தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
நெகேமியா
1. கையொப்பமிட்டவர்கள் வருமாறு: ககாலியாவின் மகனும் ஆளுநருமான நெகேமியா, செதேசியாஸ்,
2. சராயியாஸ், அசாரியாஸ், எரேமியாஸ்,
3. பெசூர், அமாரியாஸ், மெல்கியாஸ்,
4. கத்துஸ், செபேனியா, மெல்லூக்,
5. காரேம், மெரிமோத்,
6. ஒப்தியாஸ், தானியேல்,
7. கிநெதோன், பாரூக், மொசொல்லாம்,
8. ஆபியா, மீயாமின், மாசியா, பெல்காயி, செமேயியா ஆகிய குருக்கள்.
9. லேவியர்களில் ஆசானியாவின் மகன் யோசுவா, கேனதாத் மக்களில் பென்னுயீ, கெத்மியேல்;
10. இவர்களின் சகோதரர்கள் செபேனியா, ஒதாயியா, கெலிதா,
11. பாலாயியா, கானான், மிக்கா,
12. ரெகோப், கசெபியா, சக்கூர், செரேபியா,
13. சபானியா, ஒதாயியா, பானீ, பானீனு ஆகியோர்.
14. மக்கள் தலைவர்களில் பாரோஸ், பாகாத்மோவாப், ஏலாம், சேத்தூ, பானீ,
15. பொன்னீ, ஆஸ்காத்,
16. பெயாயீ, அதோனியா,
17. பெகோவாயீ, ஆதீன், ஆதேர், எசெக்கியா,
18. ஆசூர், ஒதாயியா, காசூம், பெசாயி,
19. காரேப், அநத்தோத்,
20. நேபாயி, மெக்பியாஸ்,
21. மொசொல்லாம், கேசீர், மெசீஜ;பெல்,
22. சாதோக், யெத்துவா, பெல்தியா, கானான்,
23. அனானியா, ஒசெயே, கனானியா, காசூப்,
24. அலோகேஸ், பாலெயா,
25. சோபேக், ரேகும்,
26. கசெப்னா, மாசியா, எக்காயியா, கானான்,
27. ஆனான், மெல்லூக், காரான், பவானா ஆகியோர்.
28. மற்ற மக்களும் குருக்களும் லேவியரும் வாயிற்காவலரும் பாடகரும் ஆலய ஊழியரும், புறவினத்தாரின் உறவை விட்டுக் கடவுளின் திருச்சட்டத்தைப் பின்பற்றி வந்த அனைவரும், அவர்களுடைய மனைவியரும், புதல்வர், புதல்வியரும், மற்றும் புத்தி விபரம் அறிந்தவர்கள் அனைவரும்,
29. மேன் மக்களான தங்கள் சகோதரரோடு சேர்ந்து ஆணையிட்டார்கள்; கடவுளின் அடியான் மோயீசன் வழியாகக் கொடுக்கப்பட்ட கடவுளின் திருச்சட்டத்தின் படி நடப்பதாகவும், தம் ஆண்டவராகிய கடவுளின் எல்லாக் கட்டளைகளையும் சட்டங்களையும் நீதி முறைமைகளையும் அனுசரிப்பதாகவும் உறுதி கூறினார்கள்.
30. குறிப்பாக, "இனி நாங்கள் புறவினத்தாருக்குப் பெண் கொடுக்கவும் மாட்டோம்; அவர்களிடமிருந்து பெண் கொள்ளவும் மாட்டோம்.
31. இந்நாட்டு மக்களுள் யாராவது ஓய்வு நாளில் உணவுப் பொருட்களையோ வேறு எவ்விதச் சரக்குகளையோ வியாபாரம் செய்தால், ஓய்வு நாளிலும் புனித நாளிலும் அவர்கள் கையிலிருந்து ஒன்றும் வாங்கமாட்டோம். ஏழாம் ஆண்டில் நிலத்தைத் தரிசாய் விட்டு விட்டு எவ்விதக் கடன்களையும் திரும்பக் கேட்கமாட்டோம்.
