தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எண்ணாகமம்
1. மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2. பாளையம் பெயரும்படி சபையை வரவழைப்பதற்கு உபயோகிக்க இரண்டு வெள்ளி எக்காளங்களைச் செய்து கொள்வாய். அவை சுத்தியால் அடித்துச் செய்யப்பட்டதாய் இருக்க வேண்டும்.
3. நீ எக்காளம் ஊதும்போது சபையார் எல்லாரும் உடன்படிக்கைக் கூடாரவாயிலின் முன் உன்னிடம் வந்து கூட வேண்டும்.
4. நீ ஒரே தடவை ஊதினால் தலைவர்களும் இஸ்ராயேல் கோத்திரங்களின் தலைவர்களும் உன்னிடம் வந்து கூடக்கடவார்கள்.
5. எக்காளம் பெருந்தொனியாய் முழங்க நிறுத்தி நிறுத்தி ஊதினால், கிழக்கில் இருக்கிற பாளையங்கள் முதலில் புறப்படக்கடவன.
6. எக்காளத்தின் இரண்டாவது தொனி, முதல் தொனியைப்போல் இருந்தால், தெற்கே இறங்கியிருக்கிறவர்கள் தங்கள் கூடாரங்களைப் பெயர்ப்பார்கள். இப்படி எக்காளங்கள் முழங்க முழங்க மற்றுமுள்ள பாளையங்களும் ஒன்றன்பின் ஒன்றாகப் புறப்படக்கடவன.
7. மக்களைக் கூட்டுவதற்கு நீங்கள் சாதாரணமாய் ஊத வேண்டுமேயல்லாது முழங்க வேண்டாம்.
8. ஆரோனின் புதல்வராகிய குருக்களே எக்காளம் ஊதக்கடவார்கள். இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய முறைமையாக இருக்கும்.
9. உங்களை விரோதிக்கிற பகைவர்களோடு போராட உங்கள் நாட்டினின்று புறப்படுகையில், நீங்கள் எக்காளத்தைப் பெருந்தொனியாய் ஊதுவீர்கள். அப்போது உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைப் பகைவரிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்று நினைப்பார்.
10. உங்கள் விருந்துகளிலும், திருநாட்களிலும், மாதத்தின் முதல் நாள் என்றும் நீங்கள் சமாதானப் பலி, முழுத் தகனப் பலிகள் முதலியன செலுத்தும்போது கடவுள் உங்களை நினைவுகூரும்படியாய் எக்காளங்களை முழக்கக்கடவீர்கள். நாமே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்று திருவுளம்பற்றினார்.
11. அப்படியிருக்க, இரண்டாம் ஆண்டிலே இரண்டாம் மாதம் இருபதாம் நாளன்று உடன்படிக்கைக் கூடாரத்தினின்று மேகம் எழுந்துவிடவே,
12. இஸ்ராயேல் மக்கள் தத்தம் அணி வரிசையின்படி சீனாய்ப் பாலைவனத்திலிருந்து புறப்பட்டார்கள். மேகம் பாரான் என்னும் பாலையில் தங்கிற்று.
13. மோயீசன் மூலமாய் ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி, அப்போது முதன் முதல் பிரயாணமானவர்கள்,
14. அமினதாபின் புதல்வனாகிய நகஸோனைத் தலைவனாய்க் கொண்டிருந்த யூதா புதல்வர்களின் சேனையாம். அவர்கள் தங்கள் அணி வரிசையின்படி புறப்பட்டார்கள்.
15. சுவாரின் புதல்வனாகிய நத்தானியேலைத் தலைவனாகக் கொண்டிருந்த இசாக்கார் கோத்திரத்தார் பிறகு பயணமானார்கள்.
16. ஏலோனின் புதல்வனாகிய எலியாபைத் தலைவனாகக் கொண்டிருந்த சபுலோன் கோத்திரத்தார் பிறகு புறப்பட்டார்கள்.
17. அப்போது கடவுளின் உறைவிடத்தை இறக்கி வைத்து ஜேற்சோனின் புதல்வர்களும் மேறாரின் புதல்வர்களும் அதைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டார்கள்.
18. அப்பொழுது ரூபனின் புதல்வர் தங்கள் தங்கள் அணி வரிசைகளின்படி புறப்பட்டார்கள். அவர்களுக்குச் செதேயூரின் புதல்வனாகிய எலிசூர் தலைவனாய் இருந்தான்.
