தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எண்ணாகமம்
1. அப்பொழுது ஒரு நாள் வழியில் தங்களுக்கு உண்டான களைப்பைப் பற்றி மக்கள் ஆண்டவருக்கு விரோதமாய் முறையிடத் தொடங்கினர். அதைக் கேட்டு ஆண்டவர் கோபம் கொண்டார். அவரால் உண்டாக்கப்பட்ட ஒரு நெருப்பு பாளையத்தின் கடைசி முனையை எரித்து அழித்து விட்டது.
2. அப்போது மக்கள் மோயீசனை நோக்கிக் கூக்குரலிட்டனர். மோயீசன் ஆண்டவரை மன்றாட நெருப்பு அவிந்து போயிற்று.
3. ஆண்டவருடைய நெருப்பு அவர்களிடையே பற்றி எரிந்ததனால், அவ்விடத்திற்கு நெருப்புக்காடு என்று அவர் பெயரிட்டார்.
4. பின்பு, இஸ்ராயேலரோடு கூட வந்திருந்த பல இன மக்கள் இறைச்சி உண்ண வேண்டுமென்று பேராசை கொண்டனர். அவர்கள் தங்களுடைய கட்சியில் பல இஸ்ராயலரையும் சேர்த்துக் கொண்டு, ஒரு மிக்க உட்கார்ந்து, அழுது: ஆ! நமக்கு இறைச்சியை உண்ணக் கொடுப்பவர் யார்?
5. நாம் எகிப்திலே செலவில்லாமல் உண்ட மீன்களையும், வெள்ளரிக் காய்களையும், கொம்மட்டிக் காய்களையும், பெரு முள்ளிக் கீரைகளையும் வெங்காய வெள்ளுள்ளிகளையும், நினைத்துக் கொள்ளுகிறோம்.
6. இப்பொழுதோ நமது உயிர் வாடுகிறது. மன்னாவைத் தவிர நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறோன்றும் இல்லையே என்றார்கள்.
7. மன்னாவோவென்றால் கொத்தமல்லி போலவும் உலூக முத்து நிறமாகவும் இருந்தது.
8. மக்கள் சுற்றித் திரிந்து அதைப் பொறுக்கிக் கொண்டு வந்து, எந்திரக் கல்லில் அரைத்து அல்லது உரலில் குத்தி யிடித்துச் சட்டியில் சமைப்பார்கள். பிறகு அதை அப்பங்களாக்குவார்கள். அதன் சுவை ஒலிவ எண்ணெயில் செய்த பணியாரத்தின் சுவை போல் இருக்கும்.
9. இரவு தோறும் பாளையத்தின்மீது பனி பெய்யும்போது மன்னாவும் பெய்யும்.
10. மக்கள் தங்கள் குடும்பத்தோடு தத்தம் கூடார வாயிலிலே அழுவதை மோயீசன் கேட்டார். ஆண்டவருக்கும் கோபம் மூண்டது; மோயீசனால் அதைப் பொறுக்க முடியவில்லை.
11. அவர் ஆண்டவரை நோக்கி: ஆண்டவரே அடியேனை வதைத்ததேன்? உமக்கு முன்பாக எனக்குக் கருணை கிடையாததென்ன? நீர் இந்த எல்லா மக்கள் பாரத்தையும் என்மேல் சுமத்தியதென்ன?
12. இந்த மக்களையெல்லாம் கருத்தாங்கியவன் நானோ? நானோ அவர்களைப் பெற்றெடுத்தேன்? அப்படியிருக்க நீர் அடியேனை நோக்கி: தாய்ப்பாலை உண்ணும் குழந்தையைச் சுமப்பதுபோல் நீ அவர்களை உண் மடியிலே சுமந்து கொண்டுபோ, நாம் ஆணையிட்டு அவர்களது முன்னோருக்கு வாக்குறுதி செய்துள்ள நாட்டிற்கு அவர்களை அழைத்துக்கொண்டு போ என்று எனக்குச் சொல்வானேன்?