32. மேலும் நாங்கள் எங்கள் கடவுளின் ஆலய வேலைக்காக, ஆண்டுக்கு சீக்கலில் மூன்றில் ஒரு பகுதியைக் கொடுப்போம்.
33. இவ்வாறு நம் கடவுளின் ஆலயத் திருப்பணிக்குத் தேவையான அனைத்தையும், அதாவது காணிக்கை அப்பங்கள், நித்திய பலிகள், ஓய்வு நாட்கள், அமாவாசை நாட்கள், குறிக்கப்பட்ட திருநாட்களில் செலுத்த வேண்டிய நித்திய தகனப் பலிகள், அர்ப்பணிக்கப்பட்ட பொருட்கள், இஸ்ராயேலுக்காகச் செய்ய வேண்டிய பாவ நிவாரணப் பலிகள் ஆகியவற்றிற்கு வழிசெய்வோம்.
34. மோயீசனின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டபடியே, எம் கடவுளாக ஆண்டவரின் பீடத்தின் மேல் எரிப்பதற்காக ஆண்டு தோறும் குறிப்பிட்ட காலத்தில் எம் முன்னோரின் வம்சங்களின் படியே யார் யார் எம் கடவுளின் ஆலயத்துக்குக் காணிக்கை விறகைக் கொண்டு வருவது என்பதை நிர்ணயிக்கக் குருக்களுக்கும் லேவியருக்கும் மக்களுக்கும் சீட்டுப் போடுவோம்.
35. மேலும் நாங்கள் ஆண்டு தோறும் எங்கள் நிலத்தின் முதற் பலன்களையும், எல்லா வித மரங்களின் முதற் கனிகளையும் ஆண்டவரின் ஆலயத்திற்குக் கொண்டு வருவோம்.
36. எங்கள் புதல்வரின் தலைப்பிள்ளைகளையும், எம் கடவுளின் ஆலயத்தில் திருப்பணி புரிந்துவரும் குருக்களின் தேவைகளுக்கென எங்கள் ஆடு மாடுகளின் முதல் ஈற்றுகளையும், திருச்சட்டத்தில் எழுதியுள்ளவாறு எங்கள் கடவுளின் ஆலயத்திற்கு ஒப்புக்கொடுப்போம்.
37. அதுவுமன்றி, எங்களது உணவு, மரத்தின் முதற்கனி, திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றையும் குருக்களுக்கென கோவிலில் ஒப்புக்கொடுப்போம். எங்கள் விளைச்சலின் பத்திலொரு பாகத்தை லேவியர்களுக்குக் கொடுப்போம். அதை லேவியர்களே எல்லா நகர்களுக்கும் சென்று வசூலிப்பார்கள்.
38. ஆரோன் வழித்தோன்றலான ஒரு குரு, லேவியர்கள் அதை வசூலிக்கும் பொழுது அவர்களோடு செல்வார். தாங்கள் வசூலித்ததில் பத்தில் ஒரு பாகத்தை லேவியர்கள் எங்கள் கடவுளின் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து, அதை ஆலயக் கருவூலத்தில் சேர்த்து வைப்பார்கள்.
