தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
நெகேமியா
1. நான் மதில்களைக் கட்டி முடித்து விட்டேன் என்றும் (ஆயினும் வாயில்களில் கதவுகளை இன்னும் அமைக்காதிருந்தேன்), அவற்றில் வெடிப்பு ஒன்றுமில்லை என்றும் சனபல்லாத், தொபியாசு, கொஸ்சேம், அரேபியர் மற்றும் எங்கள் எதிரிகளான அனைவரும் அறிய வந்தனர்.
2. அப்பொழுது சனபல்லாதும் கோஸ்சேமும் என்னிடம் ஆள் அனுப்பி, "நீர் வாரும்; ஒனோ என்ற சமவெளியிலுள்ள ஊர்களுள் ஒன்றில் நாம் சந்தித்துப் பேசலாம்" என்று சொல்லச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் எனக்குத் தீங்கு இழைக்கவே கருதியிருந்தனர்.
3. அப்பொழுது நான் அவர்களிடம் தூதர்களை அனுப்பி, "எனக்கு அதிகம் வேலை இருக்கிறது. எனவே நான் வர இயலாது. வந்தேனானால் வேலை முடங்கிப் போகும்" என்று சொல்லச் சொன்னேன்.
4. அவர்கள் இவ்வாறே நான்கு முறை எனக்கு ஆள் அனுப்பினர். நானும் அதே பதிலையே அவர்களுக்குச் சொல்லி அனுப்பினேன்.
5. அப்போது சனபல்லாத் முன்புபோலவே இன்னொரு முறையும் தன் ஆளை அனுப்பி வைத்தான். அவன் கையில் ஒரு கடிதத்தையும் கொடுத்திருந்தான். அதில் எழுதப்பட்டிருந்ததாவது:
6. நீரும் யூதர்களும் கலகம் செய்ய ஆலோசித்திருக்கிறீர்கள்; அதற்காகவே நீர் மதிலைக் கட்டுகிறீர்; இவ்வாறு, நீர் அவர்களுக்கு அரசராக விரும்புகிறீர்;
7. அதன் பொருட்டே நீர் இறைவாக்கினர்களை ஏற்படுத்தி, 'யூதேயாவில் ஓர் அரசர் இருக்கிறார்' என்று அவர்கள் யெருசலேமில் உம்மைப்பற்றிப் பேச நியமித்துள்ளீர் என்றெல்லாம் புறவினத்தார் பேசிக் கொள்கின்றனர்; கோசேமும் இதையே சொல்கிறார். இது அரசரின் செவிகளுக்கு எப்படியாவது எட்டிவிடும். எனவே நீர் வாரும். நாம் இருவரும் இதுபற்றி ஆலோசிக்கலாம்."
8. அதற்கு நான், "நீர் சொல்வதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை; எல்லாம் வெறும் கற்பனையே" என்று சொல்லி அனுப்பினேன்.
9. இவ்வாறு அவர்கள் எல்லாரும் எங்களை அச்சுறுத்தினர். இதனால் நாங்கள் மனத்தளர்வுற்று வேலையை நிறுத்திவிடுவோம் என்பதே அவர்கள் எண்ணம். ஆனால் நான் வேலை செய்வதில் மேலும் உறுதியாய் இருந்தேன்.
10. நான் மெத்தாபெயேலுக்குப் பிறந்த தலாயியாவின் மகன் செமேயியாவின் வீட்டுக்குப் போனேன். ஏனெனில் என்னிடம் வராதபடி அவனுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. என்னைக் கண்டதும் அவன், "நாம் இருவருமாகக் கடவுளின் வீடான ஆலயத்துக்குள் நுழைந்து ஆலயத்தின் கதவுகளைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருப்போம், வாரும். ஏனெனில் அவர்கள் உம்மைக் கொல்லத் தேடுகிறார்கள்; இன்றிரவே உம்மைக் கொன்றுவிட எண்ணியிருக்கிறார்கள்" என்றான்.
11. அதற்கு நான், "என்னைப்போன்ற மனிதன் ஓடி ஒளிவது முறையா? உயிர் பிழைப்பதற்காக ஆலயத்திற்குள் நுழைந்து மறைந்து கொள்வது என் போன்றோர்க்கு அழகா? நான் உள்ளே போகமாட்டேன்" என்றேன்.
12. அப்பொழுது கடவுள் அவனை அனுப்பவில்லை என்றும், தொபியாசும் சனபல்லாதுமே அவனுக்குக் கையூட்டுக் கொடுத்து அவன் இவ்வாறு எனக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் உரைக்கச் செய்தனர் என்றும் நான் அறிந்துகொண்டேன்.
