார்கள். 16 (13:1) அப்பால் மக்கள் ஆசெரோத்தினின்று புறப்பட்டுப் போய், பாரான் என்னும் பாலைவனத்திலே கூடாரங்களை அடித்தார்கள்.
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 36
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References