39. ஏனெனில் மேற்சொன்ன கருவூல அறையிலேயே இஸ்ராயேல் மக்களும் லேவியரும் தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றின் முதற் பலன்களைச் சேர்த்து வைத்து வந்தார்கள்; அங்கேயே ஆலயத் திருப்பணிக்குரிய பாத்திரங்களும், குருக்களும் பாடகர்களும் வாயிற்காவலரும் திருப்பணியாளரும் இருந்து வந்தனர். இவ்வாறு நாங்கள் எங்கள் கடவுளின் ஆலயத்தைப் புறக்கணிக்கமாட்டோம்" என்று சத்தியம் செய்தார்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 13 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 10 / 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
நெகேமியா 10:26
1 கையொப்பமிட்டவர்கள் வருமாறு: ககாலியாவின் மகனும் ஆளுநருமான நெகேமியா, செதேசியாஸ், 2 சராயியாஸ், அசாரியாஸ், எரேமியாஸ், 3 பெசூர், அமாரியாஸ், மெல்கியாஸ், 4 கத்துஸ், செபேனியா, மெல்லூக், 5 காரேம், மெரிமோத், 6 ஒப்தியாஸ், தானியேல், 7 கிநெதோன், பாரூக், மொசொல்லாம், 8 ஆபியா, மீயாமின், மாசியா, பெல்காயி, செமேயியா ஆகிய குருக்கள். 9 லேவியர்களில் ஆசானியாவின் மகன் யோசுவா, கேனதாத் மக்களில் பென்னுயீ, கெத்மியேல்; 10 இவர்களின் சகோதரர்கள் செபேனியா, ஒதாயியா, கெலிதா, 11 பாலாயியா, கானான், மிக்கா, 12 ரெகோப், கசெபியா, சக்கூர், செரேபியா, 13 சபானியா, ஒதாயியா, பானீ, பானீனு ஆகியோர். 14 மக்கள் தலைவர்களில் பாரோஸ், பாகாத்மோவாப், ஏலாம், சேத்தூ, பானீ, 15 பொன்னீ, ஆஸ்காத், 16 பெயாயீ, அதோனியா, 17 பெகோவாயீ, ஆதீன், ஆதேர், எசெக்கியா, 18 ஆசூர், ஒதாயியா, காசூம், பெசாயி, 19 காரேப், அநத்தோத், 20 நேபாயி, மெக்பியாஸ், 21 மொசொல்லாம், கேசீர், மெசீஜ;பெல், 22 சாதோக், யெத்துவா, பெல்தியா, கானான், 23 அனானியா, ஒசெயே, கனானியா, காசூப், 24 அலோகேஸ், பாலெயா, 25 சோபேக், ரேகும், 26 கசெப்னா, மாசியா, எக்காயியா, கானான், 27 ஆனான், மெல்லூக், காரான், பவானா ஆகியோர். 28 மற்ற மக்களும் குருக்களும் லேவியரும் வாயிற்காவலரும் பாடகரும் ஆலய ஊழியரும், புறவினத்தாரின் உறவை விட்டுக் கடவுளின் திருச்சட்டத்தைப் பின்பற்றி வந்த அனைவரும், அவர்களுடைய மனைவியரும், புதல்வர், புதல்வியரும், மற்றும் புத்தி விபரம் அறிந்தவர்கள் அனைவரும், 29 மேன் மக்களான தங்கள் சகோதரரோடு சேர்ந்து ஆணையிட்டார்கள்; கடவுளின் அடியான் மோயீசன் வழியாகக் கொடுக்கப்பட்ட கடவுளின் திருச்சட்டத்தின் படி நடப்பதாகவும், தம் ஆண்டவராகிய கடவுளின் எல்லாக் கட்டளைகளையும் சட்டங்களையும் நீதி முறைமைகளையும் அனுசரிப்பதாகவும் உறுதி கூறினார்கள். 30 குறிப்பாக, "இனி நாங்கள் புறவினத்தாருக்குப் பெண் கொடுக்கவும் மாட்டோம்; அவர்களிடமிருந்து பெண் கொள்ளவும் மாட்டோம். 