13. ஏனெனில் அவன் என்னை அச்சுறுத்திப் பாவத்தில் விழச் செய்யவும், அதன்மூலம் அவன் என்னைச் சிறுமைப்படுத்தவுமே அவர்கள் அவனுக்குக் கையூட்டுக் கொடுத்திருந்தனர்.
14. ஆண்டவரே, தொபியாசு, சனபல்லாத் ஆகியோர் செய்துள்ள இச் சதி வேலைகளை நினைத்தருளும். மேலும், தீர்க்கதரிசினி நொவாதியாவையும், என்னை அச்சுறுத்த முயன்ற மற்றத் தீர்க்கதரிசிகளையும் நினைவு கூர்ந்தருளும்.
15. மதில் ஐம்பத்திரண்டு நாட்களுக்குள் கட்டப்பட்டு எலுல் மாதம் இருபத்தைந்தாம் நாள் முடிந்தது.
16. எங்கள் எதிரிகள் அதைப் பற்றிக் கேள்விப்பட்ட போது, எங்கள் அண்டை நாட்டார் அதைப் பார்த்த போது, அவர்கள் அனைவருமே அஞ்சி மிகவும் வியப்புற்றனர்; எம் கடவுளின் ஆற்றலினாலேயே இவ்வேலை முடிவுற்றது என்று அறிக்கையிட்டனர்.
17. அக்காலத்தில் யூதாவின் தலைவர்கள் தொபியாசோடு அதிகக் கடிதத் தொடர்பு வைத்திருந்தனர்.
18. காரணம்: இத் தொபியாசு அரேயாவின் மகன் செக்கேனியாசின் மருமகனாய் இருந்ததினாலும், அவனுடைய மகன் யோகனான் பராக்கியாசின் மகன் மொசொல்லாமின் மகளை மணந்திருந்ததனாலும் யூதாவில் பலர் அவனது சார்பில் இருப்பதாய் ஆணையிட்டிருந்தனர்.
19. எனவே அவர்கள் எனக்கு முன்பாக அவனை மெச்சிப் பேசுவார்கள். மேலும் நான் சொன்னதை அவனிடம் சொல்வார்கள். தொபியாசோ என்னை அச்சுறுத்தும் படி கடிதங்களை அனுப்பி கொண்டே இருந்தான்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 13 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
நெகேமியா 6:17
1 நான் மதில்களைக் கட்டி முடித்து விட்டேன் என்றும் (ஆயினும் வாயில்களில் கதவுகளை இன்னும் அமைக்காதிருந்தேன்), அவற்றில் வெடிப்பு ஒன்றுமில்லை என்றும் சனபல்லாத், தொபியாசு, கொஸ்சேம், அரேபியர் மற்றும் எங்கள் எதிரிகளான அனைவரும் அறிய வந்தனர். 2 அப்பொழுது சனபல்லாதும் கோஸ்சேமும் என்னிடம் ஆள் அனுப்பி, "நீர் வாரும்; ஒனோ என்ற சமவெளியிலுள்ள ஊர்களுள் ஒன்றில் நாம் சந்தித்துப் பேசலாம்" என்று சொல்லச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் எனக்குத் தீங்கு இழைக்கவே கருதியிருந்தனர். 3 அப்பொழுது நான் அவர்களிடம் தூதர்களை அனுப்பி, "எனக்கு அதிகம் வேலை இருக்கிறது. எனவே நான் வர இயலாது. வந்தேனானால் வேலை முடங்கிப் போகும்" என்று சொல்லச் சொன்னேன். 4 அவர்கள் இவ்வாறே நான்கு முறை எனக்கு ஆள் அனுப்பினர். நானும் அதே பதிலையே அவர்களுக்குச் சொல்லி அனுப்பினேன். 5 அப்போது சனபல்லாத் முன்புபோலவே இன்னொரு முறையும் தன் ஆளை அனுப்பி வைத்தான். அவன் கையில் ஒரு கடிதத்தையும் கொடுத்திருந்தான். அதில் எழுதப்பட்டிருந்ததாவது: 6 நீரும் யூதர்களும் கலகம் செய்ய ஆலோசித்திருக்கிறீர்கள்; அதற்காகவே நீர் மதிலைக் கட்டுகிறீர்; இவ்வாறு, நீர் அவர்களுக்கு அரசராக விரும்புகிறீர்; 7 அதன் பொருட்டே நீர் இறைவாக்கினர்களை ஏற்படுத்தி, 'யூதேயாவில் ஓர் அரசர் இருக்கிறார்' என்று அவர்கள் யெருசலேமில் உம்மைப்பற்றிப் பேச நியமித்துள்ளீர் என்றெல்லாம் புறவினத்தார் பேசிக் கொள்கின்றனர்; கோசேமும் இதையே சொல்கிறார். இது அரசரின் செவிகளுக்கு எப்படியாவது எட்டிவிடும். எனவே நீர் வாரும். நாம் இருவரும் இதுபற்றி ஆலோசிக்கலாம்." 