13. இத்தனை மக்களுக்குக் கொடுக்க இறைச்சி எனக்கு எங்கிருந்து கிடைக்கும்? உண்ண எங்களுக்கு இறைச்சி கொடு என்று என்னைப் பார்த்து அழுது முறையிடுகிறார்களே!
14. இவர்கள் எல்லாரையும் நான் ஒருவனாகத் தாங்கக் கூடுமா? இது என்னாலே இயலாது.
15. ஆண்டவருடைய திருவுளம் என் விருப்பத்திற்கு இணங்குவது இயலாதாயின், இப்படிப்பட்ட சகிக்கக் கூடாத தொல்லையை நான் காணாதிருக்க, இறைவா இப்பொழுதே என்னைக் கொன்று விட்டு, உம்முடைய கண்களில் எனக்குக் கருணை கிடைக்கும்படி செய்தலே நலம் என்று சொன்னார்.
16. ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ இஸ்ராயேலிலுள்ள முதியோரில் மக்களை ஆளத்தக்கவர்களும் வயதில் முதியோர் எனவும், உனக்குத் தெரிந்த எழுபது பேரைத் தெரிந்து கொண்டு, உடன்படிக்கைக் கூடார வாயிலில், உன்னோடு கூட வந்து நிற்கும்படி செய்.
17. நாம் இறங்கிவந்து உன்னோடு பேசி, நீ ஒருவனாய் மக்களின் பாரத்தைச் சுமக்காமல், அவர்கள் அதைச் சுமக்க உனக்கு உதவிசெய்ய உன்மேல் இருக்கிற ஆவியில் வேண்டியமட்டும் நாம் எடுத்து அவர்கள்மேல் வைப்போம்.
18. இதுவும் தவிர, நீ மக்களை நோக்கி: உங்களைப் புனிதப் படுத்திக் கொள்ளுங்கள். நாளைக்கு இறைச்சி உண்பீர்கள். எங்களுக்கு இறைச்சியை உண்ணக் கொடுப்பவர் யார்? என்றும், எகிப்திலே எங்களுக்கு வசதியாய் இருந்தது என்றும் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். ஆதலால், நீங்கள் உண்ணும் பொருட்டு ஆண்டவர் உங்களுக்கு இறைச்சியைக் கொடுப்பார்.
19. நீங்கள் ஒரு நாள், இரண்டு நாள், ஐந்து, பத்து இருபது நாட்கள் மட்டுமல்ல, ஒரு மாதம் வரையிலும் உண்பீர்கள்.
20. உங்கள் மூக்கு வழியே வெளிப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப் போகு மட்டும் உண்பீர்கள். ஏனென்றால், நீங்கள் ஆண்டவரை நிந்தித்து: நாங்கள் எகிப்தை விட்டு ஏன் புறப்பட்டோம்? என்று அவருடைய முன்னிலையில் அழுதீர்களே என்று சொல் என்றார்.
21. அதற்கு மோயீசன் ஆண்டவரை நோக்கி: அவர்கள் ஆறிலட்சம் பேர் காலாட்படையினராயிருக்க, ஒரு மாதம் முழுவதும் அவர்களுக்கு இறைச்சியை உண்ணத் தருவோம் என்று நீர் சொல்கிறீரே;
22. அவர்களுக்குப் போதுமாயிருக்கும்படி ஆடுமாடுகளை யெல்லாம் அடிக்க வேண்டுமோ? அல்லது, கடல் மீன்களையெல்லாம் சேர்த்துப் பிடித்தாலும் அவர்களுக்குத் திருப்தி கொடுக்கப் போதுமாயிருக்குமோ? என்று கேட்டார்.
23. ஆண்டவர்: ஆண்டவருடைய கை பலவீனமாய்ப் போயிற்றோ? இதோ நம்முடைய வாக்குப்படி நடக்குமோ நடவாதோவென்று நீ இப்பொழுதே காண்பாய் என்றார்.