31 இந்நாட்டு மக்களுள் யாராவது ஓய்வு நாளில் உணவுப் பொருட்களையோ வேறு எவ்விதச் சரக்குகளையோ வியாபாரம் செய்தால், ஓய்வு நாளிலும் புனித நாளிலும் அவர்கள் கையிலிருந்து ஒன்றும் வாங்கமாட்டோம். ஏழாம் ஆண்டில் நிலத்தைத் தரிசாய் விட்டு விட்டு எவ்விதக் கடன்களையும் திரும்பக் கேட்கமாட்டோம். 32 மேலும் நாங்கள் எங்கள் கடவுளின் ஆலய வேலைக்காக, ஆண்டுக்கு சீக்கலில் மூன்றில் ஒரு பகுதியைக் கொடுப்போம். 33 இவ்வாறு நம் கடவுளின் ஆலயத் திருப்பணிக்குத் தேவையான அனைத்தையும், அதாவது காணிக்கை அப்பங்கள், நித்திய பலிகள், ஓய்வு நாட்கள், அமாவாசை நாட்கள், குறிக்கப்பட்ட திருநாட்களில் செலுத்த வேண்டிய நித்திய தகனப் பலிகள், அர்ப்பணிக்கப்பட்ட பொருட்கள், இஸ்ராயேலுக்காகச் செய்ய வேண்டிய பாவ நிவாரணப் பலிகள் ஆகியவற்றிற்கு வழிசெய்வோம். 34 மோயீசனின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டபடியே, எம் கடவுளாக ஆண்டவரின் பீடத்தின் மேல் எரிப்பதற்காக ஆண்டு தோறும் குறிப்பிட்ட காலத்தில் எம் முன்னோரின் வம்சங்களின் படியே யார் யார் எம் கடவுளின் ஆலயத்துக்குக் காணிக்கை விறகைக் கொண்டு வருவது என்பதை நிர்ணயிக்கக் குருக்களுக்கும் லேவியருக்கும் மக்களுக்கும் சீட்டுப் போடுவோம். 35 மேலும் நாங்கள் ஆண்டு தோறும் எங்கள் நிலத்தின் முதற் பலன்களையும், எல்லா வித மரங்களின் முதற் கனிகளையும் ஆண்டவரின் ஆலயத்திற்குக் கொண்டு வருவோம். 36 எங்கள் புதல்வரின் தலைப்பிள்ளைகளையும், எம் கடவுளின் ஆலயத்தில் திருப்பணி புரிந்துவரும் குருக்களின் தேவைகளுக்கென எங்கள் ஆடு மாடுகளின் முதல் ஈற்றுகளையும், திருச்சட்டத்தில் எழுதியுள்ளவாறு எங்கள் கடவுளின் ஆலயத்திற்கு ஒப்புக்கொடுப்போம். 37 அதுவுமன்றி, எங்களது உணவு, மரத்தின் முதற்கனி, திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றையும் குருக்களுக்கென கோவிலில் ஒப்புக்கொடுப்போம். எங்கள் விளைச்சலின் பத்திலொரு பாகத்தை லேவியர்களுக்குக் கொடுப்போம். அதை லேவியர்களே எல்லா நகர்களுக்கும் சென்று வசூலிப்பார்கள். 38 ஆரோன் வழித்தோன்றலான ஒரு குரு, லேவியர்கள் அதை வசூலிக்கும் பொழுது அவர்களோடு செல்வார். தாங்கள் வசூலித்ததில் பத்தில் ஒரு பாகத்தை லேவியர்கள் எங்கள் கடவுளின் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து, அதை ஆலயக் கருவூலத்தில் சேர்த்து வைப்பார்கள். 39 ஏனெனில் மேற்சொன்ன கருவூல அறையிலேயே இஸ்ராயேல் மக்களும் லேவியரும் தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றின் முதற் பலன்களைச் சேர்த்து வைத்து வந்தார்கள்; அங்கேயே ஆலயத் திருப்பணிக்குரிய பாத்திரங்களும், குருக்களும் பாடகர்களும் வாயிற்காவலரும் திருப்பணியாளரும் இருந்து வந்தனர். இவ்வாறு நாங்கள் எங்கள் கடவுளின் ஆலயத்தைப் புறக்கணிக்கமாட்டோம்" என்று சத்தியம் செய்தார்கள்.
மொத்தம் 13 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 10 / 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References