19. பின்பு சுரிஸதையின் புதல்வனாகிய சலமியேலைத் தலைவனாகக் கொண்டிருந்த சிமையோனின் கோத்திரத்தார் (பின் தொடர்ந்தார்கள்).
20. அதன் பிறகு துயேலின் புதல்வனாகிய எலியசாப் தலைவனாயிருந்த காத் கோத்திரத்தார் (புறப்பட்டனர்).
21. அப்போது ககாத்தியர் புனித மூலத்தானத்தைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள். புனித கூடாரம் எவ்விடத்தில் நிறுவப்படுமோ அவ்விடம் சேருமட்டும் அவர்கள் அதைச் சுமந்து போவார்கள்.
22. பின்னர் எபிராயிம் கோத்திரத்தார் தங்கள் தங்கள் அணி வரிசையின்படி புறப்பட்டார்கள். அவர்களுக்கு அமியூதின் புதல்வனாகிய எலிஸமா தலைவனாய் இருந்தான்.
23. மனாசே கோத்திரத்தாருக்குப் பதசூரின் புதல்வனாகிய கமாலியேல் தலைவனாய் இருந்தான்.
24. (இவர்கள் பிறகு வழி நடந்தார்கள்). பெஞ்சமின் கோத்திரத்தாருக்குச் செதெயோன் புதல்வனாகிய அபிதான் தலைவனாய் இருந்தான். (இவர்கள் பின் தொடர்ந்து போனார்கள்).
25. எல்லாப் படைகளுக்கும் கடைசிப் படையாகிய தான் கோத்திரத்தார் மற்றவர்களுக்குப் பின் தத்தம்அணி வரிசைப்படி பயணமானார்கள். அவர்களுக்கு அமிசதாய் புதல்வன் ஐயேசர் தலைவனாய் இருந்தான்.
26. ஆசேர் கோத்திரத்தாருக்கு ஒக்கிரானின் புதல்வனாகிய பெகியேல் தலைவனாய் இருந்தான்.
27. நெப்தலி கோத்திரத்தாருக்கு ஏனானின் புதல்வன் ஐரா தலைவனாய் இருந்தான்.
28. இஸ்ராயேல் மக்களை பாளையத்திலிருந்து புறப்படும்போது இவ்விதமாய் தத்தம் அணி வரிசையின்படி செல்வார்கள்.
29. அப்பொழுது மோயீசன் தம் மாமனாகிய இராகுவேல் என்னும் மதியானியனுடைய புதல்வனான ஓபாப் என்பவனை நோக்கி: கடவுள் எங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டிற்குப் போகிறோம். நீயும் எங்களோடு கூட வந்தால் உனக்கு நன்மை செய்வோம். ஆண்டவர் இஸ்ராயேலருக்கு நல்ல வாக்குறுதி தந்திருக்கிறார் என்று சொன்னார்.
30. அதற்கு அவன்: உம்மோடு நான் வர மாட்டேன். நான் பிறந்த நாட்டிற்குத் திரும்பிப் போவேன் என்று பதில் கூற,
31. மோயீசன், நீ எங்களை விட்டுப் போக வேண்டாம். பாலைவனத்தில் நாங்கள் பாளையம் இறங்கத் தக்க இடங்களை நீ அறிந்திருப்பதினால் எங்களுக்கு வழிகாட்டியாய் இருப்பாய்.
32. அப்படி எங்களோடு அந்நாட்டில் போய்ச் சேரும்போது ஆண்டவர் எங்களுக்குத் தந்தருளும் நன்மைகளிலே எது சிறந்ததோ அதை உனக்குக் கொடுப்போம் என்றார்.
33. ஆகையால், அவர்கள் ஆண்டவருடைய மலையை விட்டு மூன்று நாளும் நடந்து போகையில் ஆண்டவருடைய பெட்டகம் முன்னே சென்று, அவர்கள் அம் மூன்று நாளிலும் பாளையம் இறங்கவேண்டிய இடங்களைக் காண்பித்து வந்தது.
34. போகும் போது, ஆண்டவருடைய மேகம் பகலிலே அவர்களுக்கு மேலே தங்கிக் கொண்டிருந்தது.
35. பெட்டகம் தூக்கப்படும்போது, மோயீசன்: ஆண்டவரே! எழுந்தருளும். உமது பகைவர் சிதறுண்டு போகவும், உம்மைப் பழிக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போகவும் கடவார்களாக என்பார்.