24. ஆகையால் மோயீசன் போய், ஆண்டவருடைய வார்த்தைகளை மக்களுக்குச் சொல்லி, இஸ்ராயேல் முதியோரில் எழுபது பேரைக் கூட்டி வந்து, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினார்.
25. ஆண்டவரோ மேகத்தினின்று இறங்கி வந்து மோயீசனோடு உரையாடிய பின்பு மோயீசனிடத்திலிருந்த ஆவியை அவ்வெழுபது பேருக்கும் பிரித்துக் கொடுத்தார். ஆவி தங்கள் மேல் வந்த தங்கினவுடனே அவர்கள் இறைவாக்குரைக்கத் தொடங்கினார்கள். அந்நாள் முதல் அவர்கள் இடைவிடாது இறைவாக்குரைத்தார்கள்.
26. அப்பொழுது எல்தாத், மேதாத் என்று அழைக்கப்படும் இரண்டு ஆடவர்மேல் ஆவி இறங்கியிருந்தும், அவர்கள் (எழுபது முதியோருடைய) பெயர்ப்பட்டியலில் எழுதப்பட்டிருந்தும், சாட்சியக் கூடாரத்திற்கு எழுந்து வராமல் பாளையத்திலே இருந்து கொண்டார்கள்.
27. அவர்கள் பாளையத்திலே இறைவாக்குரைக்கும் போது சிறுவன் ஒருவன் மோயீசனிடம் ஓடி வந்து: இதோ எல்தாத், மேதாத் என்பவர்கள் பாளையத்திலே இறைவாக்குரைக்கிறார்கள் என அறிவித்தான்.
28. உடனே, நூனின் புதல்வனும் மோயீசனுடைய ஊழியர்களில் சிறந்தவனுமாகிய ஜோசுவா மோயீசனை நோக்கி: தலைவா! அதைத் தடை செய்யும் என்றான்.
29. அதற்கு மோயீசன்: என் காரியத்தில் நீ எரிச்சலாய் இருப்பானேன்? (மக்கள்) எல்லாருமே இறைவாக்கினர் ஆக ஆண்டவர் அவர்கள் மேல் தம்முடைய ஆவியைத் தந்தால் நலமாயிருக்குமே என்றார்.
30. பின்னும் மோயீசன் இஸ்ராயேல் முதியவரோடு கூடப் பாளையத்திற்குத் திரும்பி வந்தார்.
31. நிற்க, ஆண்டவர் வீசச் செய்த ஒரு காற்று கடலுக்கு அப்பாலுள்ள நாட்டிலிருந்து காடைகளைத் (திரளாக) அடித்துக் கொண்டு வர, பாளையத்தில் மட்டு மல்ல - பாளையத்தைச் சுற்றிலும், ஒரு நாள் பயணம் எவ்வளவோ அவ்வளவு தொலை வரையிலும், காடைக் கூட்டம் பறந்து, தரையின் மேலே இரண்டு முழ உயரத்திலே பறந்து கொண்டிருந்தது.
32. அதைக் கண்டு மக்கள் எழுந்து, அன்று பகல் முழுவதும் இரவு முழுவதும் மறு நாளிலும் காடைகளைப் பிடித்துச் சேர்த்தார்கள். கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்திருந்தான். அவர்கள் அவற்றைப் பாளையத்தைச் சுற்றிலும் காயவிட்டார்கள்.
33. பற்களிடையே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்று கொண்டிருக்கையில் இதோ அவர்கள் மேல் ஆண்டவருடைய கோபம் மூண்டு, மாபெரும் வாதையாக அவர்களை வதைத்தது.
34. அதனை முன்னிட்டு அந்த இடத்திற்கு இச்சைக் கோரி என்று பெயரிடப்பட்டது. ஏனென்றால், எவரெவர் இறைச்சி மீது இச்சை கொண்டிருந்தார்களோ அவர்களை அவ்விடத்தில் அடக்கம் செய்தார்கள்.
35. (34b) பிறகு அவர்கள் அவ்விடம் விட்டு, ஆசெரோத்திலே வந்து தங்கினார்கள்.