8 அதற்கு நான், "நீர் சொல்வதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை; எல்லாம் வெறும் கற்பனையே" என்று சொல்லி அனுப்பினேன். 9 இவ்வாறு அவர்கள் எல்லாரும் எங்களை அச்சுறுத்தினர். இதனால் நாங்கள் மனத்தளர்வுற்று வேலையை நிறுத்திவிடுவோம் என்பதே அவர்கள் எண்ணம். ஆனால் நான் வேலை செய்வதில் மேலும் உறுதியாய் இருந்தேன். 10 நான் மெத்தாபெயேலுக்குப் பிறந்த தலாயியாவின் மகன் செமேயியாவின் வீட்டுக்குப் போனேன். ஏனெனில் என்னிடம் வராதபடி அவனுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. என்னைக் கண்டதும் அவன், "நாம் இருவருமாகக் கடவுளின் வீடான ஆலயத்துக்குள் நுழைந்து ஆலயத்தின் கதவுகளைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருப்போம், வாரும். ஏனெனில் அவர்கள் உம்மைக் கொல்லத் தேடுகிறார்கள்; இன்றிரவே உம்மைக் கொன்றுவிட எண்ணியிருக்கிறார்கள்" என்றான். 11 அதற்கு நான், "என்னைப்போன்ற மனிதன் ஓடி ஒளிவது முறையா? உயிர் பிழைப்பதற்காக ஆலயத்திற்குள் நுழைந்து மறைந்து கொள்வது என் போன்றோர்க்கு அழகா? நான் உள்ளே போகமாட்டேன்" என்றேன். 12 அப்பொழுது கடவுள் அவனை அனுப்பவில்லை என்றும், தொபியாசும் சனபல்லாதுமே அவனுக்குக் கையூட்டுக் கொடுத்து அவன் இவ்வாறு எனக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் உரைக்கச் செய்தனர் என்றும் நான் அறிந்துகொண்டேன். 13 ஏனெனில் அவன் என்னை அச்சுறுத்திப் பாவத்தில் விழச் செய்யவும், அதன்மூலம் அவன் என்னைச் சிறுமைப்படுத்தவுமே அவர்கள் அவனுக்குக் கையூட்டுக் கொடுத்திருந்தனர். 14 ஆண்டவரே, தொபியாசு, சனபல்லாத் ஆகியோர் செய்துள்ள இச் சதி வேலைகளை நினைத்தருளும். மேலும், தீர்க்கதரிசினி நொவாதியாவையும், என்னை அச்சுறுத்த முயன்ற மற்றத் தீர்க்கதரிசிகளையும் நினைவு கூர்ந்தருளும். 15 மதில் ஐம்பத்திரண்டு நாட்களுக்குள் கட்டப்பட்டு எலுல் மாதம் இருபத்தைந்தாம் நாள் முடிந்தது. 16 எங்கள் எதிரிகள் அதைப் பற்றிக் கேள்விப்பட்ட போது, எங்கள் அண்டை நாட்டார் அதைப் பார்த்த போது, அவர்கள் அனைவருமே அஞ்சி மிகவும் வியப்புற்றனர்; எம் கடவுளின் ஆற்றலினாலேயே இவ்வேலை முடிவுற்றது என்று அறிக்கையிட்டனர். 17 அக்காலத்தில் யூதாவின் தலைவர்கள் தொபியாசோடு அதிகக் கடிதத் தொடர்பு வைத்திருந்தனர். 18 காரணம்: இத் தொபியாசு அரேயாவின் மகன் செக்கேனியாசின் மருமகனாய் இருந்ததினாலும், அவனுடைய மகன் யோகனான் பராக்கியாசின் மகன் மொசொல்லாமின் மகளை மணந்திருந்ததனாலும் யூதாவில் பலர் அவனது சார்பில் இருப்பதாய் ஆணையிட்டிருந்தனர். 19 எனவே அவர்கள் எனக்கு முன்பாக அவனை மெச்சிப் பேசுவார்கள். மேலும் நான் சொன்னதை அவனிடம் சொல்வார்கள். தொபியாசோ என்னை அச்சுறுத்தும் படி கடிதங்களை அனுப்பி கொண்டே இருந்தான்.
மொத்தம் 13 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References