36. அது இறக்கப்படும் போதோ: நீர் இஸ்ராயேல் என்னும் பெரும் படையிடம் திரும்பிவீராக என்பார்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 10 / 36
எண்ணாகமம் 10:47
1 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: 2 பாளையம் பெயரும்படி சபையை வரவழைப்பதற்கு உபயோகிக்க இரண்டு வெள்ளி எக்காளங்களைச் செய்து கொள்வாய். அவை சுத்தியால் அடித்துச் செய்யப்பட்டதாய் இருக்க வேண்டும். 3 நீ எக்காளம் ஊதும்போது சபையார் எல்லாரும் உடன்படிக்கைக் கூடாரவாயிலின் முன் உன்னிடம் வந்து கூட வேண்டும். 4 நீ ஒரே தடவை ஊதினால் தலைவர்களும் இஸ்ராயேல் கோத்திரங்களின் தலைவர்களும் உன்னிடம் வந்து கூடக்கடவார்கள். 5 எக்காளம் பெருந்தொனியாய் முழங்க நிறுத்தி நிறுத்தி ஊதினால், கிழக்கில் இருக்கிற பாளையங்கள் முதலில் புறப்படக்கடவன. 6 எக்காளத்தின் இரண்டாவது தொனி, முதல் தொனியைப்போல் இருந்தால், தெற்கே இறங்கியிருக்கிறவர்கள் தங்கள் கூடாரங்களைப் பெயர்ப்பார்கள். இப்படி எக்காளங்கள் முழங்க முழங்க மற்றுமுள்ள பாளையங்களும் ஒன்றன்பின் ஒன்றாகப் புறப்படக்கடவன. 7 மக்களைக் கூட்டுவதற்கு நீங்கள் சாதாரணமாய் ஊத வேண்டுமேயல்லாது முழங்க வேண்டாம். 8 ஆரோனின் புதல்வராகிய குருக்களே எக்காளம் ஊதக்கடவார்கள். இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய முறைமையாக இருக்கும். 9 உங்களை விரோதிக்கிற பகைவர்களோடு போராட உங்கள் நாட்டினின்று புறப்படுகையில், நீங்கள் எக்காளத்தைப் பெருந்தொனியாய் ஊதுவீர்கள். அப்போது உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைப் பகைவரிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்று நினைப்பார். 10 உங்கள் விருந்துகளிலும், திருநாட்களிலும், மாதத்தின் முதல் நாள் என்றும் நீங்கள் சமாதானப் பலி, முழுத் தகனப் பலிகள் முதலியன செலுத்தும்போது கடவுள் உங்களை நினைவுகூரும்படியாய் எக்காளங்களை முழக்கக்கடவீர்கள். நாமே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்று திருவுளம்பற்றினார். 11 அப்படியிருக்க, இரண்டாம் ஆண்டிலே இரண்டாம் மாதம் இருபதாம் நாளன்று உடன்படிக்கைக் கூடாரத்தினின்று மேகம் எழுந்துவிடவே, 12 இஸ்ராயேல் மக்கள் தத்தம் அணி வரிசையின்படி சீனாய்ப் பாலைவனத்திலிருந்து புறப்பட்டார்கள். மேகம் பாரான் என்னும் பாலையில் தங்கிற்று. 13 மோயீசன் மூலமாய் ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி, அப்போது முதன் முதல் பிரயாணமானவர்கள், 14 அமினதாபின் புதல்வனாகிய நகஸோனைத் தலைவனாய்க் கொண்டிருந்த யூதா புதல்வர்களின் சேனையாம். அவர்கள் தங்கள் அணி வரிசையின்படி புறப்பட்டார்கள். 15 சுவாரின் புதல்வனாகிய நத்தானியேலைத் தலைவனாகக் கொண்டிருந்த இசாக்கார் கோத்திரத்தார் பிறகு பயணமானார்கள். 16 ஏலோனின் புதல்வனாகிய எலியாபைத் தலைவனாகக் கொண்டிருந்த சபுலோன் கோத்திரத்தார் பிறகு புறப்பட்டார்கள். 17 அப்போது கடவுளின் உறைவிடத்தை இறக்கி வைத்து ஜேற்சோனின் புதல்வர்களும் மேறாரின் புதல்வர்களும் அதைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டார்கள். 18 அப்பொழுது ரூபனின் புதல்வர் தங்கள் தங்கள் அணி வரிசைகளின்படி புறப்பட்டார்கள். அவர்களுக்குச் செதேயூரின் புதல்வனாகிய எலிசூர் தலைவனாய் இருந்தான். 