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 36
1 அப்பொழுது ஒரு நாள் வழியில் தங்களுக்கு உண்டான களைப்பைப் பற்றி மக்கள் ஆண்டவருக்கு விரோதமாய் முறையிடத் தொடங்கினர். அதைக் கேட்டு ஆண்டவர் கோபம் கொண்டார். அவரால் உண்டாக்கப்பட்ட ஒரு நெருப்பு பாளையத்தின் கடைசி முனையை எரித்து அழித்து விட்டது. 2 அப்போது மக்கள் மோயீசனை நோக்கிக் கூக்குரலிட்டனர். மோயீசன் ஆண்டவரை மன்றாட நெருப்பு அவிந்து போயிற்று. 3 ஆண்டவருடைய நெருப்பு அவர்களிடையே பற்றி எரிந்ததனால், அவ்விடத்திற்கு நெருப்புக்காடு என்று அவர் பெயரிட்டார். 4 பின்பு, இஸ்ராயேலரோடு கூட வந்திருந்த பல இன மக்கள் இறைச்சி உண்ண வேண்டுமென்று பேராசை கொண்டனர். அவர்கள் தங்களுடைய கட்சியில் பல இஸ்ராயலரையும் சேர்த்துக் கொண்டு, ஒரு மிக்க உட்கார்ந்து, அழுது: ஆ! நமக்கு இறைச்சியை உண்ணக் கொடுப்பவர் யார்? 5 நாம் எகிப்திலே செலவில்லாமல் உண்ட மீன்களையும், வெள்ளரிக் காய்களையும், கொம்மட்டிக் காய்களையும், பெரு முள்ளிக் கீரைகளையும் வெங்காய வெள்ளுள்ளிகளையும், நினைத்துக் கொள்ளுகிறோம். 6 இப்பொழுதோ நமது உயிர் வாடுகிறது. மன்னாவைத் தவிர நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறோன்றும் இல்லையே என்றார்கள். 7 மன்னாவோவென்றால் கொத்தமல்லி போலவும் உலூக முத்து நிறமாகவும் இருந்தது. 8 மக்கள் சுற்றித் திரிந்து அதைப் பொறுக்கிக் கொண்டு வந்து, எந்திரக் கல்லில் அரைத்து அல்லது உரலில் குத்தி யிடித்துச் சட்டியில் சமைப்பார்கள். பிறகு அதை அப்பங்களாக்குவார்கள். அதன் சுவை ஒலிவ எண்ணெயில் செய்த பணியாரத்தின் சுவை போல் இருக்கும். 9 இரவு தோறும் பாளையத்தின்மீது பனி பெய்யும்போது மன்னாவும் பெய்யும். 10 மக்கள் தங்கள் குடும்பத்தோடு தத்தம் கூடார வாயிலிலே அழுவதை மோயீசன் கேட்டார். ஆண்டவருக்கும் கோபம் மூண்டது; மோயீசனால் அதைப் பொறுக்க முடியவில்லை. 11 அவர் ஆண்டவரை நோக்கி: ஆண்டவரே அடியேனை வதைத்ததேன்? உமக்கு முன்பாக எனக்குக் கருணை கிடையாததென்ன? நீர் இந்த எல்லா மக்கள் பாரத்தையும் என்மேல் சுமத்தியதென்ன? 12 இந்த மக்களையெல்லாம் கருத்தாங்கியவன் நானோ? நானோ அவர்களைப் பெற்றெடுத்தேன்? அப்படியிருக்க நீர் அடியேனை நோக்கி: தாய்ப்பாலை உண்ணும் குழந்தையைச் சுமப்பதுபோல் நீ அவர்களை உண் மடியிலே சுமந்து கொண்டுபோ, நாம் ஆணையிட்டு அவர்களது முன்னோருக்கு வாக்குறுதி செய்துள்ள நாட்டிற்கு அவர்களை அழைத்துக்கொண்டு போ என்று எனக்குச் சொல்வானேன்? 13 இத்தனை மக்களுக்குக் கொடுக்க இறைச்சி எனக்கு எங்கிருந்து கிடைக்கும்? உண்ண எங்களுக்கு இறைச்சி கொடு என்று என்னைப் பார்த்து அழுது முறையிடுகிறார்களே! 14 இவர்கள் எல்லாரையும் நான் ஒருவனாகத் தாங்கக் கூடுமா? இது என்னாலே இயலாது. 15 ஆண்டவருடைய திருவுளம் என் விருப்பத்திற்கு இணங்குவது இயலாதாயின், இப்படிப்பட்ட சகிக்கக் கூடாத தொல்லையை நான் காணாதிருக்க, இறைவா இப்பொழுதே என்னைக் கொன்று விட்டு, உம்முடைய கண்களில் எனக்குக் கருணை கிடைக்கும்படி செய்தலே நலம் என்று சொன்னார். 16 ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ இஸ்ராயேலிலுள்ள முதியோரில் மக்களை ஆளத்தக்கவர்களும் வயதில் முதியோர் எனவும், உனக்குத் தெரிந்த எழுபது பேரைத் தெரிந்து கொண்டு, உடன்படிக்கைக் கூடார வாயிலில், உன்னோடு கூட வந்து நிற்கும்படி செய். 17 நாம் இறங்கிவந்து உன்னோடு பேசி, நீ ஒருவனாய் மக்களின் பாரத்தைச் சுமக்காமல், அவர்கள் அதைச் சுமக்க உனக்கு உதவிசெய்ய உன்மேல் இருக்கிற ஆவியில் வேண்டியமட்டும் நாம் எடுத்து அவர்கள்மேல் வைப்போம். 18 இதுவும் தவிர, நீ மக்களை நோக்கி: உங்களைப் புனிதப் படுத்திக் கொள்ளுங்கள். நாளைக்கு இறைச்சி உண்பீர்கள். எங்களுக்கு இறைச்சியை உண்ணக் கொடுப்பவர் யார்? என்றும், எகிப்திலே எங்களுக்கு வசதியாய் இருந்தது என்றும் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். ஆதலால், நீங்கள் உண்ணும் பொருட்டு ஆண்டவர் உங்களுக்கு இறைச்சியைக் கொடுப்பார். 19 நீங்கள் ஒரு நாள், இரண்டு நாள், ஐந்து, பத்து இருபது நாட்கள் மட்டுமல்ல, ஒரு மாதம் வரையிலும் உண்பீர்கள். 20 உங்கள் மூக்கு வழியே வெளிப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப் போகு மட்டும் உண்பீர்கள். ஏனென்றால், நீங்கள் ஆண்டவரை நிந்தித்து: நாங்கள் எகிப்தை விட்டு ஏன் புறப்பட்டோம்? என்று அவருடைய முன்னிலையில் அழுதீர்களே என்று சொல் என்றார். 21 அதற்கு மோயீசன் ஆண்டவரை நோக்கி: அவர்கள் ஆறிலட்சம் பேர் காலாட்படையினராயிருக்க, ஒரு மாதம் முழுவதும் அவர்களுக்கு இறைச்சியை உண்ணத் தருவோம் என்று நீர் சொல்கிறீரே; 22 அவர்களுக்குப் போதுமாயிருக்கும்படி ஆடுமாடுகளை யெல்லாம் அடிக்க வேண்டுமோ? அல்லது, கடல் மீன்களையெல்லாம் சேர்த்துப் பிடித்தாலும் அவர்களுக்குத் திருப்தி கொடுக்கப் போதுமாயிருக்குமோ? என்று கேட்டார். 23 ஆண்டவர்: ஆண்டவருடைய கை பலவீனமாய்ப் போயிற்றோ? இதோ நம்முடைய வாக்குப்படி நடக்குமோ நடவாதோவென்று நீ இப்பொழுதே காண்பாய் என்றார். 24 ஆகையால் மோயீசன் போய், ஆண்டவருடைய வார்த்தைகளை மக்களுக்குச் சொல்லி, இஸ்ராயேல் முதியோரில் எழுபது பேரைக் கூட்டி வந்து, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினார். 