19 பின்பு சுரிஸதையின் புதல்வனாகிய சலமியேலைத் தலைவனாகக் கொண்டிருந்த சிமையோனின் கோத்திரத்தார் (பின் தொடர்ந்தார்கள்). 20 அதன் பிறகு துயேலின் புதல்வனாகிய எலியசாப் தலைவனாயிருந்த காத் கோத்திரத்தார் (புறப்பட்டனர்). 21 அப்போது ககாத்தியர் புனித மூலத்தானத்தைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள். புனித கூடாரம் எவ்விடத்தில் நிறுவப்படுமோ அவ்விடம் சேருமட்டும் அவர்கள் அதைச் சுமந்து போவார்கள். 22 பின்னர் எபிராயிம் கோத்திரத்தார் தங்கள் தங்கள் அணி வரிசையின்படி புறப்பட்டார்கள். அவர்களுக்கு அமியூதின் புதல்வனாகிய எலிஸமா தலைவனாய் இருந்தான். 23 மனாசே கோத்திரத்தாருக்குப் பதசூரின் புதல்வனாகிய கமாலியேல் தலைவனாய் இருந்தான். 24 (இவர்கள் பிறகு வழி நடந்தார்கள்). பெஞ்சமின் கோத்திரத்தாருக்குச் செதெயோன் புதல்வனாகிய அபிதான் தலைவனாய் இருந்தான். (இவர்கள் பின் தொடர்ந்து போனார்கள்). 25 எல்லாப் படைகளுக்கும் கடைசிப் படையாகிய தான் கோத்திரத்தார் மற்றவர்களுக்குப் பின் தத்தம்அணி வரிசைப்படி பயணமானார்கள். அவர்களுக்கு அமிசதாய் புதல்வன் ஐயேசர் தலைவனாய் இருந்தான். 26 ஆசேர் கோத்திரத்தாருக்கு ஒக்கிரானின் புதல்வனாகிய பெகியேல் தலைவனாய் இருந்தான். 27 நெப்தலி கோத்திரத்தாருக்கு ஏனானின் புதல்வன் ஐரா தலைவனாய் இருந்தான். 28 இஸ்ராயேல் மக்களை பாளையத்திலிருந்து புறப்படும்போது இவ்விதமாய் தத்தம் அணி வரிசையின்படி செல்வார்கள். 29 அப்பொழுது மோயீசன் தம் மாமனாகிய இராகுவேல் என்னும் மதியானியனுடைய புதல்வனான ஓபாப் என்பவனை நோக்கி: கடவுள் எங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டிற்குப் போகிறோம். நீயும் எங்களோடு கூட வந்தால் உனக்கு நன்மை செய்வோம். ஆண்டவர் இஸ்ராயேலருக்கு நல்ல வாக்குறுதி தந்திருக்கிறார் என்று சொன்னார். 30 அதற்கு அவன்: உம்மோடு நான் வர மாட்டேன். நான் பிறந்த நாட்டிற்குத் திரும்பிப் போவேன் என்று பதில் கூற, 31 மோயீசன், நீ எங்களை விட்டுப் போக வேண்டாம். பாலைவனத்தில் நாங்கள் பாளையம் இறங்கத் தக்க இடங்களை நீ அறிந்திருப்பதினால் எங்களுக்கு வழிகாட்டியாய் இருப்பாய். 32 அப்படி எங்களோடு அந்நாட்டில் போய்ச் சேரும்போது ஆண்டவர் எங்களுக்குத் தந்தருளும் நன்மைகளிலே எது சிறந்ததோ அதை உனக்குக் கொடுப்போம் என்றார். 33 ஆகையால், அவர்கள் ஆண்டவருடைய மலையை விட்டு மூன்று நாளும் நடந்து போகையில் ஆண்டவருடைய பெட்டகம் முன்னே சென்று, அவர்கள் அம் மூன்று நாளிலும் பாளையம் இறங்கவேண்டிய இடங்களைக் காண்பித்து வந்தது. 34 போகும் போது, ஆண்டவருடைய மேகம் பகலிலே அவர்களுக்கு மேலே தங்கிக் கொண்டிருந்தது. 35 பெட்டகம் தூக்கப்படும்போது, மோயீசன்: ஆண்டவரே! எழுந்தருளும். உமது பகைவர் சிதறுண்டு போகவும், உம்மைப் பழிக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போகவும் கடவார்களாக என்பார். 36 அது இறக்கப்படும் போதோ: நீர் இஸ்ராயேல் என்னும் பெரும் படையிடம் திரும்பிவீராக என்பார்.
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 10 / 36
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References