25 ஆண்டவரோ மேகத்தினின்று இறங்கி வந்து மோயீசனோடு உரையாடிய பின்பு மோயீசனிடத்திலிருந்த ஆவியை அவ்வெழுபது பேருக்கும் பிரித்துக் கொடுத்தார். ஆவி தங்கள் மேல் வந்த தங்கினவுடனே அவர்கள் இறைவாக்குரைக்கத் தொடங்கினார்கள். அந்நாள் முதல் அவர்கள் இடைவிடாது இறைவாக்குரைத்தார்கள். 26 அப்பொழுது எல்தாத், மேதாத் என்று அழைக்கப்படும் இரண்டு ஆடவர்மேல் ஆவி இறங்கியிருந்தும், அவர்கள் (எழுபது முதியோருடைய) பெயர்ப்பட்டியலில் எழுதப்பட்டிருந்தும், சாட்சியக் கூடாரத்திற்கு எழுந்து வராமல் பாளையத்திலே இருந்து கொண்டார்கள். 27 அவர்கள் பாளையத்திலே இறைவாக்குரைக்கும் போது சிறுவன் ஒருவன் மோயீசனிடம் ஓடி வந்து: இதோ எல்தாத், மேதாத் என்பவர்கள் பாளையத்திலே இறைவாக்குரைக்கிறார்கள் என அறிவித்தான். 28 உடனே, நூனின் புதல்வனும் மோயீசனுடைய ஊழியர்களில் சிறந்தவனுமாகிய ஜோசுவா மோயீசனை நோக்கி: தலைவா! அதைத் தடை செய்யும் என்றான். 29 அதற்கு மோயீசன்: என் காரியத்தில் நீ எரிச்சலாய் இருப்பானேன்? (மக்கள்) எல்லாருமே இறைவாக்கினர் ஆக ஆண்டவர் அவர்கள் மேல் தம்முடைய ஆவியைத் தந்தால் நலமாயிருக்குமே என்றார். 30 பின்னும் மோயீசன் இஸ்ராயேல் முதியவரோடு கூடப் பாளையத்திற்குத் திரும்பி வந்தார். 31 நிற்க, ஆண்டவர் வீசச் செய்த ஒரு காற்று கடலுக்கு அப்பாலுள்ள நாட்டிலிருந்து காடைகளைத் (திரளாக) அடித்துக் கொண்டு வர, பாளையத்தில் மட்டு மல்ல - பாளையத்தைச் சுற்றிலும், ஒரு நாள் பயணம் எவ்வளவோ அவ்வளவு தொலை வரையிலும், காடைக் கூட்டம் பறந்து, தரையின் மேலே இரண்டு முழ உயரத்திலே பறந்து கொண்டிருந்தது. 32 அதைக் கண்டு மக்கள் எழுந்து, அன்று பகல் முழுவதும் இரவு முழுவதும் மறு நாளிலும் காடைகளைப் பிடித்துச் சேர்த்தார்கள். கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்திருந்தான். அவர்கள் அவற்றைப் பாளையத்தைச் சுற்றிலும் காயவிட்டார்கள். 33 பற்களிடையே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்று கொண்டிருக்கையில் இதோ அவர்கள் மேல் ஆண்டவருடைய கோபம் மூண்டு, மாபெரும் வாதையாக அவர்களை வதைத்தது. 34 அதனை முன்னிட்டு அந்த இடத்திற்கு இச்சைக் கோரி என்று பெயரிடப்பட்டது. ஏனென்றால், எவரெவர் இறைச்சி மீது இச்சை கொண்டிருந்தார்களோ அவர்களை அவ்விடத்தில் அடக்கம் செய்தார்கள். 35 (34b) பிறகு அவர்கள் அவ்விடம் விட்டு, ஆசெரோத்திலே வந்து தங்கினார்கள்.
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 36
×

Alert

×

Tamil Letters Keypad References